Saturday, August 16, 2008

ஆகஸ்ட் 15 - தடையை தாண்டிய இஸ்லாமிய படை

ஆகஸ்ட் 15 - தடையை தாண்டிய இஸ்லாமிய படை



தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என மூன்று மாநிலங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்த போவதாக அறிவித்த தினத்தில் இருந்து இந்த அணவகுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட ஃபாசிச சக்திகளோடு உளவுத்துறை, காவல் துறை என அரசின் அனைத்து துறைகளும் கங்கனம் கட்டிக் கொண்டு களம் இறங்கின. காவல்துறையும், உளவுத் துறையும், ஃபாசிச சக்திகளோடு சோந்து பல சதித் திட்டங்களை திடு்டி நிறைவேற்றின. தமிழகத்தில் இது இன்னும் கனஜோராக நடந்தது.



தமிழக காவல்துறை இன்னும் ஒரு படி மேலே போய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் முயற்சியில் இரங்கியது. இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள், வெடி குண்டு புரளிகள் கிளப்பப்பட்டன, தினமலர் போன்ற ஃபாசிச ஆதரவு பத்திரிகைகள் இந்த பதட்டத்தை சற்றும் குறையாமல் தகடக வைத்துக் கொள்ளும் முயற்சியல் ஈடுபட்டன.

அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை என இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன, முஸ்லிமகள் சித்திரவதைக்காளாக்கப்பட்டார்கள். இதை எந்த சமுதாய பத்திரிகைகைளும் கண்டிக்காத நிலையில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சில சகோதரர்களால் நடத்தப்பட்டு வரும் அதிரை எக்ஸ்பிரஸ் என்ற வலைப்பதிவு மட்டும் காவல்துறை மற்றும் ஃபாசிச பத்திரிகை சக்திகள் நடத்தி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை கண்டித்து பல கட்டுரைகளை வெளியிட்டு இந்த இக்கட்டான சமயத்தில் சமுதாயத்தின் குரலாக அவ்வப்போது ஒலித்து வந்தது சற்று ஆறுதலான செய்தி.

தமிழகமெங்கும் மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர், காவல்துறைக்கு முறைப்படி தகவல் அளித்து விட்டு நடந்த மனித நீதிப் பாசறையின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகள் ஃபாசிச பத்திரிகைகளால் பயங்கரவாத செயலாக சித்தறிக்கப்பட்டன. எப்படியாவது இந்த அணிவகுப்பை தடுத்து விடுவது என்று மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மிரட்டப்பட்டார்கள். இறுதியாக இந்த அணிவகுப்பை தடைசெய்து காவல் துறை ஆனை பிறப்பித்தது. இதை எல்லாம் எதிர் பார்த்திருந்த மனித நீதிப் பாசறை உடனடியாக இன்றும் சாகாமல் இருக்கும் இந்திய நீதித்துறையை அனுகியது. உடனடியாக காவல்துறையின் தடையை நீக்கிய நீதிமன்றம் மனித நீதிப் பாசறை தனது சுதந்திர தின அணிவகுப்பை எந்த சிரமமும் இல்லாமல் நடத்த உத்தரவு பிறப்பித்தது.



திட்டமிட்டபடி கடந்த ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று அனைத்து தடைகளையும் தகர்த்த மனித நீதிப் பாசறையின் போராளிகள் தங்கள் சுதந்திர தின அணிவகுப்பை செவ்வென நடத்திக்காட்டினர். மதுரை மாட்டுத்தாவனி பேரூந்து நிலையம் அருகில் உள்ள விறகுபேட்டையில் வெள்ளையருக்கு எதிராக போராடிய இந்திய சுதந்திர போராளியான மாவீரன் மருதநாயகம் பெயரில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் சரியாக மாலை 3.00 மணிக்கு அணிவகுப்பு துவங்கியது.
மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மறியாதைக்குறிய அபுபக்கர் சாஹிப் அவர்கள் அணிவகுக்க தயாரான முஸ்லிம் படையினரின் முதல் மறியாதையை பெற்றுக் கொள்ள அணிவகுப்பு துவங்கியது. 20 வீரர்கள் அடங்கிய "பேன்ட் ட்ரூப்ஸ்" எனப்படும் இசைக்குழுவினர் தேசிய ஒருமைப்பாட்டு கீதமான "ஸாரே ஜஹான் சே அச்சா" என்ற கீதத்தை உணர்ச்சி பெருக்போடு வாசிக்க மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் 800 போராளிகள் அணிவகுத்து செல்ல நிகழச்சிகள் ஆரம்பமாயின.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பொதுச்செயளாலர் திரு. ஏ. யா முஹைதீன் தனது வரவேற்புரையை வழங்கினார், பின்னர் மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு.முகம்மது அலி ஜின்னா அவர்கள் சுதந்திர தின உறுதிமொழியை வாசித்தார்.

" இறைவனின் திருப்பெயரால் இந்த உறுதி மொழியை எடுத்து கொள்கின்றோம், சுதந்திர போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும், உடைமைகளையும், உடலுறுப்புக்களையும் இழந்து ஏற்றி வைத்த இந்த சுதந்திர கனலை நாங்கள் என்றும் ஏந்திச் செல்வோம், அரும்பாடு பட்டு பெறப்பட்ட இந்த சுதந்திரத்தை நாங்கள் எந்த வலை கொடுத்தேனும் தக்க வைத்து கொள்வோம். எங்கள் தாய்த்திருநாடு இந்தியாவையும், இந்தியர்களனைவரையும் நாங்கள் நேசிக்கின்றோம், இனமோ,நிறமோ, மொழியோ, எவ்வித பேதங்களும் எம்மை பிறிக்காது. பிறப்பினால் யாரும் உயாந்தோர், தாழ்ந்தோர் இல்லை, நாட்டின் சுதந்திரமான அரசியல் சட்ட திட்டங்களையும், பாதுகாப்பையும், நீதியையும் நாங்கள் பாதுகாப்போம். சுதந்திரம் என்பது எமது பிறப்புரிமை, எமது நாடு ஆதிக்க சக்திகளின் முன் அடிமைப்படுத்தப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதியோம், இந்திய மக்களை தூண்டி விட்டு அவர்களிடையே கலவரத்தை விதைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளச் செய்யும் ஃபாசிச சக்திகளை நாம் தோற்கடிப்போம், வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்திய தேசியக் கொள்கைகைய நாம் பற்றிப்பிடிப்போம், இதற்கு கடவுள் சாட்சியாக இருக்கட்டும்"




என்ற உறுதிமொழியை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா அவர்கள் வாசிக்க திரன்டிருந்த மக்கள் கூட்டமும் அணிவகுத்து நின்ற இஸ்லாமிய படையும் உறுதிமொழியை சோந்து கூறி உறுதி மொழி எடுத்தது. பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்கள் தனது உரையை ஆரம்பித்தார், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பணிகளை புகழந்த அவர் கட்டாயம் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அரசியில் அடியெடுத்து வைக்க வேண்டும் என வலியுருத்தினார். அதன் பின்னர் பேசிய உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்கள், ஃபாசிஸ்ட்டுகள் தான் உண்மையான தீவிரவாதிகள் என்றும், இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் என அணைத்து தரப்பு மக்களாலும் போராடி பெறப்பட்ட சுதந்திரத்தை திருட முனைவதாகவும், இன்னும் தமிழக அரசு உடனடியாக சிறையில் உள்ள 8 வருடங்களை கடந்த கைதிகள் அனைவரையும் இன பேதம், மத பேதம் இல்லாமல் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுவிகக் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்களான மறியாதைக்குறிய வைத்தியலிங்கம் அவர்கள், மறியாதைக்குறிய குலாம் அப்துல் ஆரிஃப், மறியாதைக்குறிய சேக், மறியாதைக்குறிய மாயன்டி பாரதி ஐயா ஆகியோரை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் கவுரவித்தார்கள்.

பின்னர் பேசத் துவங்கிய பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்கள் பல்வுறு சோதனைகள் மற்றும் தடைகளை தாண்டி சுதந்திர தினத்தை கொண்டாட திரண்டிருந்த மக்களை புகழந்தார். அரசு தனது குடிமக்களை சரிசமமாக நடத்தாததால்தான் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா இந்த அஜென்டாவை கையில் எடுத்ததாக் குறிப்பிட்ட அவர், நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புக்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் மீது பலியை போட்டுவிட்டு உண்மையான குற்றவாளிகள் எளிதாக தப்பி செல்வதற்கு உதவி வரும் அரசை வண்மையாக கண்டித்த அவர், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த பிரச்சினைகளை மறைக்க மத்திய அரசே அஹமதாபாத்தில் குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியாதாக பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜின் பேச்சை குறிப்பாக சுட்டிக் காட்டி பேசினார். 1993 ல் இருந்து நாட்டில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புக்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான கமிசனை அமைக்க கோரிக்கை விடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த கடந்த 61 வருட காலமாக இந்திய முஸ்லிம்கள் அரசியலில் நேரேதிர் நிலையை எடுத்ததன் விளைவு இந்திய முஸ்லிம்கள் சொல்லெனா துயருக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இனிவரும் காலங்களில் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதங்காக வேண்டி இஸ்லாமியர்கள் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் இன்னும் தலித்துகளோடு கைகோர்த்து பணி செய்ய வேண்டும் என்றும் குறிபபிட்டார்.

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்களின் உரைக்கு பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்களும், நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்களும், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா ஆகியோரும் கவுரவிக்கப்பட்டார்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி் அவர்கள் தனது சிறப்புரையை துவக்கினார், இந்திய சுதந்திரப் போரில் தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்து உயிர் உடமைகளை இழந்த இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு இன்று இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடப்படுவதற்கு அரசே அனுமதி மறுக்கும் நிலையை சுட்டிக்காட்டி பேசுகையில் "இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் உரிமை இந்திய முஸ்லிம்களுக்கே இல்லை என்றால் வேறு யாருக்குமு் அந்த உரிமை கிடையாது" என்றும், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்த காவல் துறையை கடுமையாக கண்டித்த அவர் மதுரை மாநகர கமிசனர் நந்தகோபாலனுக்கும் ஆர்.எஸ்.எஸ ஃபாசிச சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை விசாரிப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுருத்தினார். இன்னும் தமிழக சிறைகளில் 8 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளையும் வரும் செப்டம்பர் 25 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

நிகழச்சியின் இறுதியாக மனித நீதிப் பாசறையின் பொருளாலரும், விடியல் வெள்ளி ஆசிரியருமான திரு. எம். முகம்மது இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை வழங்கினார் அதன் பின்னர் கூடியிருந்த கூட்டம் அமைதியாக கலைந்து சென்றது.

மதுரையை உலுக்கும் வகையில் நடந்த இந்நிகழச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் , அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவர் ஹாபிழ் ரஷீத் சவுத்திரி, மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா , மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி், உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன், மதுரை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் பொருளாலர் திரு. நிஷ்ட்டர் அஹமத், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா உட்பட பலர் கலந்து கொண்டார்கள், நிகழச்சியை காண தமிழகமெங்கும் இருந்து பல ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரன்டு வந்திருந்தனர்.

செய்திகள் உதவி: திரு. A. முகம்மது யூசுஃப் , மிடீயா கன்வீனர், மனித நீதிப் பாசறை

6 மறுமொழிகள்:

Anonymous said...

தமுமுக, முஸ்லிம் லீக் உட்பட ஆழும் கட்சி கூட்டனியில் அங்கம் வகிக்கும் எவரும் இதை கண்டிக்கவோ அல்லது அரசை எதிர்த்து போராட்டங்களை அறிவிக்கவோ இல்லை ஒரு சில அறிக்கைகள் வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்ததென இருந்து விட்டார்கள்..DON'T WRITE LIKE THIS SEE BELOW LINK YOU KNOW WHO IS SILENT
http://tmmk.in/news/999721.htm
இடம்: தஞ்சை (வ) அவுனியாபுரம் ஆடுதுறை
உரை: பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
தலைப்பு: வெடிகுண்டுகள் வெடிப்பிற்கு காரணம் யார்
http://tmmk.in/news/999728.htm
தமிழக மீடியாக்களுக்கு ஓர் எச்சரிக்கை:
http://tmmk.in/news/999730.htm

Anonymous said...

நெல்லிக்குப்பம், ஆக. 13-

நெல்லிக்குப்பத்தில் நடந்த அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் த.மு.மு.கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா.........

எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். சுதந்திர தினத்தன்று தீவிரவாதத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் அணி வகுப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். அணி வகுப்பு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடைபெறும். பயங்கரவாதத்தை முதலில் கையில் எடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.தான் முஸ்லிம்கள் அல்ல......
மனித நீதிப் பாசறை ஆதரவாக பேசியது த மு மு க -வை குறை சொல்லி எழுதி புரோஜனம் இல்லை என்றும் அது சமுதாய காவலர்கள் தான் சும்மா மின்னஞ்சலில் எழுதி பறக்கவிடவில்லை மாறாக அப்பாவி இஸ்லாமியர்கள் கைது ,வெடி குண்டு புரளி இவைக்களுக்கு பதிலடியாக கண்டனபோஸ்டர், ஆர்ப்பாட்டம்,பொதுக்கூட்டம் போன்ற வீரியமிக்க செயல்களில் ஈடுப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை இருந்தும் த மு மு க அரசை எதிர்த்து போராட்டங்களை அறிவிக்கவோ இல்லை ஒரு சில அறிக்கைகள் வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்ததென இருந்து விட்டார்கள்.. என்று நீங்கள் எழுதி இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது ..அல்லாஹு மிகப் பெரியவன்.
mujib Dubai

Anonymous said...

TMMK PRESIDENT SPEAK IN PUBLIC MEETING MEETING C THIS LINK
http://lalpet.wordpress.com/
எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். சுதந்திர தினத்தன்று தீவிரவாதத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் அணி வகுப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். அணி வகுப்பு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடைபெறும். பயங்கரவாதத்தை முதலில் கையில் எடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.தான் முஸ்லிம்கள் அல்ல.

Thanks to http://lalpet.wordpress.com/

Anonymous said...

அறிக்கைகள் யார் வேண்டுமானாலும் விடலாம், ஏதாவது ஒரு மூலையில் நடக்கும் மீட்டிங்குகளில் பேசலாம், நிஜத்தில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

தமுமுக தான் இடம்பெற்றுள்ள கூட்டனி அரசை கண்டித்தததா? தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகள் நடந்தும் எந்த போராட்டங்களையும் அறிவிக்காமல் இருப்பது ஏன்?

மற்ற சமுதாயத்தை பாருங்கள்...வன்னியரை பாருங்கள்...வன்னியர் ஒருவனை கைது செய்ததால் கூட்டனியை விட்டே பா.ம.க விலகியது. அந்த தைரியம் ஏன் தமுமுக விற்கோ மு.லீக்கிற்கோ இல்லை?

இல்லை குறைந்தபட்சம் ஒரு பஸ்மறியல் அல்லது ஆர்ப்பாட்டங்களையாவது அறிவித்திருக்கலாம் அதுவும் இல்லை கண்துடைப்பிற்காக அறிக்கை!! அல்லாஹு மிகப் பெரியவன்...நீங்களே சற்று சுயமாக சிந்தித்து நோக்குங்கள்!!

said...

Assalamu Alaikum
The article is very good. MASHA ALLAH! Its an important event for muslims. Although, it is not good to write that "மதுரையை உலுக்கும் வகையில்" Don't write like that... It may be happy for some muslim organisations to write such this. But MNP does not fall on this type of PRIDE. All praise is to be Allah. And bear Allah ever.
M.Anees Ahamed - Madurai
(Camp: Kuwait.)

said...

test comment

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template