Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

Tuesday, June 02, 2009

எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.






கேரள எழுத்துலகில் தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆங்கில எழுத்துலகிலும் பிரகாசித்த 75 வயது நிரம்பிய பிரபல மலையாள எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா அவர்கள் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு மரணமடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நாலப்பாட்டு என்ற பெயர் கொண்ட குடும்பத்தில் பிறந்த சகோதரி கமலா சுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா ஆவார். தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் அனுபவித்து விட்ட சகோதரி சுரய்யா, மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பிரபலமாக அறியப்பட்டிருந்தவர். அவரது பல்வேறு நாவல்களும் ஆங்கிலக் கவிதைகளும் கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களைத் திரட்டித் தந்துள்ளது.

பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக்கால நினைவுகள்), பூதகாலம் (இறந்தகாலம்), பக்ஷியுடைய மரணம் (பறவையின் மரணம், யா அல்லாஹ் போன்றவை சகோதரி சுரய்யாவின் பிரசித்திப்பெற்ற நாவல்களில் சில! கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற பல்வேறு எழுத்தாளர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

அன்பைத் தேடி பயணப்பட்ட அவரின் வாழ்வில், அவர் இறுதியாக தேடிய மழை போன்ற அன்பு இருக்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டு கொண்டார். 1999 ஆம் ஆண்டு தன் 65 ஆவது வயதில் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அன்றோடு மாதவிக்குட்டி என்ற தன் இயற்பெயருக்கு விடைகொடுத்து, கமலா சுரய்யா என்றப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆனார்.

தேடியலைந்த நிரந்தர அன்பு பொங்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டுகொண்ட நேரத்திலேயே, பிரபலமான நாயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சமூகத்தில் தான் மிகப் பெரிய அந்தஸ்திலும் பெயரிலும் அறியப்பட்டிருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவை ஏதும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. அறிந்துக் கொண்ட உண்மையை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கமும் காட்டாத அவரது வெளிப்படையான கள்ளம் கபடமற்ற அந்தப் பண்பே பிந்தைய அவரின் வாழ்வில் மிகப் பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வைத்தது.

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அதுவரை மிகப் பெரிய அந்தஸ்தில் வைத்துப் போற்றிய சமூகத்திலிருந்து, சங்பரிவார வல்லூறுகள் அவர் மீது பாய்ந்து பிராண்டியன. கூடவே கொலை மிரட்டல்களும் தூற்றல்களும் அவரைத் தொடர்ந்தன!

உடல் தளர்ந்திருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தான் தேடியதைப் பெற்றுக் கொண்ட அவரின் உறுதியான மனம் தளரவில்லை. பிற்காலத்தில் சகோதரி கமலா சுரய்யா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் திகட்டிப்போய் அதிலிருந்து வெளியேறி விட்டார் என, அவர் சஞ்சரித்திருந்த பத்திரிக்கை உலகினரே எவ்வித வெட்கமும் இன்றி பொய் கதைகளை அவருக்கு எதிராக எழுதி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் மீதான தங்களின் வெறுப்பைக் கொட்டித் தீர்த்தன.

தொடர்ந்து வந்த வல்லூறுகளின் தூற்றல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரின் இறுதி காலத்தில் அவர், தான் மிகவும் நேசித்திருந்த பிறந்த மண்ணை விட்டு மும்பை சென்று வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டார். அவரை மிகவும் நேசித்திருந்த அவரின் இளைய மகன் ஜெயசூர்யாவுடன் தன் கடைசி காலத்தை புனாவில் நிம்மதியுடன் கழித்தார்.

கடந்த ஒன்றரை மாதக்காலமாக சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு, ஜஹாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றப்பின்னரான அவரின் கடந்த 10 ஆண்டு கால வாழ்வில் அவர் வெளிப்படுத்திய அவரின் மகத்தான எண்ணங்கள், இவ்வுலகை விட்டு நீங்காது!

அவரின் எண்ணங்களில் சில:

"அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!"

"நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை."

"எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது."

"நான் முஸ்லிமாக வாழ்கிறேன்.


"பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, 'கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்' என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது. தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன் முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்."


கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை."

கண்டுகொண்ட உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கும் அதன்படி வாழ்வதற்கு எந்த மிரட்டல், உருட்டல்களுக்கும் அஞ்சாமல் அவர் காட்டிய உறுதியும் எவ்வித அச்சமும் இன்றி அசத்தியங்களுக்கு எதிராக அவர் தைரியமாக வெளியிட்ட எண்ணங்களும் என்றும் நம்மிடையில் அவரை நினைவுகூற வைக்கும்.

சகோதரியின் பிழைகளைப் பொறுத்து, அவர் தேடி அலைந்துப் பெற்ற நிரந்தர அன்பை நிரந்த வாழ்விலும் வழங்க இறைவன் கருணை புரியட்டுமாக! ஆமீன்.

நன்றி: சத்திய மார்க்கம்

Sunday, December 28, 2008

குவைத்தில் சமூக நீதி கருத்தரங்கம்

இறைவனின் திருப்பெயரால்...

சமூக நீதி கருத்தரங்கம்

குவைத் தமிழ் தோழமை அமைப்புக்களின் ஆதரவுடன் !
குவைத் தமிழர்கள் விழிப்புணர்வின் ஒரு மைல் கல்லாக !!
ஃபாஸிஸ, பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்க !!!
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒற்றுமைக்காக !!!!
­­­
நாள்: ஜனவரி 1, 2009 நேரம்: மாலை 5:15
இடம்: ஜம்இய்யது இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்

தலைமை: தொழிலதிபர் A.சுலைமான் பாட்ஷா
(உரிமையாளர், லக்கி ப்ரிண்டர்ஸ், குவைத்)

சிறப்புரையாளர்கள்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
தலைப்பு: சமைப்போம் சகோதரத்துவம் வாரீர் வாரீர் !!

சகோ.M.தமீமுன் அன்ஸாரி M.B.A.
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
தலைப்பு: தீவிரவாதமும் பயங்கரவாதமும் - நிழலும் நிஜமும்

நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), குவைத்
23925612 / 99619827 / 66412875 / 97358846 / 22470159

அறிவமுதம் பருக தமிழர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!
குறிப்பு: For Women Special Place ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலிஃபா, மஹ்பூலா மற்றும் சிட்டி பகுதிகளிலிருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

Saturday, December 20, 2008

மங்களம்பேட்டையில் ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா


மங்களம்பேட்டையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. கடலூர் மாவட்ட எ.ம்.என். பி தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். நகர் தலைவா'திரு. அபுல் ஹசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மாநில துனைத்தலைவர் தாவா குழு திரு. பஸ்லுர் ரஹ்மான் அவர்களும், அறிவகத்தின் முதல்வர் மௌவி சையது இபுறாஹிம் உஸ்மானி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினார்களாக மாவட்ட காவல்துறை துனை கண்கானிகப்பாளர் திரு. என். ராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குனர் டாக்டர் ஏ.ஏ. ஜமேஸ் அவர்கள், மங்களம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் திரு. கோபு பிள்ளை அவர்கள், விருத்தாசலம் அரசு வழக்குறைஞர் திரு. இரா. சுப்பிரமணியம் அவர்கள், திரு. ஏ. அக்பர்சா முத்தவல்லி அவர்கள், திரு. எம். அபதுல் பாரி அவர்கள், திரு. சரவன குமரன காவல் ஆய்வாளர் மங்களம்பேட்டை அவர்கள், வழக்கறிஞர் திரு. முகம்மது இபுறாஹிம் அவர்கள், அரசு மருத்துவர்திரு. கதிர் வேல் அவர்கள்,மங்களம்பேட்டை திருச்சபை திரு. மகிமைதாஸ் அவர்கள், திரு. அபிருத்தீன் மன்ப, அவர்கள், திரு. ரிஸ்வர்ன பாசகா அவர்கள் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திரு. ஏ. சாஜஹான் வெர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. வந்திருந்த அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

News : Mr. Abirudeen Manbayee

Sunday, December 14, 2008

பெரியபட்டினத்தில் "ஈத் மிலன்" மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல்


டிசம்பர் 14, 2008, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் இன்று மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஈத் மிலன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மாற்று மதச் சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழச்சியில் அதிகமான அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அருகில் உள்ள முத்துப்பேட்டை கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாற்றுமத மாணவர்களும், உள்ளூரைச் சேர்ந்த முக்கிய மாற்று மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சரியாக காலை 10.30 மனியளவில் நிகழச்சி ஆம்பமாகியது. நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர்களாக மாணவர்களுடன் நிகழ்கால பொருளாதார மாற்றங்கள் பற்றியும் இதன் பாதிப்பு பற்றியும் இதில் எந்த அளவிற்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துறையாடினார் ஆசிரியர் காதர் அவர்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் நிர்வாகியான திரு. பீர் முகைதீன் அவர்கள் ஓர் கடவுள் கொள்கை பற்றியும், மாற்று மதங்களில் பின்பற்றப்படும் பல கடவுள் கொள்கை பற்றியும், இஸ்லாத்தின் பார்வையில் கடவுள் கொள்கை, ஏன் கடவுள் பல கடுவள்களாக இருக்க முடியாது என்றும், கட்வுள் என்பது ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் மிக அழுத்தம் திருத்தமாக மாற்று மதத்தினரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அறுமையான ஒரு உரையை நிகழ்த்தினார். தனது உரையின் மூலம் கூடியிருந்த மாற்று மத நன்பர்களிடத்தில் அழைப்பு பனியையும் மேற்கொண்டார்.

அதன் பின்னர் பேச வந்த மனித நீதிப் பாசரை பெரியபட்டனம் பகுதி பொறுப்பாளர் திரு. செய்யத இபுறாஹிம் அவர்கள் தூய இஸ்லாத்தை பற்றியும், இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை போதிக்கவில்லை என்பது குறித்தும், இஸ்லாத்தில் மனித நேயம், மனித உரிமைகள் பேன்றவை குறித்தும், இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபுபக்கர், உமர் போன்றோர் எப்படி தங்கள் ஆடசியில் மாற்றிமதத்தவர்களிடத்தும் நீதி செலுத்தினர் என்பது குறித்தும் விளக்கினார்.பின்னர் இன்று உலகம் எங்கும் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்றும் ஊடகங்களின் மூலமாக நடத்தப்பட்டு வரும் பாரிய பிரச்சார யுத்தத்தினை பற்றியும் இதன் பின்னணியில் உள்ள சக்திகள் எது என்பது குறித்தும் சிறப்புறையாற்றினார்.


அதன் பின்னர் மீண்டும் ஆசிரியர் திரு. காதர் அவர்கள் தனது சிறந்த நாவன்மையின் மூலம் இஸ்லாத்தினை பற்றியும், இஸ்லாத்தில் மனிதனை சிந்திக்க சொல்வது குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின்னர் பக்கத்து கிராமமான நெய்னார் மரைக்கானை சேர்ந்த ஓய்வு வெற்ற ஆசிரியர் திரு. மனி மாதவன் அவர்கள் சமூக நல்லினக்கத்தை வலியுருத்தும் வகையில் தனது உரையை ஆற்றினார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்தது அனைத்து ஹிந்துக்களும் அல்ல என்றும் ஹிந்துக்களின் பெயரில் அரசியல் செய்யும் ஒரு மதவாத அரசியல் கட்சியே தனது தொண்டர்களை கொண்டு இடித்தது என்றும் இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் சில அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் சுய லாபத்திற்காக மத மோதல்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி அரசியல் செய்கின்றார்கள் என்றும் இதனால் நம்மள் பினக்கு வரக்கூடாது நாம் என்றும் ஒற்றுமையாக சகோதரர்களாகவு வாழ வேண்டும் என்றுமு் வலியுருத்தினார்.

அதன் பின்னர் கேள்வி நேரம் நட்நதது . கூடியிருந்த மாற்றுமத சகோதரர்களும், மாற்று மத மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு குறிப்பாக இந்தியாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் அதன் பிண்ணனி குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு. முகவைத்தமிழன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள். மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு திரு. செய்யது இபுறாஹி்ம் அவர்களும் மனித நீதிப் பாசறையின் சித்தர்கோட்டை பிரிவு தாவா பொறுப்பாளர் திரு. சஃபீக் அவர்களும் சிறப்பாக பதில் அளித்தார்கள்.

அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்தக்களை நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகளிடத்தில் எழுத்து மூலமாக தெறிவித்தார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டவர்களுக்கும் மதிய உணவிற்கு பின்னர் விளக்கம் வளங்கப்பட்டது. பின்னர் நிகழச்சியின் முடிவில் அனைவரும் மிகுந்த மன திருப்பதியுடனும் மகிழச்சியுடனும் கலைந்து சென்றனர்.

ஈத் மிலன் என்ற மாற்று மத சகோதரர்களுக்கான இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை பெரியபட்டினம் மனித நீதிப் பாசரை மற்றும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template