Showing posts with label திட்டக்குடி. Show all posts
Showing posts with label திட்டக்குடி. Show all posts

Tuesday, January 27, 2009

திட்டக்குடியில் பள்ளிவாசல் மீது தாக்குதல் - PFI ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி ஜனவரி 28,

கடந்த 20ம் தேதி திட்டக்குடி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடிகளும், பள்ளியும் விசமிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து காவல்துறையில் புகார் தெறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை இந்த விசயத்தில் பாராமுகமாக இரந்து விசமிகளுக்கு துனை போவதால் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலம் காவல்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்தும், பள்ளிவாசலை சேதப்படுத்தி மத துவேசத்தை ஏற்படுத்த முயன்ற விசமிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டக்குடி பஸ் நிலையம் முன்பாக நடந்நதது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் திரு. செளகத் அலி அவர்கள் தலைமை தாங்க, மெளலவி அபீருதீன், நஸ்ருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திட்டக்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் திரு. அக்பர், திரு இக்பால் மற்றும் திட்டக்குடி பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பசீர்கான் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்த விசயத்தில் விசமிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி வலியுருத்தினர்.

செய்திகள் : அபீருதீன்

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template