Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts
Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts

Thursday, October 15, 2009

லால்பேட்டை நன்நகருக்கு தாய்ச் சபை தலைவர்கள் வருகை!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் தனி இடம் பெற்றிருக்கும் லால்பேட்டைக்கு தாய்ச்சபை முஸ்லிம் லீக் தலைவர்கள் வருகைதரும் பொழுதெல்லாம் அவர்களின் வருகையில் கல்வித்துறை கட்டாயம் இடம் பெற்றிருந்தது என்பது உலகறிந்த உண்மை!

ஆம்! தமிழகத்தின் தலை சிறந்த கல்லுரியாக விளங்கும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி விழாவில் துவங்கும் முஸ்லிம் லீக் தலைவர்களின் பங்கேற்ப்பு மாலையில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் நிறைவடையும்.இந்த இனிய வறலாறு இன்றும் நிகழப் போகிறது.

ஆம்! இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 18- ம் தேதி காலை லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் தோற்றுவித்த வறலாற்றுச் சிறப்பு மிக்க,(இன்ஷா அல்லாஹ் விரைவில் கல்லூரியாக மிளிரப் போகின்ற) இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழாவிலும்,மாலையில் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் மாபெரும் பொதுக் கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க்க இருக்கிறார்கள்.

பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் பாராளுமன்ற உருப்பினரும், அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர்,
அல்லாஹ்விற்க்கு பிடித்தமான பெயரை வைத்துக் கொண்டதாலோ என்னவோ,எல்லோருக்கும் பிடித்துப் போனவர்.
வேட்பாளர் விமர்ச்சனத்தின் போது முஸ்லிம் லீக் தலைவர்கள் காட்டிச் சென்ற லட்சியப் பாதையில்தான் பயணிப்பேன் என்று சொல்லி விமர்ச்சனத்திற்க்கு வேட்டு வைத்தவர்.
தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதி,இவர் பங்கெடுக்கும் எந்த நிகழ்விலும் முஸ்லிம் லீகை பதிய வைக்காமல் இருந்ததில்லை.மொத்தத்தில் முஸ்லிம் லீகின் சொத்தாகத் திகழக் கூடியவர் அத்தகைய பெருமைக் குரியவர் கண்ணியத்தின் வழி வந்த நம்மவர் தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்.M.A.M.P.

மாணவர் அணிக்கு மகுடமாய் மிளிர்ந்த மாண்பாளர்,தான் கால் பதித்த அயல் தேசங்களிலெல்லாம் தாய்ச் சபையை தடம் பதிக்கச் செய்தவர்,சிராஜுல் மில்லத்தோடு வலம் வந்தவர் முனீருல் மில்லத்தோடு களம் காணுபவர்.தமிழக முஸ்லிம் லீக் வரலாற்றில் தனி முத்திரையாக மாநில பொதுச் செயளாலர் பொறுப்பை தன் தூய தொண்டால் தொட்டவர்.இவரே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு மாநில பொதுச் செயளாலர் ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர் B.Sc., .

சமுதாயம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ,அவைகளை சில வார்த்தைகளில் சிறப்பாக முடிக்கும் ஆற்றல் பெற்றவர்,காரியம் பெரிதா?வீரியம் பெரிதா? என்ற கேள்வியை முன் வைத்து,இன்றைய இளைஞர்கள் வீரியத்தின் நிலையை வெகுவாக விரும்பினாலும் பல அமைப்புக்களுக்குச் சென்றாலும்முஸ்லிம் லீக்கிற்க்கு காரியம் தான் பெரிது என்று கம்பீரமாக சொல்லக்கூடிய முஸ்லிம் லீகின் துடிப்பு மிக்க சட்ட மன்ற உறுப்பினர்,மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆம்பூர் H. அப்துல் பாஸித் M.L.A.

அரசியலில் நீ தனித்தவன் அல்ல ,தனித்தன்மை வாய்ந்தவன் என்று முழங்கிய சிராஜுல் மில்லத்தின் சொந்தங்கள், திருப்பு முனைக்கு புதிய வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்று முழங்கி வரும் முனீருல் மில்லத்தின் தொண்டர்கள்.

ஆக இம்மூவரும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் தலமை நிர்வாகிகள் இவர்கள் கண்ணியத்தின் பிறப்பிடத்திலிருந்து வந்தவர்கள்.இவர்களின் உரையை லால்பேட்டை மட்டும் தான் கேட்க போகிறது என்ற எண்ணத்தில் இருந்த எங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.

ஆம்! மாவட்டம் முழுவதிலுமிருந்தும் மட்டுமின்றி அருகில் உள்ள விழுப்புரம்,நாகை,திருவாரூர்,பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் திரளானவர்கள் பங்கேற்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிரார்கள் என்ற இனிய செய்தி கடல் கடந்து வாழும் எங்களின் கல்புக்கு மகிழ்ச்சியளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!

இனிய இதயங்களே! முஸ்லிம் லீகைச் சார்ந்த பெருமக்கள் எதைத்தான் சொல்லுகிறார்கள்?எந்தப் பாதையில் செல்லுகிறார்கள்,அந்தப் பாதை வெல்லும் பாதைதானா? என்பதை முடிவெடுக்க தாங்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென உரிமையோடும்,உள்ளன்போடும் கேட்டுக் கொள்கிறோம்.

மாறா அன்புடன்,

ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை லால்பேட்டை நண்பர்கள்.

Monday, October 05, 2009

சிராஜுல் மில்லத் 84- வது பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா


இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் மறைந்த மாபெ ரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாகிப் 84-வது பிறந்த நாள் விழா அக்..4-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற் றார்.

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆலிம்கள் அணி அமைப்பாளர் என். ஹாமித் பக்ரி இறைமறை ஓதினார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் விழா அறிமுக வுரை நிகழ்த் தினார்.

உலமாக்கள் பணியா ளர் நலவாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, உல மாக்களின் சார்பில் மவ் லானா குடியாத்தம் அய்ய+ப் ரஹ்மானி ஹஜரத் ஆகியோர் உரையாற்றினர்.

சமூக நல்லிணக்க விருது பெறுவோருக்கான பாராட்டு குறிப்புரைகளை அரவாக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஹெச். அப்துல் பாசித், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆகியோர் வாசித்து உரையாற் றினர்.

இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா. சற்குணம் வாழ்த்துரை வழங்கினார்.

நூல்கள், குறுந்தகடு வெளியீடு
மறைந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பெருந்தலைவர் ஜி.எம். பனாத் வாலா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற் றிய உரைகளின் தமிழாக் கமான முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் ஜீவகிரிதரன் மொழியாக் கம் செய்துள்ளார் அந் நூலும், பேரறிஞர் அண் ணாவின் பார்வையில் இஸ்லாம், முஸ்லிம், முஸ் லிம் லீக் என்ற தலைப்பில் மணிச்சுடர் செய்தியாளர் இரா.ச.மு. ஹமீது தொகுத்த நூலும், அய்யம் பேட்டை ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் தொகுத்த சிரா ஜுல் மில்லத் பாமாலை என்ற நூலும், பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்குப் பின் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் ஆற்றிய சமூக நல்லிணக்கம் தழைத் தோங்க வேண்டும் என்ற குறுந்த கடும் வெளியிடப் பட்டன. அவைகளை தமிழக நிதியமைச்சர் பேரா சிரியர் க. அன்பழகன் வெளியிட்டார். முதல் பிரதியை இ.அஹமது பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் பிரதியை மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, மூன்றாம் பிரதியை காயல் பட்டினம் நகராட்சி தலைவர் வாவு. சா. செய்யது அப்துர் ரஹ்மான் ஆகி யோரும் பெற்றுக் கொண் டனர்.

உலமாக்கள் நல வாரியம் அமைத்ததற்கு நன்றி
உலமாக்கள் பணியா ளர் நல வாரியம் அமைத்த முதல்வர் கலைஞர் அவர் களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியத் தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசை பேராசிரி யர் அன்பழகனிடம் அளித் தனர். அதனைத் தொடர்ந்து சமூக நல்லிணக்க விருது கள் அருட்தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம்மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் வழங்கினார். பாராட்டுக் குறிப்புரை பத்திரங்களை மாண்புமிகு மத்திய அமைச்சர் இ.அஹமது வழங்கினார். பொன்னா டைகளை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அணிவித்தார் அமைச்சர் க.அன்பழகன் விழாப் பேருரை நிகழ்த்தினார்.

விருது பெற்ற அருட் தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம் மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய அமைச் சருமான இ.அஹமது வாழ்த்துரை வழங்கினார்.. தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவருமான பேரா சிரியர் கே.எம்.காதர் மொகி தீன் நிறைவுரை நிகழ்த்தி னார்.

மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் நன்றி கூறினார். மாநில மார்க் கத்துறை செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார். மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

முன்னதாக மாலை 4.30 மணிக்கு தாய்ச்சபை பாடகர் முகவை சீனி முஹம்மது குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tuesday, September 29, 2009

அக். 4-ல் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு


அக்.4 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் 84-வது பிறந்த தின சமூக நல்லிணக்க விருது வழங் கும் விழாவிற்கு சென்னை மற்றும் செனைன புறநகர் மாவட்டங்களிலிருந்து பெருந்திரளாக பங்கேற்கச் செய்வது என்று மாவட்ட நிர்வாகிகளின் ஆலோ சனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வடசென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணி களின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய செயல் வீரர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் மாநிலத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் நேற்று மாலை நடைபெற்றது.

வடசென்னை மாவட் டத் தலைவர் எம். ஜெய் னுல் ஆபிதீன் தலைமை யில் நடைபெற்ற இக் கூட் டத்திற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, காஞ்சி புரம் மாவட்டத் தலைவர் கே.எம். அப்துல்லா பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எச். இஸ்மா யில் இறைமறை ஓதி கூட் டத்தை துவக்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப+வை முஸ் தபா அனைவரையும் வர வேற்றுப் பேசினார். இயக்கப் பாடகர் இ.வி.கே. முத்து முஹம்மது இன் னிசை வழங்கினார்.

மாநில நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநில செயலாளர் கமுதி பஷீர், இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர், மவ்லானா அப்துல் காதர் மிஸ்பாஹி, சலாஹ{தீன் அய+ப்கான், அப்துல் ரஹீம் ஆகியோர் உரையாற்றினர். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹப+ப், மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப் பாளர் திருப்ப+ர் சத்தார், மாநில கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் முஸப்பர் அஹமது, காஞ்சி புரம் மாவட்டச் செயலா ளர் கே.எஸ். தாவ+து, வடசென்னை மாவட்டப் பொருளாளர் கேப்டன் பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 4-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவிற்கு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலிருந்து பெருந்திரளான சமுதாய மக்களை திரட்டுவது என்று முடிவு செய்யப்பட் டது. சென்னை மாநகரின் ஒவ்வொரு பகுதியிலிருந் தும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உறுப்பி னர்கள் மற்றும் ஆதரவா ளர்களை அந்தந்த பகுதிக ளின் பொறுப்பாளர்கள் அழைத்து வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜும்ஆக்களில் அறிவிப்பு செய்ய முடிவு
இந்த விழாவில் உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிக்கவும், ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகி கள் முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசும் வழங்க இருப்பதால் ஒவ்வொரு மஹல்லாக்களிலும் உள்ள ஜமாஅத் நிர்வாகிகள் சங்கைக்குரிய இமாம்கள், ஆலிம் பெருமக்கள் அனை வரையும் இவ் விழா வில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது, ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்புகள் செய்வ தோடு, ஜும்ஆ தொழு கைக்கு வருகின்ற மக்களி டம் துண்டுப் பிரசுரம் மூலம் இந்த விழா பற்றி அறிவிப்பு செய்வது என் றும் முடிவு செய்யப்பட் டது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங் களில் விழாவிற்கு வருகை தருவோர் பச்சிளம் பிறைக் கொடியை கட்டிக் கொண்டு வருகை தர வேண்டும் எனவும், தங்கள் இல்லங்களிலிருந்து தங்கள் ஆண், பெண், உறவினர் களையும் அழைத்து வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட் டது. சென்னையிலுள்ள கல் லூரி மாணவர்களை திர ளான அளவில் இந் நிகழ்ச்சி யில் பங்கேற்கச் செய்யவும் ஆலோசனை வழங்கப் பட்டது.

முதல்வர் கலைஞர் பங்கேற்பு
இது முதல்வர் கலைஞர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் 4 மணிக்கே கலைவாணர் அரங்கத்திற்கு அனைவரும் வந்து விட வேண்டும் என்றும், சென்னைக்கு வெளியி லுள்ள பகுதிகளிலிருந்து வருகை தருகின்றவர் களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவர்க ளுக்கு கலைவாணர் அரங் கத்தில் இருக்கைகளை ஏற்பாடு செய்து தர வேண் டும் என்று கேட்டுக் கொள் ளப்பட்டது.

இவ் விழாவை முன் னிட்டு சென்னையில் விளம்பர தட்டிகள், கேபிள் தொலைக்காட்சி களில் ஒளிபரப்பு, கொடி தோரணங்கள் கட்டுதல் போன்றவைகளை செய் வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வட சென்னை
இக் கூட்டத்தில் வட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ரப்பானி அப்துல் குத்தூஸ், துறைமுகம் ப+க் குளம் கப+ர், பஸல், இம் ரான், ஜே. மக்ரூப், ராயபுரம் காதர் பாய், ஜாபர், வண்ணை நாசர், எம். காதர் ஷா, பெரம்ப+ர் எம்.ஏ. உஸ்மான் அலி, ஹாரிஸ், ப+வை காதர், ஏ. ஹைதர் அலி, ஜே. ஜாஹீர், ஏ.கே. முஹம்மது ரபி, கஜினி, ஆவின் சாகுல், காதர் பாஷா, ஆர்.கே. நகர் ஹனீபா, கே.எம். யாஸின், சுலைமான் ஆலிம், திரு.வி.க. நகர் இர்பான், எம். முஸ்தபா, ஷெரீப், ஆர். ஜானுல்லா, கே. அப்துல் கபார், ஜே. முஹம்மது சலீம், வில்லிவாக்கம் ஷேக் தாவ+து, ரஹ்மானியா ஆட்டோ சங்கம் பரக்கத், நாசர், தென் சென்னை மாவட்டம் ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், கிண்டி மேத்தப்பிள்ளை மரைக்காயர், வி.என். அப்துல் ஜலீல், ஐ. முஹம் மது சலாஹ{தீன், எச். முஹம்மது சுபைர் பாஷா, எம்.எஸ். அப்துல் வஹாப், மேத்தா நகர் அப்துல் ரஹீம், ஹைதர் அலி கான், ஏ.எச். கான், கே.எம்.ஓ. நூருல் மியான், எம்.எஸ்.ஒ. அய்ய+ப்கான், கௌஸ் பேக், சேப்பாக்கம் ஆலம்கான், மீரான் முகைதீன், ஓ.எம். சாகுல் ஹமீது, கலீமுல்லா கான், திருவல்லிக்கேணி நாசர், கே.எம்.ஓ. நாகூர் மீரான்

காஞ்சிபுரம் மாவட் டம் - மாவட்ட அமைப்புச் செயலாளர் புதுப்பட்டி னம் ஜாஹீர், மாவட்டப் பொருளாளர் எஸ். அப்துல் ஹலீம், பொதுக் குழு உறுப்பினர் ஏ. அஸ் லம் பாஷா, காஞ்சி நகரத் தலைவர் எஸ்.எம். அப்துல் குத்தூஸ், செயலாளர் மக்ப+ல் பாஷா, பொருளா ளர் கே.எஸ். உஸ்மான், காஞ்சி ஒன்றியச் செயலா ளர் ஏ.எம். முஹம்மது அலி, தாம்பரம் அப்துல் ரஷீத், பனைய+ர் ய+னுஸ், ஷேக் அப்துல் காதர், முஸ்தபா, குர்ரான், அப்துல் அலி, பேரூர் முஹம்மது அப+பக் கர், இளைஞர் அணி எம். முஹம்மது ய+னுஸ், சர்தார் பாஷா, ஏ. ஆஸிப், ஷரீப், அப்துல் காதர், அன்சாரி, ஆரோக்கிய சுந்தரனார் உள்ளிட்ட முஸ்லிம் லீக் முன்னோடிகள், அணி களின் நிர்வாகிகள், இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=138

Saturday, September 05, 2009

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கேசென்ற வருடம் புனிதஹாஜிகள் அனுப்பியதில் ஊழல் நடந்து விட்டது என்றும், அன்றைய அமைச்சர் இ. அஹமது அவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் உரிமையை மறைத்து விடலாம் என்னும் நப்பாசையில் தமிழகத்தில் சில சமுதாய புல்லுருவிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள். முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.
மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய பொதுச்செயலாளர்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

Sunday, April 12, 2009

வெற்றியை நோக்கி முஸ்லிம் லீக்!

வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் க‌ட்சியின் வேட்பாளராக‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் உல‌க ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ள்ளிக்க‌ல்வியை ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் ப‌டித்தார். ப‌ள்ளிப்ப‌டிப்பின் போதே மாநில‌ அள‌விலான‌ பேச்சுப் போட்டிக‌ளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரியில் க‌ல்லூரிப் ப‌டிப்பினைப் ப‌யின்றார்.



உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிடுகிறார்!


நக்கீரன் சர்வே!

இந்த நிலையில் நக்கீரன் வார இதழ் (ஏப்- 11- 2009) முடிவின் படி

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முத்துப்பேட்டை

எம். அப்துல்ர‌ஹ்மான் அவர்கள் 48% ஓட்டுக்களைப்பெற்று வெற்றிப் பெறுவார்!

இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)


தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

உன்மையில் முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான்

அவர்களை வேட்பாளராக பெற்ற வேலுர் தொகுதிவாசிகள்

கொடுத்துவைத்தவர்கள்....!

Thursday, April 09, 2009

மு.லீக் வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு - உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்

மு.லீக் தலைவர் காதர் மொய்தீனுடன் அப்துல் ரஹ்மான்


வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு

வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் க‌ட்சியின் வேட்பாளராக‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் உல‌க ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

இத்த‌க‌வ‌ல் வியாழ‌க்கிழ‌மை இர‌வு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ த‌லைமை நிலைய‌மான‌ காயிதெமில்ல‌த் ம‌ன் ஜிலில் மாநில‌ த‌லைவ‌ர் முனீருல் மில்ல‌த் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் எம்.பி. த‌லைமையில் ந‌டைபெற்ற‌ அவ‌ச‌ர‌ செய‌ற்குழுக்கூட்ட‌த்தில் முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

மேலும் ச‌முதாய‌ வேண்டுகோளின்ப‌டி உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிடுவ‌து என்றும் முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ள்ளிக்க‌ல்வியை ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் ப‌டித்தார். ப‌ள்ளிப்ப‌டிப்பின் போதே மாநில‌ அள‌விலான‌ பேச்சுப் போட்டிக‌ளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரியில் க‌ல்லூரிப் ப‌டிப்பினைப் ப‌யின்றார்.

க‌ட‌ந்த‌ கால் நூற்றாண்டுக்கும் மேலாக‌ அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் இவ‌ர் துபாய் இஸ்லாமிய‌ வ‌ங்கியின் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்துறையில் உத‌வித் த‌லைவ‌ராக‌ இருந்து வ‌ருகிறார்.

துபாய் ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌வும், ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ராக‌வும் இருந்து வ‌ருகிறார்.

அமீர‌க‌த்தில் ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளின் மூல‌ம் இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு சேவைக‌ளைச் செய்து வ‌ருகிறார். அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ந்தாலும் தாய‌க‌த்தில் ச‌மூக‌ந‌ல‌ப்ப‌ணி மேற்கொள்ள‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லைக் கொண்ட‌வ‌ர்.

இந்த‌ அவ‌ச‌ர செய‌ற்குழுவில் மாநில‌ பொதுச்செய‌லாள‌ர் டாக்ட‌ர் சைய‌த் ச‌த்தார், மாநில‌ நிர்வாகிக‌ள், அமீர‌க காயிதெமில்ல‌த் பேரவை பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

அமீர‌க‌ப் பிர‌முக‌ர்க‌ள் வாழ்த்து

எம். அப்துல் ர‌ஹ்மான் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ செய்திய‌றிந்து அமீரக‌த்தில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் த‌ங்க‌ள‌து ம‌கிழ்ச்சியினையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ள‌ன‌ர்.

அமெரிக்கா

அமெரிக்கா காயிதெமில்ல‌த் பேரவை அமைப்பாள‌ர் தோப்புத்துறை முஹ‌ம்ம‌து நூர்தீன், குவைத் காயிதெமில்ல‌த் பேர‌வை அமைப்பாள‌ர் டாக்ட‌ர் அன்வ‌ர் பாஷா, ச‌வுதி அரேபிய‌ காயிதெமில்ல‌த் பேரவை நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து வாழ்த்தினை வெளிப்ப‌டுத்தியுள்ளன‌ர்.

செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Saturday, April 04, 2009

முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் போட்டி


சென்னை :வேலூர் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன் எம்.பி., மீண்டும் போட்டியிடுகிறார். "ஏணி' சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தற்போதைய எம்.பி.,யும், கட்சித் தலைவருமான காதர் மொய்தீன் மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


செயற்குழு கூட்டத்திற்குப் பின், காதர் மொய்தீன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் முடிவுப்படி வேலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன். இதை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சியை தி.மு.க.,வில் அடகு வைத்து விட்டதாக பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இந்த முறை "ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்.தி.மு.க., காங்., தேர்தல் அறிக்கைகளில், முஸ்லிம்கள் இதுவரை கேட்டு வந்த பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த தேர்தல் அறிக்கை, எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை போலவே உள்ளது. தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். மூன்றாவது, நான்காவது அணி என்பதெல்லாம் இல்லாத ஊருக்கு, செல்லாத வழிகாட்டுவது போன்றது. மீண்டும் மன்மோகன் தான் பிரதமராக வருவார்.இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.
நன்றி : தினமலர்

Friday, March 27, 2009

தம்மாம் மாநகரில் காயிதெ மில்லத் பேரவை ஆலோசனை கூட்டம்

சவூதி அரேபியா - தம்மாம் மாநகரில் காயிதெ மில்லத் பேரவை ஆலோசனை கூட்டம்



சவூதி அரேபியாவின் கிழக்கு மண்டலமாக திகழக் கூடிய தம்மாம் மாநகரில் தமிழக முஸ்லிம் லீகர்களின் காயிதெ மில்லத் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் கேரள முஸ்லிம் லீகர்களின் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கம் நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் தம்மாம் - பதர் பாலி கிளினிக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தம்மாம் மண்டல தலைவர் எம். உம்மர் தலைமை தாங்கினார்.

எதிர்வரும் இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அது ஆதரிக்கக் கூடிய அணிக் காக சவூதி அரேபியாவிலிருந்து எவ்வாறு பிரச்சார உத்திகளை மேற்கொள்வது குறித்தும், தம்மாம் மண்டபத்தில் பணியாற்றி வரு கின்ற தமிழக முஸ்லிம் களுக்கு மத்தியில் முஸ்லிம் லீகின் காயிதெ மில்லத் பேரவையை வலுப்படுத்து வதற்கான நட வடிக்கைகள் குறித்தும் மற்றும் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தம்மாம் மண்டல துணைத் தலைவர் குஞ்சு முஹம்மது, காயிதெ மில்லத் பேரவை யின் தம்மாம் மண்டல அமைப்பாளர் எஸ்.கே.எம். ஹபிபுல்லா, கேரள மாநில இளைஞர் லீகின் மலப்புர மாவட்ட முன்னாள் கன்வீனர் இப்ராஹீம், கடலூர் முஹைதீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் நிர்வாகிகள் ஷரீப், சுலைமான், இக்பால் சாஹிப், பதர் பாலி கிளினிக் முஹம்மது, காயிதெ மில்லத் பேரவை பொறுப் பாளர்களான கோவை நாசர் ஹம்ஸா, பரங்கிப் பேட்டை கரீமுல்லாஹ், நெல்லை அப்துல் கனி, திவான், அப்துல் காதர், திவான் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தம்மாம் - கதீப் பகுதி கே.எம்.சி.சி. அமைப்பாளர் அப்துல் சமத் நன்றி கூறினார்.

தகவல் . இளம்பிறையான, தம்மாம்
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template