காஷ்மீர் சிங்கம் யாசின் மாலிக்கை அழைத்து வரும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் தோழர் உமர் கயான்
இன்று கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்து வரும் நிகழ்விற்கு வருகை தந்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் காஷ்மீர் சிங்கம் யாசின் மாலிக்கை இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மூத்த ஒருங்கினைப்பாளர் வழக்கறிஞர் உமர் கயான் அழைத்து வந்தார். அதன் பின்னர் கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை
முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசியதாவது:
மேடையில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் தோழர் உமர் கயான் மற்றும் தோழர் சீமான் காஷ்மீர் சிங்கம் யாசின் மாலிக்குடன்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான
அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு
செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்
மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக
அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது.
தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய
வலிகள் ஒரே மாதிரியானவை. காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தினரால்
கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கிவிட முடியாது.
போராட்டத்தில் மனிதர்கள் கொல்லப்படலாம். ஆனால் தத்துவத்தையும்.
கொள்கைகளையும் அழித்துவிட முடியாது என்றார் மேலும்
0 மறுமொழிகள்:
Post a Comment