Showing posts with label ரைசுதீன். Show all posts
Showing posts with label ரைசுதீன். Show all posts

Sunday, January 06, 2013

மாதரை காப்போம் - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

மாதரை காப்போம் 
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்



நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் - அண்ணல் காந்தியடிகள்''.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது.
தில்லியில் 23 வயது நிரம்பிய பெண்ணை ஓடும் பேருந்தில் அறுவரால் கூட்டுப் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கிய சம்பவம் நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் சினத்தைக் கிளறியுள்ளது. போராட்டமும் தடியடியும் வாதங்களும் சர்ச்சைகளும் நடைபெற்றன. இவை பாலியல் வன்செயல்களுக்கு ஒரு தீர்வைக் காணுமா அல்லது ஆர்ப்பாட்டங்களோடு நின்றுவிடுமா என்பதுதான் நமக்கு முன்னுள்ள வினாவாகும்.

பாலியல் வன்செயலை சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு ஒப்பாகும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுவதால் மட்டுமே வன்செயல்கள் நின்றுவிடப்போவதில்லை. தில்லியில் நடைபெற்ற சம்பவம், ஆழ்ந்து விரிந்து கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கும் பனிமலையின் ஒரு நுனியை மட்டுமே நமக்குக் காட்டியுள்ளது. எனவே ஆழமான பிரச்னைகளுக்கு ஆழமாகச் சிந்திக்காமல் மேற்போக்காக சில தீர்வுகளைக் கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பாலியல் வன்செயல்களை அகற்ற சமூகம், சட்டம், காவல்துறை, நீதித்துறை ஆகிய அனைத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

தேசிய குற்றவியல் பதிவுத் துறை (என்சிஆர்பி) தரும் தகவல்படி ஆண்டுக்கு 24,206 பாலியல் வன்செயல்கள் பற்றிய புகார்கள் பதிவுசெய்யப்படுகின்றன. ஒவ்வொரு 22 நிமிஷங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். இத்தகைய சம்பவங்களில் 94.2 விழுக்காடு அந்தப் பெண்ணுக்குப் பரிச்சயமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன என்று கூறுகிறது தேசிய குற்றப்பதிவுத் துறை. மொத்தப் பாலியல் வன்கொடுமைகளில் பெற்றோர்களாலும் நெருங்கிய உறவினர்களாலும் நிகழ்த்தப்பட்டவை 1.2 விழுக்காடு. அக்கம்பக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டவை 34.7 விழுக்காடு. உறவினர்கள், நண்பர்களால் நிகழ்த்தப்பட்டவை 6.9 விழுக்காடு.
பணியிடங்களில் மேலதிகாரிகளாலும், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாலும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். காவல் நிலையம், மருத்துவமனை, மகளிர் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும் தம்மிடமுள்ள பதவியையும் தம்மிடத்தில் அடைக்கலமாக உள்ள பெண்களின் பலவீனத்தையும் பயன்படுத்தி வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். தெருவிலும் பேருந்திலும் ரயிலிலும் நடைபெற்ற பலாத்காரங்களைவிட நான்கு சுவர்களுக்குள் நடைபெறும் வன்செயல்களின் எண்ணிக்கை அதிகம்.

பதிவு செய்யப்பட்ட குற்றங்களைவிடப் பதிவு செய்யப்படாதவை பலமடங்காகும். சமூகத்திற்கு அஞ்சியும் நீதிமன்ற அலைக்கழிப்பிலிருந்து விடுபடவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம்மைப் பழிவாங்கிவிடுவர் என்பதை எண்ணியும் பலர் குற்றங்களைப் பதிவு செய்ய முன்வருவதில்லை. மேலும், விசாரணையின்போது நீதிபதி, வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் முன்பு கேட்கப்படும் கேள்விகள் பாலியல் வன்புணர்ச்சியைவிடக் கொடுமையானவைதாமே? இதன் காரணமாகப் பல பெண்கள் குற்றங்களைப் பதிவு செய்வதில்லை.

சட்டத்தின் பிடியிலிருந்து எப்படியும் தப்பிக்கலாம் என்பதே பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கான முக்கிய காரணமாகும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற வாதத்தில் நியாயமிருந்தாலும் இருக்கின்ற சட்டங்களை முறையாகச் செயல்படுத்தினாலே குற்றங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும். பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டுகளில் 26.4 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே தண்டனை பெறுகின்றனர் என்கிறது என்சிஆர்பி.

காவல்துறையினரின் உணர்ச்சியற்றதனம், மெத்தனம், அலட்சியம், பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமை ஆகியவற்றின் காரணமாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளில் போதிய ஆதாரமின்மையால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். குற்றவாளிகளைக் கைது செய்யும்போது தேவையான தடயவியல் சான்றுகளைச் சேகரித்துக்கொள்ளாமையும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைக் கூடங்கள் இல்லாமையும் முக்கியக் காரணமாகும்.

தில்லியிலுள்ள 80,000 காவல்துறையினரில் கணிசமானோர் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறார்கள். 20,000 முதல் 25,000 காவலர்கள் மட்டுமே தெருக்களில் காணப்படுகின்றனர். பணிச்சுமைகளின் அழுத்தம், காவல் துறையினருக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படாததினால் குற்ற விசாரணையில் போதிய கவனத்தை அவர்களால் செலுத்த முடியவில்லை.

நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுகின்ற வேகம் குற்றவாளிகளுக்குத் தெம்பைத் தருகின்றது. விரைவான நீதியே குற்றவாளிக்கு அச்சத்தைத் தரும். நீதிமன்றங்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல், நீதிபதிகளை அதிகப்படுத்துதல், கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி நவீனப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதோடு, வாய்தா வாங்குவதற்கும் ஒரு வரையறையைக் கொண்டுவராத வரை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கவே செய்யும். வழக்கறிஞர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது அரசு இதில் ஒரு துணிவான முடிவை எடுக்க வேண்டும். விரைவாக நீதி வழங்கப்படுகின்ற நாடுகளில் குற்றங்கள் குறைவாக நிகழ்கின்றன என்பது கவனத்திற்குரியது.

ஆறாக ஓடும் மதுவும் குற்றங்கள் பெருகக் காரணமாகிறது. பாலியல் வன்செயல்கள் மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை கலவரங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவோர் மது அருந்திய நிலையிலேயே அவற்றைச் செய்கின்றனர். மதுவுக்குக் கால் முளைத்தால் அது மாதுவிடம்தான் செல்லும். தில்லியில் பாலியல் வன்புணர்ச்சியைச் செய்தவர்களும் மது அருந்திய நிலையிலேயே இருந்தனர். ஆனால் போராட்டம் நடத்தும் எவரும் மதுவை ஒழிக்கவேண்டும் என்று முழக்கம் எழுப்பியதாகத் தெரியவில்லை.
ஆபாச உணர்வுகளைக் கிளறிவிடும் திரைப்படங்கள், புத்தகங்கள், இதழ்கள், விடியோ விளையாட்டுகள் ஆகியவையும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பதை எல்லோரும் வசதியாக மறந்துவிடுகின்றனர்.

சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற முழக்கம் அதிகமாக ஒலிக்கின்றது. இப்போது நடைமுறையிலுள்ள இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 376 பாலியல் வன்புணர்ச்சிக்கு ஏழு ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை நீடிக்கக்கூடிய தண்டனை கொடுக்கலாம் என்கிறது. இதை மரண தண்டனையாக மாற்றவேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. மரணதண்டனை எனச் சட்டதிருத்தம் கொண்டுவந்தால் வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண், குற்றவாளியைக் காட்டிக்கொடுத்துவிடுவாள் என்ற பயத்தில் குற்றவாளிகள் அப்பெண்ணைக் கொன்றுவிடுவார்கள் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனை வேண்டாம் என்று வாதிடுகின்றனர். இது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமல்ல. குற்றத்தின் கொடுமைதான் தண்டனையின் அளவை நிர்ணயிக்க வேண்டும். அத்தோடு தண்டனையின் அளவு குற்றங்கள் செய்யாதவாறு மக்களைத் தடுப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கவேண்டும்.

சட்டங்களைக் கடுமையாக்குவதால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடாது. சட்டங்களை அக்கறையோடும் முறையாகவும் விரைவாகவும் குற்றவாளிகள் தப்பிக்காதவண்ணம் செயல்படுத்தும்போது குற்றங்கள் குறையும்.
கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களுக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் தண்டனைக் குறைப்பு செய்வது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. இது எப்படியும் தப்பித்துவிடலாம் என்ற உணர்வையே குற்றவாளிகளிடம் ஏற்படுத்தும்.

சமீபத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலையும் செய்த நால்வருக்கு மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு ஓய்வுபெறுவதற்கு முன்னால் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் எல்லாத் துறைகளிலும் காணப்படும் அலட்சியம், அக்கறையின்மை, தாமதம், ஊழல், சிவப்புநாடா முறை, பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றைப் போக்கும் முகமாக நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுப் புத்துணர்ச்சியும் புதுவேகமும் அளிக்கப்படவேண்டும். பணிகள் எளிதாகவும் விரைவாகவும் முறையாகவும் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் சீர்திருத்தங்கள் அமைய வேண்டும். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க ஜி.பி.எஸ். கண்காணிப்பு கேமராக்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தவேண்டும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீது நியாயம் இருந்தால் வழக்கறிஞர்கள் அவர்களுக்காக வாதாடலாம். ஆனால் குற்றவாளிகள் பக்கம் எந்த நியாயமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த பின்பும் அவர்களுக்காக வாதாடுவது எந்த வகையிலும் தர்மம் ஆகாது.

பாலியல் குற்றங்கள் குறைய பெண்களைப் பற்றிய சமூகத்தின் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பெண்களைச் சுமையாகவும் இழிவாகவும், போகப் பொருளாகவும் பார்க்கும் மனநிலை மாறவேண்டும். பாலியல் வன்புணர்ச்சிக்குப் பலியான பெண்களை அருவருப்பாகப் பார்க்காமல் அநீதிகளை எதிர்த்துப் போராடிய வீரமங்கைகளாகப் பார்க்கவேண்டும்.

இச்சைகளைத் தூண்டும் விதத்தில் ஆபாசமாக ஆடைகள் அணிவதும், பூங்காக்கள், பேருந்துகள், கடற்கரை, வணிக மால்கள் போன்ற பொது இடங்களில் நாணமின்றி நடந்துகொள்வதும் குற்றவாளிகளைக் கூவி அழைப்பதுபோல் உள்ளன. இதைப் பெண்ணியவாதிகள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது தெரிந்ததே. இச்செயல்கள்தாம் பாலியல் வன்கொடுமைகளுக்கு மூலகாரணம் என்று சொல்வதற்கில்லை; இதுவும் ஒருவகையில் காரணம் என்பதை ஏற்றே ஆகவேண்டும்.

அதிகம்பேசப்படாத, பேசத் தயங்கும் ஒரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒழுக்க மாண்புகள் மிக்க, விழுமங்களைப் பின்பற்றுகின்ற சமூகத்தை உருவாக்குவதில் நமது முழு கவனமும் இருக்கவேண்டும். ஒரு சமூகத்தின் ஒழுக்க வீழ்ச்சி அந்தச் சமூகத்தின் எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது. விழுமங்களைக் கற்றுத்தரும் ஏற்பாடுகளைப் பெற்றோர், ஆசிரியர்கள், ஆன்மிகத் தலைவர்கள், மனிதநேயர்கள், தேச பக்தர்கள் ஆகியோர் தொடர்ந்து செய்து வரவேண்டும். பாடதிட்டங்களிலும் இதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

கொடூரமான நிகழ்வுகளின்போது மக்கள் ஆத்திரமுற்று வீதிக்கு வருவது இயற்கையே. ஆனால் போராட்டங்கள் மட்டுமே பிரச்னைகளுக்குத் தீர்வு ஆகாது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த இந்திய அளவில் அமைப்புகளை உருவாக்கி முறையாகத் தொடர்ந்து செயல்படவேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆளும் வர்க்கத்தைத் தட்டிக்கேட்டல், நீதிமன்றங்களில் வழக்குதொடர்தல், பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் தருதல் எனும் வகையில் தொடர்ந்து பணியாற்றினால் மட்டுமே மாற்றங்களைக் காணலாம்.

Sunday, August 26, 2012

ஆகஸ்ட் 31 - ஏன்? ...எதற்காக.....?


 
அன்பின் தோழமைகளே,

கோவை சிறையில் உள்ள 166 முஸ்லிம்கள் உட்பட தமிழகமெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலநூறு முஸ்லீம் சிறைவாசிகளின் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட சிறை இருப்பையும், ஆதாரங்களற்ற முறையில் ராசிவ் காந்தி கொலை வழக்கில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்ட்டிருக்கும் முருகன், பேரரிவாளன், சாந்தன் என தமிழ் சொந்தங்களும், இன்னும் தமிழக சிறைகலெங்கும் பல்லான்டு காலமாக விடுதலைக்கான முகாந்திரமே இல்லாமல் அடைபட்டு கிடக்கும் அனைத்து அப்பாவி சிறைவாசிகளின் நிலை நிச்சயமாக 21 ஆம் நூற்றாண்டு இந்திய சமூகத்தின் அவலமாக வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

நீதி நியாயம் ஜனநாயகம் சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற தன்மை, மனித உரிமை என்பதனை எல்லாம் கோட்பாடுகளாக கொண்ட ஒரு அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி , நியாயம், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் இந்திய வரலாறு காணாத நீண்ட சிறை இருப்பில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தினருக்கும், மேற்கூறிய அப்பாவிகளுக்கும் நம்மாள் நீதி பெற்றுத்தர இயலவில்லை என்றால் அதனினும் ஒரு சமூக இழிவு வேறொன்று இருக்குமோ?

 இந்தியாவில் இதுவரை நடந்த வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயமே. இதன் சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளன, இச்சமுதாயத்தின் பென்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் இச்மூகமே தண்டிக்கப்படும் விதமாய அக்கலவரங்களுக்கு காரனம் என குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவெங்கும் சிறையிலும் அடைபட்டு கிடக்கின்றனர். இக்கலவரங்களுக்கு காரனமான சங்பரிவார கூட்டங்கள் ஒரு போதும் சிறையில் அடைக்கப்பட்டதுமில்லை, தண்டிக்கப்பட்டதுமில்லை இது தான் ஜனநாயக இந்தியா!! 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். பல ஆன்டுகளாக யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் முஸ்லிம்களின் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய நமது சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுக்கப்படுகிறது. நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்கள் என உலாவுகின்றனர்.சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என பிரகடனப்படுத்தப்பட்டும் கூட காஞ்சி சங்கராச்சாரியார் என்ற கொலைக் குற்றவாளி பிணையில் விடப்பட்டுள்ளார் ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பலர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இந்த அநீதிக்கு எதிராக தமிழ் இனம் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும்.

ராஜிவ் காந்தி படுகொலையின் மூல காரன கர்த்தாக்களான "சாமி" வகையராக்கள் சுதந்திரமாக உலா வருகையில் ஏதுமறியாத அப்பாவிகள் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சிகளின் அடிப்படையில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். ராஜிவ்கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது இன்னும் ஏன் இந்த அப்பாவிகளை துர்க்கு தண்டனை கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்? இது மனித உரிமை மீறல் இல்லையா? இன்னும் இந்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தோழர் ரவிச்சந்திரன் உட்பட 4 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக 20 ஆன்டுகளை தாண்டியும் அடைபட்டுள்ளனர். ஒரு கைதி எட்டு ஆன்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது என்பது அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று மனித உரிமை ஆர்வளர் திரு. வி.ஆர். கிருஷ்னய்யர் என்பவர் கூறியுள்ளார்.

நமது தேசப்பிதா அன்னல் மகாத்மா காந்தி அவர்களை கொன்ற கோபால் கோட்சே என்பவன் 16 ஆன்டுகளில் விடுதலை செய்யப்பட்டான், இவ்வளவுக்கும் கோபால் கோட்சே மகாத்மா காந்தியின் படுகொலையில் நேரடியாக தொடர்புள்ளவன் என்று குற்றம் சாட்டப்பட்டு அது நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவன். ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த வித நேரடி குற்றச்சாட்டுகக்களும் இன்றி சந்தர்ப்ப சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரனை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் 20 ஆன்டுகளை தாண்டியும் சிறைக் கொட்டடிகளில் எமது தமிழ் இனத்தை சேர்ந்த தோழர்கள் பலர் கரையே தெறியாது வாடி வருகின்றனர். தேசப்பிதாவை கொன்ற கொடியவர்கள் எல்லாம் விடுதலையாகும்போது எமது இனச்சொந்தங்களை மட்டும் இந்த அரசு வஞ்சப்பது ஏனோ? 

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினை கொண்ட இந்திய திருநாட்டில் சங்கராச்சாரிகளுக்கும், அம்பானி வகையாராக்களுக்கும் ஒரு நீதி சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு ஒரு நீதி!! என்ன ஒரு அவலம்?

பாதிக்கப்பட்டு கொடுஞ்சிறைகளில் அடைபட்டு கிடக்கும் இம்மக்களை பற்றி நாம் அறிந்து கொள்ளாமலோ, அறிந்தும் அறியாமலோ, இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மறுக்கவோ , மறைக்கவோ செய்து அல்லது கண்டும் காணாதது போலவோ இருந்து விடலாம். அறிந்து கொல்லுங்கள் வரலாறு நமது மனசாட்சியை விட மிக நேர்மையாக இயங்குகிறது

வரும் ஆகஸ்ட் 31 அன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கூடும் மாநாட்டில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!

ஆகஸ்ட் 31 - சென்னை மன்னடியில் சங்கமிப்போம், வெஞ்சிறைகளில் வேதனைகளோடு வாடும் நம் இனத்தை மீட்க போராடுவோம் , வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!

அழையுங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்: 9944112879 / 7871294143 / 9488159091 / 9944713816

Thursday, August 02, 2012

பி.ஜேயானிகளை (ததஜ) தவிர வேறு யாரும் முஸ்லிம் இல்லை- பி.ஜேயின் பிதற்றல்......முகவைத் தமிழன் (எ) ரைசுதீன்,ரைசூதின்

மீண்டும் பி,ஜேயின் பிதற்றல்....பி.ஜேயானிகளை (ததஜ) தவிர வேறு யாரும் முஸ்லிம் இல்லையாம்....


முகவைத்தமிழன், ரைசுதீன்,ரைசுதின்,முகவைதமிழன்,இராமநாதபுரம்,முகவை,முகவைத் தமிழன் (எ) ரைசுதீன் கைது - பொய்யன் டிஜே,ரைசூதின்
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template