Sunday, March 01, 2009

கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம் வாரீர்!!

கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம்
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

தொன்மையும் வரலாற்று சிறப்பும் மிக்க சமூக நல்லினக்கமும் மனித நேயமும் உயிர் மெய் எழுத்தாய் உறவு பாராட்டும் கீர்த்திமிகு கீழக்கரை. நகராட்சியாக உயர்வு பெற்று அரசு நிதிநிலையில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது. தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள முதல் மூன்றாம் நிலை நகராட்சி என்ற பெருமைக்குறியது. இன்று லஞ்ச லாவன்ய நிர்வாக சீர்கேட்டால் சீரழிந்து நிற்கிறது. சாக்கடை நிரம்பி தெருக்களின் வழியாக ஓடுகிறது.குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை. தர்நாற்றம் மூக்கை துளைக்கிறது. கொசுத்தொல்லை ஊரையே சிக்கித் தினற வைத்தள்ளது. வீட்டிற்கு ஐந்து பேர் வீதம் மலேரியாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்ய பணம் இன்றி கஷ்ட்டப்படுகின்றார்கள்.

சென்னை, திருச்சி போன்ற பிற நகரங்களில் தொழில் செய்வோர் ஊர் சென்றால் நோய் தொற்றி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.ஆளும் கட்சியின் அடிவருடிகள் நகராட்சியில் ஆதிக்கம் பெற்றதால் மக்கள் வரிப்பணம் விழுங்கப்படுகின்றது. பொதுமக்கள் செய்வது அறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். ஓரு நாள் கூட நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடித்ததில்லை. மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய இயந்திரமோ மூலையில் முடங்கி கிடக்கிறது.

கீழக்கரை வெல்ஃபேர் சங்கம் ஊர் நலன் கருதி E.T.A குழுமத்தின் சார்பாக மனித நேய புரவலர்கள் அல்ஹாஜ். B.S. அப்துர்ரஹ்மான், அல்ஹாஜ். சலாஹீத்தீன் M.D., அவர்களால் பல்வேறு உபகரனங்கள் வழங்கப்பட்டு நகராட்சி வேலைப்பழுவில் பாதியை பகிர்ந்து கொண்டிருக்கிறது. பேரூராட்சி நகராட்சியாக உயர்வு பெற்று வரிகளை உயர்த்திய பிறகு பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. துப்புரவு பணியாளர்கள் எந்த வார்டு பக்கம் என்ன வேலை செய்கிறார்கள் என்பதைகூட மேற்பார்வை செய்வதில்லை. லஞ்சம் வாங்க மட்டுமே கவுன்சிலர்கள் தேர்ந்டுக்கப்பட்டதாக நினைக்கின்றனர்.

தமிழகத்தில் எல்லா நகராட்சிகளிலும் குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. இன்று வரை கீழக்கரை நகராட்சி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கியதில்லை. தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தூவப்படுவதில்லை. கேட்டால் முறையான பதில் இல்லை. தரம் பிரித்து லஞ்சம் வாங்குவதில் நகராடசி நிர்வாகம் தீவிரமாக இருக்கிறது. மக்கள் ஓட்டை வாங்கிச் சென்றவர்கள் மன்றத்தில் வாய்பொத்தி மெளனமாக இருக்கிறார்கள். காரணம், ஊழலிலும் லஞ்சத்திலும் சரிபங்கு பெறுகின்றனர். இந்த இழிநிலைக்கு முடிவு கட்டி நிர்வாக சீர்கெட்ட நகராட்சியை சீர்படுத்திட லஞ்சம் வாங்கும் மக்கள் விரோதிகளை கையும் களவுமாக பிடித்து முகத்திரை கிழித்திட இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பாக உறுதி மொழி ஏற்போம். லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்.

கீழக்கரை மக்கள் நலம் பெற்றிட இடம் தந்து நகராட்சி கட்டிடத்தை கட்டித் தந்த பெருந்தகை டாக்டர். அல்ஹாஜ். ஹமீது அப்துல் காதர் அவர்கள் எண்ணம் ஈடேற பொறுப்பற்ற நகராட்சி புல்லுருவிகளை வீட்டிற்கு அனுப்பிட மக்களே நகராட்சி! நகராட்சியே மக்கள்!! என மக்கள் ஆட்சித் தத்துவத்தை கீழக்கரையில் நிலைநாட்டிட எந்த நேரமும் ஊர் நலம் பற்றிய தகவல் அறியும் உரிமைச்சட்டம் பெற்றிட தயாராவீர். கீழக்கரை நகராட்சி தமிழகத்திற்கே வழிகாட்ட முடிவு எடுப்பீர். இந்த இழி நிலை மாற்றிட எதிர்காலத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சிக்கே (IDMK) வாக்களிப்பீர்!!

நன்மையை ஏவுவோம், தீமையை தடுப்போம். ஊராடசி சீராட்சி காண, அநீதியை சகிப்பதில்லை, ஆர்த்து எழுவோம்.


இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தொலைபேசி : 9942065575, 9944362379, 9629471303

www.idmk.org

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template