Thursday, September 13, 2007

இறைநம்பிக்கை அறிவுப்பூர்வமானதே

இறைநம்பிக்கை அறிவுப்பூர்வமானதே


இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; ஒருவன் இருக்க வேண்டும் என அறிவு கூறுகிறது. கிளம்பிடும் புகை அவ்விடத்தல் நெருப்பு இருப்பதையும், காலடிச் சுவடுகள் யாரோ அவ்வழி சென்றிருப்பதை அறிவிப்பதுபோல், இப்பிரபஞ்சம், படைத்தவனின் வல்லமையையும் அவனின் தனித் தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த அகிலத்தின் திட்டமிட்ட அமைப்பு, ஒழுங்கான இயக்கம், இணக்கமான செயல்பாடு, எண்ணற்ற அதன் நன்மைகள் இவை அனைத்தும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்த்துகிறது. மேலும், இந்த அகிலம் முழுவதும் அவனது கட்டுபாட்டிற்கு உட்பட்டே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

பிரமாண்டமான கோளங்கள் முதல் சின்னஞ்சிறு அணுக்கள் வரை ஆர்பரிக்கும் கடல்கள், ஓங்கி வளர்ந்த மலைகள் முதல் பனித்துளிகள் வரை பரந்த இலைகளைக் கொண்ட மாபெரும் மரங்கள் முதல் சின்னஞ்சிறு புற்கள் வரை பொருத்தமான இடங்களில், சரியான முறையில் அமைத்துள்ள மனிதனின் அங்கங்கள் முதல் தோலின் வயர்வைத் துவாரங்கள் வரை ஆண், பெண் படைப்பு முதல் இனப்பெருக்கத்திற்கான ஏற்பாடு வரை அறிவாற்றல் முதல் ஐம்புலன்களின் இயக்கம் வரை அனைத்தும் இவற்றை படைத்த வல்லமை மிக்க ஒருவன் இருப்பதை அறிவிக்கின்றது. நம் பகுத்தறிவும் அதனை ஏற்றுக் கொள்கிறது.

உலகம் படைக்கப்பட்டது முதல் இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்டவைகள் மாற்றத்திற்குட்பட்டவை யாகவே இருந்து வந்துள்ளன. மனிதன் ஒரு பொருளை உருவாக்குகிறான். அனுபவத்தில் அதில் குறைபாடுகள் காணுகிறான். அதனை நிவர்த்திசெய்ய புதிய மாற்றத்தை எற்படுத்தும் கட்டாயத்தில் உள்;ளான். இந்நிலை அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் தொடரும் என்பது உறுதி! ஆனால் இறைவனுடைய படைப்பை நாம் உற்று நோக்கும்போது அதைவிடச் சிறப்பானதை நம்மால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது. அந்த படைப்பில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லாத அளவுக்கு முழுமையாக அது அமைந்துள்ளது. புகுத்தறிவுமிக்க மனிதன் முதல் மிகச் சிறிய உயிரினங்களான ஈ, எறும்பு, கொசு வரையுள்ள படைப்பினங்களின் உடல் அமைப்பு பற்றி சிந்தித்துப் பாருங்கள். எந்த மாற்றமும் தேவையில்லாத அளவுக்கு அவை பொருத்தமான அற்புதமான வடிவமைப்பைப் பெற்றுள்ளன. அவற்றை மாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும், அவற்றுக்கு நிகரான ஓர் அமைப்பு பற்றி நம்மால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. இவை அனைத்தும் படைத்தவனின் வல்லமையை எடுத்துக் காட்டுகின்றன.

இறைவனின் படைப்பாகிய பரந்து விரிந்த இவ்வுiகை முழுமையாக அறிய முடியாத மனிதன் இதனைப்படைத்தவன் ஒருவன் இல்லை என வாதிப்பது வடிகட்டிய அறிவீன மாகும். மனிதனின் பார்வைக்கு இறைவன் தென்படவில்லை என்பதற்காக அவன் இல்லை என்பது அறிவுப்பூர்வமான வாதம் அல்ல. கண்ணால் காணாமலேயே எத்தனையோ விஷயங்களை அவற்றின் செயல்பாடுகளைக் கொண்டு மனிதன் ஏற்றுக் கொள்கிறான். இன்னும் பல விஷயங்களை ஆராய்ச்சியாளர்களின் வார்த்தைகயை ஏற்று மனிதன் நம்புகின்றான். அப்படியிருக்க சத்தியவாதிகளின் சொல்லை காணமுடியாத இறைவனை நம்புவது எவ்விதம் பகுத்தறிவிற்கு முரணாகிவிடும்? இப்பிரமாண்டமான அகிலத்தைப் படைத்தவனும் மகத்தானவனாகவே இருப்பான். இச்சின்னஞ் சிறு மனிதனின் பார்வையில் அவன் தென்பட வேண்டுமென்பது என்ன அவசியம்?

அப்படியே ஒரு சிலர் இறைவனை எற்றுக் கொள்கின்றனர். ஓரு சிலர் இறைவனை நிராகரிக்கின்றனர் என வைத்துக் கொளவோம். ஆனால் இரு சாராருமே இறப்பது நிச்சயம். ஒருக்கால் மரணத்திற்குப்பின் இறைவனோ, மறுவாழ்வே இல்லை யென்றால் யாருக்கும் யாருக்கும் எந்த விதமான லாபமோ நஷ்டமோ கிடையாது. ஆனால் இதற்கு மாறாக மரணத்திற்குப்பன் இறைவன் இருந்து விட்டால் எற்றுக் கொண்டவர்கள் லாபத்தையும், மறுத்தவர்கள் நஷ்டத்தையும் சந்தித்தே ஆக வேண்டும் என்பது உறுதி. ஆக இறைவன் இருக்கிறான் என எற்றுக் கொள்வதே பகுத்தறிவின் பாங்கான முடிவாகும்.

ஆதி மனிதரும் இறைவனின் முதல் தூதருமான ஆதம்(அலை) முதல் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வரை இவ்வுலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும், மேலும் சான்றோர்கள், தூயவர்கள் அனைவரும் இறைவன் இருக்கின்றான் என்பதை நம்பி வாழந்தனர்.

மனித இயறக்கையின் உந்துதல், அவனின் மனவேட்கை, அறிவன் தோட்டம் இவை அனைத்தையும் கவனிக்கும்போது வல்லமையும் கருணையும் அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்ற ஓர் இறைவன் இருப்பதை ஒப்புக் கொள்வதுத சாலச் சிறந்ததாகும்.

1 மறுமொழிகள்:

said...

I passed to admire your work and to desire to you a good weekend.


David Santos

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template