Tuesday, January 07, 2014

மற்றவனெல்லாம் இந்தியனாகிறான் நான் மட்டும் தீவிரவாதியாகிறேன்.....???

 
 
பால்வாடிப் பள்ளியில் பாடம் பயின்றவன் நான்
 மூக்கில் சீல் வடிய துள்ளி விளையாடியவன் நான்
 முதல் வகுப்பு பாடத்தை கைப்பிடித்து சொல்லித் தந்த
 கருப்பையா மாஸ்டரும்,கோவிந்தராஜ் மாஸ்டரும்
 என்ன சாதி என்ன மதம்..
ஐந்தாம் வகுப்பு பாடத்தை அன்போடு சொல்லித் தந்த
 குழந்தை தெரசா டீச்சர் என்ன சாதி என்ன மதம்
 பிராமண நண்பனின் வீட்டில் தயிர் சாதமும்,
தலித் நண்பனின் வீட்டில் பழைய சாதமும்
 கிறிஸ்தவ நண்பனின் வீட்டில் மீன் சாதமும்
 பண்போடு உண்ட நாட்கள் அது..
இதுவெல்லாம் நடந்தது இந்தியாவில்தான்
 இந்தோனேசியாவில் அல்ல...
இதுவெல்லாம் நடந்தது இந்தியாவில்தான்
 பாகிஸ்தானில் அல்ல.. -- காலச் சக்கரம் சுழல்கிறது
 எங்கோ ஓர் இடத்தில் எவனோ ஓர் சுயநலக்காரனால்
 குண்டு வெடிக்கிறது ....
பிராமண நண்பன் இந்தியனாகிறான் --
தலித் நண்பன் இந்தியனாகிறான் ---
கிறிஸ்த்தவ நண்பன் இந்தியனாகிறான் --- இந்த நாட்டில்
 நான் மட்டும் தீவிரவாதியாகிறேன்.........இது நியாயமா?????????????
நன்றி : Niroz Khan


Sunday, November 03, 2013

ரைசுதீன் விபச்சார புரோக்கரா - ஜீனியா் விகடன்

வி.ஐ.பி-களை காப்பாற்ற பேரம் பேசுகிறதா காவல்துறை?



திருவனந்தபுரத்தில் ஒரு சிறுமியைப் பாலியல் தொழிலில் பந்திவைத்த அதிர்ச்சியே தீராத நிலையில்... தமிழகத்திலும் ஒரு கொடுமை அம்பலம் ஆகியுள்ளது! மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வாகைக் குளத்தைச் சேர்ந்த  ஈஸ்வரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள் ளது) 14 வயதில்  திருமணம் நடந்தது. மண வாழ்வுக்கான பக்குவம் அடையாத நிலை யில், அந்த உறவு முறிந்தது. அதன் பிறகு ஜவுளிக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார், ஈஸ்வரி.

ஒரு நாள், வேலை முடித்து வீடு திரும்பக் காத்திருந்த ஈஸ்வரியை, அவருடன் வேலை பார்த்த தோழி ஒருவரின் தாய் ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென் றார். பாலியல் தொழிலில் தள்ளினார். அதைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் உள்ள புரோக்கர்களின் கைகளில் சிக்கிய ஈஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பலரால் சீரழிக்கப்பட்டார். ஈஸ்வரியின் குழந்தைப் பாங்கான தோற்றம் மற்றும் வயதைக் காட்டி, ஒவ்வொரு கஸ்டமரிடமும் 'ஃப்ரெஷ் பீஸ்’ என்று சொல்லியே கொள்ளைப் பணம் கறந்துள்ளனர் புரோக்கர்கள். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று, ஈஸ்வரியை ரைசுதீன் என்பவர் மீட்டு, ராமநாதபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

போலீஸாரது விசாரணையில் தென்மாவட்டங்களில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள் ஈஸ்வரியை சிதைத்தது தெரியவந்துள்ளன. இதில், மதுரை புரோக்கர்கள் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி சேர்மன் ஜலீல் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது!



ஈஸ்வரியை போலீஸாரிடம் அழைத்துவந்த ரைசுதீனிடம் பேசினோம். ''கடந்த சனிக் கிழமை ஈஸ்வரியை புரோக்கர் கள் செல்வியும், ருக்மணியும் ராமநாதபுரத்துக்குக் கூட்டிவந்து, பாரதிநகரில் அழகு நிலையம் நடத்தி வரும் ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தனர். அமுதா என்பவ ரின் வீட்டில் இதற்கான டீலிங் நடக்க... ஈஸ்வரி மைனர் பெண் என அமுதாவுக்குத் தெரியவந்துள்ளது. உடனே, ஈஸ்வரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அமுதா கூட்டிப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் துரத்திவிட்டார்கள். இதன் பிறகு ஈஸ்வரியை அமுதா, தன்னுடன் அழைத்துப் போய்விட்டார். இதனால் கடுப்பான செல்வி குரூப் வாகைக்குளம் சென்று, ஈஸ்வரியின் தாயிடம், 'உன் மகளை ராமநாதபுரத்தில் பிடிச்சு வெச்சிருக்காங்க. அவளை வெளிநாட்டுக்கு அனுப்பிடுவாங்க. நீங்க வந்தா, விட்டுருவாங்க’ன்னு சொல்லி இருக்காங்க. கடந்த ஒரு வருஷமா ஈஸ்வரி பத்தின தகவல் எதுவும் தெரியாம இருந்த அந்தம்மாவும் இவங்களோட ராமநாதபுரம் வந்து... அமுதா வீட்டுக்குப் போய், தன் மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி ஆயிட்டாங்க. ஈஸ்வரியை அவங்க அம்மாவோட அனுப்ப அமுதா ஏற்பாடு செய்ய... இதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, செல்வி தரப்பினர் தகராறு செய்தனர். அந்த நேரத்தில் ஈஸ்வரி அருகில் இருந்த தொண்டு நிறுவனத்துக்குள் ஓடி வந்து விட்டார்.. அங்கிருந்த நான், ஈஸ்வரியை விசாரிச்சப்பதான்மொத்தக் கொடுமையும் தெரிஞ்சது.

இது பத்தி தென்மண்டல ஐ.ஜி. பொறுப்பு வகிக்கும் கண்ணப்பன் சாரிடம் சொன்னேன். ஈஸ்வரியை ராமநாதபுரம் எஸ்.பி. ஆபீஸில் ஒப்படைக்கச் சொன்னார். போகும் வழியில், புரோக்கர் கும்பல் வழி மறிச்சுத் தகராறு செய்ய... ஈஸ்வரியை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். அதன் பிறகு அந்த புரோக்கர்கள் மதுரையில் உள்ள ரவுடிகள் மூலமாக என்னை மிரட்டினாங்க. அதுக்கெல்லாம் பயப் படாம மறுநாள், எஸ்.பி. ஆபீஸ்ல ஈஸ்வரியை ஒப்படைச்சேன்!'' என்று சொன்னார்.



இந்த வழக்குத் தொடர்பாக நம்மிடம் பேசிய காவலர் ஒருவர், ''ராமநாதபுரத்திலும், ராமேஸ்வரத்திலும் விபசாரம் தடை இன்றி நடக்கிறது. எங்காளுங்க கண்டுக்கறதில்லை. இந்தப் பொண்ணை ஏற்கெனவே பல முறை ராமநாதபுரத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்க. பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜ் மற்றும் இறந்துபோன அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான லாட்ஜ், இந்த ரெண்டு இடங்களிலும் வெச்சு ஈஸ்வரியைப் பல பேர் பாழாக்கியிருக்காங்க. அந்த லாட்ஜின் உரிமையாளர்கள், உள்ளூரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவர், கட்சிக்காரர்கள் சிலர், காவல் துறையைச் சேர்ந்த இருவர் மற்றும் அரசு அலுவலகங் களில் பணியாற்றும் சிலர் என ஏராளமான பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஓனர் ஒருவரும் சென்னைக்கு அழைத்து, தன் சொகுசு பங்களாவில் வைத்து ஈஸ்வரியை சீரழித்துள்ளார். இதே போல்தான் ராமேஸ்வரம் சேர்மன் ஜலீலும் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று அனுபவித்து இருக்கிறார். விசாரணையின்போது, இவர்களின் பெயர்களை அந்தப் பெண்ணே சொல்லுச்சு. ஆனால் சில அதிகாரிகள், ஜலீல் உள்ளிட்ட சிலரை மட்டுமே இந்த வழக்கில் சேர்த்துவிட்டு, ஈஸ்வரியால் குற்றஞ்சாட்டப்படும் பல வி.ஐ.பி-களை வழக்கில் சேர்க்காமல் இருக்க பேரம் பேசி வருகின்றனர்!'' என்று சொல்லி, அதிரவைத்தார்.

ராமநாதபுரம் எஸ்.பி-யான அனில்குமார் கிரியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஈஸ்வரி கேஸ் சம்பந்தமா எஃப்.ஐ.ஆர். போட்டுருக்கோம். குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று ஸ்பெஷல் டீம் போட்டிருக்கோம்...'' என்று மட்டும் சொன்னார்.

இந்த வழக்கில் காவல் துறை மந்தமாகச் செயல்படுவதாக ரைசுதீன் புகார் செய்யவே, அவரையும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லிக் கைது செய்து இருக்கிறார்கள்.என்னதான் நடக்கிறது என்பதை மேலிடம் கவனமாக விசாரிக்க வேண்டும்.

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி


ரைசுதீனை கைது செய்துவிட்டு அவதுாறு பரப்பிய காவல்துறை

Aadil1 Years ago
மிருகங்களை தூக்கில் போட வேண்டும் உடனடியாக விசாரணை ஏதும் இல்லாமல். இந்த சிறுமியை வைத்து அடையாளாம் காட்டச் சொல்லி அனைவரையும் கூண்டோடு தூக்கிலிடவேண்டும்.
Reply Like | Report Abuse



Hari Sankar1 Years ago
புரோக்கர் பெண்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் கைதாகி விட்டனரா? அவர்களைப் பிடித்து நாடு கடத்துங்கள்!!!! இது போன்ற ஒவ்வொரு கேஸிலும்... ஒன்றிரண்டு அல்லக்கைகள் தண்டிக்கப் பட்டால், நாளடைவில் நாடு முன்னேறும்..... இல்லாவிட்டால்.... ஆட்கள் மாறுவார்கள்... காட்சி மாறாது......
Reply Like 2 | Report Abuse


Senthil1 Years ago
இன்டர் நேஷனல் சட்டமே வந்தாலும் காசு வாங்கிகொண்டு சிறுமிகளை காவு கொடுப்பார்கள் நம் அரசியல்வாதிகள்
Reply Like | Report Abuse


jaya1 Years ago
""ஈஸ்வரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அமுதா கூட்டிப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் துரத்திவிட்டார்கள்"" Immediately enquire and suspend them...Innocnets going police station finally..but that time also,they are not getting help..Stupid officers..

Reply Like 2 | Report Abuse


usha1 Years ago
பால் காந்தி சார் அந்த சட்டம் வந்தாலும்,இவர்கள் என்ன மாட்டவா போகிறார்கள்..அந்த 14வயது குழந்தை பட்டிருக்கும் உடல்ரீதியான துன்பத்தை நினைத்தால் ,மனம் ரணமாக உள்ளது.
Reply Like 1 | Report Abuse


usha1 Years ago

ரைசுதீனை கைது செய்துள்ளதில் இருந்தே தெரியவில்லையா காவல்துறை எப்படி செயல்படுகிறது என்று,வெறுப்பாக உள்ளது.

Reply Like 2 | Report Abuse


Rajendran1 Years ago

"இந்த வழக்கில் காவல் துறை மந்தமாகச் செயல்படுவதாக ரைசுதீன் புகார் செய்யவே, அவரையும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லிக் கைது செய்து இருக்கிறார்கள்."
இனிமே யாராவது எதுக்காவது புகார் கொடுத்தா அந்த வழக்கில் புகார் கொடுத்தவரையும் கைது செய்யுங்கப்பா. விளங்கிரும்.
Reply Like 1 | Report Abuse


Tamil1 Years ago
இவ்வாறே தினமும் பல சிறுமிகள் சீரழிக்கப்பட்டு வருகிறார்கள்.. இதை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் அரசு...
Reply Like | Report Abuse


Murugesan1 Years ago
What is action from Girls parent side. They are first criminal. why they didn't search girl past 2 years???
Reply Like 1 | Report Abuse


Padmanabhan1 Years ago
ப்ரொக்கர்கள் செல்வி, ருக்மணி மட்றும் சேர்மன் ஜலீல் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் காவல்துரை கருப்பு ஆடுகள் அனைவரையும் மொத்தமாக கைது செய்து கடுங்காவல் சிறையில் இருபது ஆண்டுகள் வைத்து முறைப்படி விசாரணை செய்து தண்டணை அளிக்கவேண்டும்.
Reply Like 1 | Report Abuse


சித்திர குப்தன்1 Years ago
பாவம் ரைசுதீன், மக்கள் அவர் பக்கம் நிற்க வேண்டும். அவரைக் கைது செய்த காவல் துறை மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Reply Like 4 | Report Abuse


raju1 Years ago
ரைசுதின் என்ன ஷெயிதார்?
Reply Like | Report Abuse


Pal Gandhi1 Years ago
சிறுமிகளை கடத்தி பாலியில் தொழில் செய்தால் தூக்கு தண்டனை என்று சொல்லுகிறார்கள். இன்னும் இந்த இன்டர் நேஷனல் சட்டம் இந்தியா வரவில்லையா?


நன்றி : ஜீனியர் விகடன் : http://www.vikatan.com/article.php?mid=2&sid=247&aid=8947

முகவைத்தமிழன், ரைசுதீன், முகம்மது ரைசுதீன், ரைஸீதீன், ரயீசுதீன், விபச்சாரம், முகவை, இராமநாதபுரம்,

Saturday, September 28, 2013

முகவை வழக்கறிஞர் மைதீன் (எ) ராஜா மரணம்

வழக்கறிஞர் மைதீன் (எ) ராஜா


அன்பின் தோழர்களுக்கு,
இன்று மாலை எனது தோழனும் இராமநாதபுரத்தில் பிரபல வழக்கறிஞருமான மைதீன் (எ) ராஜா (வழக்கறிஞர் சம்சுதீன் மைத்துனர்) அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஆற்றங்கலர சென்றிருந்தபோது ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்துள்ளார்கள். எனது தோழனுக்காகவும் அவனது குடும்பத்தினருக்காகவும் பிறார்த்திக்கவும். யாரிடமும் எதையும் எதிர்பாராத வாழ்க்கை வாழந்தவன்....இறுதியாக தனது மைத்துனருடன் ஏற்ப்பட்ட மனக்கசப்பில் அலுவலகத்தை விட்டு வெளியேறி தனியாக வழக்குகளை பார்த்தபோது கூட அதைப்பற்றி யாரிடமும் வெளியே கூறாதவன்...மனதிற்குள் சோகங்களை புதைத்தவன்...ஏழைகளின் நன்பன்...இல்லாதவர்களுக்காக இலவசமாகவே வழக்காடுபவன்....ண்மையின் பக்கம் துனை நின்றவன்...சத்தியம் சாகாது காத்தவன்......தனது பணிகளை பாதியில் விட்டு சென்றுவிட்டான்...எங்களை மீழாத்துயரில் ஆழ்த்திவிட்டான்....இலங்கைத்தமிழர் நலனுக்காகவும்....அனு உலைக்கெதிரான போராட்டங்களிலும் வழக்கறிஞர்களுடன் முன்னணியில் நின்று போராடியவன்......இறுதியாக 19.03.2013 அன்று இலங்கை அரசை போர்க்குற்றாளியாக அறிவிக்க வலியுருத்தி இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக மாபெரும் தொடர் உண்ணாவிரத நடந்தபோது எங்களையெல்லாம் அழைத்து அதில் கலந்து கொள்ள செய்தவன். அப்போது எடுத்த புகைப்படத்தில் நான், வழக்கறிஞர்கள் மைதீன், காலித், மைதீன் ஜீனியர் டேவிட் , பிரபாகர் ஆகியோர் உள்ளோம்.







இறுதியாக 24 மணி நேரத்திற்கு முன்னர்தான் நாங்கள் ஒன்றாக அமர்ந்து எஸ்.ஏ லாட்ஜில் கேரம் விளையாடினோம் நாங்கள் இருவரும் ஒரு டீமாக இருந்து 3 முறை தொடர் தோல்விகளை சந்தித்தபோது கூட மைதீன் என்னிடம்...மாப்புள...வெளயாடுடா....வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு....தோல்விதான் வெற்றிக்கு முதல்படி....அடிடா மூதேவி ....என்று உரிமையுடன் சிரித்து கொண்டே சொன்னான்....24 மணி நேரத்திற்குள் எனது தோழனின் இதயம் தனது துடிப்பை நிறுத்தும் என எதிர் பார்த்திரவில்லை....சென்று வா தோழா.....வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகுதான்.....நீ வீரன்தான்.....சாதனை பல புறிந்தாய்...வெற்றியாளனாகவே மரணித்துள்ளாய்...உனக்காக உறுதியாய் பிறார்த்திக்கும் உள்ளங்களையே நீ இந்த உலகில் விட்டுச்செல்கிறாய்....சென்று வா தோழா...சென்று வா....!!
https://www.facebook.com/raisudeen/posts/10152212813873154

Wednesday, September 25, 2013

அமைச்சருடன் முகவைத்தமிழன் சந்திப்பு

அமைச்சர் அவர்களுடன் ரைசுதீன்

25.09.2013 அன்று இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மான்புமிகு டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் அவர்களை சந்தித்து பெரியபட்டினம் கிராமத்தில் சமூக விரோத கும்பலால் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக தீவைத்து எரிக்கப்பட்ட சந்தன கூட்டை மீண்டும் எடுக்கவும் , அதனை தீவைத்து எரித்த சமூக விரோத சக்திகளை கைது செய்ய சொல்லி காவல்துறைக்கு அறிவுருத்தவும் வலீயுருத்தி கோரி்ககை மனு அளிக்கப்பட்டது.

மனுவுக்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள் உடனடியாக வக்பு வாரியத் தலைவர் ஜனாப் தமிழ் மகன் உசேன் அவர்களை அழைத்து உடனடி ந்டவடிக்கைக்கு பரிந்துறைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சந்தனக்கூட்டை செய்து அதை எடுக்கவம் பரிந்துரைத்தார். அதன் பின்னர் காவல்துறை அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகத்தையம் அழைத்து 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தன கூட்டை எரித்த கயவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் மீண்டும் அவர்கள் சந்தன கூட்டை எடுக்கும்போது இடையூறு செய்யாதிருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

அதன் பின்னர் வக்பு வாரியத்தின் இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களையும் சந்தித்து இது கோரிக்கைகளை வலியுருத்தி மனு அளிக்கப்பட்டது. அவரும் உடனடி நடவடிக்கைக்கு பறிந்துரைத்து நாளையே சந்தனக்கூட்டு வேலைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே.
https://www.facebook.com/photo.php?fbid=10152206297313154&set=a.10150831919698154.507584.592838153&type=1&theater

Wednesday, August 14, 2013

சுதந்திர தின வாழ்த்துக்கள் - விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்



அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.


இன்றைய நம் சுதந்திர சுவாசத்துக்கு காரணமாக இருந்த சுதந்திர போராட்டத்திற்காக தன் இன்னுயிர் ஈந்த அனைவருக்கும் நம் மரியாதையை செலுத்துவோம் அதே நேரத்தில் இந்திய சுதந்திரம் இன்றைய ஃபாசிஸ்ட்டுகள் கூறுவதைப்போல் காவிகளால் பெறப்பட்டதல்ல மாறாக இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் இந்த சுதந்திரம் பெறப்பட்டது. இன்று இந்தியாவை இந்து மயமாக்குவோம் என்று முழங்கும் பார்ப்பன பாசிஸ்ட்டுகள் அன்று காட்டிக்கொடுப்பவர்களாகவே இருந்தனர்.

ஏன் வாஜ்பாயும் கூட காட்டிக்கொடுத்தவர்களில் ஒருவர் அதற்கு சரித்திரம் சான்று பகர்கின்றது. இந்திய தேசப்பிதாவை சுட்டுக்கொன்றவர்கள் இந்த பார்ப்பன பாசிஸ்ட்டுகள். எம் முன்னோர்கள் குருதி சிந்தி மீட்டெடுத்த இந்தியாவில் இன்று பாசிஸ்ட்டுகள் எம் இனத்தின் தேச பக்தியை கேள்விக்குறியாக்கி எம் இனத்தின் ரத்தத்தில் தோய்த்த காவி கொடிகளை எம் இனப்பென்களின் வயிற்றை கீறி எடுத்த முஸ்லிம் சிசுக்களின் குடல் நரம்புகளை கயிறாக கொண்டு ஏற்றுகின்றார்கள்.

இந்திய சுதந்திரத்திரத்திற்காக குருதிபுனலோட்டி இன்னுயிர்களை ஈந்த எம் முஸ்லிம்கள் இன்று தேசதுரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் அடையாளப் படுத்தப்படுகின்றார்கள். குஜராத்திலும் மும்பையிலுமாக இந்தியாவெங்கும் எம் இன மக்களின் குருதியோட்டப்படுகின்றது. தியாகத்தின் அடையாளமான ஓர் இனத்தையே தேச துரோகிகளாக சித்தறிக்க முற்படுகின்றது தேசப்பிதாவை கொன்று சுதந்திர போராட்ட வீரர்களை ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுத்த வீர சாவர்க்கரின் பாசிச கும்பல் . இந்த ஃபாசிஸ்'டுகளின் கரமெங்கும் ரத்தம் ....தேச பக்தர்களை கொன்ற ரத்தம் ...இவர்களின் வரலாரெங்கும் துரோகங்கள்...

இந்த சுதந்திர தினத்தில், இந்திய சுதந்திரத்திற்காக போராடி தன் இன்னுயிர்களை ஈத்த ஓர் போற்றப்பட வேண்டிய சமுதாயம் அடிமையாகவும், துரோகிகளாகவும், தீவிரவாதிகளாகவும் நடத்தப்படுகின்றார்கள். அந்த சமுதாயத்தின் கடந்த கால சுதந்திர போராட்ட வரலாறுகளை இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டி சில சான்றுகளை கீழே பதிகின்றேன்.

சாரே ஜஹான் சே அச்சா ..ஹிந்துஸ்தான் ஹமாரா ...!!

வாழ்த்துக்களுடன்..
முகவைத்தமிழன்

***************************************************
விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்

(இந்த கட்டுரையின் ஆசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த கட்டுரையின் ஆசிரியர் வி.என்.சாமி என்ற முஸ்லிமல்லாதவர் இவர் எழுதிய 'கடற்போர்கள்' 'பார்வை விஞ்ஞானம்' பரிசுகளைப் பெற்ற நூற்களாகும். இப்போது இவர் 'விடுதலைப் போரில் இஸ்லாமியர்' என்ற நூலை எழுதி வருகிறார். இந்த கட்டுரை 'ஒற்றுமை' என்ற பத்திரிக்கையில் வெளிவந்ததாகும்.)

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

வரி தர மறுத்த வரிப்புலிகள்

இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால்இ அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும்இ உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமேஇ ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.

வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.

கதி கலக்கிய கான் சாஹிபு

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்துஇ பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான்இ நெல்லூர் சுபேதார்இ முஹம்மது யூசுப்இ கும்மந்தான்இ கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஷா அப்துல் அஜீஸ்

இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.

ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.

அஞ்சாத புலி ஹைதர் அலி

18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால் இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

தீரன் திப்பு சுல்தான்

'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின்இ ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போதுஇ திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.

வங்கத்துச் சிங்கங்கள்

வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.

தென்னாட்டு வேங்கைகள்

தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.

குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான்இ மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.

முஃப்தீ இனாயத் அஹ்மது

தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

அன்றும்... அயோத்தி அவலம்...

தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போதுஇ அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.

புதைந்து போன புரட்சி மலர்கள்

வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்துஇ சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.

அன்றும் ஒரு பொடோ

இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன்இ சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன்இ ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதிஇ அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டுஇ மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

முஹம்மதலிஇ ஷெளகத் அலிஇ அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.

விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
சிலையை உடைத்த சீலர்

தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர்இ 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப்இ ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்துஇ கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.

கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.

ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீதுஇ லத்தீப் இராமநாதபுரம் மஸ்தான்இ பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.

பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.

பெரும் கோடீஸ்வரர். நேதாஜிஇ மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

ஹபீபுர் ரஹ்மான்இ ஷாநவாஸ் கான்இ கரீம் கனிஇ மௌலானா கலீலுர்ரஹ்மான்இ முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.

பெண் போராளிகள்

இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.

அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.

'என் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு'.

வெளிநாடுகளில் தங்கியிருந்து இந்திய விடுதலைக்கு உழைத்த இஸ்லாமியர்கள் பலர்.

பஞ்சாபில் பிறந்த உபைதுல்லாஹ் சிந்தி காபூலில் ஏழு ஆண்டுகள் தங்கி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். 1923ம் ஆண்டு காங்கிரஸ் மகா சபையின் ஒரு கிளையை இவர் காபூலில் ஏற்படுத்தினார். பின்னர் துருக்கியின் தலைநகரான ஆங்காரா சென்று அங்கு மூன்று ஆண்டுகள் தங்கி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.

சிங்கை சிங்கம்

1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர்இ கோடீஸ்வரர்.

1915 - ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்துஇ இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படிஇ சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ்இ இம்தியாஸ் அலிஇ ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான்இ ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Wednesday, August 07, 2013

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

WISH YOU ALL A HAPPY EID-EL-FITR AL MUBARAK

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


ஈமானின் சீமான்களே!
இறைநேச ரோஜாக்களே!

ரம்மிய ரமழான் நோன்பேற்று
வல்ல அல்லாஹ்வின் அழகிய
நற்கூலியை பெறப்போகும் அதிர்ஷ்ட்டசாலிகளே!

சுவனத்தின் தலைவாயிலாம்
'ரையானில்' சுகந்த தென்றலாய்
நுலையவிருக்கும் உங்கள் வாழ்வில்

இந்த இனிமையும், இன்பமும்
என்றும் நிலவ
கருனை ரஹ்மானின்
கனிவுக்கு வேண்டுகிறேன்

என்றும் அன்புடன்

முகவைத்தமிழன்



வாழ்த்து : சிறு வயதில் எங்கோ படித்தது

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

www.tmpolitics.net

Thursday, August 01, 2013

நெல்லை ஏா்வாடி மீராஷா (காகா) அவர்கள் மரணம்

 
 
இறப்பு செய்தி...

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களை அழைக்கும்

எங்கள் நெல்லை ஏா்வாடி மீராஷா (காகா) அவர்கள்

அல்லாஹ் உடையை அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.....

இன்னா லில்லாஹி வ இன்னா இழைகி ராஜி ஊன்....

என் இனிய தோழா்...தோழராக ....சகோதரராக....ஆலோசகராக......கண்ணீா் வடிக்கிறேன்......உள்ளம் பழைய காலங்களை என்னி பாா்க்கின்றது...என் சகோதரா் மீரா சாஹிபுடன் தாவா களங்களில் பணியாற்றியதை....இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக....ஆமீன்...

அண்ணாரின் கடைசி வீடியோ பேச்சு...

http://www.facebook.com/photo.php?v=193467284160990&set=vb.100004931594627&type=2&theater

அஸ்ஸலாமு அலைக்கும். முகநூலில் பிரபலமாக எழுதிக்கொண்டிருக்கும் சகோதரர் முஹம்மது மீரா சாஹிப் [கம்மடி] அவர்கள் இன்று காலை தம்மாமில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலஹி ராஜிவூன். அவர்களுக்காக துஆ செய்யவும்.
காலையில் கழிவறைக்கு சென்றவர், கீழே விழுந்ததில் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. அவருடன் இருந்த சகோதரர் அதிகாலையில் அலுவலகம் செற்றுவிட்டதால் வீட்டில் யாரும் இல்லை. அவர் வந்து பார்த்தபோது கழிவறை உட்புறம் பூட்டி இருந்ததால், கதவை உடைத்து பார்த்திருக்கிறார்கள். என்பது இது வரை கிடைத்த தகவல். அவருக்காக பிரார்த்திக்கவும். ஒரு நல்ல சகோதரரை அல்லாஹ் கைப்பற்றிக்கொண்டான்.

Saturday, May 18, 2013

தமிழீழம் வெல்லும் - காஷ்மீர் சிங்கம் யாசின் மாலிக் கடலூரில் முழக்கம்


காஷ்மீர் சிங்கம் யாசின் மாலிக்கை அழைத்து வரும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் தோழர் உமர் கயான் 


இன்று கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்து வரும் நிகழ்விற்கு வருகை தந்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் காஷ்மீர் சிங்கம் யாசின் மாலிக்கை இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மூத்த ஒருங்கினைப்பாளர் வழக்கறிஞர் உமர் கயான் அழைத்து வந்தார். அதன் பின்னர் கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசியதாவது: 

 மேடையில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் தோழர் உமர் கயான் மற்றும் தோழர் சீமான் காஷ்மீர் சிங்கம் யாசின் மாலிக்குடன்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது. தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை. காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கிவிட முடியாது. போராட்டத்தில் மனிதர்கள் கொல்லப்படலாம். ஆனால் தத்துவத்தையும். கொள்கைகளையும் அழித்துவிட முடியாது என்றார் மேலும்
தமிழீழம் வெல்லும் என்று குறிப்பிட்ட யாசின் மாலிக் நாம் ஒரு பெரும் அராஜகமான அரசை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் விடுதலைப் போராட்டமும் உங்கள் விடுதலைப் போராட்டமும் ஒன்றே என்றார். அரங்கத்தில் இருந்த அனைவரும் யாசின்மாலிக்கை பெரும் கரகோசம் செய்து நன்றி தெரிவித்தனர்.

Saturday, May 11, 2013

ஜித்தாவில் நடந்த அழைப்பாளர்கள் கலந்துரையாடலில் எஸ்.எம் பாக்கர்

 

ஜித்தாவில் நடந்த அழைப்பாளர்கள் கலந்துரையாடலில் எஸ்.எம் பாக்கர்


சவுதி அரேபியா ஜித்தா பலத் சென்டரில் நேற்று (10.05.2013) மக்ரிப் தொழுகை முதல் இரவு பத்து மணி வரை ஜித்தாவில் சுமார் இருபது ஆண்டுளாக அழைப்புப் பணி செய்துகொண்டிருக்கும் சகோதரர்கள் மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் உரை.
தமிழகத்தின் அழைப்புப் பணி, சமூகப் பணி ஆகியவைகள் பற்றி மிகவும் விவான கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் வேகமான வளர்ச்சியினை இது காட்டுகிறது. பணி சிறக்க வாழ்த்துக்கள்.



Tuesday, February 26, 2013

அமைச்சர்களுடன்.....


இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் N.G பண்ணீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தியாகராஜன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் திரு P.M.L. கல்யான சுந்தரம் ஆகியோருடன் ஒரு நிகழ்ச்சியில்.






Thursday, February 07, 2013

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: TMMK- தமுமுக பொதுச்செயலாளர் நடத்தி வைத்த ஹிந்து - ...

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: TMMK- தமுமுக பொதுச்செயலாளர் நடத்தி வைத்த ஹிந்து - ...: தமுமுக பொதுச்செயலாளர் நடத்தி வைத்த ஹிந்து - முஸ்லிம் கலப்புத் திருமணம் கடந்த 5ம் தேதி செவ்வாய்க்கிழமை திராவிட விடுதலைக்கழகத்தினரால் ந...

Tuesday, January 22, 2013

வி.களத்தூரில் மதக்கலவர அபாயம் - அவசரம்!! உடனடி அரசு நடவடிக்கை

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: வி.களத்தூரில் மதக்கலவர அபாயம் - அவசரம்!! உடனடி அரச...: பெரம்பளூர் மாவட்டம் வி.களத்தூர் என்ற ஊரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள் இங்கு கடந்த 1990 களில் ஆர்.எஸ்.எஸ் தீவி...

Wednesday, January 09, 2013

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: எல்லா ஆண்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: எல்லா ஆண்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்: எல்லா ஆண்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும் ரிஸானா நஃபீக் என் பெயரால் முக நூல்களில் அகநூல்களில் பிரநூல்களில் தர்க்கம்புரி...

Sunday, January 06, 2013

மாதரை காப்போம் - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

மாதரை காப்போம் 
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்



நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் - அண்ணல் காந்தியடிகள்''.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது.
தில்லியில் 23 வயது நிரம்பிய பெண்ணை ஓடும் பேருந்தில் அறுவரால் கூட்டுப் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கிய சம்பவம் நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் சினத்தைக் கிளறியுள்ளது. போராட்டமும் தடியடியும் வாதங்களும் சர்ச்சைகளும் நடைபெற்றன. இவை பாலியல் வன்செயல்களுக்கு ஒரு தீர்வைக் காணுமா அல்லது ஆர்ப்பாட்டங்களோடு நின்றுவிடுமா என்பதுதான் நமக்கு முன்னுள்ள வினாவாகும்.

பாலியல் வன்செயலை சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு ஒப்பாகும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுவதால் மட்டுமே வன்செயல்கள் நின்றுவிடப்போவதில்லை. தில்லியில் நடைபெற்ற சம்பவம், ஆழ்ந்து விரிந்து கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கும் பனிமலையின் ஒரு நுனியை மட்டுமே நமக்குக் காட்டியுள்ளது. எனவே ஆழமான பிரச்னைகளுக்கு ஆழமாகச் சிந்திக்காமல் மேற்போக்காக சில தீர்வுகளைக் கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பாலியல் வன்செயல்களை அகற்ற சமூகம், சட்டம், காவல்துறை, நீதித்துறை ஆகிய அனைத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

தேசிய குற்றவியல் பதிவுத் துறை (என்சிஆர்பி) தரும் தகவல்படி ஆண்டுக்கு 24,206 பாலியல் வன்செயல்கள் பற்றிய புகார்கள் பதிவுசெய்யப்படுகின்றன. ஒவ்வொரு 22 நிமிஷங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். இத்தகைய சம்பவங்களில் 94.2 விழுக்காடு அந்தப் பெண்ணுக்குப் பரிச்சயமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன என்று கூறுகிறது தேசிய குற்றப்பதிவுத் துறை. மொத்தப் பாலியல் வன்கொடுமைகளில் பெற்றோர்களாலும் நெருங்கிய உறவினர்களாலும் நிகழ்த்தப்பட்டவை 1.2 விழுக்காடு. அக்கம்பக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டவை 34.7 விழுக்காடு. உறவினர்கள், நண்பர்களால் நிகழ்த்தப்பட்டவை 6.9 விழுக்காடு.
பணியிடங்களில் மேலதிகாரிகளாலும், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாலும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். காவல் நிலையம், மருத்துவமனை, மகளிர் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும் தம்மிடமுள்ள பதவியையும் தம்மிடத்தில் அடைக்கலமாக உள்ள பெண்களின் பலவீனத்தையும் பயன்படுத்தி வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். தெருவிலும் பேருந்திலும் ரயிலிலும் நடைபெற்ற பலாத்காரங்களைவிட நான்கு சுவர்களுக்குள் நடைபெறும் வன்செயல்களின் எண்ணிக்கை அதிகம்.

பதிவு செய்யப்பட்ட குற்றங்களைவிடப் பதிவு செய்யப்படாதவை பலமடங்காகும். சமூகத்திற்கு அஞ்சியும் நீதிமன்ற அலைக்கழிப்பிலிருந்து விடுபடவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம்மைப் பழிவாங்கிவிடுவர் என்பதை எண்ணியும் பலர் குற்றங்களைப் பதிவு செய்ய முன்வருவதில்லை. மேலும், விசாரணையின்போது நீதிபதி, வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் முன்பு கேட்கப்படும் கேள்விகள் பாலியல் வன்புணர்ச்சியைவிடக் கொடுமையானவைதாமே? இதன் காரணமாகப் பல பெண்கள் குற்றங்களைப் பதிவு செய்வதில்லை.

சட்டத்தின் பிடியிலிருந்து எப்படியும் தப்பிக்கலாம் என்பதே பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கான முக்கிய காரணமாகும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற வாதத்தில் நியாயமிருந்தாலும் இருக்கின்ற சட்டங்களை முறையாகச் செயல்படுத்தினாலே குற்றங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும். பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டுகளில் 26.4 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே தண்டனை பெறுகின்றனர் என்கிறது என்சிஆர்பி.

காவல்துறையினரின் உணர்ச்சியற்றதனம், மெத்தனம், அலட்சியம், பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமை ஆகியவற்றின் காரணமாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளில் போதிய ஆதாரமின்மையால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். குற்றவாளிகளைக் கைது செய்யும்போது தேவையான தடயவியல் சான்றுகளைச் சேகரித்துக்கொள்ளாமையும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைக் கூடங்கள் இல்லாமையும் முக்கியக் காரணமாகும்.

தில்லியிலுள்ள 80,000 காவல்துறையினரில் கணிசமானோர் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறார்கள். 20,000 முதல் 25,000 காவலர்கள் மட்டுமே தெருக்களில் காணப்படுகின்றனர். பணிச்சுமைகளின் அழுத்தம், காவல் துறையினருக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படாததினால் குற்ற விசாரணையில் போதிய கவனத்தை அவர்களால் செலுத்த முடியவில்லை.

நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுகின்ற வேகம் குற்றவாளிகளுக்குத் தெம்பைத் தருகின்றது. விரைவான நீதியே குற்றவாளிக்கு அச்சத்தைத் தரும். நீதிமன்றங்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல், நீதிபதிகளை அதிகப்படுத்துதல், கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி நவீனப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதோடு, வாய்தா வாங்குவதற்கும் ஒரு வரையறையைக் கொண்டுவராத வரை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கவே செய்யும். வழக்கறிஞர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது அரசு இதில் ஒரு துணிவான முடிவை எடுக்க வேண்டும். விரைவாக நீதி வழங்கப்படுகின்ற நாடுகளில் குற்றங்கள் குறைவாக நிகழ்கின்றன என்பது கவனத்திற்குரியது.

ஆறாக ஓடும் மதுவும் குற்றங்கள் பெருகக் காரணமாகிறது. பாலியல் வன்செயல்கள் மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை கலவரங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவோர் மது அருந்திய நிலையிலேயே அவற்றைச் செய்கின்றனர். மதுவுக்குக் கால் முளைத்தால் அது மாதுவிடம்தான் செல்லும். தில்லியில் பாலியல் வன்புணர்ச்சியைச் செய்தவர்களும் மது அருந்திய நிலையிலேயே இருந்தனர். ஆனால் போராட்டம் நடத்தும் எவரும் மதுவை ஒழிக்கவேண்டும் என்று முழக்கம் எழுப்பியதாகத் தெரியவில்லை.
ஆபாச உணர்வுகளைக் கிளறிவிடும் திரைப்படங்கள், புத்தகங்கள், இதழ்கள், விடியோ விளையாட்டுகள் ஆகியவையும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பதை எல்லோரும் வசதியாக மறந்துவிடுகின்றனர்.

சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற முழக்கம் அதிகமாக ஒலிக்கின்றது. இப்போது நடைமுறையிலுள்ள இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 376 பாலியல் வன்புணர்ச்சிக்கு ஏழு ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை நீடிக்கக்கூடிய தண்டனை கொடுக்கலாம் என்கிறது. இதை மரண தண்டனையாக மாற்றவேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. மரணதண்டனை எனச் சட்டதிருத்தம் கொண்டுவந்தால் வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண், குற்றவாளியைக் காட்டிக்கொடுத்துவிடுவாள் என்ற பயத்தில் குற்றவாளிகள் அப்பெண்ணைக் கொன்றுவிடுவார்கள் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனை வேண்டாம் என்று வாதிடுகின்றனர். இது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமல்ல. குற்றத்தின் கொடுமைதான் தண்டனையின் அளவை நிர்ணயிக்க வேண்டும். அத்தோடு தண்டனையின் அளவு குற்றங்கள் செய்யாதவாறு மக்களைத் தடுப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கவேண்டும்.

சட்டங்களைக் கடுமையாக்குவதால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடாது. சட்டங்களை அக்கறையோடும் முறையாகவும் விரைவாகவும் குற்றவாளிகள் தப்பிக்காதவண்ணம் செயல்படுத்தும்போது குற்றங்கள் குறையும்.
கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களுக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் தண்டனைக் குறைப்பு செய்வது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. இது எப்படியும் தப்பித்துவிடலாம் என்ற உணர்வையே குற்றவாளிகளிடம் ஏற்படுத்தும்.

சமீபத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலையும் செய்த நால்வருக்கு மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு ஓய்வுபெறுவதற்கு முன்னால் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் எல்லாத் துறைகளிலும் காணப்படும் அலட்சியம், அக்கறையின்மை, தாமதம், ஊழல், சிவப்புநாடா முறை, பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றைப் போக்கும் முகமாக நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுப் புத்துணர்ச்சியும் புதுவேகமும் அளிக்கப்படவேண்டும். பணிகள் எளிதாகவும் விரைவாகவும் முறையாகவும் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் சீர்திருத்தங்கள் அமைய வேண்டும். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க ஜி.பி.எஸ். கண்காணிப்பு கேமராக்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தவேண்டும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீது நியாயம் இருந்தால் வழக்கறிஞர்கள் அவர்களுக்காக வாதாடலாம். ஆனால் குற்றவாளிகள் பக்கம் எந்த நியாயமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த பின்பும் அவர்களுக்காக வாதாடுவது எந்த வகையிலும் தர்மம் ஆகாது.

பாலியல் குற்றங்கள் குறைய பெண்களைப் பற்றிய சமூகத்தின் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பெண்களைச் சுமையாகவும் இழிவாகவும், போகப் பொருளாகவும் பார்க்கும் மனநிலை மாறவேண்டும். பாலியல் வன்புணர்ச்சிக்குப் பலியான பெண்களை அருவருப்பாகப் பார்க்காமல் அநீதிகளை எதிர்த்துப் போராடிய வீரமங்கைகளாகப் பார்க்கவேண்டும்.

இச்சைகளைத் தூண்டும் விதத்தில் ஆபாசமாக ஆடைகள் அணிவதும், பூங்காக்கள், பேருந்துகள், கடற்கரை, வணிக மால்கள் போன்ற பொது இடங்களில் நாணமின்றி நடந்துகொள்வதும் குற்றவாளிகளைக் கூவி அழைப்பதுபோல் உள்ளன. இதைப் பெண்ணியவாதிகள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது தெரிந்ததே. இச்செயல்கள்தாம் பாலியல் வன்கொடுமைகளுக்கு மூலகாரணம் என்று சொல்வதற்கில்லை; இதுவும் ஒருவகையில் காரணம் என்பதை ஏற்றே ஆகவேண்டும்.

அதிகம்பேசப்படாத, பேசத் தயங்கும் ஒரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒழுக்க மாண்புகள் மிக்க, விழுமங்களைப் பின்பற்றுகின்ற சமூகத்தை உருவாக்குவதில் நமது முழு கவனமும் இருக்கவேண்டும். ஒரு சமூகத்தின் ஒழுக்க வீழ்ச்சி அந்தச் சமூகத்தின் எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது. விழுமங்களைக் கற்றுத்தரும் ஏற்பாடுகளைப் பெற்றோர், ஆசிரியர்கள், ஆன்மிகத் தலைவர்கள், மனிதநேயர்கள், தேச பக்தர்கள் ஆகியோர் தொடர்ந்து செய்து வரவேண்டும். பாடதிட்டங்களிலும் இதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

கொடூரமான நிகழ்வுகளின்போது மக்கள் ஆத்திரமுற்று வீதிக்கு வருவது இயற்கையே. ஆனால் போராட்டங்கள் மட்டுமே பிரச்னைகளுக்குத் தீர்வு ஆகாது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த இந்திய அளவில் அமைப்புகளை உருவாக்கி முறையாகத் தொடர்ந்து செயல்படவேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆளும் வர்க்கத்தைத் தட்டிக்கேட்டல், நீதிமன்றங்களில் வழக்குதொடர்தல், பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் தருதல் எனும் வகையில் தொடர்ந்து பணியாற்றினால் மட்டுமே மாற்றங்களைக் காணலாம்.

Friday, December 28, 2012

பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கற்பழிப்பு



போபால், டிச. 28-டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாநிலத்தின் பல இடங்களில் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால் அருகே உள்ள பால்காட் காவல் நிலையத்துக்கு நேற்று 21 வயதுடைய ஒரு இளம்பெண் வந்து புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த 17-ம் தேதி மதியம் உள்ளூரில் உள்ள பரஸ்வாரா பகுதி பா.ஜ.க. அலுவலகத்திற்கு நான் இன்டர்நெட் பார்க்க சென்றேன். அப்போது அங்கு வந்த எனது உறவினர் என்னை அங்கு உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். உள்புறமாக கதவை தாழ்ப்பாள் போட்டு என்னை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இது பற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி சென்று விட்டார்.

வெளியே சொன்னால் சமுதாயத்தில் அவமானமாகப் பார்ப்பார்கள் என்று நானும் மவுனமாக, இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இதே போல பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 17 வயது இளம்பெண் 3 பேரால் கற்பழிக்கப்பட்டு அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்தப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-



இங்கு உள்ள போலீஸ்காரர் ஒருவர் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். கடந்த நவம்பர் 13-ந்தேதி அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் என்னை ஒரு இடத்தில் வைத்து கற்பழித்தனர். பின்னர் இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் 11 வயது சிறுமி 4 பேரால் கற்பழிக்கப்பட்ட கொடுமை அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கான்பூரில் வசித்து வரும் அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் கோலு என்பவர் வசித்து வந்தார். அவர் சிறுமியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு 3 கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த சிறுமியை பலவந்தமாக கற்பழித்தனர். பின்னர் தலைமறைவாகி விட்டனர்.

இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுமி தந்த அடையாளத்தை வைத்து முக்கிய குற்றவாளி கோலுவை கைது செய்துள்ளோம். மற்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்றார்.

http://www.maalaimalar.com/2012/12/28112016/madhya-pradesh-bjp-party-offic.html

Friday, November 23, 2012

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க வாருங்கள்....

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க வாருங்கள்....: அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் ...

Thursday, November 22, 2012

காவியாக வெளுத்த சிவப்பு - தா.பாண்டியனின் ஃபாசிச முகம்



எல்லா நாட்களையும் போலவேதான் இந்த நாளும் விடியும் என்ற நம்பிகையில் உறங்கச் சென்ற போதிலும் இன்றைய நாள் எனது பல நம்பிக்கைகளைத் தகர்த்த நாள்.

காலையிலேயே தமிழகத்தின் முக்கிய அமைப்பின் தலைவர் ஒருவர் போன் செய்து, 'தம்பி! கசாப் தூக்கிலிடப்பட்டார் என்று செய்திகள் வருகிறது. நான் வெளியில் இருக்கிறேன். உறுதிபடுத்திச் சொல்' என்றார். அதிர்ச்சிகரமான செய்தி. சனியன் கரண்டு வேற‌ இல்லை. தோழர் சதீஸ்க்குப் போன் செய்து செய்தியைக் கூற, 'இருங்கள் அண்ணா! இணையத்தில் பார்த்து சொல்கிறேன்' என்று கூறிவிட்டு செய்தியை உறுதிப்படுத்தினார்.

எரவாட சிறையில் அஜ்மல் கசாப் காலையில் தூக்கிலிடப்பட்டார்.

அவசர கோலத்தில் நடை பெற்ற இந்த சட்டப்பூர்வமான கொலை, அதற்குப் பின் இருக்கும் அரசியல், தமிழக உணர்வாளர்களை அச்சுறுத்தும் அரசியல் இப்படி பல வெங்காயங்களை யோசித்துக்கொண்டு அலுவலகம் சென்றேன்.
காலை முதல் ஊடகங்கள் இந்தியாவுக்கு விடுதலை கெடச்சிருச்சு என்ற ரேஞ்சில் அலறிக்கொண்டிருந்தன. தேசபக்தியின் அளவுகோலே அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை வரவேற்பதில்தான் இருக்கிறது என்ற ரீதியில் அரசின் திரைக்கதைக்கு கனகச்சிதமாக நடித்துக் கொண்டிருந்தார்கள் ஊடக பயங்கரவாதிகள்.

ஒரு திரைப்படம் என்றால் காமெடியன்களும் பபூன்களும் இல்லாமலா?
தமிழகத்தின் முன்னாள், இன்னாள் அரசியல் காமெடியன்கள், காவி காமெடி, காங்கிரசு காமெடி, பச்சை காமெடி, மஞ்ச காமெடி என விதவிதமாக ப‌ர்பாமன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்க…

தன் கட்சிக்காரன் கொலை வழக்கில் குண்டாசில் உள்ளிருக்க, அம்மாவின் மனம் நோகாமல் நோம்பி கும்பிடும் தப்புத் தாளம் தா.பாண்டியன், மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிக்க பழக்கப்படுத்திகொண்ட ஜி.ராமகிருஷ்ண‌ன்கள் என வரிசை கட்டி நிற்க ஒரே அதிர்ச்சிதான் போங்க... 'நல்லவியங்களுக்கு இங்கே என்னடா வேலை' என மனித உரிமை பேசியே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்களை அதிர்ச்சியாய்ப் பார்க்க வைச்சாங்க பாருங்க...

அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை வரவேத்தாங்க.. சரி அது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட கதை வசனம்.. அத உட்டுருவோம்.

அதுக்கு மேலதான் தா.பாண்டியன் பேசிக் கொண்டிருக்கும்போது நான் உத்து உத்து டிவியின் கீழ் வரும் எழுத்தைப் பார்த்தேன். ஆர்.எஸ்.எஸ்.ல் தா.பாண்டியன் சேர்ந்து விட்டாரோ என்று.. ஆனால் மாநிலச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சின்னுதான் வந்தது.

முஸ்லீம்கள் வழிபாட்டுத் தளங்களில் குண்டுவைத்தவர்கள்; தீவிரவாதிகள். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பேசிக்கொண்டே போனார். அப்படியே அவர் உருவில் நரேந்திர மோடிகளும், எச்சி ராஜாக்களும், ராமகோபாலன்களும் வந்து போனார்கள்.

தா.பாண்டியன் அவர்களே!
இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு காரண‌ம் யார் என்று தெரிந்தும் முஸ்லீம்கள் மேல் பலி போடும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது?

அஜ்மீர் குண்டுவெடிப்பு, ஜம்தாவி ரயில் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு என இன்னும் பல குண்டுவெடிப்புகள் இந்துத்துவ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வேளையில் அந்த நிகழ்வுகளுக்கு முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் உங்களை இந்துத்துவத்தின் மறுஉருவமாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இந்த நாட்டில் எங்கு எது நடந்தாலும் உடனடியாக முஸ்லீம்களின் மீது பலி சுமத்துவதும், இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்களுக்கு சேவகம் செய்பவர்களாக சித்திரிப்பதும், ஒரு சமுகத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதும் இந்திய உளவுத் துறை மற்றும் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளின் செயல்திட்டங்களில் ஒன்று. அவர்களின் செயல்திட்டங்களுக்கு அவர்களின் திரைக்கதைக்கு நடிக்கும் புதிய காமெடியனாக இப்போது நீங்கள்.

சிறுபான்மை மக்களை முரண் சக்திகளாக முன்னிலைப்படுத்துவதில் அனைவரும் ஓர் அணியில். இதில் காவி என்ன... போலிகம்யூனிஸ்ட் என்ன..? எல்லா அப்பன்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.... என்று இன்றைய தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமுகம் பல விடயங்களில் மார்க்க ரீதியாக கம்யூனிஸ்டுகளிடம் முரண்பட்டாலும் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகள் போற்றுவதில் தங்களின் அரசியல் பாதுகாவலர்களாக கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும் வேளையில் உங்கள் அரசியல், இந்துத்துவ அரசியலை நோக்கி போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து முஸ்லிம்கள் இன்றைய தினம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா சனநாயக நாடு என்று உலக அரங்கில் போலியாக நம்ப வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் கோர முகம் இன்றைக்கு அம்மண‌மாக இளித்துக் கொண்டிருக்கிறது. சனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் சவால்விடுவதாக அதன் செயல்கள் இன்றைக்கு அமைந்திருக்கின்றன. உலக நாடுகள் சபையில் நேற்றைய தினம் மரண தண்டனைகளுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதை மூர்க்கமாக எதிர்த்த நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியபின்னர், அது மனித உரிமைப் போராளிகளை, மரண தண்டனைக்கு எதிராக போராடுபவர்களை நோக்கி சவால்களும், எச்சரிக்கையும் விடும் நோக்கில் இன்றைக்கு அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

உலக அளவில் மரண தண்டனைக்கு எதிராக நிற்கும் நாடுகளின் முன் திமிராக 'நேற்று அந்த வரைவுத் தீர்மான‌ம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் மரணத்தையும், மரண தண்டனைகளையும் நாங்கள் முடிவு செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும்?' என்ற இந்தியாவின் கொக்கரிப்பைப் பார்க்க முடிந்தது.

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் காங்கிரசின் ஒரு பிரிவாக இருந்த வரலாறும், அதிலும் நீங்கள் மஞ்சள் கம்யூனிஸ்டாக காங்கிரசின் சிறுபான்மைப் பிரிவு கம்யூனிஸ்டாக இருந்ததை நாங்கள் மறக்கவில்லை. உங்கள் நிறம்தான் தற்போது சிவப்பு என்றாலும் அதில் ஊடுறுவிப் பார்த்தால் அது காவியாக வெளுத்துள்ளதையும் இனிவரும் காலங்களில் நாங்கள் உணர்ந்திருப்போம்.
உங்கள் காவி சிந்தனையை இனியும் தொடர்ந்து காட்டினால் வரலாற்றில் மிகக் கேவலமான பக்கங்களில் உங்கள் பெயர் எழுதப்படும்.

- உமர்கயான், முதன்மை ஒருங்கினைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், தமிழ்நாடு

Tuesday, November 20, 2012

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக திருப்பூரில் அணி திரள்வீர் - செப்டம்பர் 25


அரசாலும் , அரசு இயந்திரங்களாலும், சியோனிச, ஃபாசிச ஆதரவு ஊடகங்களாலும் இசுலாமியர்களும், மக்கள் போராளிகளும் தீவிராவாதிகளாக சித்தறிக்கப்பட்டு , பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படும் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன இத்தருனத்தில் அரசியல் கட்சிகள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒரு பொது விவாதத்தையும், கருத்து பரப்புரையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில்  தற்சமயம் இருக்கிறார்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய வடிவில் அரங்கேறி வருவதைப் பார்க்கமுடியும். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்குகளில் அரசியல் சட்டத்தை எந்த அரசும் அரசு அதிகாரிகளும் மதிப்பதில்லை. இவர்கள் திட்டமிட்ட சதியின் அடிப்படையில் இசுலாமியர்களுக்கு எதிரான பொய் வழக்குகளை புனைவதிலும், சட்ட விரோத கைதுகளை மேற்கொள்வதிலும், தீவிரவாதிகளாகவும் , பயங்கரவாதிகளாகவும் சித்தறிப்பதிலேயுமே முனைப்பு காட்டுகிறார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்கள் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று இஸ்லாமிய சமூகத்தையும், மக்கள் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் நாடகத்தை ஊடகங்கள் செய்தது போக இன்று அரசே அதன் எந்திரங்களை கொண்டு நடத்தி வருகிறது. இது இவர்களுக்கு கைவந்த கலை.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா?

இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே! ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக - மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.

ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.

இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர். இன்னும் இயக்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒற்றுமையின்றி போராடிக்கொண்டிருக்கின்றன அதனால் நமது வீறியத்தை அரசுக்கு புறிய வைக்க இயலவில்லை.இதனால் அரசு நமது சமூகத்தை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், அந்நிய நாட்டு உளவாளிகளாகவும் சித்தறித்து பொய் வழக்குகளை போட்டு அரசியலமைப்பு சாசனத்திற்குஎதிரகா கைதுகளை மேற்கொண்டு நமது சமூகத்தை இழிவு படுத்தி வருகிறது. இது ஒரு திட்டமிடட சதி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு முன்னோட்டமாக உணர்ச்சியும், உற்சாகமும், சிந்திக்கும் திறனும் மிக்க ஆற்றல் மிக்க இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" தமிழகமெங்கும் இசுலாமிய இயக்கத் தலைவர்களையும், சமூக ஆர்வளர்களையும், சிந்தனையாளர்களையுமு் திரட்டி பல கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய சமூகத்தையும், மக்கள் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் அரச நாடகத்தையும், நமது மக்களுக்கு எதிராக தொடரும் கைதுகள், பொய் வழக்கு கொடுமைகளையும் கண்டித்து இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர் பிரச்சார இயக்கத்தினை தொடங்கி உள்ளது. இதன முதல் கட்டமாக வரும் 25.11.2012 அன்று திருப்பூர், காங்கேயம் சாலை, வெங்கடேஸ்வரா நகரில் அமைந்துள்ள H.M.S மஹாலில்முதல் அரங்க கூட்டத்தை நடத்துகிறது. இதில் சமுதாயத்தலைவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், சமூக அக்கறையாளர்களும், வழக்கறிஞர்களும் மனித நேயம் மிக்கவர்களும், மனித உரிமைகளை காக்க போராடுபவர்களுமாக கண்ணியவான்கள் கலந்து உரிமைக்குரல் எழுப்ப உள்ளார்கள்.

வரும் நவம்பர் 25 அன்று திருப்பூர் மாநாகரில் கூடும் அரங்க கூட்டத்தில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!

ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)


இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தொடர்பு : 9488159091 - 9486641586



Saturday, November 03, 2012

மக்கள் தொலைக்காட்சியில் எமது பேட்டி

 

வணக்கம் தோழர்களே,
சமீப சில நாட்களாக எமது இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் அசாதாரன சூழல் குறித்தும் வண்முறை நிகழ்வுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து "இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்க"த்தின் சார்பாக "மக்கள் தொலைக்காட்சியில" இன்று ஒளிபரப்பான "மறுபக்கம்" என்ற நிகழ்ச்சியில் மக்கள் படும் துன்பங்கள் குறித்து எமது கருத்துக்களை பதிவு செய்தேன் அதே போல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பிரமுகரும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளருமான தம்பி ஜமீல் அவர்களும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதன் வீடியோ காட்சிகள்.

Tuesday, September 18, 2012

அமெரிக்காவிற்கு எதிராக முஸ்லிம்கள் - சென்னை ஸ்தம்பித்தது



சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது.
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template