Showing posts with label ஜகாத். Show all posts
Showing posts with label ஜகாத். Show all posts

Thursday, September 03, 2009

ஃபித்ரா - ஜக்காத் வசூல் - பார்வாளாக்களின் கமிசனும்- தமிழக முஸ்லிம் அமைப்புகளும்

ஜகாத் - ஃபித்ரா - வசூலிக்கும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் பற்றிய ஒரு எச்சரிக்கை - முந்தைய பதிவு வாசிப்பதற்கு இங்கு சொடுக்கவும்

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)

பித்ரா மற்றும் ஷகாத் கொடுப்பது விஷயமாக நான் பதிந்த பதிவின் தொடற்ச் சியாக இதை உங்கள் அணைவரின் மேலான பார்வைகளுக்கு பதிவு செய்கிறேன்.

ததஜ சம்பந்தமான இந்த பிரசுரங்கள் பார்-வாளா (தே நீர்) கொடுப்ப்வர்களிடம் இருந்து கிடைக்கப் பட்டது. இவர்கள் தினமும் தே நீர் வினியோகம் செய்தால் 25% கமிஷன் கிடைக்கும். இதுபற்றி கேட்ட போது அவர்கள் வாடிக்கையாளர் களிடம் மற்றும் நண்பர் களிடம் ஒவ்வொரு வருடமும் வசூல் செய்து கொடுப்பதாகவும் அவர்களுக்கும் சுமார் 30% முதல் 40% வரை இயக்க நண்பர்கள் கமிஷன் தருவார்கள் என்று சொன்னார்கள். அல்லாஹ் ஆலம். (பார்வாலாவிடம் பெறப்பட்ட ததஜ, தமுமுக டடாகுமென்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன டவுன்லோட் செய்து கொள்ளவும்)

சகோதரர்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து உங்கள் மீது கடமையாக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாத்தை உஙளுடைய ஏழை சொந்தங்களுக்கும், உங்கள் அண்டை வீட்டார் களுக்கும் அல்லது நலிந்த மத்ரஷாக் களுக்கும் உங்கள் கைப்பட கொடுத்து இறைவனின் நற் கூலியை பெற முயற்ச்சி செய்வோமாக.
வஸ்ஸலாம்

அ. சஜருதீன்

குறிப்பு:

இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் அறிக்கைகள் அவ்வளவும் புணையப்பட்ட பித்தலாட்டங்கள் என்பதை எளிதாக பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளாம்.

டவுன்லோட் செய்து கொள்ள :

த.த.ஜ டாகுமென்ட்ஸ்

தமுமுக டாகுமென்ட்ஸ்

Sunday, August 23, 2009

ஜகாத் - ஃபித்ரா - வசூலிக்கும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் பற்றிய ஒரு எச்சரிக்கை

அன்பு சகோதரர்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமளான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமலான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஜகாத் ம்ற்றும் ஃபித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.


சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஜகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக்காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.


இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தளத்தில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஜகாத், ஃபித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட ஃபித்ரா மற்றும் ஜகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.

ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்சி செய்வோமாக.


வஸ்ஸலாம்
அ. சஜருதீன்
ரியாத் - சௌதி அரேபியா
+966 557316929
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template