Showing posts with label TMMK. Show all posts
Showing posts with label TMMK. Show all posts

Monday, August 31, 2009

வக்பு வாரியமா? த.மு.மு.க கிளை அலுவலகமா?

வக்பு வாரியமா? த.மு.மு.க கிளை அலுவலகமா?
( ஏவி.எம். ஜாபர்தீன் )
( கௌரவ ஆசிரியர், சமநிலைச் சமுதாயம் )

சகோதரர் ஹைதர் அலி வக்பு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டபோது ஒரு திறமையாளர் தலைமையில் வக்பு போர்டு என்ற ஊழல் மகா சமுத்திரம் புனித மடைந்து விடும். என்று மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.

ஆனால், அண்மையில் பள்ளிவாசல் நிர்வாகங்களில் வக்பு வாரியத்தின் தலையீட்டால் பல பள்ளிவாசல்கள் நிர்வாகக் கமிட்டி இன்று வக்பு வாரிய அதிகாரிகள் வசம் சென்று விட்டன. அவற்றில் கூத்தாநல்லூரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் நடைபெற்று வரும் அராஜகத்தை இங்கு முன்வைக்கின்றேன்.

கூத்தாநல்லூரில் பெரிய பள்ளிவாசல் என்பது அந்த மஹல்லா மக்கள் தொழுகைக்கு மட்டுமல்லாது அந்த ஊரின் முக்கிய நிர்வாகங்களையும் கவனித்து வந்தது.

திருமணத்திற்கான அனுமதி திருமணப்பதிவு, மரணப்பதிவு, விவாகரத்து மற்றும் விவாகரத்துக்கான நஷ்ட ஈடு ஆகியவைகளை பெரிய பள்ளிவாசலின் நிர்வாகம் கவனித்து வந்தது. 14 பள்ளிவாசல் களைக் கொண்ட அந்த ஊருக்கு பெரிய பள்ளிவாசல்தான் தலைமை நிலையமாகச் செயல்பட்டது.

சுமார் 30 வருடங்களுக்கு முன் பெரிய பள்ளிவாசலில் வேலை செய்து வந்த சிப்பந்திகளில் ஒருவர் கையாடல் செய்தார். என்ற காரணத்தைக் காட்டி வக்பு வாரியம் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது.

அதன் பிறகு ஜனாப் ஏ.ஜே. அப்துல் ரசாக் தலைவராக இருந்தபோது 1978 இல் நிர்வாகத்தை உள்ளூர் ஜமாஅத்திடம் ஒப்படைக்கும் வண்ணம் 7 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை நியமித்து 7 பேர் கொண்ட குழு 15 பேராக முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டத் திட்டங்களையும் வகுத்தனர்.

அதன் பிறகு வக்பு போர்ட் தலைவராக வந்த அப்துல் லத்தீப் நிர்வாகம் சிறப்புற நடைபெறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவை மேலும் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இருமுறை நீட்டித்தார். இரண்டாவது மூன்றாண்டுகள் முடியும்போது அப்துல் லத்தீப் வக்பு வாரியத்தலைவர் பதவியை விட்டு விலகினார்.

அப்போது இடைக்காலத்திற்கு இசைமுரசு நாகூர் அனீபாவை தமிழக அரசு வக்பு வாரியத் தலைவராக நியமித்தது. அவரது பதவி காலத்தில் மீண்டும் 3 ஆண்டுகள் பதவி கால நீட்டிப்புக்காக நிர்வாகக் குழுத் தலைவரும் நானும் அவரைச் சந்தித்தோம். 3 ஆண்டுகளுக்குப் பதிலாக அவர் முறைப்படி வாரியத்தைக் கூட்டி 5 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து தந்தார். காரணம் நிர்வாகத்தில் எந்த முறைகேடும் இல்லாதபோது அனாவசியமாக மாறுதல் செய்ய வேண்டியதில்லை. என்று முடிவெடுத்தார்.

முன்பே கூறினேன், வாரியம் ஒரு ஊழல் மகா சமுத்திரம் என்று நாகூர் அனீபா அவர்கள் பதவி விலகும் சமயத்தில் அவர் அறியாமலேயே அவரிடம் ஒரு கடிதம் கையெழுத்து வாங்கப்பட்டது. அதில் 5 ஆண்டுகள் நீட்டிப்பை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். இதனை பெரிய பள்ளி நிர்வாகஸ்தர்கள் நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். உயர் நீதிமன்றம் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ட்ரிப்யூனல் மூலம் ஏனைய விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. வக்பு வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நாகப்பட்டினத்தில் உள்ள ட்ரிப்யூனல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து ஐந்து ஆண்டுகள் வரை தற்போதைய நிர்வாகம் எவ்வித இடையூறும் இன்றி தொடரலாம். ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் பள்ளிவாசல் சட்ட விதிகளுக்குட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தாரிலிருந்து புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். என்று தீர்ப்பளித்தது.

மாநில ஆட்சி மாறியது. திருமதி பத்ர் சயீத் வக்பு வாரியத் தலைவராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். சட்ட வல்லுனரான இவர் காலத்தில் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்றாலும் ஊழல் மகா சமுத்திரத்தை மாற்றி அமைக்கப் பெரும் போராட்டம் நடத்தினார். அலுவலர்களை நம்பாமல் முக்கியமான ஆவணங்களை தன்னுடனே வீட்டிற்கே எடுத்து வந்துவிடுவார்

திருமதி பத்ர் சயீத் இருந்தபோது தானே முன்னின்று தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வசம் பள்ளிவாசல் நிர்வாகத்தை ஒப்படைப்பதாக உறுதி கூறினார். ஆனால் அவர் காலத்தில் ஏதும் முடியவில்லை. பிறகு புதிய தலைவராக ஹைதர் அலி பதவி ஏற்றார்.

நாகப்பட்டினம் ட்ரிப்யூனல் அளித்த தீர்ப்பை எதிர்த்து கூத்தா நல்லூரில் உள்ள சில விஷமிகள் தூண்டுதலால் வக்பு வாரியம் ‘ஸ்டே; வாங்கியது. ;ஸ்டே; வாங்கியவுடனேயே நிர்வாக அதிகாரி ஒருவர் அடாவடியாக பள்ளிவாசலினுள் புகுந்து அங்கிருந்த சிப்பந்திகளை மிரட்டி அலுவலகச் சாவி, வங்கி செக்குகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். இது முறையாக பதவி வகித்து வரும் நிர்வாகிகளை அழைத்து அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்காக ரசீது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்

ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நிர்வாகிகளும் ஏன் வம்பு என்று ஒதுங்கிக்கொண்டு விட்டனர். நிர்வாகத்திலோ அல்லது நிதி கையாண்டதிலோ எவ்வித முறைகேடும் இல்லாத பட்சத்தில் எவ்வித முகாந்திரமும் இன்றி நிர்வாகக் குழுவிடமிருந்து பொறுப்பை வக்பு வாரியம் கைப்பற்றியது. இதனால் மனம் வெறுத்துப்போன ஜமாஅத் பெரியவர்கள் நிர்வாகத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.

நிர்வாக அதிகாரி நிரந்தரமாக அங்கு இருப்பதில்லை. பல ஊர்களுக்கும் அவரேதான் நிர்வாக அதிகாரி அவர் எப்போது வருவார் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. அவர் வரும்போது அவரிடம் வாங்க வேண்டிய கையெழுத்துகளை சிப்பந்திகள் வாங்கிக் கொள்வர். இதில் முக்கியமான ஒன்று ஊர் உத்தரவு என்ற திருமண அனுமதி.

இது உள்ளூரில் உள்ள உறவின் முறை ஜமாஅத்தாரால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. யார் முதல் திருமணம் செய்கிறார்கள் என்றும் யார் இரண்டாவது முறையாகத் திருமணம் செய்கிறார்கள் என்றும் அவர்களுக்குத்தான் தெரியும்.

உறவின் முறை ஜமாஅத் என்ற பெயரிலேயே அவர்கள் அனைவரும் தூரத்து உறவினராகவாவது இருப்பார். இதனால் யாருக்கு ஊர் உத்தரவு கொடுக்கலாம் என்று அவர்கள் தீர்மானிப்பர்.. அவர்கள் உத்தரவு தந்தால்தான் திருமணத்தின்போது திருமணப்பதிவு புத்தகமும் திருமணம் செய்து வைக்க சமயப் பெரியவரும் திருமணம் நடக்கும் இடத்திற்குச் செல்வார். .

இப்போது என்ன நடைபெறுகிறது?

ஊர் உத்தரவு கேட்டு வரும் மனுவை பள்ளிவாசல் சிப்பந்தி ஒருவர் எடுத்துக்கொண்டு வெளியூரில் இருக்கும் நிர்வாக அதிகாரியைத் தேடிப் பிடித்து கையெழுத்து வாங்கி வருகிறார். இதில் திருமணமானவரா இல்லையா? மணவிலக்கு செய்தவரா இல்லையா என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

முன்பு நிர்வாகிகள் இருந்தபோது மணவிலக்கு செய்தவர். மணமகனாக இருந்தால் அவர் தனது முந்தைய மனைவிக்குச் சேர வேண்டியவைகளைக் கொடுத்து விட்டானா என்று தீர விசாரித்து அப்படி ஏதும் செலுத்தவில்லை என்றால் ஊர் உத்தரவு மறுக்கப்படும். வக்பு நிர்வாகத்தில் இதுவெல்லாம் கண்டு கொள்ளப்படுவதில்லை.

அதேபோல் விவாகரத்து சொத்துப் பிரச்சினை என்று யாரும் போலீஸ் பக்கமோ நீதிமன்றமோ செல்லாமலே நிர்வாகஸ்தர்களிடம் சென்று பஞ்சாயத்து செய்து வந்தனர். இவை அனைத்தும் இப்போது போலீசுக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றுவிட்டன.

வக்பு வாரியம் ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தால் அவர் வக்புக்கான வரவு செலவு பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை நடைபெறுகிறதா என கண்காணிப்பது சிப்பந்திகள் சம்பளம் பெறுதல் பள்ளிவாசலின் வருமானத்தை முறையாகப் பெற்று அவைகளை வங்கியில் செலுத்துவது ஆகியவற்றைப் பார்ப்பதுதான் வழக்கமே தவிர திருமணத்திற்கான அனுமதி கொடுப்பது எந்த வக்பு சட்டத்தின் கீழ் வருகிறது? இப்படி கட்டமைப்பு கொண்ட ஒரு நிர்வாகத்தை வக்பு வாரியம் வந்து கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டது.

இதற்கிடையே இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வக்பு வாரிய நிர்வாகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்தனர். இதை அறிந்ததும் வக்பு வாரியம் தேர்தலை நடத்த முடிவு செய்தது.வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை நியமித்தது. அதில் ஏழு பேர் தேர்தல் இங்குள்ள நடை முறைக்கு சரிப்பட்டு வராது. எலக்‌ஷனுக்குப் பதில் செலக்‌ஷன் தான் வைக்க வேண்டும் என்று கூறி ஒத்துழைக்க மறுத்தனர். ஊரிலுள்ள உறவின் முறை ஜமாஅத்தினர் ஒரு கூட்டம் கூடி 50 பேர் கொண்ட குழுவை உருவாக்கி இவர்கள் மூலம் உறவின் முறை ஜமாஅத்தின் பட்டியல் தயாரிப்பது என்ற முடிவு எடுத்தனர்.

உறவின் முறை ஜமாஅத் என்றால் என்ன என்று பார்ப்போம்.

கூத்தாநல்லூர் ஆரம்ப காலத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன் வாழ்ந்துவந்த 11 முஸ்லிம் குடும்பங்கள் கரை வழி என்றும் உள்ளூர் வாசிகள் என்றும் இரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தக் குடும்பத்தினர்தான் திருமணம் வமிசாவழி விருத்தி ஆகியவை மூலம் இன்று பல குடும்பங்களாக இருக்கின்றனர். எந்தக் குடும்பத்தை எடுத்தாலும் ஆதியில் இருந்த 11 குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பர். இவர்கள் பெரும் சொத்துக்களை வாங்கி பள்ளிவாசல்களைக் கட்டி மதரஸாக்களைத் துவக்கி இவைகளைப் பராமரிப்பதற்காக சொத்துக்களை வாங்கி வக்பு செய்தனர். பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட சொத்துகளை நிர்வகிக்க ஏற்படுத்திக்கொண்ட அமைப்பே கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்.

இந்த உறவின் முறை ஜமாஅத் தான் காலங்காலமாக பள்ளிவாசல்கள் அனைத்தையும் நிர்வகித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாது சென்னை சிங்கப்பூர் போன்ற நகரங்களிலும் கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துகளை வாங்கி வக்பு செய்துள்ளனர்.

உறவின் முறை ஜமாஅத் பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி இந்த உறவின் முறை ஜமாஅத் முறையை எதிர்த்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பிலேயே தேர்தலில் பள்ளிவாசலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தினரிடமிருந்துதான் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியதும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையில் கூத்தாநல்லூரிலேயே அன்வாரியா தெருவில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வக்பு வாரியம் தேர்தல் அறிவிப்புச் செய்தது. அதற்கான வாக்காளர் பட்டியலையும் அவர்கள் தமுமுகவினரைக் கொண்டு தயாரித்துள்ளனர்.

அன்வாரியா தெருவில் வசிக்கும் அந்த மஹல்லாவைச் சேர்ந்தவர்களில் பெரும்பகுதியினரைத் தவிர்த்துவிட்டு உறவின் முறை என்ற வார்த்தைக்குப் பதில் உள்ளூர் வாசிகள் என்ற வார்த்தையை வைத்து வக்பு வாரிய அதிகாரிகள் 20 பேர் மட்டும் அன்வாரியா தெரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களையும் மீதி 130 பேர் வெளியூரிலிருந்து குடிவந்தவர்களையும் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இந்த 130 பேரில் பெரும்பான்மையோர் தமுமுக உறுப்பினர்கள் கூத்தாநல்லூரில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றங்கள் இயங்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

சென்ற மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. என்னவோ பெரிய கலவரப் பிரதேசம் போல் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வந்திருந்தனர். கூடவே ஒரு டி.ஐ.ஜியும் கூட்டத்தைக் கலைக்க பயன் படுத்தும் தண்ணீர் பீய்ச்சும் வஜ்ரா வாகனம் என்று பெரிய ஆர்ப்பாட்டத்தோடு ஆரம்பித்த தேர்தலில் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தமுமுகவின் மூக்கு உடைபட்டது.

தமுமுக ஆதரவு பெற்ற வெளியூரைச் சேர்ந்தவர்களில் மூவர் போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள். தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தேர்தல் களத்திற்கு வந்தால் போலீஸில் பிடித்துக் கொடுக்க ஊரே தயாராக இருந்தது.

இப்படி ஹைதர் அலியின் கனவு பலிக்கவில்லை. தமுமுகவினரால் ஊர் பிளவுபட்டது. குடும்பங்கள் பிரிந்தன. தந்தையும் தனையனும் தனித்தனியாக நிற்கின்றனர். தமுமுகவும் தெளஹீத் ஜமாஅத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்களிடமிருந்து சுன்னத் ஜமாஅத்தைக் காப்பது இப்போது மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.

ஹைதர் அலியின் ஒரே அஜெண்டா சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்றி அதனை தமுமுக கொள்கை கொண்டவர்களிடம் ஒப்படைப்பதுதான்.

ஏற்கெனவே இந்த இதழில் தமுமுக உறுப்பினர்கள் எப்படி ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் செய்கின்றனர் என்பதை பட்டியலிட்டோம். இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. போல் தமுமுகவினரே ஒவ்வொரு ஊரிலும் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்ற நடைபெறும் சதி இது.

மீண்டும் பெரிய பள்ளிவாயில் பற்றி பார்ப்போம். உறவின் முறை ஜமாஅத் கொண்ட பட்டியல் வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தும் அவர்கள் தேர்தல் நடத்த அறிவிப்பு செய்யவில்லை. ஆனால் அவசர அவசரமாக அன்வாரியா தெரு பள்ளிவாசலுக்கு தேர்தல் வைப்பதன் . .மூலம் அதே பாணியைப் பின்பற்றி பெரிய பள்ளிவாசலிலும் தேர்தல் நடத்தலாம்.என்று திட்டமிடுகிறார்கள் போலும்.

அன்வாரியா தெரு பள்ளிவாசல் வாக்காளர் பட்டியலில் உறவின் முறை ஜமாஅத்தினர் அல்லாதார் 130 பேர் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் வக்பு வாரிய தலைவர் இல்லை அவர்களும் உறவின் முறை ஜமாஅத்தார்தான் என்று சத்தியம் செய்கிறார்.

உறவின் முறை ஜமாஅத்தார் அல்லாதவர்கள் ஒன்றும் ஒதுக்கப்பட வில்லை. அவர்களில் பலர் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூத்தாநல்லூர் முன்சிப்பல் தலைவரே உறவின் முறை ஜமாஅத்தைச் சாராதவர் தானே? பள்ளிவாசல் நிர்வாகத்தை தவிர அவர்களுக்கு எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை. இதனை முன்பின் தெரியாத வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்களிடம் எப்படி ஒப்படைப்பது?

சில மாவட்டங்களில் இறந்தவர்களைக் கூட சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லுமாறும் உள்ளூர்வாசிகள் மட்டும் தான் இங்கு அடக்கம் செய்யமுடியும் என்றும் கூறுகின்றனர். கூத்தாநல்லூர் அவ்வாறு இல்லையே.

கூத்தாநல்லூரில் எந்த தொழிற்சாலையோ அல்லது வருமானம் தரக் கூடிய பெரிய தொழில்களோ கிடையாது. நகராட்சியாக உயர்வு பெற்றதற்கு காரணம் அவ்வூர் உறவின் முறை ஜமாஅத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து பணம் ஈட்டி கூத்தாநல்லூரில் வளமாக வாழ்ந்தனர். பள்ளிவாசல்கள் மதரஸாக்களைப் போன்றவை களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து பராமரிக்கிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்கள் இவ்வூர்களில் வேலை செய்தோ தொழில் செய்தோ தான் தங்கள் வருமானத்தை ஈட்டிக் கொண்டார்கள்.

இறுதியாக கூத்தாநல்லூர் சம்பவம் ஒரு உதாரணம். பள்ளிவாசல் நிர்வாகத்திற்குள் தமுமுக நிர்வாகத்தினரைத் திணிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் தகவல்கள் கிடைக்கின்றன. அண்மையில் ஜூனியர் விகடனில் மேலை நாசர் என்பவர் இதேபோல் சில விபரங்களைக் கூறி குமுறியிருந்தார்.

இக்கட்டுரை மாண்புமிகு முதலமைச்சர் பார்வைக்குச் செல்லும் என்று நம்புகிறோம்.

தமுமுக இதே பாணியைக் கையாண்டால் அதனை தி.மு.கழகம் ஆதரித்து வந்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டிலுள்ள சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களிடமிருந்து திமுக கூட்டணிக்கு ஒரு வாக்குகூட கிடைக்காது. மாண்புமிகு முதல்வர் ஆவன செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

( சமநிலை சமுதாயம் – மார்ச் 2009 இங்கும் அங்கும் பகுதியிலிருந்து )

SAMANILAI SAMUDHAYAM
NO 5 GREEMS ROAD
CANARA BANK BUILDING
IInd Floor
P O Box No. 6262
Thousand Lights
CHENNAI 600 006
Tel : 044 – 282 90 785
Fax : 044 – 24311229
Editor2samanilai@yahoo.co.in
Editor2samudhayam@yahoo.co.in

Monday, February 16, 2009

ம.நே.ம.க வின் முதல் மனித நேயம்??? முஸ்லிம்கள் மீது தாக்குதல்

இந்த செய்தி தொடர்பாக நிறைய மின்னஞ்சல்களும், தொலைபேசி அழைப்புக்களும் வருவதால் இந்த தகவல் இங்கு பதியப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களும், நம்பகத்தன்மையும் அறிய விரும்புபவர்கள் சுன்னத் ஜமாத் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களை அவரது தொலைபேசி என் : 9841037856 அல்லது 9940320789 என்ற என்களில் தொடர்பு கொள்ளலாம்.

தமுமுக வின் மனித நேயம்??

தமிழகம் எங்கும் குடும்ப பிரச்சினைகள், கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை காவல் நிலையம் வரை எடுத்துச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் வேலைகளில் புகழ்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தற்போது மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித நேய மக்கள் கட்சி" எனற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியினை நிறுவியுள்ளார்கள். இந்த அமைப்பு தமுமுக வின் கட்டப்பஞ்சாயத்துக்களுக்கு அரசியல் சாயம் பூசி மூடி மறைக்க பயன்படுத்தப்படும் ஒரு அரசியல் கட்சியாகவே ஆரம்பிக்கப்ட்டுள்ளது தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மனித நேய மக்கள் கட்சியின் மனித நேயம்??

மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் பரினாம வளர்ச்சி அடைந்த சமுதாயக் காவலர்கள் என தம்பட்டம் அடிக்கும் தமுமுக கட்டப்பஞ்சாயத்து குண்டர்கள் சமுதாயத்தை மீண்டும் படுகுழியி்ல் தள்ளி முஸ்லிம்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கி வயிரு வளர்க்கும் துரோகிகளே என்பதற்கு சமீபத்தில் அம்பத்தூரில் நடந்த இந்நிகழ்வே சாட்சி.

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களால் காயம்பட்ட முகம்மது சித்திக்

சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான முகம்மது சித்திக் என்பவர் கடந்த ஆகஸ்ட் 21, 2008 அன்று மதுரை, மேலூரை சேர்ந்த ரினோசா பரக்கத் என்ற பென்னை திருமனம் செய்தார். எவ்வித வரதட்சினையோ , கொடுக்கல் வாங்கல்களோ இல்லாமல் நட்நத இத்திருமனம் மேலூர் பெரிய பள்ளி ஜமாத் நிர்வாகிகளால் நடத்தி வைக்கப்பட்டது.

தமுமுக குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் முகம்மது ரபீக்

ஆனால் மனமகனுக்கும், மனமகளுக்கும் ஏற்ப்பட்ட சில மனக்கசப்புக்களால் மனப்பென் சமீப காலமாக தனது தாயர் வீட்டிலேயே வசித்து வருகின்றார். இந்நிலையில் மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித நேய மக்கள் கட்சி" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நேற்று (15-02-2009) இந்த மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் சிலர் அதன் பிரமுகரான மேடவாக்கம் சிராஜ் என்பவர் தலைமையில் TN 22 BX 6085 (டாடா சுமோ , மெட்டாலிக் கிரே கலர்) மற்றும் TN 07 M 2979 (குவாலிஸ் - மெருன் கலர்) கார்களில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை கார்களில் கட்டிக் கொண்டு திடீரென இன்ஜினியர் முகம்மது சித்திக்கின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினர்.

மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம்கள்


முகம்மது சித்திக்கின் வயதான தாய் தந்தையரும் இத்தாக்குதலில் தப்பவில்லை, முகம்மது சித்திக்கின் பெற்றோர் காதர் முகைதீன், மற்றும் சகர் பானு ஆகிய இருவரையும் அடித்து உதைத்தனர் அதை தடுக்க வந்த முகம்மது சித்திக்கையும் அவரது தம்பி முகம்மது ரபீக்கையும் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் கூடவே உடனடியாக மேலே கூறப்பட்ட மனித நேய மக்கள் கட்சி கொடி கட்டப்பட்ட வாகனங்களில் ஏறி இந்த குண்டர்கள் தப்பி விட்டனர்.

தற்சமயம் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் இவர்களிடம் தொலைபேசி வாயிலாக தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மேடவாக்கம் சிராஜ் என்பவனும் தமுமுக வின் ஒரு முக்கிய புள்ளியும் உன் மீதும் உன் அப்பன், ஆத்தா மீதும் நாங்கள் வரதட்சினை கொடுமை படுத்தி பென்னை சித்திரவதை செய்ததாக புகார் கொடுக்க போகின்றோம். நாங்கள் அரசாங்க கூட்டனியில் உள்ளோம், எங்கள் தலைவர் ஹைதர் அலிதான் வக்பு வாரியத் தலைவர், நாங்கள் கூறினால் கலைஞர், முதல் ஸ்டாலின் வரை கால்களில் விழுவார்கள் உங்கள் குடும்பத்தினை ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளார்கள்.

ஆரம்பித்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் தனது முதல் மனித நேயப் பனியினை செய்த மனித நேய மக்கள் கட்சியின் குன்டர்கள் முஸ்லிம்கள் என்று கூட பாராது மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்துக் கொன்டு வண்முறையில் இரங்கி தமுமுக வின் மனித நேயத்தை நிறுபித்துள்ளனர். தமிழகம் எங்கும் இதுபோலவே குடும்ப பிரச்சினைகளில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து பன்னி முஸ்லிம் குடும்பங்களையே பிரித்து சமுதாயத்தை கூறு போட்டுக் கொண்டுள்ளனர். தற்சமயம் அரசியலை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இன்னுமு் வீரியமாக தங்களின் குண்டர் படையினை வைத்து இது போன்ற முஸ்லிம்களை தாக்கும் மனித நேயப் பணியினை மகத்தாக செய்து வருகின்றார்கள்.

ஜனாப் மேலை நாசர் அவர்கள்

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களின் தொலைபேசி மிரட்டல்களால் பயந்து போன இக்குடும்பத்தினர் உடனடியாக சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையின் அலுவலக்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு ஆறுதல் கூறி அரவனைத்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர் அவர்கள் உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளையும் தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும் தொடர்பு கொண்டு மனித நேய மக்கள் கட்சி குண்டர்களின் அராஜகப் போக்கினை எடுத்துக் கூறி இவர்கள் ஆரம்பி்த்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் முதல்வர், ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை தவறாக பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் போக்கினை விளக்கி கூறி உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சுன்னத் ஜமாத்தினர் சென்னையில் மாபெரும் போராட்டத்தினை அரசிற்கு எதிராகவும் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் ரவுடிகளுக்கு எதிராகவும் மக்களை திரட்டி நடத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெறிவித்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர் அவர்கள் கூறுகையில் ஏற்கனவே தமுமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்து என்று தமிழகமெங்கும் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்தப் பெயரை மாற்றுவதற்காக மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியலுக்கு வந்த தமுமகவினர் முஸ்லிம்களை காப்பற்றுவோம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கூச்சலுடன் வந்தனர் ஆனால் தமுமுக பெயரில் மேம்போக்காக கட்டப்பஞ்சாயத்தக்களை செய்து வந்த இவர்கள் தற்சமயம் மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் ஆராவரத்துடன் முஸ்லிம்களை தாக்கி , சமுதாயத்தை கூறு போடம் பனியினை செய்து வருகின்றார்கள். இதற்கு தங்கள் அரசியல் பலத்தினையும் முதல்வர், ஸ்டாலின் போன்றவர்களின் பெயர்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

இன்னும் மேலதிகமாக போய் பொதுவாக இருக்க வேண்டிய வக்ஃபு வாரியத் தலைவரையும் அவரது அதிகாரத்தையும் இவர்கள் பயன்படுத்தி தமிழகமெங்கும் கட்டப் பஞ்சாயத்துக்களிலும் ரவுடித் தனங்கிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் சமுதாய துரோகிகள் என்பதை இந்த சமுதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில் இவர்களை கூட வைத்து கொண்ருக்கும் முதல்வர்கள் அவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினரை உங்கள் கூட்டனியில் வைத்திருந்தால் தமிழகத்தில் முஸ்லிம்களின் ஒரு ஓட்டை கூட பெற முடியாது என்று உங்களிடம் கூறிக் கொள்கின்றோம்.

அட்டைக் கருப்பாக இருக்கும் ஒருவனுக்கு வெள்ளையன் என்று பெயர் இருக்கும், நோயளியாக இருக்கும் ஒருவனுக்கு ஆரோக்கியம் என்று பெயர் வைத்திருப்பார்கள் அது போல மனித நேயமே அற்ற குண்டர்களை வைத்து நடத்தப்படும் ஒரு கட்சிக்கு மனித நேய மக்கள் கட்சி என்று பெயர் வைத்துள்ளார்கள். இவர்கள் மனித நேயம் அற்றவர்கள் என்பது இந்த சம்பவத்தில் நிறுபிக்கப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சி கொடி கட்டிய கார்களில் வந்து வீடு புகுந்து முஸ்லிம் குடும்பத்தினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமுமக குண்டர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகம் எங்கும் முதல்வரின் பெயரையும், ஸ்டாலின் அவர்களின் பெயரையும், வக்பு வாரியத் தலைவர் பதவி அதிகாரதையும் தவறாக பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்துக்களை செய்து வரும் தமுமுக மனித நேய மக்கள் கட்சி குண்டர்களை தமிழக முதல்வர் எச்சரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டக் கொள்கின்றேன் என்றார்.

செய்தி ஆக்கம் : திரு. மேலை நாசர் அவர்கள் 9841037856 / 9940320789

Saturday, February 07, 2009

த.மு.மு.க வின் மனிதநேய மக்கள் கட்சி தொடக்கம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில்
மனிதநேய மக்கள் கட்சி தொடக்கம்
இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரி தீர்மானம்


தாம்பரம், பிப்.8-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.

வாகனங்களில் வருகை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது. இதன் தொடக்கவிழா மாநாடு சென்னையை அடுத்த தாம்பரத்தில் நேற்று நடந்தது. இதற்காக தாம்பரம் ரெயில்வே மைதானத்தில் டெல்லி செங்கோட்டை வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பஸ்,வேன், கார்களில் ஆயிரக்கணக்கில் த.மு.மு.க.வினர் திரண்டு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் தங்களது குழந்தைகளுடன் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஆயிரத்துக்கும் மேலானோர், வாகனங்களில் வந்ததால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போலீசாருடன் த.மு.மு.க. தொண்டர் அணியினர் இணைந்து பணியாற்றினர். மாநாட்டையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புதிய கட்சி உதயம்

மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழாவையொட்டி நேற்று காலையில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது தலைமையில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் ஹாஜா கனி வரவேற்றார்.

பேராசிரியர் அ.மார்க்ஸ், பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் தஸ்தகீர், அருள் ஆனந்த், கஜேந்திரன், தேவநேயன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

மாலையில், மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழா நடைபெற்றது. த.மு.மு.க. முன்னாள் பொருளாளர் சையத் நிசார் அகமது, மனித நேய மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். நெல்லை மாவட்ட ஜமாஅதிதுல் உலமா தலைவர் மவ்லவி சலாஹுத்தீன் ரியாஜி, பேராயர் எஸ்றா சற்குணம், இரட்டை மலை சீனிவாசன் பேரவை தலைவர் எஸ்.என்.நடராஜன், பழங்குடி மக்கள் தேசிய பிரதிநிதி சுரேஷ் சுவாமி காணி, அஹிலுஸ் ஸிண்ணா ஆய்வு மைய நிறுவனர் மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதன் பின் மனித நேய மக்கள் கட்சி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. கட்சி தொடங்கி வைக்கப்பட்டது குறித்து த.மு.மு.க. மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வக்பு வாரிய தலைவரும், த.மு.மு.க. பொதுச் செயலாளருமான ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். த.மு.மு.க. பொருளாளர் ரஹ்மத்துல்லா, துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, மாநில செயலாளர்கள், நிர்வாகிகள் பேசினர். மாநாட்டின் ஒழுங்குபடுத்தும் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட த.மு.மு.க. செயலாளர் யாக்கூப் தலைமையில் த.மு.மு.க.வினர் செய்திருந்தனர். முடிவில் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் மீரான் மொய்தீன் நன்றி கூறினார்.

சுத்தப்படுத்துவோம்

மாநாட்டில் த.மு.மு.க. தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசும்போது, `ஒரு முஸ்லிம் என்ற முறையில் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பது நமது கடமையாகும். அரசியல் சாக்கடை என்று சொல்லி நாம் அதிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது. இந்த சாக்கடையை சுத்தப்படுத்தும் தலையாய பணி நமக்கு இருக்கிறது. நமது நாட்டின் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவும் மனித நேய கட்சி உதயமாகியுள்ளது' என்று கூறினார்.

போரை நிறுத்தவேண்டும்

மேலும், தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருப்பதை 6 சதவீதமாக உயர்த்தவேண்டும், முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத செயல்கள், தடுப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த இந்தியா முயற்சிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நன்றி : தினத்தந்தி

Tuesday, October 14, 2008

தமுமுக விடம் மண்ணிப்பு கேட்டார் IUML தலைவர் காதர் மைதீன்


காதர் மைதீன் (மைக்கில் பேசுபவர்)

பாசிச ஏடான `துக்ளக்’ வார இதழுக்கு முஸ்லிம் லீக் தலைவரும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம். காதர் மைதீன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். தமிழக முஸ்லிம்களின் மாபெரும் இயக்கமான தமுமுகவை தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஒப்பிட்டு, காழ்ப்புணர்ச் சியுடன் கூடிய காதர் மைதீனின் நேர்காணல் 27.8.08 தேதியிட்ட இதழில் வெளியானது.

இது சமுதாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.பல தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.எனினும் தனது கருத்துக் களுக்கு காதர் மைதீன் விளக்கமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. எனவே தமுமுக சார்பில் வழக்கறிஞர்கள் காஞ்சி ஜைனுல் ஆபிதீன் (மாநில மாணவரணிச் செயலாளர்), கே.விஜயகுமார் ஆகியோர், தமுமுக பற்றிய கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்குமாறும் இல்லையேல் அவதூறு வழக்கு தொடரப்படும் என காதர் மைதீனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இதையடுத்து காதர் மைதீன் தனது வழக்கறிஞர் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், "நான் கூறிய கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நான் எந்த நிலையிலும் தமுமுக குறித்து தவறாகக் கூறவில்லை, அப்படி ஏதேனும் கருத்துக்கள் தமுமுகவினரை பாதித்திருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் அவர் மீது தொடர இருந்த அவதூறு வழக்கு நிறுத்தப்பட்டது. எனினும் பொது ஊடகங்களில் பேட்டி அளிக்கும் சமுதாயத் தலைவர்கள் சகோதர அமைப்புகள் பற்றி கண்ணியத் துடன் பேச வேண்டும். நமது வார்த்தைகள் எதிரிகளுக்கு ஊக்கம் அளித்து விடக் கூடாது என்பதை உணர்ந்தால் சரி.

Sunday, August 31, 2008

குவைத்தில் சிறப்புரையாற்றுகிறார் தமுமுக தலைவர்

வட்டியில்லா வங்கியும் !!
இஸ்லாமிய நிலையும்!!


இருதின சிறப்பு கருத்தரங்கம்

சிறப்புரையாற்றுகின்றார்
பேரா. டாக்டர். எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

காலம் : 04, 05 - 09 - 2008 வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
நேரம் :இரவு 8.30 அளவில் தராவிஹ் தொழுகைக்கு பின்
இடம் : ஷஹீத் மெளலவி. பி.எஸ் அப்துர்ரஹீம் நினைவு அரங்கம்
ஜம்இய்த்துல் இஸ்லாஹ், உள்ளரங்கம், ரவ்தா

நிகழ்ச்சி ஏற்பாடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
குவைத் மண்டலம்

தகவல் : சகோ. திருச்சி அமானுல்லா அவர்கள்


Monday, July 28, 2008

தமுமுக இணையத் தளம் முக்கிய அறிவிப்பு

தமுமுக இணையத் தளம் முக்கிய அறிவிப்பு


சில தொழில் நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக நமது இணையத்தள முகவரிகளான

www.tmmkonline.org

www.tmmk.in


இயங்கவில்லை.

ஆனால் பின்வரும் முகவரிகள் மூலம் நமது இணையத்தளத்தை நீங்கள் பார்க்கலாம்

www.tmmk.info

www.tmmkonline.net

www.tmmkonline.com

மேலே உள்ள செய்தி தமுமுக தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து பெறப்பட்டது. சமுதாய மக்களின் தகவலுக்காக இங்கு பிரசுரிக்கப்படுகின்றது. -முகவைத்தமிழன்



புதுப்பிக்கப்பட்ட செய்தி : (29.07.2008 நேரம் இந்திய நேரம் மாலை 5.30)

தமுமுக தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியான jawahir@tmmk.in சரியாக வேலை செய்வதாகவும் இனி அதிலேயே அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதே போல் தமுமுக வின் http://www.tmmk.in/ என்ற இணைய முகவரியும் பிரச்சினைகள் நீங்கி சரியாக வேலை செய்வதாகவும் திரு ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மினஞ்சல் மூலம் தெறிவித்தள்ளார் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

----- Original Message -----
From: jawahirullah
To: makkalurimai@gmail.com
Sent: Tuesday, July 29, 2008 3:09 PM
Subject: my email


Dear All,


My email id jawahir@tmmk.in is now working allright. You can communicate to me in this address. Also kindly note our website with url http://www.tmmk.in/ which was down has been set right. You can browse our website in this url. Kindly inform our friends.


jawahirullah

Monday, June 09, 2008

ஒரு லட்சம் சம்பளமா... ? - தமுமுக ஹைதர் அலி பேட்டி

ஒரு லட்சம் சம்பளமா...

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் செ. ஹைதர் அலி் தமிழன் தொலைக்காட்சியில் அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து...

-முத்துப்பேட்டை மாலிக்
திரு.ஹைதர் அலி அவர்கள்

கேள்வி : தமிழகத்தில் திறமையான ஏராளமான முஸ்லிம் வழக்கறிஞர்கள் இருக்கையில் அவர்களை பணியில் அமர்த்தாமல் நீங்கள் தலைமை வகிக் கின்ற வகஃபு வாரியத்திற்கு லட்சுமி நாராயணன் என்பவரை நியமித்து உள்ளீர்கள். இது எப்படி சரியாகும்? தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம்களுக்காக தனி இட ஒதுக்கீடு முழு அளவில் பெறவேண் டும் என்று போராடி கொண்டிருக்கும் போது முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமனம் செய்தது சரிதானா?


பதில்: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் தமிழகத்தில் முஸ்லிம்களில் ஏராளமான திறமையான வழக்கறிஞர்கள் இருக்கும் போது வக்பு வாரியத்தில் ஒரு இந்து சகோதரனை லட்சுமி நாராயணன் என் கிற வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளீர்கள் இது நியாயம் தானா? அதற்காக போராட்டம் நடத்த போவதாக கூட ஒரு பத்திரிக்கையின் மூலமாக கூட சொல்லி இருக்கிறார்கள்.

நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஹதீஸ்களை ஆய்வு நடத்துகிற போது ஹதீஸ் கலை வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு ஹதீஸில் ஒரு அறிவிப்பா ளர் பொய்யராக இருந்தால், அல்லது அவர் பலகீனமாக இருந்தால் அல்லது ஞாபகமறதி உடையவராக இருந்தால், புத்தி சுவதீனம் இல்லாதவராக இருந்தால் அந்த ஹதீஸ்களை நாம் விடவேண்டும். அதற்கு ஒரு ஸஹீஹ் என்ற அந்தஸ்தை தரமுடியாது என்பது ஹதீஸ்களை நாம் பகுத்து பார்க்க வேண்டிய விஷயம். அந்த அடிப்படையில் நீங்கள் இதை பார்க்க வேண்டும். எல்லா விஷயங்க ளுமே குர்ஆன், ஹதீஸ் தான் நமக்கு வழிகாட்டி.



ஒரு விஷயத்தை தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்கிற ஒரு பொய்யன் சொல்கிற எல்லா குற்றச்சாட்டு களுக்கும் பதில் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொய்யன் என்று எப்படி சொல்கிறீர்கள் ஆதாரம் இருக் கிறதா? என்றால் இருக்கிறது.






நான் பதவி ஏற்ற உடனேயே... தமுமுகவால் நடத்தி கொண்டு இருந்த உணர்வு என்கிற பத்திரிக்கை திருடி செல்லப்பட்டு அதை அபகரித்து வைத்து கொண்டு இருக்கிறார்கள் அதில் வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று எழுதினார்கள் 1 லட்சம் ரூபாய் சம்பளம் என்று எழுதியபிறகு அவர்கள் இயக்கத்தில் இருக்கக்கூடிய ஜாகிர் உசேன் என்கிற சகோதரன் அவரிடத்தி லேயே (பி.ஜே) என்ன அண்ணன் 1 லட்சம் சம்பளம் என்று எழுதி இருக்கின்றீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே. உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்துள்ளார்கள் என்று அவர் கூறிய உடன் அவர் என்ன செய்திருக்க வேண்டும். அப்படியா? என்று மறுப்பு போட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவரி(ஜாகிர் உசேன்)டத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் மானியம் அது இது என்று எல்லா அலவன்ஸ் என்று அது ஒரு லட்சம் வரும் அப்படி என்னன்ன வருகிறது என்று நீங்களும் ஒரு பட்டியல் எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.


வக்ஃபு வாரியத்தில் இருந்து வக்பு வாரியத் தலைவருக்கு சம்பளம் தரப் படுகிறதா? என்றால் இல்லை. அந்த புத்திசாலிகளுக்கு இது தெரியாது போலிருக்கிறது. தெரிந்தாலும் பொய் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பொய்யை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு கொண்டு இருப் பவர்களுக்கு இது பற்றி பிரச்சனை இல்லை.
வாகனத் திற்கு டீசல் தரப்ப டும், அதுவும் எப்படி தரப்படு கிறது? ஒரு நாளைக்கு 12 லிட்டர் டீசல், வீட்டு தொலைபேசிக்கு, எனது கைபேசிக்கு கட்டணம் இவைதான் தரப்படுகின்றன. இவைகள் தான் வாரியத் தலைவருக்கு தரப்படுகின்ற மானியங்கள், சலுகைகள்.

சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.சி. தமிழ்நாடு தேர்வாணையத்தில் ஒருவரை நியமனம் செய்தார்கள். அப்படி நியமனம் செய்தவுடன் உடனடியாக ஒரு கூக்குரல் பாருங்கள் இடஒதுக்கீடு என்று சொல்லி ''இடஒதுக்கீடும் இல்லாமல் போய்விட்டது. இப்ப இதில் கூட ஒருவர் கூட முஸ்லிம் இல்லை'' என்று கூச்சலிட்டார்கள். உடனடியாக செய்திவருகிறது, நாம் பத்திரிக்கையில் எழுதுகிறோம். முதலில் யாஸ்மீன் அஹமது இருந்தார். அவர் போன பிறகு காசி விஸ்வநாதனை தலைவராக கொண்டு அமைக்கும் போது ஜின்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று நாம் பத்திரிக்கையில் எழுதிய பின்னர் அடுத்த வாரம் (களவாடிய) பத்திரிக்கையில் எழுதுகிறார்கள், தப்பு மனிதனுக்கு வராமல் இருக்குமா தவறாக வந்து விட்டது. இதை பத்திரிக்கையில் பெரிதாக எழுதுகிறார்கள். என்று கூச்சலிட்டார்கள்.

நாம் ஏன் இதற்கு கூட பதில் எழுதினோம் என்றால் முதலில் ஒரு தவறு நடந்து இருக்கிறது. வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று சொன்னயோக்கியனே, புத்திசாலியே அதுக்கு இன்னும் ஏன் நீ பதில் சொல்ல வில்லை?

சில நண்பர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். என்ன அவர் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை? என்று கேட்கிறார்கள். அவர்களிடத்தில் நான் சொல்வதெல்லாம் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது என்ன வழிமுறையை எடுத்து கொண்டேனோ அதே போன்று தான் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பொய்யன் தொடர்ந்து பொய் சொல்லி கொண்டு இருந் தால் நாம் பதில் சொல்லி கொண்டு இருக்க முடியாது.

லட்சுமி நாராயணனை நீங்கள் நியமித்தது உண்மையா? பொய்யா? என்றால் உண்மையில் நியமித்து உள்ளோம். ஏன் நியமித் தோம்? முன்பெல்லாம் ஒருவர் கூட இந்து இல்லை. இவர்கள் வந்து நியமித்து விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு இவர்கள் வைக்கிறார்கள் ஒன்றும் தெரியாமல் மக்களை மூடர்கள் என்று நினைத்து கொண்டு பிதற்றுகின்றார்கள். இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சில நேரங்களில் சில உண்மைகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.

புதிதாக வழக்கறிஞர்களை நியமிக் கும் பொழுது அவர்களுடைய தன்மை அறிந்து நியமனம் செய்கிறோம். பழைய ஆட்களில் யாரெல்லாம் தவறான நபர்கள் என்று தெரிகிறதோ, சாட்சிரீதி யாக யார் இருந்தாலும் நீக்கி விடுகி றோம். லட்சுமி நாராயணனை நாம் எப்படி நியமனம் செய்கிறோம் என்றால், வக்ஃபு வாரியத்திற்கு விசாரணைக்கு வரும் போது அவருடைய வாதத் திறமை விவாதத்தினுடைய தன்மை களை முழுமையாக கிரகித்து கொண்டு தான் நியமித்தோம். பரங்கிபேட்டையில் உள்ள ஒரு சொத்து வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நமக்கு பாதகமாக தீர்ப்பு வந்து, அந்த சொத்து அவர்களுடையது என்று தீர்ப்பு வந்து விட்டது. உடனே வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞர் ஜின்னா அவர்களை, இடைக்கால தடைவாங்க சொன்னோம். தடை வாங்கி விட்டு என்னிடத்தில் சொன்னார், ''அண்ணன், நான் என்கின்ற முறையில் இடைகால தடை வாங்கி விட்டேன். ஆனால் வழக்கு பலகீனமாக இருக்கிறது என்றார். உடனே சம்பந்தப்பட்ட வக்ஃபுக்குரியவரை கூப்பிட்டு நாங்கள் சொன்னோம். தாங்கள் ஏதாவது வழக்கறிஞர் வைக்க வேண்டுமானால் லட்சுமி நாராயணனை வையுங்கள் என்று கூறினோம்.

லட்சுமி நாராயணன் எனக்கு பழக்கமெல்லாம் கிடையாது. லட்சுமி நாராயணன் வாரியத்திற்கு வந்து இரண்டு முறை வாதம் புரிந்து உள்ளார். அப்ப தான் லட்சுமி நாராயணன் பற்றிய செய்திகளை சேகரிக்கிறோம். லட்சுமி நாராயணன், பாட்டன், தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அவர் குடும்பமே வழக்கறிஞர்கள் ஆவர். தாத்தா வக்ஃபு வாரியத்தில் வழக்கறி ஞராக இருந்துள்ளார் இந்திய துணைக் கண்டத்தில் முதன்மையாக உள்ளார். பெங்களூர் சட்டக் கல்லூரியில் தான் படித்துள்ளார். அது மட்டுமல்ல கோல்டு மெடலிஸ்ட்.

ஒரு முறை ஒரு சிறிய வழக்கு, அந்த வழக்குக்காக வாதிட வருகிறார். அந்த ஒரு வழக்கு ஒரே தன்மையுடைய இரு வழக்கு, இரு தரப்பினர்கள் வருகிறார்கள். ஒரு தரப்பினர் வழக்கு விசாரிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்து விடுகிறோம்.

லட்சுமி நாராயணன் மற்றொரு வழக்குக்காக வருகிறார். ஒன்றரை மணி நேரம் அதற்காக வாதிட்டார். 1920, 1950, 1970 பல்வேறு பட்ட கல்கத்தா நீதி மன்றத்தில் சொல்லப்பட்ட வக்ஃபு சட்டங் கள் திருவாரூரில் நடந்த வழக்குகள் மதுரையில் நடந்த வழக்குகளை தன்னு டைய விரல் நுனியில் வைத்து கொண்டு அதற்குரிய நகல்களை எடுத்துத் தந்து வாதிட்டார். நான் மட்டும் அல்ல அங்கு இருக்கக் கூடிய வாரிய உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய வாதத்திற மையை பாராட்டினார்கள். இது மாதிரி யான வழக்கறிஞர்கள் நமக்கு வேண்டும் என்று கூறினார்கள். அதன் அடிப்படை யில் தான் அவரிடத்தில் நாம் ஒரு ஆளை அனுப்பி ''நீங்கள் வருவீர்களா?'' என்று கேட்டோம்.

வக்பு வாரிய வழக்கறிஞராக இருந்தால் என்ன கிடைக்கும்? வக்பு வாரிய வழக்கறிஞர் என்கிற தகுதி கிடைக்குமே தவிர... பணம் கிடைக்காது. ஒரு வழக்குக்கு அங்கு 15 ஆயிரம் 20 ஆயிரம் என்று வாங்குபவர். வாரியத்தில் நாம் எவ்வளவு கொடுப்போம் 400, 500 ரூபாய் தான் கொடுப்போம் அரசு என்ன நிர்ணயித்து இருக்கிறதோ அரசு என்ன கொடுக்கின்றதோ அதை தான் நாம் கொடுப்போம் அது கூட மிகவும் குறைவாக உள்ளது, அதி கரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.


இந்த புத்திசாலி (?) தமுமுகவில் இருந்து திருடி சென்ற சொத்துகளுக்காக வழக்கு போட்டாரே எந்த முஸ்லிம் வழக்கறிஞரை வைத்து போட்டார்? முஸ்லிம்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற இயக்கம் என்று சொல்கிற ஒரு அமைப் பைச் சேர்ந்த நீ, ஒரு முஸ்லிம் வழக்கறி ஞரை அல்லவா வைத்திருக்க வேண்டும்?



அது மட்டும் அல்ல ஒரு சிறு சம்பவம் பின்னத்தூரில் ஜமாஅத், குடிகாரர்களை வைத்துக் கொண்டு சில பிரச்சனை செய்தார்கள் அப்போது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அந்த புத்திசாலியிடத்தில் போய் ''என்ன செய்ய லாம்?'' என்று கேட்க அதற்கு அவர் கூறியிருக்கிறார்.



''நீங்கள் இந்து வக்கீல் வைத்தால் மட்டும் பத்தாது; ஆர்.எஸ்.எஸ்.(மெண்டா லிட்டி) யுடையவனாக பார்த்து வை; அப்போது தான், ஒரு வெறியுடன் அழிக்க வேண்டுமென்று வேலை செய்வான்'' என்று கூறியிருக்கிறார்.




இவர் தான் இஸ்லாத்திற்காக உழைக்க வந்தி ருக்க கூடிய ''நவீன மிர்ஸாகுலாம்'' என்று கூறிக்கொள்கிறார். இப்படி கூறுகிறார்களே அவர் கூட நீங்கள் இருந்தீர்களே என்று கேட்கலாம். அவரோடு அந்த சம்பாசணை யில் இருந்தவர் சாட்சியாக அல்லாஹ் மீது ஆணையாக நான் சொல்கிறேன். நீ வைக்கிறவனை ஆர்.எஸ்.எஸ். காரனா பார்த்து வை அதுவும் வெறி புடிச்ச இந்துத் துவா காரனக பார்த்து வை அப்பத்தான் அவர்களை அழிக்க முடியுமா?

நாம் வந்த பிறகு இவர் ஒருவரை தான் நியமித்துள்ளோம் அதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்திலும் சரி மதுரையிலும் சரி மற்றபகுதிகளிலும் சரி அதிகமான வழக்கறிஞர் இருக்கிறார்கள். சென்னையில் ரமேஷ் என்பவர் திருநெல் வேலியில் சுப்பிரமணி, சகாயதாஸ், திருச்சியில் அருள் காந்தி, கண்ணன், மதுரையில் செந்தில், தஞ்சாவூரில் வைத்தியலிங்கம், வேலூரில் வீரராகவன், கடலூரில் பத்மநாதன், சக்கரபாணி, இராமநாதபுரத்தில் அற்புத ராஜ், வெங்கட் ராமன், கோபால் சாமி, கோயம்புத்தூரில் பிரபு, விஜய், சேலத்தில் ரங்கநாதன், ஜெகன் நாதன், காஞ்சிபுரத்தில் சக்கர பாணி செங்கல்பட்டு ஜெகன்நாதன் இவர்கள் எல்லாம் இருக்கின்ற முஸ்லிம் அல்லாத வழக்கறிஞர்கள், இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடவே செய்தி தருகிறேன். இதற்கும் சேர்த்தே ஆர்ப்பாட்டம் செய்ய சொல்லுங்கள்.
இவர்கள் எல்லாம் நான் வந்து நியமித்தவர்கள் அல்லர் இதற்கு முன்பே போடப்பட்டது. நாம் சில வழக்கறிஞரை தேடிக் கண்டு பிடித்து கொண்டு வந்து வைத்திருப்பதற்கு ஒரு சில சிக்கலான வழக்குகளை பார்ப்பதற்காக வைத்திருக்கி றோம்.


புத்திசாலியே (?) நீ முற்றுகை, ஆர்ப்பாட்டம் பண்ணு மக்கள் உன்னை காரித்துப்புகிறார்கள். இவர் செய்யக்கூடிய குறிப்பாக... இந்த மாதிரியான விஷயங்களில் கூட பாக்கர் சில நேரங்களில் வக்பு பற்றியும் மற்றதை பற்றியும் காரசாரமாக பேசுகிறார் என்று என்னிடத்தில் சொல் கிறார்கள். சிரித்துக் கொள்வேன். என்ன அவர் உள்ளார்த்தமா என்பது எனக்குத் தெரியும். இருக்கக் கூடிய இடத்தில் தன்னுடைய எஜமானன் மெச்சி கொள்ள வேண்டும் என்பதற்காக சில விஷயங் களை செய்து அது மாதிரியான அங்கு நடக்கக்கூடிய பொம்மலாட்டம்.


பல இடங்களில் ''ஏய் அந்த ஆள் நல்லாதான் செய்கிறான். அந்த ஆளு வக்ஃபு வாரியத் தலைவரான பிறகு தான் வக்பு வாரியம் நல்லா இருக்கிறது'' என்று பாக்கர் பல இடங்களில் சொல்வது சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு தெரியும். அவர் மேடையில் பேசுவதற்கும் அவர் உள்ள ரீதியாக இருப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. அவர் மனம் வெதும்பிக் கொண்டு வேதனை யோடு அந்த விஷயத்தை சொல்ல வேண்டும். ஏன் என்றால் சில விஷயங் கள் காப்பற்றப்பட வேண்டும். எனவே பாக்கர் சொல்வதை நீங்கள் (மக்கள்) எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் அவர் உள்ளத்திற்கு தெரியும் முன்பெல்லாம் நானும் அவரும் பேசி கொள்வோம். போன் செய்து பேசுவேன்; இன்றைக்கும் பெருநாள் வந்தால் வாழ்த்து செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்புவேன். முதலில் வருவார் இப்ப வருவதில்லை. நட்புரீதி யாக வேறு நானும் பாக்கரும் 38 நாள் ஒன்றாக சிறையில் இருந்திருக்கி றோம். ஒரே அறையில் இருந்தோம். என்னைப் பற்றி முழுமை யாக அவருக்கும் பாக்கரை பற்றி முழுமையாக எனக்கும் தெரியும். நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் 3 நாள்கள் நீங்கள் பிரயாணித்தீர்கள் என்று சொன்னால் அவர்களை பற்றி தெரியும் 38 நாள் நாங்கள் ஒன்றாக இருந்திருக்கி றோம். பாக்கருன்னா யாருன்னு எனக்கு தெரியும். ஹைதர் யார் என்று பாக்கருக்கு தெரியும். எனக்கு என்ன வருத்தம் என்றால் தன்னுடைய உரத்த குரலில் பேசக் கூடியவர் பல நேரங்களில் நிர்வாக குரலில் நியாயமான விஷயங்களை பேசுவதில் ஒரு ஆளாக இருந்தவர் பழைய நண்பர் பாக்கர் இன்றைக்கு இல்லை என்கின்ற வருத்தம் இன்றைக் கும் உண்டு. மனிதருக்கு சில நேரங்களில் தேவைகள் அதிகமாகி விடுகிற நேரங்களில் இப்படியெல்லாம் தவறு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நாம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒருவர் குற்றச்சாட்டுகள் வைப்பதி னால் அதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்கின்ற நிலையில் நாம் இல்லை. நம்முடைய வேலைகள் அதிகம் என்னுடைய சுயவேலைகள் செய்வதில் கூட நான் முடங்கிக் கிடக்கின் றேன். சில விஷயங்களை முதன்மை செயலாளரிடம் ''இது ஏன் இப்படி உள்ளது பழையது இப்படி நடந்துள்ளதாமே'' என்றால் ''என்ன சார் எனக்கு தெரிய வில்லை உங்களுக்கு செய்தி தெரிகிறது'' என்று திகைக்கின்ற மதிரியாக தான் வைத்துள்ளோம். இன்றைக்கு வக்ஃபு வாரியத்தில் பழைய நிலை இல்லை. ஆள்கள் குறைவாக இருக்கிறார்கள். அதற்கு அரசிடம் அனுமதியை கேட்டு உள்ளோம். வேலை வாய்ப்பு அலுவலகத் தில் கேட்டு எட்டு மாதங்கள் ஆகிவிட் டன. பல நினைவூட்டு கடிதம் அனுப்பி விட்டோம். இன்னும் அவர்கள் அந்த பட்டியலை தரவில்லை. ஏன் என்றால் நாம் முஸ்லிம்கள் மட்டும் தான் வேண்டும் என்று கேட்டு உள்ளோம் வக்ஃபு வாரியத்தில் இது மாதிரியான பணிகளில் தான் பார்க்க முடியும். வக்ஃபு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் அல்லாதவர் இருக்கி றார்கள். ஒருவர் இறந்து விட்டார். சந்திரன் என்பவர் ஒருவர் இன்றும் இருக்கிறார். வந்த உடனே அவரை டிஸ்மிஸ் பண்ணி அனுப்பிவிட முடியுமா? அது மட்டும் அல்ல பணியில் இருக்கும் போது ஒருவர் இறந்து விட்டால். கருணை அடிப்படை யில் வேலை கொடுக்க வேண்டும். அதே போல் முஸ்லிம் ஒருவரும் பணியில் இருக்கும் போது இறந்துள்ளார். கருணை அடிப்படையில் அவருக்கு வேலை கொடுத்து உள்ளோம்.

நான் வந்த பிறகு கருணை அடிப் படையில் ஒரு இந்து பெண்ணுக்கும் வேலை கொடுத்து இருக்கிறேன். அதுக்கும் சேர்த்து போராட்டம் நடத்த நியாயம் அநியாயம் பார்க்க வேண்டாமா?

இனத்தின் பெயரால் அவருக்கு ஏன் அநியாயம் இழைத்தாய்? என்று கேட்டால் அல்லாஹ்விடத்தில் நான் அல்லவா பதில் சொல்ல வேண்டும். உனக்கு அது பற்றி ஒன்றும் கிடையாது. அல்லாஹ் வுடைய நம்பிக்கை இருக்கின்றவனா இல்லையா என்பது எங்களுக்கு தான் தெரியும் எங்களை பற்றி நீ நன்றாக பேசு, திட்டு; என்ன வேண்டும் என்றாலும் பேசு, எதை பற்றியும் நாம் கவலைப்பட போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் சொல் கிறார்கள் திட்டுகின்றவன் என்ன திட்டி னாலும் திட்டுபவனைத்தான் வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள். அதனால் புத்திசாலியே(?) எல்லாத்தையும் நீயே வாங்கிக்கட்டிக் கொள் பிரச்சனை இல்லை.



நன்றி : தமுமுக இணையத் தளம்

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template