Saturday, April 11, 2009

சரத்குமார் , கார்த்திக்குடன் பேசி வருகிறோம் - பா.ஜ.க

மதுரை: மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கார்த்திக் கூட்டணி அமைத்துள்ளார். அதன் அடிப்படையில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 தொகுதிகளில் தனது நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

பாஜகவுடன் புரிந்துணர்வு அடிப்படையில் நாங்கள் இந்த 7 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். எங்களது கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் தொண்டர்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப வாக்களிக்கலாம்.

நாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

ஆனால், இந்தக் கூட்டணி குறித்து பாஜக தரப்பிலிருந்து எந்தத் தகவும் இல்லை. ராமநாதபுரத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலாளரான திருநாவுக்கரசர் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் கார்த்திக்கின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக்குடன் கூட்டணி அமைத்துலும் கூட ராமநாதபுரத்தை பாஜக விட்டுத் தருமா என்று தெரியவில்லை. இதனால் இந்தக் கூட்டணி குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது.

சரத்குமாரின் குழப்பம்:

அதே போல நாடாளுமன்றத் தேர்தலில் சரத்குமார் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற குழப்பமும் தீரவில்லை.

பாஜக, மனித நேய மக்கள் கட்சி என அரசியலில் இரு வேறு துருவங்களில் நிற்கும் கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருக்கிறார். அதே போல கார்த்திக்குடனும் பேசிப் பார்த்தார். (அதாவது இன்று 11.04.2009 மாலை 4.00 மனி வரை)

இந் நிலையில் நாளை மறுநாள் (13ம் தேதி) சென்னையில் கூட்டணி பற்றிய அறிவிப்பையும் வேட்பாளர் பட்டியலையும் சரத்குமார் வெளியிடுகிறார் என்கிறார்கள்.

பாஜகவோ வேட்பாளர் பட்டியலை வெளியிடப் போகிறோம் என்பதோடு சரத்குமார், கார்த்திக்குடன் பேசி வருகிறோம் என்கிறது.

நன்றி : தட்ஸ் தமிழ்

மனிதநேய மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்?

மனித நேய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், அக்கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. சில வட இந்திய தொழிலதிபர்கள் மோடி பிரதமாராக வேண்டும் என்று பேசியதற்காக அவர்களது பொருட்களைப் புறக்கணிக்க த.மு.மு.க வேண்டுகோள் விடுத்தது. நடிகர் சரத்குமார் புது டில்லிக்குச் சென்று பா.ஜ.க தலைவர்களுடன் கூட்டணி பற்றி பேசி முடிவு செய்துள்ளார். இவர் கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் அத்வானி. திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இக்கட்சி பெற்ற வாக்குகள் சுமார் ஆயிரம் தான். நடிகர் சரத்குமார் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு முஸ்லிம் வாக்குகள் அதிகம். இங்கு த.மு.மு.கவுக்கும், மனிதநேய மக்கள் கட்சிக்கும் வலிவான வாக்கு வங்கி இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி இவரை ஆதரிப்பதால், இவர் தோற்றாலும் அது கௌரவமான தோல்வியாகவே இருக்கும்.

புதிய தமிழகம் கடந்த முறை பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறை பா.ஜ.கவுடன் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி அமைத்துள்ளது அவருக்கு அழிவு தான். தமிழகம் முழுவதும் வலுவான அடித்தளம் உள்ள ஒரே தலித் அமைப்பு ‘விடுதலைச் சிறுத்தைகள்’ மட்டும் தான். புதிய தமிழகம் கட்சிக்கு பல ஊர்களில் கிளைகளே இல்லை.

புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு மயிலாடுதுறை, மத்திய சென்னை, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்கு வங்கி இல்லை. இவர்களது ஆதரவு மனிதநேய மக்கள் கட்சிக்கு துளியும் உதவப் போவது இல்லை.

பீகாரில் லாலு பிரசாத் யாதவும், உ.பியில் முலாயம் சிங் யாதவும் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளாவிட்டாலும் தங்கள் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் தான் என்று அறிவித்துள்ளனர். மனித நேய மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? அத்வானியா? பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வா? அல்லது ஹைதர் அலியா?

த.மு.மு.க வலைத்தளத்தில் தினமலரின் செய்திகளை அதிகமாக காணமுடிகிறது. முஸ்லிம் எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், தலைவர்கள் ஆகியோரின் விமர்சனங்களுக்கு அந்த தளத்தில் எந்த பதிலும் இல்லை. தினமலர் நாளிதழ் ‘பகையாளி குடியை உறவாடி கெடு’ என்ற கணக்கில் கூட உங்களை உயர்த்தி எழுதலாம். ஆனால் முஸ்லிம்களிடம் இருந்து வருவது தோழமை விமர்சனம். நீங்கள் அரசியல்வாதிகளாக மாறி விட்டதால் சகோதர விமர்சனங்களோ அல்லது Boldதோழமை விமர்சனங்களோ உங்கள் காதில் விழுவதில்லை.

நன்றி : திரு. அருளடியான் (மக்களவை தேர்தல் 2009)

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template