Sunday, December 14, 2008

பெரியபட்டினத்தில் "ஈத் மிலன்" மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல்


டிசம்பர் 14, 2008, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் இன்று மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஈத் மிலன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மாற்று மதச் சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழச்சியில் அதிகமான அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அருகில் உள்ள முத்துப்பேட்டை கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாற்றுமத மாணவர்களும், உள்ளூரைச் சேர்ந்த முக்கிய மாற்று மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சரியாக காலை 10.30 மனியளவில் நிகழச்சி ஆம்பமாகியது. நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர்களாக மாணவர்களுடன் நிகழ்கால பொருளாதார மாற்றங்கள் பற்றியும் இதன் பாதிப்பு பற்றியும் இதில் எந்த அளவிற்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துறையாடினார் ஆசிரியர் காதர் அவர்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் நிர்வாகியான திரு. பீர் முகைதீன் அவர்கள் ஓர் கடவுள் கொள்கை பற்றியும், மாற்று மதங்களில் பின்பற்றப்படும் பல கடவுள் கொள்கை பற்றியும், இஸ்லாத்தின் பார்வையில் கடவுள் கொள்கை, ஏன் கடவுள் பல கடுவள்களாக இருக்க முடியாது என்றும், கட்வுள் என்பது ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் மிக அழுத்தம் திருத்தமாக மாற்று மதத்தினரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அறுமையான ஒரு உரையை நிகழ்த்தினார். தனது உரையின் மூலம் கூடியிருந்த மாற்று மத நன்பர்களிடத்தில் அழைப்பு பனியையும் மேற்கொண்டார்.

அதன் பின்னர் பேச வந்த மனித நீதிப் பாசரை பெரியபட்டனம் பகுதி பொறுப்பாளர் திரு. செய்யத இபுறாஹிம் அவர்கள் தூய இஸ்லாத்தை பற்றியும், இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை போதிக்கவில்லை என்பது குறித்தும், இஸ்லாத்தில் மனித நேயம், மனித உரிமைகள் பேன்றவை குறித்தும், இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபுபக்கர், உமர் போன்றோர் எப்படி தங்கள் ஆடசியில் மாற்றிமதத்தவர்களிடத்தும் நீதி செலுத்தினர் என்பது குறித்தும் விளக்கினார்.பின்னர் இன்று உலகம் எங்கும் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்றும் ஊடகங்களின் மூலமாக நடத்தப்பட்டு வரும் பாரிய பிரச்சார யுத்தத்தினை பற்றியும் இதன் பின்னணியில் உள்ள சக்திகள் எது என்பது குறித்தும் சிறப்புறையாற்றினார்.


அதன் பின்னர் மீண்டும் ஆசிரியர் திரு. காதர் அவர்கள் தனது சிறந்த நாவன்மையின் மூலம் இஸ்லாத்தினை பற்றியும், இஸ்லாத்தில் மனிதனை சிந்திக்க சொல்வது குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின்னர் பக்கத்து கிராமமான நெய்னார் மரைக்கானை சேர்ந்த ஓய்வு வெற்ற ஆசிரியர் திரு. மனி மாதவன் அவர்கள் சமூக நல்லினக்கத்தை வலியுருத்தும் வகையில் தனது உரையை ஆற்றினார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்தது அனைத்து ஹிந்துக்களும் அல்ல என்றும் ஹிந்துக்களின் பெயரில் அரசியல் செய்யும் ஒரு மதவாத அரசியல் கட்சியே தனது தொண்டர்களை கொண்டு இடித்தது என்றும் இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் சில அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் சுய லாபத்திற்காக மத மோதல்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி அரசியல் செய்கின்றார்கள் என்றும் இதனால் நம்மள் பினக்கு வரக்கூடாது நாம் என்றும் ஒற்றுமையாக சகோதரர்களாகவு வாழ வேண்டும் என்றுமு் வலியுருத்தினார்.

அதன் பின்னர் கேள்வி நேரம் நட்நதது . கூடியிருந்த மாற்றுமத சகோதரர்களும், மாற்று மத மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு குறிப்பாக இந்தியாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் அதன் பிண்ணனி குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு. முகவைத்தமிழன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள். மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு திரு. செய்யது இபுறாஹி்ம் அவர்களும் மனித நீதிப் பாசறையின் சித்தர்கோட்டை பிரிவு தாவா பொறுப்பாளர் திரு. சஃபீக் அவர்களும் சிறப்பாக பதில் அளித்தார்கள்.

அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்தக்களை நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகளிடத்தில் எழுத்து மூலமாக தெறிவித்தார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டவர்களுக்கும் மதிய உணவிற்கு பின்னர் விளக்கம் வளங்கப்பட்டது. பின்னர் நிகழச்சியின் முடிவில் அனைவரும் மிகுந்த மன திருப்பதியுடனும் மகிழச்சியுடனும் கலைந்து சென்றனர்.

ஈத் மிலன் என்ற மாற்று மத சகோதரர்களுக்கான இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை பெரியபட்டினம் மனித நீதிப் பாசரை மற்றும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template