Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Saturday, October 10, 2009

சவுதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மரணம்

அன்பு நண்பர்களுக்கு,

நம்முடைய நெருங்கிய நண்பரும், சவுதி தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான ஜனாப். அப்துல் மாலிக் அவர்கள், இன்று மதியம் 4: 45 மனி அளவில், ஜெத்தாவில், மாரடைப்பினால் மரணமடந்த செய்தியினை, ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். (إنا لله وإنا إليه راجعون ) .

அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அவருடன் ஜெத்தாவில் வசித்து வருகின்றனர்.

அன்னாருடைய மறைவினைத் தாங்கும் மன உறுதியினை அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்கிட, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

அவருடைய பிழைகளை மன்னித்து அவருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை அருளிட எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக!


ஆழ்ந்த வருத்தத்துடன்,
அப்பாஸ் ஷாஜஹான்
செயளர்
ரியாத் தமிழ்ச் சங்கம்

Sunday, September 20, 2009

மலேசியா மூர்த்தி அவர்களின் தந்தை மரணம்

ஆரிய சக்திகளின் போலியான போலி குற்றச்சாட்டுக்களால் வலைப்பதிவர்களால் பரவலாக அறியப்பட்டவரும், தனது பல்வேறு ஆக்கங்களின் மூலம் வலையுலகத்திற்கு பல நன்மைகளை தந்தவரும், முத்தமிழன் மன்றத்தின் மூலம் அறியப்பட்டவருமான திரு. மூர்த்தி அவர்களின் தந்தை திரு. எஸ். மருதமுத்து அவர்கள் கீழ்திருப்பாலக்குடி, மண்ணார்குடியில் இன்று காலமானார். தோழர் திரு. மூர்த்தி அவர்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் இந்த இழப்பினை தாங்கி கொள்ளும் மனத்திண்மையை அளிக்க இறையருள் துணை செய்யட்டும்.
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template