Saturday, November 08, 2008

முகவையில் PFI அரசியல் மாநாடு அறிமுக கருத்தரங்கம்

மேடையில் இடமிருந்து வலக்கறிஞர் யூசுஃப், சகோ. செய்யது சாஹிப், சகோ. ஜின்னா

முகவை, நவம்பர் 08, இன்று இராமநாதபுரம் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பல்லக்கிபிளாசா ஈ.எம். ஃபாருக் ஆடிட்டோரியத்தில் எம்.என்.பி அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கேரள மாநிலம் கோலிக்கோட்டில் நடக்க இருக்கும் PFI தேசிய அரசியல் மாநாட்டின் அறிமுக மற்றும் பிரச்சார நிகழச்சியாக முகவை மாவட்ட எம்.என்.பி யினரால் உள்ளரங்க கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறிவு ஜீவிகளும், முக்கிய அரசியல் பிரமுகர்களும், சமூக பிரமுகர்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயளாலர் சகோ. E.M. அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்க உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க இயலாத காரனங்களாள் அவர் வராத நிலையில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு செயளாலர் சகோ. செய்யது சாஹிப் அவர்கள் வந்திருந்து 1 மனி நேரத்திற்கும் அதிகமாக சர்வதேச அரசியலில் இஸ்லாமியர்கள் எப்படி புறக்கனிக்கப்பட்டுள்ளார்கள், தேசிய அரசியலில் இஸ்லாமியர்கள் எவ்வாறு அந்நியப்படுத்தப்பட்டுள்ளார்கள், பிராந்திய அரசியலிலும் நாம் எவ்வாறு புறந்தள்ளப்பட்டுள்ளோம் என்பதை பலவாறாக விளக்கியவர்கள்., இதற்கு ஒரே தீர்வு இஸ்லாமியர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதுதான் என்றும், பல அமைப்புகளாகவும், இயக்கங்களாகவும் பிரிந்து கிடக்கும் நம் சமுதாயத்தை ஒருங்கினைத்து நேரடி தேசிய அரசியலில் எவ்வாறு ஈடபடுவது என்பது குறித்து கருத்தாய்வு செய்வதற்காக கேரளாவில் மூன்று நாள் மாநாடு நடக்க இருப்பதாகவும் இதன் மூலம் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நேரடி அரசியலில் இரங்கும் என்றும் அறிவித்தார்கள். இதற்கு நீங்கள், நாங்கள் என்ற பேதம் இல்லாமல் நாம் என்ற ஒற்றுமையில் அனைவரும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

மனித நீதிப் பாசறையின் தலைவர் சகோ. முகம்மது அலி ஜின்னா அவர்கள் சகோ. செய்யது சாஹிபின் மலையாளத்தில் அமைந்த உரையை தமிழில் மொழி பெயர்த்து சொன்னார். இன்னும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மறைமுக அரசியல் அல்லாது நேரடி அரசியலில் களமிரங்கும் என்றும் அதற்காக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா பொது அரசியல் கட்சியாக மாறும் என்றும், இது முஸ்லிம்கள் ஆதிக்கமிக்க தலைமையுடன் அனைத்து தரப்பு மக்களையும் கொண்ட தேர்தலில் பங்கேற்க கூடிய பொது அரசியல் கட்சியாக ஆகும் என்றும் இதன் மூலம் இஸ்லாமியர்கள் அரசியல் சக்தியை பெறலாம் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

நிகழ்ச்சியை மனித நீதிப் பாசறையின் முகவை மாவட்ட தலைவர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நிகழச்சியில் மனித நீதிப் பாசறையின் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் யூசுஃப் அவர்கள் உட்பட பலா கலந்து கொண்டனர். பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு செயளாலர் சகோ. செய்யது சாஹிப் அவர்களின் விளக்க உரையின் பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது வந்திருந்த மக்கள் தங்களது சந்தேகங்களையு் ஆலோசனைகளையும் எழுப்பினர் பின்னர் அவற்றிற்கு பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு செயளாலர் சகோ. செய்யது சாஹிப் அவர்களும், மனித நீதிப் பாசறையின் தலைவர் சகோ. முகம்மது அலி ஜின்னா அவர்களும் பதில் அளித்தார்கள். மனித நீதிப் பாசறையின் தொண்டர்கள் நிகழச்சி நடந்த அரங்கின் வெளியே நின்று வந்தவர்களை அழகான முறையில் வரவேற்று அரங்கத்தினும் அமறச் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கூடிய தேனீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகவை மாவட்ட மனித நீதிப் பாசறை அமைப்பினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template