Tuesday, October 31, 2006

ஒன்றே குலம் ஒருவனே தேவன்


ஒன்றே குலம் ஒருவனே தேவன்

www.a1realism.com

அறிவுப் புரட்சி

அறிவுத்துறையில் மனிதன் பெற்றிருக்கும் வெற்றி, பெற்றுவரும் பலன்கள், ஆற்றி வரும் அதிசயங்கள் இவற்றைக் காணும் பொழுது இன்றைய காலத்திற்கு இணையான ஒரு காலத்தை இவ்வுலக வரலாற்றில் எங்கேயும் காண முடியாது. ஜுலியன் ஹக்ஸ்லி எனும் அறிஞர் இதனை அறிவுப் புரட்சி' என்று வர்ணித்தார்.

மனிதன் கடலை, அதன் அலையை, அதன் ஆழத்தை இன்னும் அதில் அமிழ்ந்து கிடக்கும் செல்வங்களை ஆராய்கிறான். மதிக்குமேல் மதியைப் பெற்றுவிட்டான். அடுத்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறான். அணுவைப் பிளந்து அதன் மூலம் பெரும் பலன்களை கண்டு கொண்டிருக்கிறான்.

சாட்டிலைட், செல்லுலார், இன்டெர்நெட் போன்ற எண்ணற்ற வசதிகளுடன் உலகின் எந்த பாகத்தில் என்ன நடந்தாலும் ஒரே இடத்தில் இருந்து கொண்டே அறிந்துகொள்ளும் வகையில் இவ்வுலகத்தை சுருக்கிவிட்டான்.

ஒரு கிராமத்தில் எந்த ஒரு மூலையில் என்ன நடந்தாலும் அது உடனே அந்த கிராமம் முழுவதும் பரவி விடுவது போல, இன்றைய உலகம் ஒரு கிராமம் போன்று மாறிவிட்டது, எப்படியெனில் இன்றைய உலகின் எந்த பாகத்தில் என்ன நடந்தாலும், அதை உடனே அறிந்து கொள்ளும் வகையிலான விஞ்ஞான வளர்ச்சியில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. ஆனால், அதில் வாழும் மனிதர்களின் இதயங்கள் மட்டும் விரிந்து கொண்டே போகின்றது என்பதுதான் உண்மையாகும்.சமூகக் கொடுமை

ஒருவன் உணவுக்குவியலின் உச்சியில் அமர்ந்திருக்கிறான், மற்றொருவன் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறான். ஒருவன் தேவைக்கு விஞ்சிய ஆடைகளை சேர்த்து வைத்திருக்கிறான், மற்றொருவன் ஆடையின்மையால் தவிக்கிறான். வானளாவிய கட்டிடத்தில் ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான், மற்றொருவன் சாலையோரங்களில் ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இவற்றிற்கான காரணம் என்ன? மனிதனை இப்படி சுயநலப் பேயாக மாற்றியது எது?

இது நாய்களும் கருப்பர்களும் தண்ணீர் குடிக்குமிடம்'' என்று தட்டி போர்டு எழுதி வைத்த அமெரிக்க வெள்ளையர்களுக்கு நிகராக நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எப்போதோ நம் நாட்டில் செயல்படுத்திக் காட்டத் துவங்கிவிட்டார்கள்.

ஜாதியின் பெயரிலே, அவர்களுக்கென்று தனித்தெரு, தனிக் கோயில், தனிக்குளம், தனி சுடுகாடு அதற்கென்று தனிப்பாதை என்று ஒதுக்கிவைத்திருந்தார்கள்.

இப்படி நிற, குல, இன, மொழி; மத அடிப்படையில், மனிதர்கள் தங்களுக்குள்ளே பேதப்பட்டு நிற்பதோடு மட்டுமல்லாது, கலவரங்கள், படுகொலைகள் எத்தனை எத்தனை? இப்படி மனிதனை அவனுடைய நிலையிலிருந்து இறக்கி, அவனை மிருக நிலைக்கு மாற்றியது எது?கலவரத்திற்குக் காரணம் கடவுளே!

மதமே கலவரத்திற்கு பிரதான காரணம். அந்த மதத்திற்கு காரணகர்த்தா கடவுளே! ஆகவே, அந்த கடவுளை இல்லை என்று சொல்வது நல்லது என முடிவெடுத்த ஒரு சாரார், அதற்கேற்றார்போல் சில சித்தாந்தங்களை உருவாக்கிக் கொண்டு: புதிய சமுதாயம் உருவாக்கப் போகிறோம் என்று கூறி திரிகிறார்கள்.

இறை மறுப்பின் விளைவு

இறைவன் இல்லை! இருந்தால் என்ன? இருந்துவிட்டு போகட்டும் அதனால் என்ன? என்று கூறும் இறை மறுப்பானது, - இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கும் விதத்தையோ: அல்லது அதன் போக்கையோ ஒரு போதும் மாற்றிவிடாதென்பது உண்மை. ஆனால், இது மனிதனின் மனதில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

முதலாவதாக இறைமறுப்பு மனிதனை பொறுப்பற்ற ஒரு பிறவியாக மாற்றிவிடுகிறது. மனிதன், தான் பெற்றிருக்கும் நம்பிக்கை, செய்கின்ற செயல்கள் இவற்றிற்கு யாரிடமும் எந்த பதிலும் சொல்லத் தேவையில்லை என்ற எண்ணத்தை இறைமறுப்பு பெற்றுத் தருகிறது. விரும்பியவாறெல்லாம் தான் செயல்படலாம் என அவன் எண்ணுகிறான். அவனின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதை தடுக்கின்றவர்களை தகர்த்தெறிந்திட வேண்டுமென துடிக்கிறான். இந்த மனமாற்றம் அவனுடைய பண்பாட்டின் குண நலன்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் சமூகத்தில் எப்போதும் ஒரு பயங்கரவாத சசூழல் நீடிக்கிறது.

இரண்டாவதாக உலகம் ஓர் உல்லாசபுரியே! என்ற எண்ணம் மனிதனை பேராசை, சுயநலம் என்ற பேராபத்துக்களில் தள்ளி விடுகின்றது. இது சமூகத்தில் ஒழுக்க சீரழிவை ஏற்படுத்துகிறது. இதனால் அன்பு, பாசம், இரக்கம் இவற்றை இழந்து நிற்கிறான். இது மனித இனத்தில் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. சமாதானத்தை கெடுத்துவிடுகிறது. சிலர் வளமான வாழ்விலும் பலர் வறுமையிலும் இருக்க வழி வகுக்கின்றது.

மூன்றாவதாக -இறைமறுப்புக் கொள்கை மனிதனை தன் வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்துவிடக் கூடியது, இறப்புக்குப் பின் இன்னொரு வாழ்க்கை இல்லை என்று நம்பச் செய்கின்றது. இந்த நம்பிக்கை மனிதனை, இந்த உலகத்தில் கிடைப்பதை முற்றாக சுவைத்துவிடு!' என்ற எண்ணத்iதை ஏற்படுத்துகிறது. இதனால் அவன் இந்த உலகில் கிடைப்பதை அனுபவித்து விட வேண்டும் என்ற மன உந்துதலால் விலங்கினும் கீழாய் நடக்கத் தலைப்பட்டு விடுகின்றான். இவ்வாறு மனிதன் தன் ஆசைகளை நிறைவு செய்வதில், அவன் போடும் போட்டியில் பூமியில் எல்லாவிதமான குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகிறான்.

மனித மனதில் இந்த மாற்றங்கள் சமுதாய அமைப்பையே ஒட்டுமொத்தமாக கெடுத்துவிடுகின்றன.

இறைவனுக்கு அடிமையாக மாட்டேன்! என்று மறுத்து விட்டு: அவன் தன் இச்சைகளுக்கு அடிமையாகிறான். தன் மூதாதையர்களின் பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகிறான். தன் இனத்திற்கு அடிமையாகிறான். தன் குலப் பெருமைக்கு அடிமையாகிறான். தன் ஆட்சியாளருக்கு அடிமையாகிறான். தன் பெயருக்கும் புகழுக்கும் அடிமையாகின்றான்.

இதனால் மனம், இனம், மொழி, நிறம், சாதி, நாடு, பிறந்த பூமி என்று எண்ணற்று துண்டாடப்பட்டு கிடக்கும் அவலக் காட்சி இன்று உலகெங்கும் காண முடிகிறது.

ஆகவேதான் மனிதன் தன் ஒழுக்கம், மனிதாபிமானம், அன்பு, இரக்கம் போன்ற உயர்ந்த பல பண்புகளையெல்லாம் இழந்து நிற்கிறான்.

இந்நிலை இக்காலத்தில் மட்டுமல்ல கற்காலம், காட்டுமிராண்டிக் காலம், இருண்டகாலம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட முந்தைய காலங்களிலும் இன்னும் அக்காலத்தில் பேசப்பட்ட கற்பனைக் கதைகளிலும் கூட காணப்படுகின்றது.மகாபாரதத்தில் மனிதன்

மகாபாரதத்தில் கதை ஒன்று சொல்லப்படுகிறது:: மகாபாரதப் போர் முழுவீச்சுடன் நடந்து கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கான பிணங்கள் ஆங்காங்கே வீழ்ந்துக்கிடக்கின்றன. ஒரு மூலையில் பிணம் தின்னும் கழுகொன்று வட்டமிடுகின்றது.

நாரதமுனி அந்த கழுகைப் பார்த்து இவ்வாறு கேட்கின்றார்: நீ ஏன் இத்தனை மனிதர்களும் பிணமாகக் கிடப்பதை, வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறாய்?

அதற்கு அந்த கழுகு இவ்விதம் பதில் கூறியது: நான் இங்கு அமர்ந்திருப்பது வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல, என்னுடைய மனைவிக்கு உடல் நலம் சரியில்லை மருந்திற்காக சிறிது மனித இறைச்சி வேண்டும் அதற்காக அமர்ந்திருக்கிறேன்!''

நாரதமுனி, அங்கே கிடக்கும் இலட்சக்கணக்கான மனித பிணங்களைச் சுட்டிக்காட்டி, ம்இவற்றிலிருந்து வேண்டிய இறைச்சியை எடுத்துச் செல்!'' என்றார்.

அதற்கு அந்த கழுகு கூறியது: இந்த பிணங்களில் எதுவும் மனிதனில்லை. எல்லாம் குள்ள நரிகள்! நாய்கள்! ஓநாய்கள்! போன்றவற்றின் பிணங்களாகும். இந்த போரிலே ஈடுபட்டிருக்கும் இலட்சக் கணக்கானோரில் ஒரு சிலரே உண்மையான மனிதர்கள். அவர்களின் இறைச்சிக்காகவே நான் காத்திருக்கிறேன்!''டயோஜினிஸ் தேடிய மனிதன்

ரோம் நாட்டில் ஏதென்ஸ் நகரின் தெருக்களில் தத்துவஞானி டயோஜினிஸ் இரவிலே தீப்பந்தம் கொளுத்தி வைத்துக் கொண்டு, வருவோர் போவோரையெல்லாம் பார்த்து பார்த்து இவர் இல்லை! இவர் இல்லை! என்று கூறுவாராம்.

இதைப் பார்த்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, தத்துவ ஞானியான டயோஜினிஸிற்கு என்ன நேர்ந்து விட்டது? என ஒருவரை யொருவர் வினவிக்கொண்டனர்.

நான் இந்த ஏதேன்ஸ் நகரில் மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சுயநலம், பேராசை, அகங்காரம், நயவஞ்சகம் எல்லாம் ஒருங்கே கொண்ட ஒரு வர்க்கத்தைத் தான் நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனவேதான் நான் இந்த ஏதென்ஸ் நகர வீதிகளில் மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!'' என்றார் டயோஜினிஸ்.

டயோஜினிஸ் தீப்பந்தம்கொளுத்தி மனிதர்களை தேடியது போன்று, இன்றும் மனிதர்களைத் தேடவேண்டிய அளவிற்கு மனித சமுதாயத்தின் நிலைமாறிவிட்டது என்றால் மிகையாகாது.ஹோர்டன் சைல்டின் தீர்வு

ஜாதி, மத, மொழி, இன, நிற வேறுபாடுகளைத் துறந்து: அதிலிருந்து விடுபட்டு, மனித சமுதாயம் ஒருமித்த சமுதாயமாக ஒரே குலமாக மாறுவதற்குச் சாத்தியமான வழிமுறை ஏதேனும் இருக்கிறதா? என ஆராயவேண்டும். விருப்பு வெறுப்புகளை விடுத்து நடுநிலையோடு ஆராயவேண்டும்.

அதற்குரிய தீர்வு ஏதேனும் முந்தைய வரலாற்றில் கூறப்பட்டிருக்கிறதா? என பார்க்கும்போது பிரபல வரலாற்று ஆய்வாளரும், பல நூல்களை இயற்றியவருமான ஏஞதஉஊச ஈஐஒஊகஉ என்பவர் தன் ஷரஐஆப ஐஆடடஊசஉ ஒச ஐஒநபஞதவ' என்னும் நூலில் பின் வருமாறு கூறுகிறார்:

மனிதர்கள் தங்களுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பித்து, பிளவு பட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவர்களை ஒருமைப்படுத்த ஏக தெய்வ விசுவாசத்தால் மட்டுமே முடிந்தது.''

ம்இந்த பிரபஞ்சம் தானாய் தோன்றியது. இறைவனுக்கு அதில் எவ்வித பங்கும் இல்லை. இறைவன் என்பவனே இல்லை!' எனும் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட ஏஞதஉஊச ஈஐஒஊகஉ தான் இவ்வாறு கூறி இருக்கிறார்.மனித சமூகம் வேதகிரந்தங்களில்

மனித சமுதாயம் முழுவதும் ஒரே சமுதாயமாக மாற முடியுமா? இது சாத்தியமா? அப்படி ஏதேனும் சாதனைகள் முந்தைய வரலாற்றில் நிகழ்ந்துள்ளனவா? அப்படியாயின், அது எந்தவிதத்தில் சாத்தியமாகியது? என்பது பற்றி அறிய மதங்களின் வேதங்களை ஆராய் வோமானால், ம்அதில் அகில உலகத்தாருக்கும் பொதுவான வழிகாட்டி நான்'' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இறுதி வேதமான திருக்குர்ஆனில் ஏக இறைவன் கூறுகிறான்:

உங்களின் இந்த சமுதாயம் திண்ணமாக ஒரே சமுதாயமாகும். மேலும் நான்தான் உங்களின் அதிபதி. எனவே, எனக்கே அஞ்சுங்கள்!'' (அல்குர்ஆன் 23:52)

(ஆரம்பத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கை வழி நடக்கும் சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் தோன்றவே) நேர்வழியில் செல்வோருக்கு நற்செய்தி அறிவிப்போராகவும், (தீயவழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் தனது தூதர்களை அனுப்பி வைத்தான். மேலும், மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விசயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதற்காக சத்திய வேதத்தையும் தன்இறைதூதர்களுக்கு அல்லாஹ் அருளினான்.'' (அல்குர்ஆன் 2:213)

இந்த மனித சமுதாயம் பண்போடு கூடிய ஒரே சமுதாயமாக ஒரே குலமாக மாறி, ஏக இறைவனுக்கு மட்டுமே அஞ்சி, அவனுடைய வழி காட்டுதல்களான இறைவேதம் மற்றும் இறைத்தூதருக்கு மட்டுமே வழி படவேண்டும் என்று திருமறைக் குர்ஆன் அறிவுறுத்துகிறது.

இந்த உலகின் எந்தப்பகுதி மக்களின் மத்தியில் பிரிவினைகளும் பிணக்குகளும் ஏற்படுமோ அவர்களை ஒருங்கிணைக்க ஏக இறைவன், வேதத்துடன் தூதர்களை அனுப்பி வைக்கிறான்.

எந்த சமுதாயத்திற்கும் என்னுடைய தூதர்கள் வராமல் இருந்ததில்லை!' என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.

பழம்பெருமை வாய்ந்த நம் இந்திய நாட்டிற்கும் ஏராளமான இறைத்தூதர்களை இறைவன் அனுப்பியிருக்கிறான். அவ்வாறு அனுப்பப்பட்ட மனுக்கள் அல்லது மகரிஷிகள் என்று அழைக்கப்படும் அந்த தூதர்கள் அனைவரும் பாந்தவா மானவா சர்வே''

மனிதர்கள் அனைவரும் பந்துக்கள்' என்றே கூறினார்கள். பாந்தவா ஹைந்தவா சர்வே' (இந்துக்கள் அனைவரும் பந்துக்கள்) என்றேர் பாந்தவா வைஷ்ணவா சர்வே' (வைஷ்ணவர்கள் அனைவரும் பந்துக்கள்) என்றேர் பாந்தவா சைவா சர்வே' (சைவர்கள் அனைவரும் பந்துக்கள்) என்றோ அவர்கள் கூறவில்லை. மனிதர்கள் அனைவரும் பந்துக்கள் என்றே கூறினார்கள்.

உன்னிடத்தில் நீ அன்பு கூர்வது போல், பிறரிடத்திலும் அன்பு கூர்வாயாக'' (மார்க் 12:31) என்றே இயேசுகிறிஸ்துவும் போதித்தார்.

உன்னிடத்தில் நீ அன்பு கூர்வதுபோல் இஸ்ரவேலர்களிடம் மட்டும் அன்பு கூர்வாயாக என்றோ, கிறித்தவர்களிடம் மட்டும் அன்பு கூர்வாயாக என்றோ அவர் போதிக்கவில்லை.

மனித சமுதாயம் முழுவதும் அல்லாஹ்வின் குடும்பமாகும். யார் மனித சமுதாயத்திற்கு அதிக நன்மைகள் செய்கின்றாரோ அவரே அல்லாஹ்விடம் அதிக அன்புக்குரியவராவார்!' என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபித் தோழர் உமர்(ரழி) அவர்களின் வீட்டில் ஒரு நாள் ஓர் ஆடு அறுக்கப்பட்டது. அவர்கள் இல்லம் வந்ததும் பக்கத்து வீட்டு யூதருக்கு அவ்விறைச்சியின் ஒரு பகுதி அனுப்பப்பட்டதா?' என வினவினார்கள்.

மேலும், உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அடிக்கடி சொல்வார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் தொடர்ந்து, அண்டைவீட்டாரிடம் பரிவுடன் நடந்து கொள்ளவேண்டும் என, வலியுறுத்தி வந்தார்கள். எந்த அளவுக்கு அவர்கள் இதை வலியுறுத்தினார்கள் என்றால், அண்டைவீட்டாருக்கு நம் சொத்திலும் பங்கு பெறும் உரிமை வந்துவிடுமோ? என, நான் வியப்புறும் அளவிற்கு வலியுறுத்தினார்கள்! நூல்: புகாரி

இவ்வாறு அன்பினாலும் பண்பினாலும் மனித குலத்தை ஒருங்கிணைக்க முயற்சித்த மகரிஷிகள்... தீர்க்கதரிசிகள் எனும் நபிமார்கள் எல்லாம் அதற்காக எடுத்துக் கொண்ட ஆயுதம் அல்லது அடிப்படை ஏக தெய்வ நம்பிக்கையாகத்தான் இருந்தது. என்று அவர்களை ஏற்றுக் கொண்ட மதத்தவர்களின் வேதங்கள் கூறுகின்றன. அப்படி இருக்கும் போது, அந்த மதங்களின் கடவுள்களின் பெயரில் பிணக்குகளும் பிரிவினைகளும் ஏன் ஏற்பட்டது? என்று ஆய்வு செய்யவேண்டும். அதற்காக அம்மதங்களின் கிரந்தங்களைக் காணும்போது அவற்றில் ஒற்றுமைக்கு வழிகாட்டியிருப்பது போலவே வேற்றுமைக்கும் வழிகாட்டல்கள் இருக்கின்றன. அது எவ்விதத்தில் என்று காண்போம்:இந்து வேதங்களில் ஏகத்துவம்

இந்து வேதங்களில் மூத்த வேதமான ரிக் வேதம் கூறுகிறது.

மானோ ஹிம்ஸூ ஜ்ஜ நிதாயஹ் ப்ருதிவ்யா

யோ வா திவம் சத்ய தர்மா ஜஜான

யஷ்சா பஷ்சந்தரா ப்ருஹதீர் ஜஜான

கஸ்மை தேவாய ஹவிஷா விதமே ரிக் வேதம் 10:121:9

(எவர் பூமியை உண்டாக்கினாரோ, அதுபோல் உண்மையை நியாயமாக்கி வைத்துக் கொண்டிருக்கும் எவர் தெய்வாமிர்தத்தை உண்டாக்கினாரோ, எவர் நீரும் பெரிய பிரகாசத்தையும் உண்டாக்கினாரோ, அந்த படைப்பாளனே நம்மை பரிபாலிக்கின்றான். அப்படிப்பட்ட தான் தோன்றியான பரமாத்மாவை நாங்கள் பக்தியோடு வணங்குகின்றோம்.)

கிம் ஸ்விதா ஸீததிஷடான

சாரம்பணங்கதமல்ஸ்வில் கதாஸீல்

யதோ பூமி ஞ்ஞஜனயன் விஸ்வகர்மா வித்யா மௌர்ஸ்ணோன்ம ஹினா விஷவசக்ஷாஹ் ரிக் வேதம் 10:81:2

(அடிப்படை எதுவாயிருந்தது? ஆகாய பூமியின் காரணம் எதுவாயிருந்தது? தோற்றம் நடந்தது எப்படியாயிருந்தது? சர்வமும் காணக்கூடியவனாகிய விஸ்வகர்மாவே சுய மகத்துவம் கொண்டு பூமியையும் ஆகாயத்தையும் படைத்து பரிபாலிக்கின்றார்)

அதர்வ வேதம் கூறுகிறது:

ய ஏதம் தேவ மேக விருதம் வேத

ந த்விதியோ ந த்ருதீயஷசதுர்தோ நா ப்ய சயதே

ய ஏதம் தேவ மேகவ்ருதம் வேத

ந பஞ்சமோ ந ஷஷடஹ் ஸப்தமோ நா ப்யூச்யதே

ய ஏதம் தேவ மேகவ்ருதம் வேத

நா ஷுமோ ந நவமோ தஷமோ நா ப்யூச்யதே

ய ஏதம் தேவமேக வ்ருதம் வேத

ஸ ஸர்வஸ்மை வி பஷயதி யச்ச ப்ராணதியச்சன

ய ஏதம் தேவ மேக வ்ருதம் வேத

தமிதம் நிஹதம் ஸஹஹ் ஸ ஏஷ ஏக ஏகவ்ருதேக ஏவ

ய ஏதம் தேவ மேக வ்ருதம் வேத அதர்வ வேதம் த்ரியோ தஷகாண்டம் 4:4:14-19

(எவனொருவன் எல்லாம் அறிந்தவனாகவுள்ளானோ, அவனே மேன்மை, மகிமை, ஆகாயம், நீர், பிரம்மச்சரிய பிரகாசம், அன்னம் பஜனைகிரியை எல்லாம் ஏற்படுத்தியுள்ளான். அவனை ஒன்று என்றோ, இரண்டு என்றோ, மூன்று என்றோ, நான்கு என்றோ, ஐந்து என்றோ, ஆறு என்றோ, ஏழு என்றோ, எட்டு என்றோ, ஒன்பது என்றோ, பத்து என்றோ, கூறப்படுவதில்லை. அவன் நிலையான எல்லா வஸ்துக்களையும் தர்ஷிக்கின்றான், அவன் அசாதாராணமானவனும் ஏகனுமாவான் . இவையெல்லாம் அவனின் ஏற்பாடேயாகும்.)

ஸ்வேதாஸதரோ உபநிஷத் கூறுகிறது:

ய ஏகோ ஜாலவா னீஷத ஈஷநீபிஹ

ஸர்வான் லோகா னீஷத ஈஷாநீபிஹ

ய ஏ வைக உத்பவே ஸம்பவேச

ய ஏக திவிதுர ருதாஸ்தே பவன்தி'' ஸ்வேதாஸதரோ உபநிஷத் (3:1)

(ஏகனாகிய பரமாத்மாவே! இந்த பிரபஞ்சத்தை படைத்துத் தன்னுடைய மேலான கட்டளைகளைக் கொண்டு ஆட்சி செய்யவும் செய்கின்றான். இந்த உலகமும் இந்த பிரபஞ்சமும் அவனுடைய கட்டளைக்குக் கீழ்படிந்ததாகும். ஏகனாகவே இருந்து, இந்த எல்லா உலகங்களுடைய துவக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாயிருக்கிற அந்த பிரம்மத்தை அதற்கேயுரிய தன்மையில் அறியும் மஹா புருஷர்கள் அமரர்களாவார்கள்.)

நா தஸ்ய கார்யம் கரனம் ச வித்யதே

நா தஸ்ய ஸமஸ்சா யதிகஸ் ச த்ருஸ்யதே

பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஸ்ருயதே

ஸ்வா பாவிக ஜ்ஞான பல க்ரியா ச ஸ்வேதாஸதரோ உபநிஷத் (3:1)

(அந்த பரமாத்மாவிற்கு ஜீவிகளைப் போல சரீரமும் புலனுணர்வுகளும் இல்லை. அவனை விட பெரியவனோ அல்லது சமமானவரோ எவரும் இல்லை. அவனுடைய ஆற்றல் பலவிதத்தில் செயல்படுகின்றது. அவனுடைய ஞானமும் ஆற்றலும் அவனுக்கேயுரிய இயல்பாகும்.)

கேனோ உபநிஷத் கூறுகிறது

யச்ச க்ஷ ஷான பஸ்யதி யேன சஷ்யம் ஷி பஸ்யதி

ததேவ ப்ரஹ்மத்வம் வித்தி நேதம் ய திதம் முபாஸதே

யத் ஸ்ரோத்திரேன ந ஸ்ரூனோதி ஏன

ஸ்ரோத்திரமிதம் ஸ்ருதம் த தேவ

ப்ராஹ்மத்வம் வித்தி நேதம் யதித

முபாஸதே கேனோ உபநிஷத் 1:6.7

(எந்த ஒன்றைக் கண்கொண்டு காணமுடியாதோ, கண்ணிற்கு பார்வை வழங்கக் காரணம் எதுவொன்றோ அதுவே நீ பிரம்மம் என்று கொள். கண்கொண்டு காணும் எந்தவொன்றையும் மனிதர்கள் வணங்கினால், அது பிரஹ்மமல்ல.

எந்தவொரு சப்தத்தையும் காது கொண்டு எவருக்கும் கேட்க முடியவில்லையோ காதுக்கு கேட்கும் சக்தியை வழங்கக் காரணம் எதுவொன்றோ அதுவே நீ பிரம்மம் என்று கொள். காது கொண்டு கேட்கும் வகையில் அமைந்த எந்த வொன்றையும் எவராவது வணங்கினால், அது பிரஹ்மமல்ல.)

பகவத் கீதை கூறுகிறது

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய

த்வமஸ்ய பூஜ்யச்ச குருர்- கரீயான்

நத்வத்ஸமோ ஸ்த யப்யதிக குதோஸன்யோ

லோகத்ர யேஸப்யப்ரதிம - ப்ரபாவ கீதை 11:43

(ஒப்புயர்வில்லாத பெருமை வாய்ந்தவனே! நீ இந்த அசைவதும் அசையாததுமாகிய உலகிற்கு தகப்பனும் பூஜித்ததற்குரியவனும் பெரியவருக்குப் பெரியவனும் ஆகின்றாய், மூவுலகிலும் உனக்குச் சமமானவர் இல்லை. இன்னும் மேலானவர் வேறொருவர் எங்ஙனம்?)கிருஸ்தவ வேதங்களில் ஏகத்துவம்

பைபிள் பழைய ஏற்பாடு கூறுகிறது

கர்த்தர்: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு''. ஆதியாகமம் 17:1

கர்த்தர் இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ள தேவன்.

ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர், அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்'' யாத்திரகாமம் 34: 6,7

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே! கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்பு கூறுவாயாக. உபாகமம் 6:4,5

நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். சங்கீதம் 95:6

கர்த்தாவே, நீரே என் தேவன்! உம்மை உயர்த்தி உமது நாமத்தைத் துதிப்பேன், நீர் அதிசயமானவைகளைச் செய்தீர், உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். ஏசாயா 25:1

முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. ஏசாயா 46:9

தேவன் பேசிச்சொல்லிய சகல வார்த்தைகளுமான உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்ரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம், நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேமிக்கவும் வேண்டாம். யாத்திரகாமம் 20:1-5

பைபிள் புதிய ஏற்பாடு கூறுகிறது

வேதபாரகர்களில் ஒருவன் வந்து, பிரதான கற்பனை எதும்வொன்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால், இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (மாற்கு 12:29)

பிசாசு, இயேசுவை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும்: அவைகளின் மகிமைகளையும் அவருக்குக் காண்பித்து, ம்நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்!'' என்று சொன்னான்.

அப்பொழுது இயேசு, ம்அப்பாலே போ சாத்தானே உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே!'' என்றார். மத்தேயு 4: 8-10ஏகத்துவத்திற்கு ஏற்படுத்திய களங்கம்

இத்தகைய தெளிவான ஏகத்துவத்தை முன்வைத்தே தீர்க்கதரிசிகள் மனித சமுதாயத்தை ஒருங்கிணைக்க முயற்ச்சித்தார்கள். இதற்கான அஸ்திவாரத்தையும் போட்டு வைத்தார்கள்.

ஆனால், எப்போது வேதங்களில் கையூடல் செய்து, ஏக தெய்வத்தின் பண்புகளை களங்கப்படுத்தவும், ஏகத்துவத்தை சிதைக்கவும், பலதெய்வக்கொள்கையை புகுத்தவும் முன்வந்தார்களோ, அப்பொழுதே அந்த சமூகத்தில் பிரிவினைகளும் பிணக்குகளும் ஏற்படத் துவங்கிவிட்டன.

தங்கள் பிரிவுகளை நியாயப்படுத்த இறைவேதங்களிலும், இறைத்தூதர்களின் போதனைகளிலும் செய்யப்பட்ட கையூடல் எந்த அளவுக்கு கொடு10ரமான முறையில் இருந்தது என்றால், இவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட பிரிவினைகளில் தங்கள் பிரிவை மேன்மைப்படுத்தி காட்டுவதற்காக இறைத்தன்மைக்கு களங்கம் கற்பிக்க எள்ளளவும் தயக்கம் காட்டவில்லை.

நா தஸ்ய பிரதிம அஸ்தி

அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது. யசசூர் வேதம் 32:3

ஸர்வமேதத் - ருதம் மன்யே யன்மாம வதஸி கேசவ

ந ஹி தே பகவான் வ்யக்திம் விதுர் - தேவா ந தானவா:

(கேசவா! எனக்கு எதை கூறுகிறாயோ, அது அனைத்தையும் உண்மை என்று உணர்கின்றேன். எனினும், பகவானே உன்னுடைய வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களல்லர்: அசுரர்களும் உணர்ந்தவர்களல்லர்) (பகவத் கீதை 10:14)

அவயகதம் வ்யக்தி - மாபன்னம் மன்யந்தே மா மபுத்தய

பரம் பாவ - மஜானந்தோ மமாவ்யய - மனுத்தமம்

மதியீனர் மாறுபாடில்லாததும் மேம்பட்ட வேறொன்றில்லாததும் ஆன என்னுடைய பரமாத்மஸ்வ ரூபத்தை அறியமாட்டாதவர்களாய் தோன்றுதலில்லாத என்னை தோற்றத்தை அடைந்தவனாக கருதுகின்றனர். (பகவத்கீதை 7:24)

நாஹம் ப்ரகாச: ஸாவஸ்ய யோகமாய ஸமாவ்ருத:

மூடோஸயம் நாபிஜானாதி லோகோ மாமஜ - மவ்யயம்

நான் யோகமாயையினால்•மூடப்பட்டு எல்லோருக்கும் விளங்குவதில்லை. மதியிழந்த இவ்வுலகம் பிறப்பற்றவனும் மாறு பாடற்றவனும் ஆகிய என்னை அறிவதில்லை (பகவத்கீதை 7: 25)

அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனு - மாச்ரிதம்

பரம் பாவ - மஜானந்தோ மம பூத - மஹேச்வரம்

பொருள்களுக்கு மகேசுவரனாயுள்ள என்னுடைய உயர்ந்த தன்மையை அறியாதவர்களாய், மூடர்கள் மனித உடலை அடைந்ததாய் என்னை அவமதிக்கின்றார்கள். (பகவத் கீதை 9:11)

இவ்வாறு வேத இதிகாசங்கள் கூறிக்கொண்டிருக்க, அந்த ஏக இறைவனுக்கோ தலை, தோள், தொடை, கால், என்று உருவம் கற்பித்து: அவனை தரம் பிரித்து: அதைக் கொண்டு பிரிவுகளை நியாயப்படுத்துகிறார்கள்.

பிராமணாஸ்ய முகமாஸ் ஸேதுபாகு குரோ ஜன்ய கிரதஹ: ஊரு தகஸ்ய தெய்ஸ்யபர்க்தய சசூத்ரோ அஜாயதஉற (ரிக்வேதம் 10:90:12)

கடவுளின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்ரியன், தொடையில் இருந்து பிறந்தவன் வைஷ்யன், காலில் இருந்து பிறந்தவன் சசூத்திரன் என, மனித சமுதாயத்தை நான்காக கூறுபோட்டு பேதப்படுத்த ஆதாரமாக எடுத்துவைக்கும் ரிக்வேத வரிகள் தாம் இவை

சாதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச (பகவத்கீதை 4: 13)

என்னால் குணங்களுக்குத் தக்கவாறு கருமங்களை வகுத்து, நான்கு வருண முறைப்பாடு சிருஷ்டிக்கப்பட்டது.'' என்று பகவான் கூறியதாகவேபகவத் கீதையிலும் கூறிவைத்தார்கள்.

மனித ராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, ஷத்ரிய, வைசிய, சசூத்ர என்ற நால் வருணத்தையும், வேதஞானம், புவி புரத்தல், செல்வ மீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனின் முகம், தோள் , தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு தர்மம் 1: 31) -- என்று மனுதர்மத்தில் கூறி வைத்ததோடு: இந்த வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையிலேயே அனைத்து சட்டங்களையும் கூட இயற்றி வைத்துள்ளனர்.

இறைவனின் காலிலிருந்து பிறந்தவன் இழிவுக்குரியவன் என்றால், இறைவனின் கால் இழிவானது என்றாகுமே? இதனால் இறைவனையே இழிவுப்படுத்துகிறோமே என்று எள்ளளவும் கவலைப்பட்டதேயில்லை, தேவன் ஆவியாயிருக்கிறார்' (யோவான் 4:24)

நீங்கள் அவர் சப்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தை கண்டதுமில்லை. (யோவான் 5:37)

அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்ராதிபதியும்: ராஜாதிராஜாவும், கர்த்தாதிகர்த்தாவும் , ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக் கூடாத வருமாயிருக்கிறார். (தீமோத்திå 6:15,16)

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் 1:18)

இவ்விதம் பல இடங்களில் ஏகத்துவத்தை எடுத்துரைத்துக் கூறிய பைபளிலே, இஸ்ரவேலர்கள் தங்கள் குலத்தை உயர்த்திக் காட்ட இஸ்ரவேலர் சமுதாயத்தின் பிதாவாகிய யாக்கோபு: ம்நான் தேவனை முக முகமாய் கண்டேன் (ஆதியாகமம் 32:26) என்பதாக எழுதி வைத்தார்கள்.

அத்தோடு நில்லாமல், இன்னும் யாக்கோபு கர்த்தருடன் சண்டையிட்டு போராடி இறைவனை வென்று இஸ்ரவேல் என்னும் சிறப்புப் பெயர் பெற்றதாகவும் எழுதி வைத்தனர்.

உன் பேர் இனி யாக்கோபு எனப்படும் தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். (ஆதியாகமம் 32: 28)

இதன் முலம் இஸ்ரவேலர்கள் ஆசீர்வாதத்திற்குரிய மேல்குடி மக்கள் என்று காட்டத் தலைப்பட்டனர். கர்த்தரை யாக்கோபுடன் சண்டையிட வைத்து: கர்த்தரை சராசரி மனிதராக்கினார்கள். இன்னும் கர்த்தரோடு எங்களுக்கு நெருக்கம் அதிகம் என்று காட்ட தங்கள் இனத்திற்கு வந்த தூதர் இஸ்ராவை (உஸைர்-அலை) கடவுளின் ஒரே குமாரர் என்று கூறினார்கள். இதையடுத்து வந்த கிறிஸ்தவர்கள், கடவுளின் குமாரர் : உஸைர் அல்ல, இயேசு கிறித்துவே கர்த்தரின் ஒரே குமாரர் என்று கூறினார்கள்.

உன்னைப்போல் அயலானையும் நேசி:'' என்று கூறிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டே,

ம்காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேயின்றி மற்றபடியல்ல பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய் குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல என்றார். (மத்தேயு 15:24.26)

போன்ற வசனங்களையும் கூறவைத்தனர். (அதாவது இயேசு கூறியதாக இட்டுக்கட்டினர் எனலாம்.

இஸ்ரவேல் குலத்தை மேல் சாதி என்றும்: மற்றவர்களை கீழ் சாதி என்றும் கருதும் வகையில் இஸ்ரவேலர்களை ஆட்டுக்குட்டி என்றும் மற்றவர்களை நாய்குட்டி என்றும் கூறவைக்கும் வசனங்களை உருவாக்கி இடைச்செருகல் செய்தனர்.தீண்டாமைக்குத் தீர்வு

மனிதர்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி அதில், பேதங்களை ஏற்படுத்தி, அதை நியாயப்படுத்த இறைவேதங்களில் கையூடல்கள் செய்ததால், அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவன் இறுதியாக திருக்குர்ஆனை இறக்கி வைத்து:

நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். இன்னும் நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.'' (அல்குர்ஆன் 15: 9) என்றான்.

இறக்கியருளப்பட்ட நாள் துவங்கி இன்றுவரை சுமார் 1421 ஆண்டுகள் ஆகியும் எந்த ஓர் இடைச்சொருகல்களுக்கும் உள்ளாகாமல் இறைவனால் பாதுகாக்கப்பட்டுவரும் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம், ஆகவே, உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் ஏக இறைவனிடத்தில் நிச்சயமாக மிக்க மேலானவர்.'' (அல்குர்ஆன் 49:13)

இந்த இறைவசனமானது, உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது என்கிறது.

மனித இனம் ஒரே இனமாக இருந்த போதிலும், நீங்கள் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து இருப்பது ஓர் இயற்கையான விஷயமாகும். மனித இனம் பெருகப்பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும், பின் பல பாகங்களுக்கு அவை குடிபெயரும்போது, பல கிளைகளும் பல கோத்திரங்களும் உருவாகுவதும் தவிர்க்க முடியாததாகும். மனிதன் பூமியின் பல பகுதிகளில் வசிக்கத் துவங்கிய பின்னர், உடல் அமைப்பு, நிறம், மொழி, நடைஉடை பாவனைகள், வாழ்க்கை முறைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டேயாக வேண்டியிருந்தது, ஒரே பகுதியில் வசிப்போர் ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாகவும், வெகுதொலைவில் வசிப்போர் நெருக்க மற்றவர்களாகவும் இருக்க வேண்டிய நிலை வந்தது,

ஆனால் இந்த இயல்பான வேற்றுமை நம்மிடம் இருப்பதால், இவ்வேற்றுமையின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன் எனும் பாகுபாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது கருத்தல்ல.

ஒரு மனிதன் ஏதேனும் ஒரு நாட்டிலோ, இனத்திலோ அல்லது குலத்திலோ பிறப்பது இயற்கையானதோர் நிகழ்ச்சி, அப்பிறப்பில் அவனுடைய சுயவிருப்பத்திற்கோ, முயற்சிக்கோ எள்ளளவும் தொடர்பில்லை.

மனிதனுக்கு எந்த விஷயத்தில் உயர்வு கிட்டுகிறதோ, அது அவன் பிறரைக் காட்டிலும் அதிகமாக இறைவனுக்கு அஞ்சுபவனாகவும், தீயவற்றை விட்டு விலகிக் கொள்பவனாகவும், தூய்மையான வழியில் நடப்பவனாகவும் இருப்பதால்தான் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது (,ம்தஃப்ஹீமுல் குர்ஆன்' மௌலானா மௌதூதி)

இறைத்தூதர் அவர்கள் நிகழ்த்திய உரையில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இறுதி உரையில் கூறினார்கள்:

மானிடரே! நிச்சயமாக உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து தான் இறைவன் படைத்தான், மனித சமுதாயம் அனைத்தும் ஆதமுடைய சந்ததிகளே! ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர், எனவே பிறப்பு, சொத்து ஆகியவற்றால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். நிறம், இல்லை. ஒர் அரபி, அரபி அல்லாத ஒருவனை விட உயர்ந்தவன் அல்லன். அரபி அல்லாத ஒருவன், ஒர் அரபியை விட உயர்ந்தவன் அல்லன்.

ஒரு வெள்ளையன் ஒரு கருப்பனை விட உயர்ந்தவன் அல்ல, ஒரு கருப்பன் ஒரு வெள்ளையனை விட உயர்ந்தவன் அல்ல,

மனிதர்களுக்குள்ள உயர்வெல்லாம் அவனின் இறை பக்தியைப் பொறுத்தே அமைந்திருக்கிறது''.

மக்காவை வெற்றி கொண்டபோது, நபி(ஸல்) ஆற்றிய சொற்பொழிவில் கூறுகிறார்கள்:

உங்களிடமிருந்து அறியாமைக் காலத்தின் குறைகளையும், அதன் வீண் பெருமைகளையும் போக்கிவிட்ட இறைவனைத் துதித்து நன்றி செலுத்துகிறேன்.

மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராக பிரிகின்றார்கள். ஒருவர் நல்லவர் - இறையச்சம் உள்ளவர். அவரே இறைவனின் பார்வையில் கண்ணியம் மிக்கவர். மற்றொருவன் தீயவன் - துர்பாக்கியவான். அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன். மனிதர், அனைவரும் ஆதமின் மக்களே ஆவர். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான். (நூல்: பைஹகீ, திர்மிதி)

திருக்குர்ஆனின் பிரகடனமும், திருத்தூதரின் போதனையும் வெறும் தத்துவங்களாக இருந்துவிட்டு மாய்ந்து போகவில்லை.

அன்றைய அரபு சமுதாயத்தில் தலைவிரித்தாடிய குலபேதம், நிறபேதம், வர்க்க பேதம் முதலான பீடைகளை அடியோடு கிள்ளியெறிந்து: தீயபண்புகளை விட்டு, மிகவும் தூய்மையான பண்பட்ட ஒரே சமுதாயத்தை இம்மண்ணுலகில் உருவாக்கிக் காட்டியது.

அழிவுப்பாதையில் அதிவிரைவாக ஒடிக்கொண்டிருந்த அந்த அரபுச் சமுதாயத்தை திருத்தி மிகக் குறுகிய காலத்தில் ஏகத்துவம் எனும் கயிற்றால் கட்டி ஒருங்கிணைத்து ஒரே சமுதாயமாக்கியது இஸ்லாம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்னும் சான்றோர்களின் வாக்கை மெய்ப்படுத்தி அதை நடைமுறைப்படுத்தியது இஸ்லாம்.

ஏகத்துவத்தின் வருகை நாடு தழுவியதொரு புரட்சியாகவும், அதன்பின் உலகப்புரட்சியாகவும் மாறியது,

ஏகதெய்வ நம்பிக்கை அந்த நாட்டில் நிலவிய சட்டத்தை மட்டுமோ அல்லது அங்கிருந்த ஒரு சில தலைவர்களை மட்டுமோ மாற்றிடவில்லை, தனி மனிதர்களை அது தனித்தனியாகவும்: சமுதாயத்தை ஒட்டு மொத்தமாகவும் மாற்றியமைத்தது.லாயிலாஹ இல்லல்லாஹ்

இப்பிரபஞ்சத்தைப் படைத்து காத்து அருள்செய்யக்கூடிய இறைவன் ஒருவன் தான். அவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு மட்டுமே வழிப்பட வேண்டும், அவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும், அவனுக்கு மட்டுமே அடிமைப்பட்டு நடக்க வேண்டும் என்பதே இஸ்லாம் கூறும் ஏகத்துவம், இதை தத்துவ ரீதியாக, லா இலாஹ இல்லல்லாஹு'' என்கிறது, வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதே இதன் பொருள், இதுவே இஸ்லாத்தின் அடிப்படை வாக்கியம். இதைக் கற்றுக் கொடுக்கவே வேதங்கள் அருளப்பட்டது. தூதர்கள் அனுப்பபட்டார்கள், இவ்வாசகத்தின் முதற்பகுதி லா இலாஹ'' வணக்கத்திற்குரியது ஒன்றுமில்லை என்பதாகும், அதாவது மனிதர்கள் இங்கே வணங்கிக் கொண்டிருக்கும் இயற்கை மற்றும் செயற்கை படைப்புகள் எதுவும் வணக்கத்திற்குரியது அல்ல என்று முதலில் கூறுகிறது. எவை எவை இறைவன் என்றும், இறையம்சம் உடையது என்றும் நம்பி ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அவையனைத்தையும் நிராகரித்து, மனதை துடைத்து சுத்தமாக்குகிறது. இல்லல்லாஹு'' அல்லாஹ்வைத் தவிர' அதாவது, ஏக இறைவனைத் தவிர என்னும் ஏகத்துவத்தை தூய்மையான மனதில் இட்டு நிரப்பச் சொல்கிறது.

பரந்த இந்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள பொருட்களையும் படைத்து பரிபாலித்து வரும் ஏகஇறைவனைத் தவிர, வணக்கத்திற்குரிய வேறு நாயன் இல்லை என்றே உறுதி மொழியின் முதல் வரி கூறுகிறது,

மனிதனை விட மேலான படைப்பினம் ஏதும் இப்பூமியில் இல்லை என்பதை நாமறிவோம், அந்த மனிதனை விட மேலான சக்தி ஒன்று உண்டு என்பதையும் நாமறிவோம், அந்த சக்தியாளனே அல்லாஹ்.

மனித சக்திக்கு உட்படாத பல விஷயங்கள் நம்மைச் சுற்றிலும், நம் உடலிலும் உள்ளதை நாமறிவோம். நம் உடல் உறுப்புக்களில் ஒன்றான இதயத்துடிப்போ, நாளங்களின் இரத்த ஒட்டமோ நம்முடைய சக்திக்கு உட்பட்டதல்ல. இன்னும் இப்பூமியில் உயிரினங்கள் உயிர்வாழத் தேவையான சசூரியனின் அமைப்போ, பூமியின் அமைப்போ, இன்னும் உலக படைப்பினங்களின் அமைப்போ தன் சக்திக்கு உட்பட்டதல்ல என்று மனிதன் விளங்கியிருக்கிறான். இந்த அறிவு தன்னை விட சக்தி வாய்ந்த ஒன்றின் உதவியை வேண்டி நிற்கிறது, இந்த உதவி தேடலே பிரார்த்தனை எனலாம். வைத்தியரிடம் நோயாளி உதவி தேடுவதோ, பணக்காரனோடு ஏழை பொருளாதார உதவி கேட்பதோ, லௌகீகரீதியிலான காரணகாரிய அடிப்படையிலானதாகும், காரணகாரிய பந்தங்களுக்கு அப்பாற்பட்ட உதவி தேடலே பிரார்த்தனை. இந்த பிரார்த்தனையே வணக்கத்தின் மையப்பொருள். பிரார்த்தனையற்ற மையப்பொருள் வெறும் சடங்கேயாகும்.

அப்படியானால், வணக்கம் யாருக்குச் செய்ய வேண்டும்? படைத்த நாயனுக்கே செய்ய வேண்டும்! அவனல்லவா காரணகாரிய பந்தங்கள் ஏதுமில்லாமல் மனிதனுக்கு உதவுகிறான், பிரார்த்திப்பவனின் இதயத்திற்குள்ளும் என்ன இருக்கிறது என்று அறிந்து அதற்கும் பதிலளிக்கும் சர்வவல்லமை வாய்ந்தவனாக இருக்கிறான், அதனால் மனதினுள் இருப்பதையும் துல்லியமாக அறியும் அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகள் அனைத்தையும் உரித்தாக்க வேண்டும்,

இந்த இஸ்லாத்தின் ஏகத்துவமானது, மனிதர்களுக்கு மத்தியில் பிரிவினை பிளவுகளை ஏற்படுத்தி: ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளச் செய்கின்ற பல தெய்வக்கொள்கையின் ஆணிவேரையே பிடுங்கி எறிகின்றது,

நம் சக்திக்கு அப்பாற்பட்ட சர்வவல்லமை வாய்ந்தவனுமாகிய படைத்த நாயனை மட்டுமே வணங்கும் நிலைக்கு வரும்போது, நம்மிடம் அகங்காரமும் கர்வமும் எழுவதில்லை. படைப்பினங்கள் அனைத்தும் அவன் அடிமைகளே என்றால், அடிமைகள் தங்கள் மத்தியில் உயர்வு தாழ்வு கற்பிக்க எப்படி முடியும்? ஏக தெய்வ நம்பிக்கையோ, அவன் நெஞ்சில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைந்து விடுகிறது,

இச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஹியூமனிஸமும், கம்யூனிஸமும், மனிதனே இப்பிரபஞ்சத்தில் மிகவும் உயர்ந்தவன் என்றும், அவனைக் கட்டுப்படுத்தவோ இயக்கவோ எந்தவொரு சக்தியும் மேலே இல்லை என்று கூறும்போது, அதன் விளைவாக வளர்வது ஒருவகை அகங்காரம் ஆகும். அதே சமயம் மதங்கள் கல்லையும், கல்லறையையும், மரங்களையும், விலங்குகளையும் வணங்க வலியுறுத்தின. தம்மைவிட எல்லாவிதத்திலும் குறைந்த ஆற்றலுடைய படைப்புக்களை வணங்கி வரும்போது, ஒருவகை தாழ்வு மனப்பான்மை ஏற்படுவது இயல்பாகும்.

ஒன்றையும் வணங்காதிருப்பதால் ஏற்படும் அகங்காரத்திற்கும்: படைப்புகளை வணங்குவதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மைக்கும் அப்பாற்பட்ட நிலை ஏக இறைவனை மட்டும் வணங்கும்போது ஏற்படுகிறது, இங்கு தான் இஸ்லாத்தின் அடிப்படை தத்துவம் நிலைத்து நிற்கிறது. விக்கிரகங்கள், கல்லறைகள், பொய் தெய்வங்கள், அவைகளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் இடைத்தரகர்களாக இருந்து வந்த புரோகிதமும் கூட ஏகத்துவத்திற்கு முன்னால் தகர்ந்து தரைமட்டமாகிறது. ஏகனாகிய இறைவனுக்கும் மனிதர்களுக்குமிடையே எந்தவொரு இடைத்தரகரும் தேவையில்லை என்பதே இஸ்லாத்தின் பிரகடனம். இதனால் கடவுளோடு நெருக்கமுள்ளவர்கள் நாங்கள்!' என்று கூறி, உயர்வு தாழ்வு கற்பிக்க வழியேயில்லை. கடவுளின் பெயரில் மனிதர்களிடையே பிரிவுகளும் பிணக்குகளும் ஏற்படுத்தும் புரோகிதர்களின் பிடியிலிருந்தும், மனிதனை மனிதனே அடிமைப்படுத்தும் சாதித்தத்துவ பிடியிலிருந்தும் மனித குலத்தை இஸ்லாத்தின் ஏகத்துவம்தான் இரட்சிக்கிறது.

முஹம்மத் ரஸூலுல்லாஹ்

லாஇலாஹ இல்லல்லாஹ்'' வை அடுத்து, முஹம்மது ரஸுலுல்லாஹ்'' என்று கூறுவதுடன் ஒருவர் முஸ்லிமாகின்றார்.

தமக்கு முன்பு வந்து சென்ற தூதர்களின் நோக்கத்தைப் பரிபூரணப்படுத்த வந்த இறைவனின் இறுதி தூதரே முஹம்மத்(ஸல்) அவர்கள் ஆவார் என்று ஒருவர் நம்புவதுடன், அண்ணாரின் வாழ்க்கையைப் பின்பற்ற கடமைப்பட்டவர் ஆகின்றார்.

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை, நன்மையையும் தீமையையும் பற்றிய அறிவு இறைத்தூதர் அறிவித்துத் தந்ததாக இருக்க வேண்டும்.

இறைத்தூதர் நன்மையென்று கூறியதெல்லாம் நன்மை என்றும்: இறைத்தூதர் தீமையென்று கூறியதெல்லாம் தீமையென்றும், ஒரு முஸ்லிம் நம்பவேண்டும். அப்போதே ஒரு முஸ்லிமின் வாழ்வு நபி வழியை பின்பற்றியதாகும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று அங்கீகரிக்கும் ஒருவரின் வாழ்விலிருந்து, இறைத்தூதர் கடமையாக்கிய காரியங்கள் ஒன்றும் அவரை விட்டு அகலாது, ஒரு முஸ்லிம் மது அருந்தாமல் இருப்பதற்கும் ஒரு காந்தியவாதி மது அருந்தாமல் இருப்பதற்கும் இடையே அடிப்படையிலே வேறுபாடு உண்டு, அல்லாஹ்வும் அவன் தூதரும் வெறுத்த காரணத்தாலேயே ஒரு முஸ்லிம் மது அருந்தாமல் இருக்கிறான். உடலுக்கும் மனதிற்கும் மது தீங்கிழைக்கக் கூடியது என்பதால் மட்டுமே ஒரு காந்தியவாதி மதுவிலிருந்து விலகி நிற்கிறார்.

அல்லாஹ்வும் அவன் தூதரும் அங்கீகரித்த காரியங்கள் எல்லாம் நன்மையென்பதும், தடுத்த காரியங்கள் எல்லாம் தீமை என்பதும் இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படையாகும். தூதுத்துவம் குறித்து இறைவேதம் பின்வருமாறு கூறுகிறது

அவர் அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்: பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்தும் விடுவார்:

அவர்களுடைய பளுவான சுமைகளையும் அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும்) இறக்கி விடுவார்.

எனவே, அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து அவருக்கு அருளப்பட்டிருக்கும் ஒளி மயமான(வேதத்)தையும் பின்பற்றுபவர்களே வெற்றியடைவார்கள். (அல்குர்ஆன் 7:157)

இந்தியாவிலும், அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும், ஆப்ரிக்காவிலும், அரபுநாடுகளிலும்: உலகநாடுகளிலும் இப்படி பல இறைத்தூதர்கள் வருகை தந்துள்ளார்கள், அத்தகைய தூதர்களிலேயே இறுதியானவரே நபி(ஸல்) அவர்கள், அவரை இறைவனின் இறுதித்தூதர் என்று ஏற்றுக்கொள்வதோடு, முந்தைய தூதர்களையும் நம்ப வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கிறது,வணக்க வழிபாடுகள்

முன்று பந்தங்களைக் குறித்து இஸ்லாம் கூறுகின்றது,

1, மனிதனுக்கும் இறைவனுக்குமிடையேயுள்ள பந்தம்

2, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள பந்தம்

3, மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையேயுள்ள பந்தம்

இதில் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள பந்தம் மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும். அதற்காகவே மார்க்கம் வணக்க வழிபாடுகளை நிர்ணயித்திருக்கிறது. மற்றொரு வகையில் கூறுவதானால், இறைவன் மனிதனுக்கு ஏராளமான அருட்கொடைகளை வழங்கியுள்ளான். விவரிக்க முடியாத ஏராளமான வசதிகளை வழங்கியுள்ளான், இந்த எல்லா அருட்கொடைகளுக்கும் மனிதன் செலுத்துகின்ற நன்றிக்கடனே வணக்க வழிபாடுகள். இஸ்லாம் மிக முக்கியமான நான்கு வணக்க வழிபாடுகளை முன்வைக்கிறது. அவை:

1, தொழுகை 2. நோன்பு 3. ஜகாத் 4, ஹஜ்

தொழுகை

தொழுகை என்பது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள ஒர் உரையாடல் ஆகும், இது மனித ஆத்மாவிற்கும் இறைவன் சன்னிதானத்திற்கும் இடையேயான ஒரு புனித யாத்திரையாகும்.

தொழுகையைக் குறித்து குர்ஆன் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் ம்தொழுகையை நிலைநாட்டுங்கள்'' என்றே கட்டளையிடுகிறது,

இறைநம்பிக்கையுள்ள ஒருவனின் வாழ்விலிருந்து விலகிப் போகாத தர்மமாகும் தொழுகை. தொழுகையிலிருந்தே ஒரு நாளின் வாழ்வு தொடங்குவது.

முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றுவதைப் பார்த்திருப்பீர்கள், எல்லோரும் இறைவனின் அடியார்கள் என்ற உணர்வோடு: அவனுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, எல்லோரும் வல்ல நாயன் அல்லாஹ்வின் சந்நிதியில் சமமாக நிற்கின்றனர். இங்கே ஆண்டான், அடிமை, தொண்டைமான், தோட்டி, முதலாளி, தொழிலாளி, ஏழை பணக்காரன், உயர்குலத்தான் இழிகுலத்தான், என்பன போன்ற எவ்விதப் பாகுபாடும், இல்லை, எல்லோரும் தோளோடு தோள் சேர நிற்க வேண்டும், மரியாதை கொடுப்போமே! என்று எண்ணியேனும் அல்லது தீண்டத்தாகாதவன் என்று எண்ணியேனும் தொழுகையின் வரிசையில் இடம் விட்டு நிற்கக் கூடாது, ம்தோளோடு தோள் ஓட்டி நில்லுங்கள் சைத்தானுக்கு இடமளிக்காதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள், சைத்தான் என்றதும் ஏதோ ஓனிடா டி.வி' யில் காட்டும் கொம்பு வைத்த உருவம் இடையில் வந்து நிற்கும் என்று எண்ணிவிடாதீர்கள். மொழி, நிற, தேச, வர்க்க பேதம் போன்றவற்றை தான் இங்கே சைத்தான் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்,

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே எந்த இடைத் தரகரும் இல்லாமல் நேரடியாக நிறைவேற்றப்படும் தொழுகையால், புரோகிதர் எனும் பெயரில் எவரும் தம்மை உயர்ந்தவர் என்று கூறித் திரிய முடியாது.

ஒவ்வொரு தொழுகை வேளையிலும் ஒரு முஸ்லிம் நாடு, வீடு, குடும்பம் உள்ளிட்ட அனைத்திற்கும் விடைசொல்லிவிட்டு, இறைவனோடு உரையாடிக் கொண்டிருக்கிறான், அந்த உரையாடலின் முக்கிய பகுதியின் பொருள் என்னவென்றால்,

1, அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

2, அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்,

3, அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி (யும் ஆவான்)

4, (இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

5, நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

6, (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி

7, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல: நெறி தவறியோர் வழியுமல்ல.

(திருக்குர்ஆன்1: 1-7)

இதில் முந்தைய பகுதி (1-3) ஏக இறைவனை போற்றிப் புகழ்வதும்: பிந்திய பகுதி (4-7) பிரார்த்தனையுமாகும். இப்பிரார்த்தனையின் போது, (இறைவா! உன்னையே நான் வணங்குகிறேன், உன்னிடமே என் உதவியையும் தேடுகிறேன், நீ என்னை நேர்வழியில் நடத்துவாயாக என்றால், அவன் தொழுகை ஏற்புடையதாகாது. நாங்கள்' எங்கள்' என்னும் பதங்களையே கட்டாயம் உபயோகப்படுத்தியாக வேண்டும். யார் அந்த நாங்கள்?.

கருப்பன், வெள்ளையன், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாத இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் இதில் அடங்குவர். நாள்தொறும் கடமையான ஒவ்வொரு தொழுகையின் போதும் இவ்வாறு பிரார்த்திக்கும்போது - ஆத்மரீதியாக அவர் மனதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை அது அழித்து விடுகிறது. இது தொழுகை மூலம் இஸ்லாம் தன் சமூகத்திற்கு ஊட்டும் சமத்துவத்தின் ஒரு பகுதியாகும்.

இஸ்லாம் கற்பிக்கும் தொழுகை இஸ்லாத்திற்கே உரித்தான ஒரு தனித்தன்மையாகும், அதில் உடலிலுள்ள ஒவ்வொரு தசையும் மனதோடும் ஆத்மாவோடும் இணைந்து இறைவனைத் தொழுது, அவனைப் புகழ்வதில் ஈடுபடுகின்றன.

ஒழுங்கு, கட்டுப்பாடு, மனவலிமை ஆகியவற்றை கற்பிக்கக் கூடியதாக தொழுகை இருக்கிறது.

இது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள பாசஉணர்வினை வெளிப்படுத்தும் ஒரு செயல்முறையாகும்.

உயர்ந்த இலட்சியங்களை நோக்கி முன்னேறுவதற்கான ஒரு பயிற்சியாகும்.

தொழுகை இறைவனை நினைவுபடுத்தும் ஓர் ஆற்றல் மிக்க சக்தியாகும். நேரான வாழ்வில் நம்மை வழிநடத்தும் வழிகாட்டி. ஆன்மீகத்தை வளரச்செய்கின்ற ஒரு வித்து. ஒழுக்கக் கட்டுப்பாடுகளை கற்றுத்தரும் ஒரு வலுவான பயிற்சி அனாச்சாரம், தீமைகள், நெறியற்ற வாழ்க்கை, முறையற்ற செயல், முதலியவற்றிலிருந்து மனிதனைக் காப்பாற்றிடும் அரண், உண்மையான சமத்துவம், உறுதியான ஒற்றுமை, உலக சகோதரத்துவம் ஆகியவற்றின் ஒப்பற்ற செயல்முறையின் எடுத்துக்காட்டு, மனஆழத்தில் அமைதியை எற்படுத்துவதும், மனிதனின் நிலையற்ற தன்மையை மாற்றி: மனதை ஒரு நிலைப்படுத்துவதாகும். இதுவே இஸ்லாமிய தொழுகை.

மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான பந்தத்தை உறுதிப்படுத்தும் தொழுகையால் - ஒரு மனிதன் தனக்கும் தன் மனித இனத்திற்கும் செய்யும் நன்மைகள் இதுவாகும். மேற்சொன்ன உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டுமானால் தொழுகையில் ஈடுபட்டு, அது தரும் ஆன்மீக ஆனந்தத்தை அனுபவித்துப் பார்ப்பதே சிறந்த வழி.

நோன்பு

இது மனிதனை நேர்வழியின் பக்கம் இழுத்துச்செல்லும் ஒரு மார்க்கக் கடமையாகும். முஸ்லிம்கள் ஒரு மாதம் அதிகாலை முதல் அந்திநேரம் (மாலை) வரை உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்கின்றனர், இதுவொரு வணக்க வழிபாடாகும், ஆத்மபரிசுத்தத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கும் ஒரு வழிமுறையாகும்.

உண்ண வேண்டும் என்று எண்ணினால் உண்ணவும். அருந்த வேண்டும் என்று விரும்பினால் அருந்தவும், காணவேண்டும் என்று எண்ணினால் காணவும், பேச வேண்டும் என்று நினைத்தால் பேசவும் கூடிய தான்தோன்றிக்குணமானது மிருக குணத்தில் உட்பட்டதாகும். அவற்றின் ஜீன்'களில் அது பதிக்கப்பட்டதாகும். ஆசைகளுக்கும் மோகங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க மனதைப் பக்குவப்படுத்தும் ஒரு பயிற்சி முறையே நோன்பு, பசியையும், தாகத்தையும் அடக்கிக்கொண்டு செய்யும் இத்தர்மமானது இறைபக்தியையும் இறையச்சத்தையும் வளர்க்க கூடிய வழியாகும். அதுமட்டுமல்ல நோன்பு சமுகத்தோடு நம்மை ஜக்கியப் படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பசியின் தாகத்தின் கொடுமையை அறிகிறவன் ஏழைகளை நேசிக்கவும் உதவவும் முன்வருகின்றான், நோன்பு நோற்கும் இறையடியான் தன் நண்பனுடன் அல்லது அன்னியனுடன் வரம்பு மீறி நடந்து கொண்டால், அது நோன்பை பாழ்ப் படுத்தி விடும். ம்தீய காரியங்களிலிருந்தும், மானக்கேடானவற்றிலிருந்தும் எவர் தன்னை விலக்கிக்கொள்ளவில்லையோ, அவர் உண்ணாமல் பருகாமல் இருப்பதில் எந்த பயனுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இதர மக்களோடு உள்ள பந்தம் மோசமானால், இறைவனுக்கு செய்யும் வணக்க வழிபாடும் கூட பாழாகிவிடும் என்பதே இதன் பொருள். அதோடு நோன்பு ஏற்படுத்தித் தரும் சமத்துவம் கவனிக்கத் தக்கதாகும். உலகெங்கும் உள்ள இறைநம்பிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட சமயத்தில் உணவு மற்றும் நீரைத் துறந்து, பசியையும் தாகத்தையும் அனுபவிக்கின்றனர். இது ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே ஒருவித பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது, மனிதனோடு மனிதனுக்குள்ள உறவைப் பண்படுத்தி, தங்களுக்கு மத்தியில் நேசத்தையும் பாசத்தையும் பரப்பி வளர்க்கிறது.

ஜகாத் - ஏழைவரி

தொழுகையை அடுத்து இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கிய கடமை ஜகாத் ஆகும், திருமறைக் குர்ஆன் எங்கெல்லாம் தொழுகையை வலியுறுத்தி பேசுகிறதோ, அங்கெல்லாம் ஜகாத்தையும் இணைத்தே பேசுகிறது.

பூமியில் படைக்கப்பட்டுள்ள அனைத்தும் மனித இனத்திற்காகவே உள்ளது. ம்பூமியில் பரவிச்சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள்.'' (அல்குர்ஆன் 62:10) என்பதே இறைவனின் கட்டளை. உலகப்பொருட்களை அனுபவிக்கவும், தெய்வீக அருளைத் தேடிக் கொள்வதற்கான உரிமையும் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. பணம் சம்பாதிக்கவும் பொருள் தேடிக்கொள்ளவும் கூடிய உரிமையும் எல்லா மனிதர்களுக்கும் உரியதாகும்.

நியாயத்தைக் கடைபிடித்து அவன் சம்பாதித்தது அவனுக்கே உரியதாகும். நாட்டிற்குரியதோ, சமூகத்திற்குரியதோ அல்ல. ஆனால், இந்த சம்பாத்தியத்திலிருந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் தேவையானதை செலவழிக்க அவன் தயாராக வேண்டும். அது தனிமனிதனின் கடமையாகும்.

தான் சம்பாதிக்கின்ற எதுவும் தனக்குரியதல்ல எனும் கருத்துடைய கொள்கைதான் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது. தன் சம்பாத்தியத்தை தன்விரும்பம் போல செலவழிக்கலாம் என்பதே முதலாளித்துவத்தின் நிலை, இவ்விரண்டு நிலைபாட்டையும் நிராகரிக்கும் இஸ்லாம், - சம்பாதிப்பவனின் உரிமையை அங்கீகரித்துக் கொடுக்கவும், அதிலிருந்து குறிப்பிட்ட அளவு வலுக்கட்டாயமாக செவழிக்க வேண்டியது அவன் கடமையாகும் என்றும் கூறுகின்றது,

உடல் ரீதியாகவோ, மற்ற எந்த வழிகளிலோ, பொருளாதார நெருக்கடியை அனுபவிக்கின்றவர்களை, பராமரிக்க வேண்டிய பொறுப்பு சமுகத்திற்குரியதாகும். அதற்காக இஸ்லாம் ஏற்படுத்திய ஏற்பாடுதான் ஜகாத் எனும் ஏழை வரி.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் பொருளாதார வசதியுடையவர்கள், அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை இஸ்லாம் கூறும் வழியில் செலவு செய்வதே ஜகாத்' மனிதன் தான் நினைத்த அளவு பொருளை, நினைத்த நபருக்கு கொடுப்பது அல்ல. மாறாக, ஒருவரிடம் குவிந்துள்ள செல்வத்தைக் கணக்கிட்டு, அந்த கணக்குப்படி ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதையே ஜகாத் என்று கூறப்படும். இதன் அளவு கோலை இறைவன் நிர்ணயித்துள்ளான்,

ஜகாத் தர்மம் அல்ல, அது ஒரு நபர் மீதுள்ள வரியல்ல. அது இறைப்பொறுத்தத்தைப் பெற்றுத் தரும் ஒரு கட்டாயக் கடமை!

செல்வத்தின் மீதுள்ள கடமை வரி. மக்களின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளைச் சமப்படுத்தி: ஏழை எளியவர்களுக்கு செல்வந்தர்களின் சொத்துக்களிலிருந்து சட்டப் பூர்வமான முறையில் ஒரு பங்கை நிர்ணயித்துக் கூறும் சட்டமாகும்.

ஜகாத் எனும் தானதர்மங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், ஜகாத் வசசூலிக்கும் பணியில் வேலை செய்வோருக்கும், இஸ்லாத்தின் பால் உள்ளம் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன் பட்டோர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதற்கும், பிரயாணிக்கும் அல்லாஹ் விதித்த கடமை'' (அல்குர்ஆன் 9:60) என்கிறான் இறைவன்.

வர்க்க பேதத்தை ஒழித்து : முதலாளி - தொழிலாளி பணக்காரன் - ஏழை மத்தியில் பாசப்பிணைப்பை ஏற்படுத்தும் ஜகாத் என்னும் பொருளாதார திட்டத்திற்கு இணையான ஒரு திட்டத்தை எந்தவொரு மதமும் இன்றுவரையிலும் வழங்கியதில்லை. இதற்குப்பின்னர் வழங்கிடும் சக்தியைப் பெற்றிருக்கவும் இல்லை.

புனித யாத்திரை - ஹஜ்

வசதியும் ஆரோக்கியமும் உடையவர்கள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமை ஹஜ் ஆகும்.

இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நிறைவேற்றும் ஹஜ் கடமை. இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் இதர மக்களோடு சண்டையிடக்கூடாது என்பது மட்டுமல்ல. தர்க்கமும் கூடாது என்கிறான் இறைவன்.

எவரேனும் ஹஜ்ஜை கடமையாகக் கொண்டால். ஹஜ்ஜு காலத்தில் சம்போகம், கெட்டவார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது.'' (அல்குர்ஆன் 2:197)

உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் ஒன்று கூடும் இடமான அந்த புனித தலத்தில் நடத்தப்படும் கடமைகள். மனித உரிமையைப் பேணி வலுப்படுத்தக்கூடியதாகும்.

செல்வத்தில் புரளும் சீமானும்: அங்கே ஒரு துண்டு துணியை இடுப்பிலும்: ஒரு துண்டுத்துணியை தோளிலும் போட்டுக்கொண்டு: ஒரே வகையான இறைத்துதிகளை மொழிந்து கொண்டு, ஒரே வகையான வணக்க வழிபாட்டு சம்பிரதாயங்களை செய்கின்றனர். சமத்துவத்தை பிரகடனப்படுத்தி நடைமுறைப் படுத்திக்காட்டும் எவ்வளவு சிறந்த வழிபாடு என்று எண்ணிப்பாருங்கள்.

இந்த ஹஜ்ஜு கடமையானது நபி இப்ராஹீமையும் நபி இஸ்மாயிலையும் தாய் ஹாஜராவையும் கொண்டு மனித சமுதாயத்திற்கு பெரும் படிப்பினையைத் தருகிறது.

இப்ராஹீம் மேல்குடியில் பிறந்தவராக இருந்தார், அன்னை ஹாஜராவோ மனித சமுதாயத்தின் சாபக்கேடாக கருதப்பட்ட நான்கு விஷயங்களையும் தன்னகத்தே கொண்டவர்களாக இருந்தார்.

1, அவர்கள் அடிமையாக இருந்தார்கள். நாமறிவோம் அடிமைகள் எக்காலத்திலும் எந்த சசூழ்நிலைகளிலும் அவமானப்படுத்தப்படக் கூடியவர்களே! அவர்கள் சிரிக்கவும் அழுதிடவும் சுதந்திரமில்லாதவர்கள். சொந்தமாக தீர்மானம் எடுக்க தகுதியில்லாதவர்கள், எஜமானின் விருப்பப்படி வாழ கற்றுக்கொள்ள வேண்டியவர்கள். துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே சொத்தாகப் பெற்றவர்கள், அத்தகையவர்களின் பிரதிநிதியாக இருந்தார்கள் அன்னை ஹாஜரா அவர்கள்.

2, அவர்கள் கருப்பு இனத்தை சார்ந்த நீக்ரோவாக இருந்தார்கள். நவீன யுகத்தில் கூட கருப்பு இனத்தவர்கள் அவமானப் படுத்தப்படுவதையும் அன்னியப் படுத்தப்படுவதையும், கண்முன்னால் காண்கிறோம். இப்படி எல்லாவிதத்திலும் தாழ்த்தப்பட்டவராக கருதப்பட்டுவரும் வர்க்கத்தினரின் பிரதிநிதியாக அன்னை ஹாஜரா அவர்கள் இருந்தார்கள்.

3, அவர்கள் அன்னிய தேசத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள், உலகமே ஒரு கிராமமாகி விட்ட சசூழ்நிலை ஏற்பட்டபோதும், தேசத்தின் பெயரில் சண்டையும், சச்சரவும், பகையும், விரோதமும் வளர்ந்து கொண்டிருப்பது அன்றும் இன்றும் என்றும் உள்ளதாகும்.

4, அவர்கள் பெண்ணாக இருந்தார்கள். பெண் எப்போதும் எங்கும் நோவினை செய்யப்படுபவர்களாகவே இருக்கிறார்கள்.

சாதாரண சமூகத்தில் நான்கு நிலைகளையும் ஒருங்கே பெற்றிருந்த ஒரு பெண் இரண்டு மலைக் குன்றுகளின் மீது ஏறி நின்றார்கள்.

இரண்டு மலைக் குன்றுகளுக்கிடையே ஒடினார்கள். எதற்காக? இறைவனை வணங்க அல்ல, பிரார்த்தனை செய்ய அல்ல, ஆராதனை, கர்மங்கள் செய்ய அல்ல, தாகமெடுத்து அழுதுகொண்டிருந்த தன் அருமை மகன் இஸ்மாயிலின் தாகம் தீர்க்க தண்ணீரைத் தேடியே! ஆகும், அந்த மலைகளும் ஒடிய பாதையும் கருத்தவளான, அடிமையான, அன்னிய தேசத்தவளான, பெண்ணான அன்னை ஹாஜராவின் பாதம்பட்ட காரணத்தினால் தான் வழிப்பாட்டுச்சின்னமானது.

நிச்சயமாக ஸஃபா' மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் (நின்றும்) உள்ளன'' (அல்குர்ஆன் 2:158)

இந்த 20-ம் நூற்றாண்டில் நாகரீகத்தின் உச்சியிலிருக்கும் ஐக்கிய அரசுகளில் உயர்கல்வி பீடங்களில் கூட, நிறவெறி போராட்டம் நீடித்திருக்க, நம் பாரத நாட்டில் ஜாதிவெறிப் போராட்டம் நீடித்திருக்க. இஸ்லாம் - ஹாஜரா என்னும் கருப்பு இன அடிமைப் பெண்ணின் பாதச் சுவட்டைப் பின்பற்றி: வழிபாடு நடத்த உத்தரவிட்டுள்ளது என்றால், அது மனித உரிமைக்கும் சமத்துவத்திற்கும் கொடுத்துள்ள மதிப்பு எத்தகையது என்று கவனியுங்கள்.

உலகில் மிகவும் புகழ்வாய்ந்த தொன்மையான புண்ணியத்தலம் கஅபாவாகும். உலக முஸ்லிம்கள் அனைவரும் இறைவனை வணங்கும் போது, முன்னோக்குவது புனித கஅபாவையாகும். இறந்து போன - இறந்துபோகும் கோடிக்கணக்கானவர்களையும் அடக்கம் செய்யும் போது, அவர்கள் முகம் திருப்பிவைக்கப்படுவதும் கஅபாவை முன்னோக்கியே! அந்த கஅபாவின் மீது ஏறி நின்று பாங்கு கொடுத்த முதல் இறை அடியார், அடிமை வம்சத்தில் தோன்றிய கருப்பு நிற நீக்ரோவான பிலால் ஆவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிக் கொண்டு தன்னுடைய ஆயிரக்கணக்கான தோழர்களுடன் கஅபாவினுள் நுழைந்த போது: பாங்கு சொல்லவும், வெற்றி பிரகடனம் செய்யவும், அரசியல் ஆன்மீக கட்டளை பிறப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உயர்வம்சத்திலிருந்து வந்தவர் களோ, மேல்குடியைச் சார்ந்தவர்களோ அல்ல, அடிமை வம்சத்திலிருந்து வந்த கருப்பு நிற பிலாலையேயாகும்.

மனிதனின் அனைத்து உணர்வுகளும் கருத்துகளும் செயல்பாடுகளும், இறைவனை திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும். என்று கட்டளையிடும் இஸ்லாம் இறைதிருப்தி' என்பதை படைப்பினங்கள் கொள்ளும் திருப்தியில் கொண்டுபோய் இணைக்கிறது. அதில் முக்கியப் பங்கு வகிப்பது சமத்துவமும் ஒழுக்கமும் ஆகும்.

ஏக தெய்வக் கொள்கையைக் கொண்டு, நபி(ஸல்) அவர்கள் வார்த்தெடுத்த சமூகம் எப்படியிருந்தது? என்பதற்கு ஒர் உதாரணமாக கீழ்க்கண்ட சம்பவம் திகழ்கின்றது.

ஒரு முறை நபி(ஸல்) அவர்களின் முன்பு, அபூதர் கிபாரி(ரலி) அவர்களுக்கும் அபிசீனியாவைச் சேர்ந்த ஒரு கருப்பு அடிமைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் சசூடுபிடித்தது. இருவருக்கும் கோபம் மேலிட்டது. கோபத்தால் நிதானமிழந்த அபூதர்(ரலி) அவர்கள் தன் பிரதிவாதியைப் பார்த்து, ம்ஏ கருப்பியின் மகனே!'' என்று கூறிவிட்டார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ம்பேச்சு எல்லை மீறிவிட்டது! இறைபக்தியால் அன்றி, கருத்த பெண்ணின் மகனை விட வெள்ளைப் பெண்ணின் மகனுக்கு எவ்வித சிறப்பும் இல்லை!'' எனக் கூறி தோழர் அபூதர்(ரலி) அவர்களைக் கண்டித்தார்கள், கோபத்தின் காரணமாக நிதானத்தை இழந்திருந்த அபூதர்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்களின் இவ்வெச்சரிக்கை பெரும் மனத்தாக்கத்தைக் கொடுத்தது, தாம் செய்த தவறை உணர்ந்து மனம் வெதும்பினார்கள், உடனே நிலத்தில் தம் கன்னத்தை வைத்துப்படுத்துக் கொண்டு, நான் செய்த இந்தத் தவறுக்காக உம் காலால் என் கன்னத்தில் உதைப்பீராக!' என்று அவ்வடிமையிடம் கூறினார்கள்,

நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவம் என்ற ஆயுதத்தால் சமூகத்தில் நிலவி வந்த நிற, குல, இன பாகுபாட்டை வேரோடு பிடுங்கி எறிந்து, சமத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்கி விட்டே சென்றார்கள் என்பதை மேற்கண்ட சம்பவம் தெளிவுப்படுத்துகிறது.

1420 ஆண்டுகளுக்கு முன் நபி (ஸல்) அவர்கள், வார்த்தெடுத்த சமத்துவமிக்க சமுதாயமான இஸ்ஸாத்தில் இன்றுவரை நிறத்தின், மொழியின், இனத்தின் சாதியின் பெயரால் எந்வொரு பாகுபாடும் இல்லை என்பது பேருண்மையாகும்.

ஏகத்துவம் கலந்த அரசியல், பொருளாதாரம், நீதிபரிபாலன திட்டங்கள் அனைத்தும், அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்ட சர்வாதிகாரத்திற்கும் பொருளாதார வீழ்ச்சியைத் தந்த கம்யூனிஸத்திற்கும் ஏற்றத் தாழ்வு, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்திற்கும் ஏழ்மையையும், வறுமையையும் பரிசாகத் தந்த இன்றைய ஜனநாயகத்திற்கும் மாறுபட்டதாகும்.

ஏகத்துவம் வழங்கும் அரசியலானது நீதிபரிபாலனத்தோடு கூடிய மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால், ஏக இறைவனின் சட்டங்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆளப்படுவதாகும்.

மனித சமுதாயம் முழுவதும் சாந்தி சமாதானத்துடன் கூடிய ஒருமைப்பாடு ஏற்பட்டு, ஒரே சமுதாயமாக - ஒரே குலமாகத் திகழ - ஏக இறைநம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து செயல்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும், அதுவே மனிதனை ஆத்மார்த்த ரீதியாக ஒன்றிணைக்கும் பாலமாகும்.

ஓர் இறைக்கொள்கையால் மட்டுமே மனித குலம் அனைத்தும் ஒன்றெனத் திகழ்வது சாத்தியமாகும். மனிதகுலம் இவ்வழியைத் தேர்வு செய்திட இறைவன் அருள் செய்வானாக!

இறைவன் மிக அறிந்தவன்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template