Saturday, March 29, 2008

இந்து பாசிசத்தின் உளவியல் - டாக்டர். ருத்ரன்

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி' என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. "தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்' என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்' என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்' என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை' என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்' அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.

"திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி'யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை' என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்' என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்' எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்' என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.

பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு' என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்' என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

"எதிரிகள் மனிதர்களேயல்ல' என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்', என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே' என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி'யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.

எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி' எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்' கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி' என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?

வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே' எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி'லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.

தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்' எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்' என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.

இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்' எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்' எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்' ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை'யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்' என்றும், அரசு பலத்தை "வீரமெ'ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

· ருத்ரன்,

மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்

Friday, March 28, 2008

நபிகள் நாயகமும் அன்புத்தோழர்களும் (VIDEO)

"நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும்"

அஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர்கள்

Al-Sheikh. Alavudeen Bakavi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர்கள்

Thursday, March 27, 2008

பொய்ச்செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு 3 மாத சிறை


தமிழ் முஸ்லிம் பதிவுகள் - புதிய திரட்டி

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது.

தகவல் : மக்கள் தொலைக்காட்சி

செய்தி : முதுவை ஹிதாயத்

Tuesday, March 25, 2008

மானுட வசந்தம் தற்போது இணையத்திலும்.....



அஸ்ஸலாமு அலைக்கும்!

இஸ்லாத்தை பற்றியும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றியும் நமது சகோதர சமுதாய மக்களுக்கு ஏன் முஸ்லிம்களுக்கும் கூட எத்தனையோ கேள்விகளும் சந்தேகங்களும் உண்டு. அவற்றை தீர்த்து வைக்கும் முகமாக மருத்துவர்.K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் IFT (Islamic Foundation Trust) மூலமாக தொலைகாட்சியில் மானுட வசந்தம் என்ற நிகழ்சியை ஒளி பரப்புகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி இணையதள பயன்பாட்டாளர்களுக்காக http://www.youtube/ ல் கீழ்காணும் இணைப்புகளில் முதல் கட்டமாக பதிவேற்றம் செய்யப்பற்றுள்ளது, அதனை கண்டு பயன் பெற்று , நமது சகோதர சமுதாய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் இந்த இணைப்புகளை இ-மெயில் அனுப்பினால் பயனுள்ளதாக அமையும். இனி இன்ஷா அல்லாஹ் பதிவேற்றம் செய்யப்படும் நிகழ்சிகளை தங்களுக்கு இ-மெயில் மூலம் தெரியப் படுத்த விரும்பினால் இந்த இணைப்பில் உறுப்பினராக சேரவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இதனை "தா:.வா" என்ற முறையில் அங்கீகரித்து இதனை உருவாக்கியவர்களுக்கும், துணை புரிந்தவர்களுக்கும், உங்களுக்கும் , எனக்கும் நல்லருள் புரிவானாக!


(சுவாமி தத்வபோதானந்தா அவர்கள் இஸ்லாத்தை பற்றி )

(A.அன்பரசு I.A.S அவர்கள் இஸ்லாத்தை பற்றி )

(புதுவை சட்டமன்ற துணைத்தலைவர் A.V.S. சுப்பிரமணியம் இஸ்லாத்தை பற்றி)

(Dr. K.V.S. ஹபீப் முஹம்மது அவர்கள் துவக்கவுரை)

(முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கிறார்களா?)

(இன்றைய சூழ்நிலையில் இனி ஒரு இறைதூதர் வருவாரா?)

(இஸ்லாத்தில் ஜீவனாம்சம்)

(உலகை இறைவன் படைத்தது விளையாட்டிற்காகவா?)

(ஒற்றுமையாக இருக்க வழி)

குறிப்பு : மேலே உள்ள தகவல் thamizhmuslim <thamizhmuslim@gmail.com> என்ற முகவரியில் இருந்து மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்டது. தகவலுக்காக இங்கு பதியப்பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞன் மீது காவல்துறை கட்டுமிரான்டி தாக்குதல்

வாசுதேவநல்லூரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட
முஸ்லிம் இளைஞன்.



காவல்துறையால் தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்


நெல்லை மாவட்டம், புளியங்குடியை அடுத்துள்ள ஊர் வாசுதேவநல்லூர். இங்கு சுமார் 2,000 முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். வாசுதேவநல்லூரில் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது 13 வயது மகன் பாதுஷா அவ்வூரைச் சார்ந்த சில இளைஞர்களுடன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது பிடிக்காத அப்துல் காதர் பலமுறை தனது மகனின் நண்பர்களான நிஜாம் சேக் உள்ளிட்டோரை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதியத்திற்கு மேல் பாதுஷா, நிஜாம் சேக் மற்றும் 6 நபர்களுடன் ஊரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். தன் பேச்சை தொடர்ந்து மதிக்காமல் நடந்து வரும் தன் மகன் மற்றும் நண்பர்கள் மீது ஆத்திரமுற்று தன் நண்பரான வாசுதேவநல்லூர் உளவுத்துறை தலைமைக் காவலர் கண்ணனிடம் தன் மகனின் நண்பர்களை கண்டிக்குமாறு வாய்மொழியாக புகார் செய்துள்ளார். உடனே கண்ணன் குளக்கரைக்கு வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த நிஜாமை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த கணேசன். பண்டாரம் ஆகிய இரு காவலர்களும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.


இம்மூவரும் சேர்ந்து நிஜாமை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இவரிடம் நாளை அழைக்கும்போது வர வேண்டும் என்று கூறி அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த நிஜாமின் வாயிலிருந்து இரத்தம் வர தொடங்கியுள்ளதோடு, மூச்சு விடவும் அவதிப்பட்டுள்ளார். இவருடைய தந்தையார் ஏற்கனவே விபத்தில் காயமுற்று நடக்க இயலாத நிலையில் உள்ளார். இவருடைய உறவினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டபோது அவர்கள் சிசிக்கை அளிக்க மறுத்துள்ளனர். இவ்விஷயம், புளியங்குடி த.மு.மு.க.நகர நிர்வாகிகளுக்கு தெரிய வர அவர்கள் தலையிட்டு நிஜாமை புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது நிஜாம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.


சம்பவம் கேள்விப்பட்ட அவ்வூர் மக்கள் ஞாயிறு இரவு வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில், குற்றம் இழைத்த காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். உடனடியாக அங்கு விரைந்த புளியங்குடி நகர நிர்வாகிகளிடம், புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு.அசோக்குமார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. உடனடியாக 3 காவலர்களும் ஆயுதப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் வாசுதேவநல்லூரில் திங்களன்று கூடிய த.மு.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் செவ்வாயன்று (25.03.2008) கடை அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உட்பட்ட உளவுப் பிரிவினர் தங்களது பணியை மறந்து சட்டம், ஒழுங்கு காவல்துறையினருடன் கை கோர்த்து கொண்டு சில இடங்களில் கட்டப் பஞ்சாயத்து, பணம் வசூல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு உண்மை தகவல்கள் கண்காணிப்பாளருக்கு தெரியாமல் மறைத்து விடுகின்றனர். துடிப்புடன் செயல்படுபவர் என்று பெயர் பெற்ற நெல்லை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தினகரன் அவர்கள் இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு உளவுத்துறைக்கு தகுதியான நபர்களை பணி அமர்த்த வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


செய்தி தொகுப்பு : நெல்லை உஸ்மான்.

Monday, March 24, 2008

ஈமானில் உறுதி வேண்டும்-அலி அக்பர் உமரி வீடியோ

"ஈமானில் உறுதி வேண்டும்"

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

Al-Sheikh. Ali Akbar Umari.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா


கடந்த 22.03.2008 அன்று நெல்லை மாவட்டம், ஏர்வாடி ஓ.கே.திருமண மண்டத்தில் ஏர்வாடி த.மு.மு.க.மகளிர் பிரிவு சார்பாக பெண்கள் இஜ்திமா சகோதரி பாத்திமா தலைமையில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழச்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இதில் வரதட்சணை, இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏர்வாடி சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதன் முடிவில் பெண்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகளை தீவிரமாக எதிர்த்து போராடுவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க மத்திய அரசை கோருவது, ஏர்வாடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக் கோருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏர்வாடி த.மு.மு.க.வினர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி: நெல்லை உஸ்மான்.

Thursday, March 20, 2008

கடவுளின் தூதர் முகம்மது நபி (வீடியோ)

"கடவுளின் தூதர் முகம்மது(ஸல்)"

பொறியாளர் ரஃபீக் ஜக்கரியா அவர்கள்

Engineer. Rafiq Zakariya


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



பொறியாளர் ரஃபீக் ஜக்கரியா அவர்கள்

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம்

குடும்பம்

முஹம்மது (ஸல்) அவர்களின் கண்ணியமிக்க தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். இவர் அப்துல்லா முத்தலிபின் மகன் ஆவார். இவர்களுடைய வம்சாவளித் தொடர் ஏறத்தாழ அறுபது தலைமுறைகளைக் கடந்து நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் nருமானார் நபி (அலை) அவர்களைச் சென்றடைகிறது. அண்ணலாருடைய குலத்தின் பெயர் குறைஷ் என்பதாகும். இது அரபுக் குடும்பங்கள் அனைத்திலும் மிகுந்த கண்ணியமும் சிறப்பும் வாய்ந்த தாகக் கருதப்பட்டது. அரபுகளின் வரலாற்றில் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கண்ணியத்திற்குரியவர்களாயும் செல்வாக்குடையவர்களாயும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தனர். எடுத்துக்காட்டாக நஸ்ரு, ஃபத்ஹ்ரு, குசை பின் கிலாப் ஆகியோர். குசை தமது காலத்தில் புனித கஅபாவின் நிர்வாகப் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். இவ்விதம் அவருடைய மதிப்பு இன்னும் அதிகரித்து விட்டது. குசை பெரும் பணிகள் பல ஆற்றினார். எடுத்துக்காட்டாக ஹஐ; பயணிகளுக்கு நீர் புகட்டவும் அவர்களுக்கு விருந்துபசாரம் செய்யவும் ஏற்பாடு செய்தார். இந்தப் பயணிகளை குசைக்குப் பின்னர் அவரது குடும்பத்தார் செய்து வந்தார்கள். இந்த திருப்பணிகளைச் செய்து வந்தாலும் இறையில்லம் கஅபாவின் நிர்வாகப் பொருப்பாளர்களாக இருந்து வந்த காரணத்தாலும் குறைஷிகளுக்கு அரபுகள் அனைவரிடையேயும் கண்ணியமும் முக்கியத்துவமும் கிடைத்துவிட்டிருந்தது.

பொதுவாக அரபுகளிடையே கொலை. கொள்ளை, ஆகியன பரவலாக வழக்கிலிருந்து வந்தன. அரபு நாடு முழவதும் பாதைகள் பாதுகாப்பாய் இருக்கவில்லை ஆனால் புனித காபாவுடன் இருந்த தொடர்பின் காரணத்தாலும், ஹஐ; பயணிகளுக்குச் சேவை செய்து வந்த காரணத்தாலும் குறைஷிகளின் வானிவக் குழுக்களை மட்டும் எவரும் கொள்ளை அடிப்பதில்லை. அவர்கள் அச்சமின்றித் தம் வாணிப பொருட்;களை ஓரிடத்திதிலிருந்து மற்றோர் இடத்திற்க்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

அபூலஹப்

அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பத்து அல்லது பன்னிரண்டு புதல்வர்கள் இருந்தனர். ஆனால் நிராகரிப்பு அல்லது இஸ்லாத்தின் காரணத்தால் அப்பன்னிருவரில் ஐந்து பேர் மிகப் பிரபலமானவர்களாய் திகழ்கின்றனர். ஓருவர் அண்ணலாரின் கண்ணியத்திற்;குறிய தந்தையாரான அப்துல்லா அவர்கள். இரண்டாமவர், இஸ்லாத்தைத் தழுவாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அண்ணலாறை பராமரித்து வந்த அபூதாலிப் அவர்கள். மூன்றாமவர் ஹம்ஸா(ரலி) அவர்கள். நான்காமவர் அப்பாஸ் (ரலி) அவர்கள் அண்ணலாரின் இந்த இரு தந்தையரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும் இஸ்லாமிய வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றனர். ஐந்தாமவன் அபூலஹப். இவன் இஸ்லாத்தின் வரலாற்றில் இஸ்லாத்துடன் பகைமை பாரட்டும் போக்கிற்கு மிகவும் பிரசித்தி பெற்றவனாவான்.

ஆப்துல்லாஹ், ஸஹ்ரா குலத்தைத் சேர்ந்த வஹ்ப் பின் அப்துமனாஃப் என்பவரின் மகள் ஆமினாவை மணந்துக் கொண்டார். குறைஷிக் குடும்பத்தில் இந்த ஆமினா பெரும் சிறப்பு வாய்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார். துpருமணத்தின்போது அப்துல்லாஹ்வின் வயது ஏறத்தாழ பதினேழு. திருமணத்திற்குப் பிறகு குடும்ப மரபுக்கேற்ப மூன்று நாட்கள் வறை அப்துல்லாஹ் தமது மாமியார் வீட்டில் இருந்தர். அதன் பிறகு தமது ஊரான 'மக்கா' திரும்பினார்.

இரண்டு மாதம் களித்து வாணிபத்திற்காக ஷாம் (சிரியா) தேசம் சென்றுவிட்டார். தம் வணிகப் பயணத்திலிருந்து திரும்பி வரும்போது மதீனா நகரில் நோய்வாய் பட்டு அங்கேயே இறப்பெய்திவிட்டார். அப்போது அன்னை ஆமினா அவர்கள் கருவுற்றிருந்தார்கள்.

பிறப்பு

ரபீஉல் அவ்வல் மாதம் 9ஆம் தேதி திங்கட் கிழமை - கி.பி. 571 ஏப்ரல் 20ஆம் தேதியின் பாக்கிய மிக்க அந்தக் காலை நேரத்தில்தான்- எவருடைய வரவால் உலகம் முழவதிலும் மண்டிக்கிடந்த இருள்கள் அனைத்தும் அகல வேண்டியிருந்ததோ, இறுதி நாள்வரை இப்பூமியில் வசிக்கும் மாந்தர் அனைவருக்கும் இப்பேரண்டத்தின் அதிபதியாம் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையான நேர்வழியின் வெளிச்சம் எவரால் கிடைக்க வேண்டியிருந்ததோ அந்தப் பெரும்பேறுடைய மாமனிதர் பிரந்தார். அவர் தந்தையோ அவர் பிறப்பதற்கு முன்பே இறையடி சேர்ந்து விட்டிருந்தார். எனவே அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப், 'முஹம்மத்' என்று பெயர் சூட்டினார்.

வளர்ப்பும் குழந்தைப் பருவமும்

அண்ணலாருக்கு அவர்களுடைய கண்ணியத்திற்குரிய தாயார் ஆமினா அவர்களே முதன்முதலாகப் பாலூட்டினார்கள். அவர்களுக்குப் பின் அபூலஹபின் பணிப்பெண் சுவைபா பாலூட்டினார்கள். அந்தக் காலத்தில் நகரத்தின் பிரமுகர்களும் செல்வந்தர்களும் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டிடவும் அவர்களை வளர்த்திடவும் கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இருந்த செவிலித்தாய்களிடம் அனுப்பி வந்தனர். அவ்விடங்களிலுள்ள திறந்த வெளிகளின் தூய்மையான காற்றை சுவாசித்த வண்ணம் வசித்து, குழந்தைகள் ஆரோக்கியத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் மிகத் தூய்மையான அரபி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான் இவ்வாறு செய்துவந்தனர். அரபு நாட்டின் கிராமங்களில் பேசப்படும் மொழி, நகரங்களில் பேசப்படும் மொழியைவிட மிக அதிகத் தூய்மை உடையதாகவும் சிறந்ததாகவும் கருதப்பட்டு வந்தது. மேற்சொன்ன மரபுக்கேற்ப கிராமத்துப் பெண்கள் நகரத்திற்கு வந்து, அங்குள்ள குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள்.

இவ்வாறே அண்ணலார் (ஸல்) பிறந்த சில நாட்களுக்குப் பிறகு ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த சில பெண்கள் வளர்ப்புக் குழந்தைகளைத் தேடி மக்கா நகரத்திற்கு வந்தார்கள். அவர்களிடையே ஹலீமா சஅதிய்யா என்னும் பெண்மணியும் இருந்தார். இவர் வேறெந்தக் குழந்தையும் கிடைக்காத நிலையில் நிர்ப்பந்தமாக ஆமினாவின் அனாதைக் குழந்தையையே எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்ட நற்பாக்கியம் பெற்ற பெண்மணி ஆவார்.

ஈராண்டுகளுக்குப் பிறகு ஹலீம் சஅதிய்யா அண்ணலாரைத் திரும்பவும் அழைத்துவந்தார். ஆனால் அந்த நேரத்தில் மக்கா நகரில் ஏதோ ஒரு நோய் பரவியிருந்தது. எனவே ஆமினா அவர்கள் அண்ணலாரை மீண்டும் செவிலித்தாய் ஹலீமாவுடன் மீண்டும் கிராமத்துற்கு அனுப்பி விட்டார்கள் அங்கு அண்ணலார் (ஸல்) ஏறத்தாழ ஆறு வயது வரை இருந்தார்கள்.

அண்ணலாரின் ஆறாவது வயதில் அவர்களுடைய அன்னையார் மதீனாவுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். அநேகமாக தமது கணவரின்அடக்கத் தலத்தை சந்திப்பதற்காக அங்கு அவர்கள் சென்றிருக்கலாம். ஆல்லது அங்கிருக்கும் தமது உறவினர் எவறையாவது சந்திப்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கலாம். ஆன்னை ஆமினா அவர்கள் அங்கு ஏறத்தாழ ஒரு மாதம் வரை தங்கியிருந்தார்கள். மதீனாவிலிருந்து திரும்பும்போது வழியில் அபுவா என்னும் இடத்தில் அன்னை ஆமினர் அவர்கள் காலமாகி விட்டார்கள் அங்கேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டாக்கள்.

அன்னையின் மறைவிற்குப் பின்னால் அண்ணலாரைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பை அப்துல் முத்தலிப் அவர்கள் ஏற்றார்கள். அப்துல் முத்தலிப் அவர்கள் அண்ணலாரை எப்போதும் தம்முடனேயே வைத்திருப்பார்கள். அண்ணலாரின் எட்டாவது வயதில் அப்துல் முத்தலிப் அவர்களும் இறந்து விட்டார்கள். இறக்கும் தருவாயில் அவர்கள், தமக்குப்பின் அண்ணலாரைப் பராமரிக்கும் பொறுப்பை தமது புதலாவர் அபூதாலிப் அவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். அபூதாலிப் அவர்களும் அண்ணலாரின் தந்தை அப்துல்லாஹ் அவர்களும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஆவர். இந்தக் காரணத்தாலும் அபூதாலிப் அவர்கள் அண்ணலாரின் மீது அளப்பரிய நேசம் கொண்டிருந்தார்கள். அண்ணலாரின் முன்பு தம்முடைய குழந்தைகளைக் கூடப் பொருட்படுத்துவதில்லை. உறங்கும்போதும் அண்ணலாருடன் தான் உறங்குவார்கள். வெளியே செல்லும்போது அண்ணலாரை உடன் அழைத்துக் கொண்டுதான் செல்வார்கள்.

அண்ணலாருக்குப் பத்து அல்லது பனனிரண்டு வயதிருக்கும். அப்போது அவர்கள் சமவயதுடைய சிறுவர்களுடன் சேர்ந்து ஆடு மேய்த்தும் இருக்கின்றார்கள். அரபு நாட்டில் இந்த ஆடு மேய்க்கும் பணி இழிவானதாகக் கருதப்படவில்லை. கண்ணியமும் செல்வாக்கும் மிக்க குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்கூட ஆடு மேய்த்து வந்தார்கள்.

அபூதாலிப் வாணிபம் புரிந்து வந்தார். குறைஷிகளின் வழக்கப்படி ஆண்டுக்கொருமுறை சிரியா தேசத்திற்க்குச் செண்றுவந்தார். அண்ணலாருக்குப் பன்னிரண்டு வயதிறுக்கும்போது அபூதாலிப் சிரியா தேசத்திற்;குப் பயணம் செல்ல முற்பட்டார். பயணம் செய்வதில் இருக்கும் சிரமங்களைக் கருதி அண்ணலாரைத் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஆயினும் அழைத்துச் செல்லவில்லை என்றால் அண்ணலாரின் உள்ளம் நோகும் என்பதை உணர்ந்தார். அவ்வாறே அண்ணலார் அபூதாலிப் அவர்களை மறித்து, கட்டிப்பிடித்து உடன் புறப்பட முறன்டு செய்தார்கள். எனவே அவர்களைத் தம்முடன் அழைத்துச் சென்றார் அபூதாலிப்.

இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து!.

இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து!.

விழுப்புரம் மாவட்டம் எறையூர் வன்னிய கிறித்தவர்கள் மற்றும் தலித் கிறித்தவர்கள் அதிகமாக வாழும் ஊர். இவ்வூரில் வன்னிய கிறித்தவர்களுக்கும், தலித் கிறித்தவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக தொடர்ந்து வந்த மனப்புழுக்கம், ஒரு பேரிடியாக வெடித்து ரத்த மழையை கொட்டியிருக்கிறது.

எறையூரில் வன்னியர்கள் மத்தியில் வாழும் தலித் கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உயர் சாதி கிறித்தவர்கள் நடுவில் வாழும் தலித் கிறித்தவர்களுக்கு அவலமும், கேவலமும் தொடரத்தான் செய்கின்றன. இதன்காரணமாக பல ஊர்களில் தலித் கிறித் தவர்கள் தங்களுக்கென தனி தேவாலயங்களை கட்டிக் கொள்கிறார்கள். அதுபோலவே தனி கல்லறைத் தோட்டங்களும் உண்டு.

தலித் கிறித்தவ மக்கள் மத்தியிலும் கூட, பள்ளர் கிறித்தவர், பறையர் கிறித்தவர், அருந்ததியின கிறித்தவர் என்றும், இன்னும் பலவுமான அடுக்குகளில் பிரிவுகளும், கசப்புணர்வு களும் இருக்கத்தான் செய்கின்றன.

16ம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழகம் வந்த கிறித்தவ மத போதகர் களின் ஈர்ப்பால் தமிழகத்தில் சொற்பமானவர் கள் கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள். அக்காலத்தில் கிறித்தவத்திற்கு மதம் மாறியவர் கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிர்முகாமாக கிறித்தவ மதத்தைப் பார்த்ததில்லை. ஆதிக்க சாதியினரும், அடக்குறைக்கு உள்ளான சாதி யினரும் சமகாலத்தில்தான் மதம் மாறினார்கள் கூடவே, அவர்கள் தங்கியிருந்த இந்து மதத்தில், தேங்கியிருந்த சாதிய எண்ணமும், வடிவமும் எந்த சிதைவுக்கும் உட்படாமல் மதம் மாறிக் கொண்டன. இதனால் வழிபாட்டு முறை, தேவாலய உரிமை, குடியிருப்பு விதிமுறைகள், சமூக பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் இருந்துவந்த உணர்வுப்பூர்வமான சாதியம் கிறித் தவத்திலும் தொற்றிக் கொண்டது.

சடங்குகளும், சம்பிரதாயங்களும், மதகுரு மார்களுக்கு அளிக்கப்பட்டுவந்த கடவுளுக்கு இணையான கௌரவமும் இந்து மதத்தில் இருப்பதைப் போன்றே, கிறித்தவத்திலும் தொடர்ந்து வந்ததால், சமூக அமைப்பில் மாற்றம் உண்டாக வழியில்லை.

இதனால்தான், இஸ்லாம் என்ற தளத்தில் இந்த சாதிப் புற்று வளராமல் இருக்க மிக விழிப்புணர்வுடன் முஸ்லிம் அமைப்புகள் செய லாற்றி வருகின்றன. முஸ்லிம் சமூகத்தில் தலித் முஸ்லிம், தாழ்த்தப்பட்ட முஸ்லிம் என்ற சொல் அடுக்குகள் சொருகப்படுவதை மிகக் கவனமாக முஸ்லிம்கள் எதிர் கொண்டு வருகின்றனர். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மாநில சட்டசபைக்கான பொதுத்தேர்தலில், தமுமுக வைத்த முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக் கீட்டை தருவதாக ஜெயலலிதா வாழ்வுரிமை மாநாட்டில் வாக்குறுதி அளித்தார். பின்னர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'தலித் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு' என்று விஷமத் தனம் செய்தார். நாம் விழித்துக் கொண்டு கேள்வி எழுப்பிய போது, அச்சுப் பிழை என்று தன் 'நச்சு' எண்ணத்தை மாற்றிக் கொண்டார். திருத்தம் செய்கிறேன் பேர்வழி என்று, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ரத்து செய்தார். சமுதாய முன்னேற்றத்திற்காக சமூகத்தைப் பிளவுபடுத்துவதை இஸ்லாமிய நெறி ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது. முஸ்லிம் சமுதாயமும் ஏற்காது. சமத்துவத்தை பரப்பவும், நிலை நாட்டவும்தான் இஸ்லாம் உலகளாவிய பணியாற்றி வருகிறது. மனித மனங்களின் உள் உணர்ச்சிக்கு இந்த மார்க்கத்தில் என்றுமே இடம் இருப்பதில்லை. இறைகட்டளையை நடை முறைப்படுத்துவது மட்டுமே சமூக நடவடிக் கைகளின் முதல் திட்டம். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையே மனித குலத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது தான், யூதமும், கிறித்தவமும், ஆரியமும், இந்துத்துவமும் மனிதகுல சமத்துவத்துக்காக உருவான மதங்கள் என்று எந்தப் பதிவுகளும் இல்லை. சமத்துவமாக வாழ்ந்த ஒரு காலக்கட்டம் இருந்ததாக வரலாறும்கூட இல்லை.

இதனால்தான் தமிழகத்திலும், கிறித்தவ மதமாற்றத்தில் கரைந்து போன தலித்துகள் உயர் சாதி கிறித்தவர்களுடன் இரண்டற கலந்து போக இயலவில்லை. காரணம், தலித்துகளது கிறித்தவ மத மாற்றம் என்பது சமூக விடுதலைக்கான நடவடிக்கையாக ஒரு போதும் இருந்ததில்லை. அதை கிறித்தவ திருச்சபைகளும் ஒப்புக் கொண்டதில்லை. கிறித்தவ சமூகம் உருவான காலக்கட்டத்தில் இருந்தே உட்பூசல்களும், மோதல்களும் அதன் உள்கட்டமைப்பில் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. அது இன்று வெளிப்பட்டிருக்கிறது.

இந்து மதத்தில் இருக்கும் தலித்துகளுக்கு சமூக விடுதலை வேண்டி மாநில, தேசிய அளவில் போராட்டங்களை தலித் அமைப்புகள் வீரியமாக நடத்த தொடங்கியதன் பின்னணியில் தான், கிறித்தவ சமுதாயத்தில் தனித் தொகுதியாக நிற்கும் தலித் கிறித்தவர்களும் உரிமை குரல் எழுப்பத் தொடங்கினர். இந்து மதத்தில் இருந்து வெளியேறும் பொழுது எந்த மதத்திற்குச் சென்றாலும் சமூக விடுதலை கிடைக்கும் என்று எண்ணுவது ஒரு கற்பனை அல்லது திரிபுவாதம். மத நம்பிக்கை ஆதிக்க சக்திகளின் முகமூடியாக இருக்கும் வரை ஒடுக்கப்பட்டவனின் தப்பிப் பிழைக்கும் ஓட்டம் ஓர் தொடர் போராட்ட மாகத்தான் இருக்கும். இஸ்லாம் மட்டுமே அந்த துப்புரவுப் பணியை திறம்பட செய்கிறது. காரணம், இஸ்லாம் தன் நெறியை ஒப்புக் கொள்பவர்களின் சொல், செயல், எண்ணம், பெயர், நடை, உடை, பாவனை, உறவு முறை, உணவு முறை, தோற்றப் பொலிவு, வாழிடம், வாழ்நிலை, அங்க சுத்தி, சுகாதாரம், உடல் நலம் என அத்தனை திக்குகளிலும் ஒரு மனிதனை மறுவடிவம் செய்கிறது. ஒரு மனிதனிடத்தில் இத்தனை மாற்றங்களையும் மொத்தமாக செய்து முடிக்க இஸ்லாம் தவிர்த்து எந்த கொள்கையிலும் சக்தி இல்லை.

அதனால்தான் தந்தை பெரியார், 'இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து' என பரிந்துரைத் தார். அவரது அன்றைய பரிந்துரை இன்றைக் கும், என்றைக்கும் இம்மண்ணுக்குத் தேவையாக இருக்கிறது! ஒரே இறைவன் உலக மக்களுக் காக வழங்கிய இஸ்லாமிய நெறியில்தான் உண்மையான சமத்துவம், சகோதரத்துவம் அடங்கியுள்ளது. எனவே சமத்துவம் தேடும் மக்களை நோக்கி தன் கரங்களை விரித்து 'இணைய வாரீர்' என இஸ்லாம் வரவேற்கிறது.

திருநெல்வே­ நகரம், 51வது வார்டு கிளை சார்பில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமிற்கு நகர மருத்துவர் அணிச் செயலர் கபீர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஐ. உஸ்மான்கான் முகாமை தொடக்கி வைத்தார்.

மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலர் தாஹிர், நிர்வாகிகள் ஜின்னா, வாஹித்அ­, சாதிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முகாமில் 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

Wednesday, March 19, 2008

அன்றாட வாழ்வே வழிபாடாக (வீடியோ)

"அன்றாட வாழ்வே வழிபாடாக"

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Monday, March 17, 2008

இறையச்சம் (VIDEO) - மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

"இறையச்சம்"

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Sunday, March 16, 2008

வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு தடுத்த முஸ்லிம்கள் மீது தாக்குதல், பொய்வழக்கு கண்டித்து MNP ஆர்ப்பாட்டம்

அநீதிக்கெதிராக ஆர்பரிக்கும் மனிதநீதிப்பாசறையினர்


16.03.2008 அன்று காலை 11 மணியளவில் மனித நீதிப் பாசறை மதுரை மாவட்ட தலைவர் திரு. ஏ.முகம்மது காலித் அவர்க் தலைமையில் மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாயநல்லூர் கிராமத்தில் ஃபாசிச வெறியர்களான ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி தீவிரவாத கும்பல் மரணமடைந்த பென்னின் உடலை அடக்க சென்ற அப்பாவி முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலைவெறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் தாக்குதலுக்குள்ளான அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ள மதவெறி படித்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. டி.எஸ் அன்பு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதியோர்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யக் கோரியும் மதுரை தெற்கு வாசல் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நீதிப் பாசறையி்ன் மாநில பேச்சாளர் திரு. கே. சையது இப்றாஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். சட்டக் கல்லூரி மாணவர் திரு. ராஜா முகம்மது நன்றியுரை கூறினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளில் இருந்தும் நூற்றுக்காணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



திருவாலவாயநல்லூர் முஸ்லிம் ஜமாத்தினர் அனைவரும் மதவெறி கொண்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. அன்பு அவர்களால் பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தப்பட்டிருப்பதால் ஜமாத்தின் முன்னால் செயலாளர் திரு. சேட் அவர்கள் நடந்த சம்பவம் குறித்து நமக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது. உடனடியாக வக்ஃப் வாரியத் தலைவர் திரு. ஹைதர் அலி அவர்களும், அரசில் இசுலாமியர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமுமுக வும் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்டு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்த ஃபாசிச வெறியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசை வலியுருத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


இறைவன் மிகப் பெரியவன்
முஸ்லிம் ஜமாத்

திருவாலவாயநல்லூர் - 625221
திருவாலவாயநல்லூர் அஞ்சல் -
வாடிப்பட்டி தாலுகா - மதுரை மாவட்டம்


மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாயநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான அடக்கஸ்த்தளமான கப்ரஸ்தான் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தபோது ஆர்.எஸ்.எஸ் ஃபாசிச சிந்தனை கொண்ட சில விஷமிகளா எதிர்த்து வந்தனர். இந்த எதிர்ப்பை மீறி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இது தற்போது ஆர்.டி.ஓ விசாரனையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் 14.03.2008 அன்று முஸ்லிம் பெண்மணி ஒருவர் வஃபாத்தானார் (மரணித்தார்). அந்த ஜனாஸாவை(பிரேதத்தை) 15.03.2008 அன்று அடக்கம் செய்ய எடுத்துச் சென்றோம். அப்போது அர்.எஸ்.எஸ மற்றும் இந்து முன்னணியை சோந்த சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 1 சிறுவார் உட்பட 5 முஸ்லிம்க் படுகாயமடைந்துள்ளனர்.

இதன் பின்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் அன்பு, ஜமாத் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் உட்பட 28 முஸ்லிம்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். இதில் பலர் வயோதிகர்கள். ஆனால் எதிர் தரப்பில் ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவு அன்பு இந்து முன்னணிக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு நடக்கும் இத்தகைய கொடுமைகளையும் பல அதிகாரிகளிடம் கொண்டு சென்றுள்ளோம்.


குறிப்பாக வக்ஃபு வாரியத்திடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்று பல மாதமாகி விட்டது வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியை நேரடியாக சந்தித்து வக்ஃபு நிலத்தை மீடு்க வேண்டும் என்று மனு நாம் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெறியவில்லை.


எனவு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பொய்வழக்குகளையும் கவணத்தில் கொண்டு பள்ளிவாசல் இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் ஒருதலைப்பட்சமாக நடக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ் அன்பு மீது நடவடிகடகை எடுக்கவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஜமாத்தின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.


இவன்
சேட்
முன்னாள் செயலாளர்

Saturday, March 15, 2008

ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவி - மஸ்கட் அமைப்பு வழங்குகின்றது

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தோறும் தாய்த்தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு (Diploma), பட்டப் படிப்பு (Degree), தொழில் கல்வி, மார்க்க கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ - மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Mark Sheet) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிகக இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

TAMAM
P.O BOX 1263
MUTTRAH - 114
SULTANATE OF OMAN


விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வுண்டிய கடைசி தேதி : 30-05-2008

Thursday, March 13, 2008

சமூக முன்னேற்றத்தில் பென்களின் பங்கு (VIDEO)

"சமூக முன்னேற்றத்தில் பென்களின் பங்கு"

அஷ்ஷேய்க். மன்சூர் மதனி அவர்கள்

Al-Sheikh. Mansoor Madhani.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். மன்சூர் மதனி அவர்கள்

Wednesday, March 12, 2008

அன்புள்ள அன்னையர்க்கு...

அன்புள்ள அன்னையர்க்கு


அம்மா.. .. ..!! அஸ்ஸலாமு அலைக்கும்!!! வ அலைக்கும் ஸலாம்!! யா! அப்துல்லா!!

அங்கே மக்கத்துல் முகர்ரமாவின் மதில்கள் மீதும், அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் வீரர்கள் மீதும், ஹஜ்ஜாஜின் படைகளின் கவன் கற்கள் மழையாகப் பொழிந்து கொண்டிருக்கும் வேளையில், உனக்கு இங்கு என்ன வேலை மகனே!? என அந்த மூதாட்டி, கணீரென்ற குரலில் தன் மகனை நோக்கி ஒரு கேள்விக் கணையை வீசுகின்றார். அந்த மூதாட்டியிடம் இஸ்லாமிய வீரத்தின் அடித்தளம் உறுதியாக இருந்த காரணத்தால், புறக்கண்ணை இழந்த நிலையிலும் அகக்கண் ஒளி வீசிக் கொண்டிருந்ததை, அவரது கேள்விக்கணை உணர்த்தியது. ஆம்!! அவரது ஈமானின் உறுதியை இஸ்லாத்தினுடைய ஆரம்ப கட்டத்திலேயே முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் போற்றிக் கூறி, அவரைப் பெருமைப்படுத்தியும் இருக்கின்றார்கள். அந்த ஈமானிய நெஞ்சத்திற்குச் சொந்தக் காரர் வேறு யாருமல்ல. அஸ்மா பின்த் அபுபக்கர் அவர்களே!!

தாயின் கேள்விக்கணையின் தாக்கத்தில் இருந்து சிறிது சுதாரித்தபின், தாயே!! உங்களிடம் சில அறிவுரைகள் பெற்றுச் செல்லவே வந்திருக்கின்றேன். என்னிடம் அறிவுரை பெற்றுச் செல்ல வந்திருக்கின்றாயா? எதைப்பற்றி? என மீண்டும் தொனியில் வேகம் மாறாமல் மகனை நோக்கி கேள்விக்கணையை வீசினார் அஸ்மா (ரலி) அவர்கள்.

ஹஜ்ஜாஜ் அவர்களின் மீதுள்ள பயத்தின் காரணமாக அல்லது அவர் அறிவித்த பேரங்களுக்கு ஆசைப்பட்டு, எல்லோரும் என்னை தனிமையில் விட்டு விட்டனர். என்னுடைய குடும்பமும், பிள்ளைகளும் கூட என்னை விட்டுச் சென்று விட்டார்கள். என்னுடன் உறுதியாக நிலைகுலையாமல் இருக்கும் சின்னஞ்சிறு கூட்டமோ, ஹஜ்ஜாஜ் அவர்களின் படையை இன்னும் சில மணிநேரங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலையில், பனூ உமைய்யா கோத்திரத்தவர்களின் தூதுவர்கள், இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் தருவதாகவும், அதற்குப் பதிலாக அப்துல் மாலிக் இப்னு மர்வானைக் கலிபாவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், என்னிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதைக் கேட்ட அஸ்மா (ரலி) அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. யா! அப்துல்லா.. ..!! இது உன்னுடைய சொந்த விவகாரம். எது நல்லது என்று உனக்கு நன்றாகத் தெரியும். நீ நேர்வழியில் இருக்கின்றாய் என்பதை உணர்வாயானால், உண்மையின் பக்கமே நீ நிலைத்திரு. உன்னைப் பாதுகாப்பதற்காக தன்னுடைய இன்னுயிரையும் தந்தார்களே அவர்களைப் போல உன்னுடன் போரிடுபவர்களுக்கும் நீ பாதுகாப்புக் கொடு. இதை விட்டு விட்டு உலக ஆசைகளுக்கு அடிபணிந்து விடுவாயானால், என்ன கைசேதமடா மகனே! நீ உன்னை மட்டுமல்ல, உன்னை நம்பி இருக்கும் உன்னுடைய தோழர்களையும் அல்லவா அழித்து விடப்பார்க்கின்றாய்.

அம்மா.. .. என்னை அவர்கள் கொன்று விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!!

ஹஜ்ஜாஜின் படைக்கு முன் நீ அடிபணிவதை விட, நீ கொல்லப்படுவதே மிகச் சிறந்தது மகனே!! என்ன..!! பனு உமைய்யாக்களின் அடிவருடிகள் சிலர் உன் தலையை வைத்து சிறிது விளையாடக் கூடும்!!

என்னுடைய மரணத்தைப் பற்றி நான் அஞ்சவில்லை. அவர்கள் என்னுடைய உடலை அங்கஹீனப்படுத்தி விடுவார்களோ என்று தான் பயப்படுகின்றேன். மகனே! மரணத்திற்குப் பின் மனிதன் பயந்து என்ன ஆகப் போகின்றது. அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை உரிப்பதனால், ஆட்டுக்கு என்ன வலியா தெரியப் போகின்றது!!?

தன் தாயைப் பற்றிய பெருமிதம் பொங்க!! தாயே!! உங்களை என் தாயாராகப் பெற்றதே நான் செய்த பெரும்பாக்கியம். இது வரை என்னுடைய செவிகள் எதைக் கேட்டதுவோ, அவற்றைக் கேட்கவே உங்கள் முன் வந்தேன். இறைவன் என்னுடைய மனதை அறிவான். பயந்தோ அல்லது பலவீனம் கொண்டோ கோழையாக உங்கள் முன் வரவில்லை. இந்த உலக ஆதாயங்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும் என் மனம் தடுமாறவில்லை, மாறாக இறைவன் தரவிருக்கின்ற அளவில்லாத அருட்கொடைகளின் மீதே என் மனம் விருப்பம் கொண்டுள்ளது, என்பதற்கு அவனே சாட்சியாக இருக்கப் போதுமானவன் தாயே!! இப்பொழுது, உங்கள் மனதிற்கு எது குளிர்ச்சியைத் தரவிருக்கின்றதோ அதைச் செய்யவே புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். நான் கொல்லப்பட்டு விட்டால், நீங்கள் வருத்தமடைய வேண்டாம். மாறாக, எனக்காக இறைவனிடம் துஆச் செய்யுங்கள். தாயே!!

என்ன சொன்னாய். யா! அப்துல்லா!! வருத்தமடைவேனா!? நீ அற்ப காரியத்திற்காகக் கொல்லப்பட்டால் தான் இந்தத் தாயுள்ளம் வருத்தமடையுமே ஒழிய! வீர மரணத்திற்கு இந்த தாய் வருத்தப்பட மாட்டாள். தாயே! உங்கள் மகன் வீணுக்காக பிறருக்கு ஒத்துழைப்பவனோ அல்லது அக்கிரமம் செய்வதற்கு உடன்படுபவனோ அல்லது அநீதியிழைப்பதற்காகவோ அல்லது ஒரு முஸ்லிம் அல்லது ஒரு முஸ்லிம் அல்லாதவனுக்குத் துன்பம் இழைப்பதற்காகவோ உடன்படுபவன் அல்ல, மாறாக, அந்த இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக வேண்டி நற்செயல்கள் புரிவதற்காக மட்டுமே உங்கள் மகன் போரிடுவான் தாயே!! என்னை நீங்கள் குற்றம் பிடிப்பீர்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. உங்களுடைய மனதை திடப்படுத்திக் கொள்ளச் செய்வதற்காக அன்றி, வேறெதற்காகவும் நான் இங்கு வரவில்லை என்பதை இறைவன் மிக அறிந்தவன்.

இறைவன் என்ன விரும்புகின்றானோ அதன் மீதும், நான் என்ன விரும்புகின்றேனோ அதன் மீதும், உன்னுடைய செயல்பாட்டை அமைத்துக் கொள். இறைவனுக்கே எல்லாப் புகழும். சற்று என்னருகில் நெருங்கி வா மகனே!! உன்னுடைய உடலையும், உன்னுடைய மேனியின் நறுமணத்தையும் ஒரு முறை நான் நுகர்ந்து கொள்கின்றேன். இதுவே நானும் நீயும் ஆரத்தழுவும் கடைசிச் சந்திப்பாகவும் இருக்கலாம் அல்லவா? அப்துல்லா தன் தாயின் அருகில் சென்று முழந்தாளிடுகின்றார். கண் தெரியாத அந்தத் தாயுள்ளம் தன் மகனின் தலையையும் உடலையும் ஒரு சேரத் தழுவுகின்றது. அஸ்மா (ரலி) அவர்களின் கைகள், தன் மகனின் தலை, முகம், கழுத்து என அலை பாய்ந்து கொண்டிருக்க, உதடுகள் தன் மகனின் உச்சி முதல் ஆரம்பித்து, முத்த மழை பொழிந்து கொண்டிருக்க, திடீரென, தன் மகனை விட்டு விட்டு எட்ட நகர்ந்து விடுகின்றார் அஸ்மா (ரலி) அவர்கள். யா! அப்துல்லா!! நீ அணிந்து கொண்டிருப்பது எது? மார்புக்கவசங்கள் தாயே!! என்கின்றார் அப்துல்லா!! மரணத்தை விரும்பக் கூடியவனுக்கு எதற்கு மார்புக் கவசங்கள் மகனே!! அதை கழற்றி விடு. மார்புக் கவசங்கள் உன்னுடைய வாள் வீச்சின் வேகத்தையும், போர்த் திறனையும் மட்டுப்படுத்தி விடும். அதற்குப் பதிலாக நீ இறந்தாலும், உன்னுடைய மறைவிடங்கள் வெளிப்படாத அளவுக்கு, இந்த கால் சட்டையை அணிந்து கொண்டு, போருக்குப் புறப்படு மகனே!! அப்துல்லா அவர்கள் தன்னுடைய தாயாரின் அறிவுரைகளைக் கேட்டு, மார்புக் கவசங்களைக் கழற்றி விட்டு, கால் சட்டையை அணிந்து கொண்டு, கஃபாவில் இருக்கும் தன்னுடைய தோழர்களை நோக்கிச் செல்ல, புறப்படத் தயாராகின்றார். இறுதியில், என்னுடைய தாயார் அவர்களே, உங்களுடைய துஆவில் என்னை நினைவு கூற மறந்து விடாதீர்கள் என்று கூறவும், அஸ்மா (ரலி) அவர்களின் கைகள் வானத்தை நோக்கி உயர்கின்றன. யா அல்லாஹ்!! அனைவரும் துயில் கொண்டிருக்கக் கூடிய அந்த நேரத்தில் உன்னுடைய அருளை வேண்டி நீண்ட நேரம் விழித்திருந்து, உனது அருளுக்காக அழுகின்றார்களே அவர்கள் மீது உன்னுடைய கருணையைப் பொழிவாயாக!! யா அல்லாஹ்!! மக்காவிற்கும் மதினாவிற்கும் இடையே தங்களது பயணத்தின் போது, யார் தாகித்;தும், பசித்தும் இருந்தார்களோ அவர்களுக்கும் நீ அருள்புரிவாயாக!! யா அல்லாஹ்!! உன்னுடைய பாதையில் என் மகனை அற்பணித்துள்ளேன். அவனுக்கு நீ எதனைப் பொருந்திக் கொண்டாயோ அவற்றை நான் புகழ்கின்றேன். என்னுடைய பொறுமைக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பதிலாக நீ எனக்கு நற்கூலி வழங்குவாயாக!! என்று தன்னுடைய பிரார்த்தனையை முடிக்கின்றார்கள்.

அன்றைய பொழுது சாய்வதற்குள், அப்துல்லாவின் உடல் மக்காவின் புழுதிகளில் தவழ்ந்து விடுகின்றது. அப்துல்லாவின் உடல் எதிரிகளால் கலுமரத்தில் தொங்க விடப்பட்டிருக்கின்றது என்ற செய்தி கேட்டு அஸ்மா (ரலி) அவர்கள் தன் மகனின் உடல் தொங்க விடப்பட்டிருக்கும் கலுமரத்தை நோக்கிச் செல்கின்றார்கள். ஹஜ்ஜாஜினுடைய ஆட்களிடம் போராடிப் பெற்று, தன் மகனது உடலை நல்லடக்கம் செய்து விட்டு, தன் மகன் இறந்த பத்தாவது நாளில், தன்னுடைய நூறாவது வயதில் அஸ்மா (ரலி) அவர்களும் இறந்து விடுகின்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அந்த வீரத்தாய் பெற்றெடுத்த அப்துல்லா பின் ஸுபைர் அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், அந்த வீரத்தாய் அஸ்மா (ரலி) அவர்கள் இன்றைய அன்னையர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றார்கள். இன்று இருக்கும் தாய்மார்களுக்கு உலக ஆசைகள் முன்னால் வந்து, தன் மகனை இறைவழியில் செல்வதிலிருந்து எவ்வாரெல்லாம் தடுக்கலாம் என்ற சிந்தனையிலேயே தங்களது நேரங்களைச் செலவழிக்கின்றார்கள். அதற்கும் மேலாக, நீ எங்கு வேண்டுமானாலும் போ, அது உன் இஷ;டம். எங்களது வாழ்வுக்கான பொருளாதாரத்தைச் சேர்த்து வைத்து விட்டு, நீ போவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற பதிலைத் தருகின்றார்கள். அன்றைய அஸ்மாக்களைப் பார்த்து இன்றைய அம்மாக்கள் திருந்துவார்களா?!!
www.a1realism.com

ஒரு முஸ்லிமின் தேசியம்

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்

ஆசிரியர் : ஷஹீத் செய்யித் குதூப் (ரஹ்)

மொழிப்பெயர்ப்பு : ஆ. குலாம் முஹம்மது, வெளியிடு : இலக்கியச்சோலை

ஒரு முஸ்லிமின் தேசியமும் அவனது இறை நம்பிக்கையும்


இஸ்லாம் மனிதர்களுக்கு மகத்தானதோர் வாழ்க்கை வழிகாட்டுதலை வழங்கிற்று. பண்பாடு நாகரிகம் அறிவியல் அத்தனையிலும் அது நேரானதோர் பாதையைப் போட்டுத்தந்தது. அதேபோல் இஸ்லாம் புதியதோர் மனித உறவையும் உறவின் முறையையும் வழங்கிற்று. இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் படி அனைத்து உறவுகளும் பிணைப்புகளும் அல்லாஹ்விடமிருந்து வருவதே. இஸ்லாம் மனிதர்களை அவர்களின் தான்தோன்றித்தனங்களிலிருந்து விடுவித்து இறைவனின் பக்கம் திருப்பிட வந்த மகத்தான மார்க்கம். இறைவன் ஒருவனே அவனே அனைத்தையும் படைத்து உணவளித்து வருகின்றான். அவனே பாதுகாவலன் அவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே மீண்டும் கொண்டு சேர்க்கப்படுவோம். இறைவன்மேல் கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் எழும் உறவை அழுத்தம் திருத்தமாக நிலைநாட்ட விரும்புகின்றது இஸ்லாம். ஏனைய உறவுகள் எல்லாம் இந்த உறவுக்கு முன் செல்லாக் காசாகி விடுகின்றன. இரத்த பந்தம் அல்லது இதர உறவுகள் என்பனவெல்லாம் அல்லாஹ்வின் அடிமைகள் என்ற இந்த உறவுக்கு முன் செயலிழந்தவையே. அல்லாஹ் கூறுகின்றான் :

(நபியே) எந்த ஜனங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் (மெய்யாகவே) விசுவாசங்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை (நேசிக்கமாட்டார்கள்). அவர்கள் தங்களுடைய மூதாதைகளாயிருந்த போதிலும் அல்லது தங்களுடைய சந்ததிகளாயிருந்தபோதிலும் அல்லது தங்களது பந்தக்களாயிருந்த போதிலும் அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காணமாட்டீர். இத்தகையோர்தாம் இவர்களுடைய இருதயங்களில் அல்லாஹ் விசுவாத்தைப் பதியவைத்துத் தன்னுடைய உணர்வைக் கொண்டும் இவர்களைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைக்கின்றான். சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்திவிடுகின்றான். அவற்றில் இவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வுடைய கூட்டத்தினர்தாம் சித்தியடைந்தோர்கள் என்பதை (நபியே நீர்) அறிந்துகொள்ளும் (அல்குர்ஆன் 58:22)

இந்த உலகத்தில் அல்லாஹ்வின் அணி ஒன்றே ஒன்று தான். மீதமுள்ளவையெல்லாம் இறைவனுக்கு எதிரியான ஷைத்தானின் அணிதாம். இந்த அணியினர் அனைவரும் கிளர்ச்சியாளர்களே. இந்த நிலையில் இறைவன் கூறுகின்றான்:

(உண்மை) விசுவாசிகள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) யுத்தம் புரிவார்கள். நிராகரிப்போரோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில் தான் யுத்தம் புரிவார்கள். ஆகவே ஷைத்தானுடைய நண்பர்களுடன் நீங்களும் யுத்தம் புரியுங்கள். (அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே என்று தயங்காதீர்கள்). நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலஹீனமானதே. (அல்குர்ஆன் 4:76)

அல்லாஹ்வை சென்றடைவதற்கு ஒரே வழிதான் உண்டு. ஏனையவை இறைவனிடம் கொண்டு செல்வதில்லை. நிச்சயமாக இது தான் என்னுடைய நேரான வழியாகும். ஆதனையே நீங்கள் பின்பற்றுங்கள். மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் பரிசுததவான்களாவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு நல்லுபதேசம் செய்தான் (அல்குர்ஆன் 6:153) மனித வாழ்க்கைக்கு நேரான உண்மையான வழி ஒன்றே ஒன்றுதான். அதுவே இஸ்லாம் ஏனையவையெல்லாம் அஞ்ஞானிங்களே. மௌட்டீகக் காலத்துச் சட்டங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கை கொண்ட மக்களுக்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விட அழகானவன் யார்? (அல்குர்ஆன் 5:50)

இந்த உலகில் பின்பற்றத்தக்க சட்டம் ஒன்றே ஒன்று தான். இந்த ஒரு சட்டத்திற்கு மட்டுமே மனிதனைக் கட்டுப்படுத்தும் தகுதி உண்டு. அதுவே ஷரீஅத் என்ற இறைவனின் சட்டம். இந்த ஷரீஅத் என்ற இறைவனின் சட்டம் அல்லாதவை அனைத்தும் சபலங்களே. (நபியே நேரான) மார்க்கத்தின் ஒரு வழியில் தான் நாம் உம்மை ஆக்கி இருக்கின்றோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றி நடப்பீராக. அறிவற்றவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். (அல்குர்ஆன் 45:18)

உண்மை சத்தியம் ஒன்றே ஒன்றுதான் ஏனையவையெல்லாம் தவறானவையே. இஸ்லாத்தின் இருப்பிடம் என்று பூமியில் ஒரே ஒரு இடந்தான் உண்டு. அதுதான் தாருல் இஸ்லாம் (இஸ்லாத்தின் பூமி) எனப்படுவதாகும். இந்த இடந்தான் இஸ்லாத்தின் ஆட்சி நிலைநாட்டப் பெற்ற இடம். அங்கே இறைவனின் சட்டங்களாம் ஷரீஅத் சட்டங்களே முழுமையாக ஆட்சி செய்யும். அங்கே அல்லாஹ் வகுத்து வழங்கிய வரையறைகள் அப்படியே பின்பற்றப்படும். அங்கே வாழ்பவர்கள் தங்கள் விவகாரங்களை வழக்குகளை அல்லாஹ்வும் அவன் ரசூலும் வழங்கியதைக் கொண்டே தீர்;த்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு விவகாரத்திலும் கலந்தாலோசித்துக் கொள்வார்கள். இந்தப் பகுதியைத் தவிர ஏனையபகுதிகள் தாருல் ஹர்ப் என்ற பகைமையின் நிலங்கள். ஒரு முஸ்லிம் இந்தப் பகைமையின் பூமியில் இரண்டே உறவுகளைத்தான் வைத்துக் கொள்ள முடியும். அவை உடன்படிக்கையின் கீழ் அமைதி அல்லது போர். எந்த நாட்டுடன் இப்படி ஒப்பந்தம் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றதோ அந்த நாட்டை இஸ்லாத்தின் இடம் பூமி என அழைத்திட முடியாது. நிச்சயமாக எவர்கள் விசுவாசங்கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தத்தம் செய்து யுத்தம் புரிந்தார்களோ அவர்களும் எவர்கள் அவர்களுக்கு (த்தங்கள் இல்லங்களில்) இடமளித்து வைத்துக் கொண்டு உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இத்தகையோர் ஒருவருக்கொருவர் நட்பில் மிக நெருங்கியவர்களாயிரு;ககின்றனர். ஆயினும் விசுவாசங்கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்படும் வரையில் நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்ல. எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நிங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நெருங்கியவர்களே (ஆகவே அவர்களில் சிலர் சிலருடைய பொருளைச் சுதந்திரமாக அடைய விட்டுவிடுங்கள்) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில் பூமியில் பெருங்கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும். எவர்கள் விசுவாசங்கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் புரிகின்றார்களோ அவர்களும் எவர்கள் இவர்களுக்கு இடமளித்து (த்தங்கள் இல்லங்களில்) வைத்துக்கொண்டு (இவர்களுக்கு)உதவியும் செய்கின்றார்களோ அவர்களும் தாம் உண்மையான விசுவாசிகள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு. கண்ணியமான ஆகாரமும் உண்டு. இதன் பின்னரும் எவர்கள் விசுவாசங்கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு உங்களுடன் சோந்து யுத்தம் புரிகின்றார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே. (இனி) அல்லாஹ்வுடைய வேதக்கட்டளைப் பிரகாரம் பந்துக்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றொருவருக்கு மிக நெரு;ஙகியவர்கள் ஆவார்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தோனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:72-75)

இஸ்லாம் இப்படி மிகவும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கிற்று. அதன் வழிகாட்டுதல்கள் எந்தச் சந்தேகமுமில்லாமல் முழுமையானவையாகவும் இருந்தன. மனிதனை ஒரு குறிப்பிட்ட குறுகிய நிலத்தோடு கட்டிப் போட்டிட விரும்பவில்லை இஸ்லாம். நிலம், நிறம், தேசியம், மொழி ஆகிய குறுகிய வட்டங்களிலிருந்த மீட்டு அவனை உலகம் தழுவிய மனித சமுத்திரத்தின் உறுப்பு என்றதொரு மகத்தான நிலைக்கு அது உயர்த்திற்று. ஒரு முஸ்லிம் எந்த நிலப்பகுதியோடும் எந்தக் குறிப்பிட்ட தேசியத்தோடும் கட்டுண்டவனல்ல. அப்படி அவனைக் கட்டுப்படுத்தும் பகுதி ஒன்று உண்டென்றால், அது இறைவனின் சட்டங்களான ஷரீஅத் சட்;டங்கள் எந்தப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றதோ அந்தப் பகுதியே. இந்தப் பகுதியில் உறவுகள் அனைத்தும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழியேதான் நிர்மாணிக்கப்படும். ஈமான் என்ற இறை நம்பிக்கையே ஒரு முஸ்லிமின ;தேசியத்தை முடிவு செய்யும். இந்த இறை நம்பிக்கை அவனை முஸ்லிம் மகாசமுதாயத்தின் ஓர் அங்கமாக ஆக்குகின்றது. இதன் பராமரிப்பும் பரிபாலனமும், இஸ்லாமிய ஆட்சி நிலைநாட்டப் பெற்ற தாருல் இஸ்லாமிடமிருந்து வருவது. ஒரு முஸ்லிம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்பவனுக்கு இறைவனை நம்பி வாழ்பவர்களைத்தவிர வேறு உறவினர்களே இல்லை. அவனது உறவுகள் அனைத்தும் இறைநம்பிக்கை ஈமான் என்ற அடிப்படையைக் கொண்டு எழுவதே. தாய், தந்தை, சகோதரர்கள், மனைவி இன்னும் குடும்ப உறுப்பினர்கள் என அறியப்படுபவர்களுக்கும் ஒரு முஸ்லிமிற்கும் எந்த உறவுமில்லை. ஈமான் என்ற இறை நம்பிக்கை ஒன்றைத்தவிர. படைத்த அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டார்கள் ஈமான் கொண்டார்கள் என்ற முதல் அடிப்படை நிலைபெற்ற பின்னரே இதர உறவின் முறைகள் அங்கே அங்கீகரிக்கப்படும். அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டார்கள் என்பது ஊர்ஜிதமானால் உறவு ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகு உடன்பிறந்தவர்கள் இரத்த பந்தங்கள் என்பன வந்து ஒட்டிக் கொள்ளலாம். ஆனால் இவை மட்டுமே உறவையும் பிணைப்பையும் ஏற்படுத்தும் காரணங்களாக அமையமாட்டா. அல்லாஹ் பிரகடனப்படுத்துகின்றான்:

மனிதர்களே நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்திச் செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத:து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து அனே ஆண், பெண்களை (வெளிப்படுத்திப்) பரவச் செய்தான். ஆகவே அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்;கள். (அல்குர்ஆன் 4:1)

இறைநம்பிக்கையின் அடிப்படையில்தான் மனித உறவுகள் பிணைக்கப்பட வேண்டும். இப்படிச்சொல்லி விடுவதால் பெற்றோர்கள் ஈமான் கொள்ளவில்லை. அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அவர்களுக்குப் பிள்ளைகள் நிறைவேற்றிட வேண்டிய கடமைகளிலிருந்து பிள்ளைகள் விடுவிக்கப்பட்டு விடுவார்களா? இல்லை, இறைவனை ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் பெற்றவர்களுக்குரியவற்றைப் பிள்ளைகள் கொடுத்தே ஆகவேண்டும். இந்தப் பொதுவிதிக்கும் ஓர் நிபந்தனை உண்டு. அது அந்தப் பெற்றோர்கள் அல்லாஹ்வின் எதிரிகளோடு இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்துக்கொண்டு முஸ்லிம்களை அழிக்க முனைபவர்களாக இருந்திடக்கூடாது. அந்தப் பெற்றோர்கள் அல்லாஹ்வவின் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு அதனைப் பகிரங்கமாகப் பிரகடனப் படுத்திடுவார்களேயானால் அவர்களிடம் இரக்கத்தோடு நடந்திட வேண்டியது கடமையல்ல.

இந்நிலையில் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட பிள்ளைகளுக்கும் எதிர் அணியில் தன்னை இணைத்துக் கொண்ட பெற்றோர்களுக்கும் உள்ள உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. இந்த வகையில் அப்துல்லாஹ் (ரலி) என்ற அப்துல்லாஹ் பின் உபை அவர்களின் மகனார் நமக்கோர் எடுத்துக்காட்டை எடுத்துத் தந்துள்ளார்கள். இப்னு ஜரீர் அவர்கள் இப்னு சியாத் அவர்கள் அறிவித்ததாக அறிவிக்கின்றார்கள். (அல்லாஹ் இவர்கள் அனைவர்மீதம் தன் அருளைப் பொழிவானாக) இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உபை அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அழைத்துக் கேட்டார்கள். உங்கள் தந்தை என்ன சொல்லி இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்துல்லாஹ் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். என் தந்தை உங்களுக்கு பரிகாரமாவார்களாக, அவர்கள் என்ன சொன்னார்கள்? இதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். உங்கள் தந்தை நாம் மதீனா திரும்பினால் (இந்தப் போரிலிருந்து) கண்ணியத்திற்குரியவர்கள் இழிவானவர்களை வெளியேற்றிவிடுவார்கள் எனப் பேசி இருக்கின்றார்கள். இதைச் செவிமடுத்தும் அப்துல்லாஹ் (அல்லாஹ் அவர்கள் மீது தன் திருப்பொருத்தத்தைப் பொழிவானாக)அவர்கள் சொன்னார்கள். பெருமானார் (ஸல்) அவர்களே என் தந்தை உண்மையையே மொழிந்திருக்கின்றார். நீங்கள் தாம் கண்ணியத்திற்குரியவர்கள். அவர்தாம் இகழ்ச்சிக்குரியவர். இறைவனின் தூதர் (ஸல்)வர்களே மதீனாவில் வாழும் மக்கள் நன்றாக அறிவார்கள். நீ;ங்கள் மதீனா வருவதற்கு முன்னால் என்னைப் போல் யாரும் தங்கள் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்ததில்லை. ஆனால் இப்போது கூறுகின்றேன்.

என் தந்தையின் தலையைக் கொய்து வருவதுதான் அல்லாஹ்வுக்கும் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் திருப்தியைத் தரும் என்றானால் கணமும் தாமதியாமல் அதனைச் செய்துவர, அவர்தலையைக் கொய்துவரத் தயாராக இருக்கின்றேன். இதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள் வேண்டாம் எனச் சொல்லித்டுத்தார்கள். பின்னர் முஸ்லிம்கள் மதீனா திரும்பினார்கள். அப்துல்லாஹ் அவர்கள் (அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக) மதீனாவின் முகப்பில் நின்றுகொண்டார்கள். கைகளில் உருவிய வாள் தயாராக இருந்தது. வாளுக்குக் கீழே அவர்களது தந்தை அப்துல்லாஹ் பின் உபை அவர்களின் கழுத்து இருந்தது. அப்துல்லஹ் அவர்கள் (அல்லாஹ்வின் திருப்தியும் மகிழ்ச்சியும் அவர்கள் மேல் உண்டாகட்டும்) தங்கள் தந்தையிடம்: நாங்கள் மதீனா திரும்பினால் கண்ணியத்திற்குரியவர்கள் இகழ்ச்சிக்குரியவர்களை வெளியேற்றி விடுவார்கள் என்று சொன்னீர்களா? என்று கேட்டார்கள். பின்னர் அல்லாஹ்வின் மேல் ஆணையாக இப்போது நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கண்ணியமானவர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணியமானவர்களா? என்பதை. இறைவன் மீது ஆணையாக. அல்லாஹ்வும் அவனுடைய தூதர்(ஸல்)அவர்கள் அனுமதித்தாலொழிய நீங்கள் மதீனாவுக்குள் நுழைந்திட முடியாது. நீங்கள் மதினாவில் அபயமும் தேடிக்கொள்ள முடியாது. என்று அழுத்தமாய்க் கூறிவிட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை அவர்கள் கதறி அழுதார்கள்: கஸ்ரஜ் குலத்தாரே என் மகள் என்னை என் வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுப்பதைப் பாருங்கள் என இரண்டு முறை ஓலமிட்டார்கள். இந்த ஒப்பாரிகளுக்கெல்லாம் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு மறுமொழியைத்தான் தந்தார்கள். அது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்)அவர்கள் அனுமதித்தாலன்றி நீங்கள் மதீனாவுக்குள் நுழைந்திட முடியாது என்பதே. தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட இந்தப் பிணக்கின் ஆரவாரத்தைக் கேட்ட சிலர் அங்கே வந்து குழுமினார்கள். அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் தந்தையை விட்டுவிடும்படி கோரினார்கள். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தங்கள் முடிவிலேயே உறுதியாக நின்றுவிட்டார்க்ள. சிலர் இறைவனின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றார்கள். இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்துல்லாஹ்விடம் அவருடைய தந்தையை உள்ளே விட்டுவிடும்படி கூறுங்கள் என்றார்கள். இந்த அனுமதி கிடைத்தவுடன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தங்கள் தந்தையிடம் இறைவனின் தூதர்(ஸல்)அவர்கள் அனுமதி வழங்கிவிட்டதால் நீங்கள் இப்போது மதீனாவுக்குள் நுழையலாம் என்றார்கள். ஈமான் இறைநம்பிக்கை என்ற உறவு நிலைநாட்டப்பட்டு விட்டது என்றால் இரத்த பந்தங்கள் இருக்கின்றனவோ இல்லையோ அவர்கள் தங்களுக்குள் நெருங்கிய உறவினர்கள் ஆகிவிடுவார்கள். அவர்கள் உடன்பிறந்த சகோதரர்களைவிட உறவில் நெருக்கமானவர்களாகி விடுவார்கள்.

இறைவன் கூறுகின்றான் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் சகோதரர்களே. இதைத் தொடர்ந்து இன்னும் கூறுகின்றான்: நிச்சயமாக எவர்கள் விசுவாசங்கொண்டு (தங்கள்)ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தத்தம் செய்து யுத்தம் புரிந்தார்களோ அவர்களும் எவர்கள் அவர்களுக்குத் தங்கள் இல்லங்களில் இடமளித்து வைத்துக் கொண்டு உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இத்தகையோர் ஒருவருக்கொருவர் நட்பில் மிக நெருங்கியவர்களாயிருக்கின்றனர். (அல்குர்ஆன் 8:72)

இங்கே குறிப்பிடப்பட்ட நட்பு உறவு அவர்கள் தங்களுக்குள் வழங்கிய பாதுகாப்பு இவை அன்றைய நாளோடு போய்விட்டவையல்ல. அவை அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இறை நம்பிக்கையாளர்களைப் பிணைத்துக் கொண்டிருக்கும் நட்பு உறவு பாதுகாப்பு. அத்தோடு இந்த உறவு இனிவரும் நாள்களில் எழப்போகும் முஸ்லிம் சமுதாயத்தையும் அப்படியே கட்டிப்போட்டிடும் அதிசய ஆற்றல் பெற்றதுமாகும். இந்த நட்பும் பிணைப்பும் அந்த மூத்த முதல் தலைமுறைகளையும் இன்று வாழும் இஸ்லாமிய சமுதாயத்தையும் இனி வரப்போகும் இஸ்லாமிய தலைமுறைகளையும் இணைக்கும் பாலமாகும். அன்றி (மதினாவிலுள்ள) எவர்கள் (மதீளாவையே தங்கள்) ஊராக (மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களாகிய அவர்களுக்கு முன்னதாகவே) கொண்டு விசுவாசமும் கொண்டிருந்தார்களோ அவர்களுக்கும் (அதில் பங்குண்டு) இவர்கள் ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வருவோரை அன்பாக நேசித்து வருவதுடன் (தங்களுக்குக் கொடுக்காது ஹிஜ்ரத் செய்துவரும்) அவர்களுக்கு (மட்டும்) கொடுக்கப்படுவதைப் பற்றியும் தங்கள் நெஞ்சத்தில் குறைவாகக் காண்பதில்லை. அன்றி தங்களுக்கு வறுமையே நேரினும் தங்களைவிட அவர்களுக்கே (கொடுக்கப்படுவதைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு எவர்கள் பேராசையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றார்களோ அத்ததையோர் தாம் சித்தி பெற்றோர். எவர்கள் (முஹாஜிர்களாகிய) இவர்களுக்குப்பின் (மதீனாவுக்கு) வந்தார்களோ அவர்களுக்கும் (அதில் பங்குண்டு) இவர்கள் எங்கள் இறைவனே எங்களையும் எங்களுக்கு முன் விசுவாசங்கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள் விசுவாசங் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இருதயங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே எங்கள் இறைவனே நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையோனும் இரக்கமுடையோனுமாய் இருக்கின்றாய் என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கின்றனர் (அல்குர்ஆன் 59:9-10).

திருக்குர்ஆன் இத்தகையதொரு பிணைப்பைத்தான் ஏற்படுத்துகின்றது அல்லாமல் பிறந்த இடம் பேசும் மொழி ஆகிய குறுகிய வட்டங்களுக்குள் சுழலுவதில்லை. அனைத்தையும் அறிந்த அல்லாஹ் திருக்குர்ஆனில் பல நபிமார்களுடைய சரித்திரங்களைப் பற்றிப் பேசுகின்றான். இந்த வரலாறுகளை இறை நம்பிக்கை கொண்டவர்கள் ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்பதே அங்கே நோக்கம். ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் இந்த நபிமார்கள் (அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) இறைநம்பிக்கை என்ற இந்தத் தீபத்தைக் கொண்டு மக்களை அவர்களைப் படைத்த இறைவனின் பக்கம் திருப்பி இருக்கின்றார்கள். இந்த இறைத்தூதர்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொண்டவர்களை இறை நம்பிக்கை என்ற உறவைக் கொண்டே பிணைத்திருக்கின்றார்கள். இந்த உறவின் முறையோடு வேறு உறவின் முறைகளை நாம் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் இதுவே உறுதியானதாகவும் பலன்பல பயப்பதாகவும் இருக்கும். (நூஹ் நபியின் மகள் அவரைவிட்டு விலகி நிராகரிப்போருடன் சென்றுவிடவே அவனும் அழிந்துவிடுவானென அஞ்சி) நூஹ் (அலை) தன் இறைவனை நோக்கி என் இறைவனே என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே (நீயோ என் குடும்பத்தினரை இரட்சித்துக் கொள்வதாக வாக்களித்திரக்கிறாய்) நிச்சயமாக உன்னுடைய வாக்குறுதி உண்மையானது.

தீர்ப்பளிப்போர்களிலெல்லலாம் நீ மிகவும் மேலான நீதிபதி என்று (சப்தமிட்டுக்) கூறினார். அதற்கவன் நூஹே நிச்சயமாக அவன் உன் குடும்பத்திலுள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். ஆதலால் நீர் உமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம் என்று நான் நிச்சயமாக உமக்கு நல்லுபதேசம் செய்கின்றேன் என்று கூறினான். அதற்கவர் என் இறைவனே நான் அறிவாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை இரட்சிக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயம் நானும் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன் என்று கூறினார் (அல்குர்ஆன் 11:45-47)

தந்தை மகனைத் தன் குடும்பத்தில் உள்ளவன். ஆகவே அவனைக் காப்பாற்று என மன்றாடுகின்றார். இறைவன் அவன் அதாவது உங்கள் மகள் ஈமான் என்ற இறை நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் மாற்றுக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் குடும்ப உறுப்பினன் என்ற நிலையை இழந்தான் எனத் தெளிவுபடுத்துகின்றான். இஸ்லாம் என்ற இந்தக் கொள்கையைக் கொண்டு இதில் இணைத்தவர்கள் மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் என்ற உண்மையை இந்த வரலாறு நமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது. இன்னொரு வரலாறையும் இறைவன் நமக்குப் பாடமாகச் சொல்லித்தருகின்றான். தவிர, இப்றாஹீமை, அவருடைய இறைவன் (பெரும் சோதனையால்) பல கட்டளைகளையிட்டுச் சோதித்த சமயத்தில் அவர் அவை யாவையும் பரிபூரணமாகவே செய்தார். (ஆதலால் இறைவன் ) நிச்சயமாக நாம் உம்மை மனிதர்களுக்குத் தலைவராக ஆக்குகிறேன் எனக்கூறினான். அதற்கு (இப்ராஹீம்) என்னுடைய சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்) எனக் கேட்டார். (அதற்கு உம்முடைய சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களை என்னுடைய வாக்குறுதி சாராது எனக்கூறினான் (அல்குர்ஆன் 2:124) தவிர இப்றாஹீம் (இறைவனை நோக்கி) என் இறைவனே (மக்காவாகிய) இதை அபயமளிக்கும் ஓர் பட்டணமாக ஆக்கிவைத்து இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கிறாரோ அவருக்கு ஆதாரமாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா எனக் கூறியதற்கு இறைவன் (என்னை விசுவாசிப்பவருக்கு நான் ஆகாரமளிப்பது போலவே என்னை) நிராகரிப்பவனுக்கும் (ஆகாரமளித்து) அவனையும் சிறிதுகாலம் சுகமனுபவிக்க விட்டுவைப்பேன். பின்னர் நரகவேதனையின் பால் (செல்லும்படி) அவனை நிர்பந்திப்பேன். அவன் செல்லுமிடம் மிகக்கெட்டது என்று கூறினான். (அல்குர்ஆன் 2:126) நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் தங்கள் தந்தையும் தங்களைச் சார்ந்த மக்களும் தவறு செய்வதிலேயே நிலைத்திருந்தபோது, அவர்கள் அவர்களிடமிருந்து மாறுபட்டார்கள். இந்நிலையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சொன்னார்கள். உங்களைவிட்டும் அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வமென) அழைப்பவைகளைவிட்டும் நான் விலகிக் கொள்கிறேன். என் இறைவனையே நான் பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் (எனக்குத்) தடுக்கப்படாதிருக்கும் என்று நம்புகின்றேன் என்று கூறினார் (அல்குர்ஆன் 19:48)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை நமக்குச் சொல்லிக்காட்டுவதன் மூலம் அல்லாஹ் இறைவனை நம்புகின்றவர்களிடம் இருந்திட வேண்டிய உறவுகளையும் பிணைப்புக்களையுமே எடுத்துக்காட்டுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: இப்றாஹீமிடத்திலும் அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் ஜனங்களை நோக்கி நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளிலிருந்தும் விலகிவிட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் (அவைகளையும்) நிராகரித்துவிட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும் குரோதமும் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். அன்றி இப்ராஹீம் தம் (சொல்லைக்கேளாத தம்) தந்தையை நோக்கி அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) யாதொன்றையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது. ஆயினும் உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன் என்று கூறி எங்கள் இறைவனே உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் யாவரும்) வரவேண்டியதிருக்கின்றது. (என்று பிரார்த்தித்தார்) (அல்குர்ஆன் 60:4)

குகைத் தோழர்கள் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கத்தோழர்கள் செய்தது என்ன? அவர்கள் தாங்கள் ஈமான் கொண்ட நிலையில் தங்கள் குடும்பத்தாரோடும் தங்கள் மக்களோடும் வாழ்ந்திட இயலாது என்பதை உணர்ந்தார்கள். ஆகவே அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு வெளியே வந்துவிட்டார்கள். தங்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். காரணம் இதனால் அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளாய் வாழலாம் என நம்பினார்கள். (நபியே) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தை நாம் உமக்குக் கூறுகின்றோம். நிச்சயமாக அவர்கள் சில வாலிபர்கள். தங்கள் இறைவனை விசுவாசித்தார்கள். (ஆகவே பின்னும்) பின்னும் நேரான வழியில் நாம் அவர்களைச் செலுத்தினோம். அன்றி அவர்களுடைய இருதயங்களையும் நாம் நிலைப்படுத்தி வைத்தோம். அக்காலத்திய அரசன் அவர்களை விக்கிரக ஆராதனை செய்யும்படி நிர்பந்தித்த சமயத்தில் அவர்கள் எழுந்துநின்று வானங்களையும் பூமியையும் படைத்தவன் தான் எங்கள் இறைவன். ஆவனையன்றி (வேறெவரையும் ஆண்டவன் என) நாங்கள் அழைக்கமாட்டோம். (அவ்வாறு அழைத்தால்) நிச்சயமாக வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம் என்றார்கள். (அன்றி) நம்முடைய இந்த ஜனங்கள் அவனையன்றி வேறு நாயனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டுவர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்கூறுபவனைவிட அக்கிரமக்காரன் யார்? (என்றார்கள்) இவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவைகளிலிருந்தும் நீங்கள் விலகிக் கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத்தப்பிக்க) இக்குகைக்குள் சென்று விடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து (ஜீவனோபாயத்திற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாக உங்களுக்குச் சித்தப்படுத்தி விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்) (அல்குர்ஆன் 18:13-16)

நபி நூஹ் (அலை) அவர்களின் மனைவியும் நபி லூத்(அலை) அவர்களின் மனைவியும் பிரிக்கப்பட்டு விட்டனர். காரணம் அவர்கள் கொண்ட இறைநம்பிக்கை வேறாயிருந்தன. நிராகரிப்போருக்கு நூஹூ (நபியினு)டைய மனைவியையும் லூத்து (நபியினு)டைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக ஆக்கி வைக்கின்றான். இவ்விரு பெண்களும் நம் நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும் இவ்விரு பெண்களும் தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்தனர். ஆகவே இவர்களிருவரும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து யாதொன்றையும் தடுத்துக் கொள்ளமுடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) நரக நெருப்பில் புகுவோருடன் நீங்களிருவரும் புகுங்கள் என்றே கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)

ஃபிர்அவ்னின் மனைவியிடத்தில் இன்னொரு வகையான எடுத்துக்காட்டு இருக்கின்றது. விசுவாசங்கொண்டவர்களுக்கு (ஃபிர்அவ்னுடைய மனைவியை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான். ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆஸியா) (ஃபிர்அவ்னுடைய அக்கிரமங்களைச் சகிக்காமல் தன் இறைவனை நோக்கி) என் இறைவனே உன்னிடத்திலுள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து ஃபிர்அவனை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை இரட்சித்துக் கொள்வாயாக. அன்றி அக்கிரமக்கார மக்களை விட்டும் நீ என்னை இரட்சித்துக் கொள்வாயாக என்ற பிரார்த்தனைச் செய்து கொண்டேயிருந்தார். (அல்குர்ஆன் 66:11)

இதைப் போலவே திருக்குர்ஆன் பல்வேறு உறவுகளையும் குறிப்பிடுகின்றது. நபி நூஹ் (அலை) அவர்களின் வாழ்க்கையில் தந்தை மகன் என்ற உறவு ஈமான் என்ற இறைநம்பிக்கை முன் என்னவாகும் என்பதைப் பார்த்தோம். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் மகன் தந்தை உறவுகள் ஈமான் என்ற அல்லாஹ் ஒருவனே இறைவன் வேறு இறைவனே இல்லை என்ற நம்பிக்கைக்கு முன் தவிடுபொடியாகும் என்பதைத் தரிசித்தோம். அதே போல் நாடு என்பதும், வீடு என்பதும், குடும்பம் என்பதும், குலம் என்பதும் ஈமான் என்ற இறை நம்பிக்கைக்கு முன் முற்றாகச் சரணடைந்ததைச் சந்தித்தோம். தாம்பத்திய உறவுகள் ஈமான் என்ற இறை நம்பிக்கைக்கு முன்னால் ஒன்றுமில்லை என்பதை நூஹ் (அலை) லூத் (அலை) ஃபிர்அவ்ன் ஆகியோருடைய வரலாற்றில் கண்டோம். ஈமான் என்ற இறைநம்பிக்கையின் உச்சத்தில் நிற்கும் நபிமார்களின் வரலாற்றை மேலே பார்த்தோம். இனி நடுத்தர மக்களின் வாழ்க்கையில் இந்த இறைநம்பிக்கை எப்படி உறவுகளையும் பிணைப்புகளையும் ஏற்படுத்திற்று என்பதைப் பார்ப்போம். இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவரை (நபியே) நீர் காணமாட்டீர். அத்தகையோர் அவர்களுடைய தந்தையராயினும் அல்லது அவர்களுடைய தனையர்களாயினும் அல்லது அவர்களது சகோதரர்களாயினும் அல்லது அவர்களது குடும்பத்தவர்களாயினும் சரியே அவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானை நம்பிக்கையைப் பதித்துவிட்டான். மேலும் தன் சார்பிலிருந்து ரூஹை வழங்கி அவர்களுக்கு வலிமை சேர்த்தான். மேலும் கீழே ஆறுகள் ஓடும் சுவனங்களில் அவன் அமர்களைப் புகச் செய்வான். அங்கே அவாக்ள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தான். அவர்களும் அல்லாஹ்வைக் கொண்டு திருப்தியடைந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்சியினராவர். அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்சியினர் தாம் வெற்றியடையக் கூடியவர்கள். (அல்குர்ஆன் 58:22)

எம்பெருமானார் (ஸல்)அவர்களின் வரலாற்றில் நாம் உறவுகளின் உடைவுகளைத் தாராளமாகச் சந்திக்கலாம். பெருமானார்(ஸல்)அவர்களின் பெரிய தந்தை அபூலஹப் உறவினர் அம்ர் பின் ஹிஸ்ஸாம் (அபூஜஹ்ல்)ஆகியோரின் உறவுகள் இறைநம்பிக்கையின் அடிப்படையில் சிதறிப் போயின. அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறிய மக்காவாசிகள் இதே ஈமான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் குடும்பங்களோடு பொருதினார்கள். இவர்கள் தாம் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பதுருப் போரில் எதிர்கொள்வதற்காக உருவிய வாளோடு முன்வரிசையிலே நின்றார்கள். அதே நேரத்தில் மக்காவிலிருந்து இந்த இறைநம்பிக்கையின் அடிப்படையில் இடம் பெயர்ந்து மதீனா வந்த மக்கத்து முஸ்லிம்கள் மதீனாவிலே வாழ்ந்த முஸ்லிம்களோடு பிரிக்கவியலாததோர் உறவால் பிணைந்து நின்றார்கள். படிப்போர் நிச்சயம் வடிப்பார் கண்ணீர் என்பதை உறுதி செய்யும் ஓர் உடன்பிறப்பு முறை அங்கே உறைந்து உலக மக்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாய் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் செயலில் காட்டிய சகோதரத்துவம் இரத்த பந்தங்களால் பிறந்த சகோதரத்துவத்தை விஞ்சி நின்றது. ஈமான் எனற இறைநம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் விஞ்சியதோர் அதிசய உறவின் உலகம் அங்கே உருவானது. இதில அரபுகளும் அரபுக்கள் அல்லாதாரும் உறவால் உடன்பிறப்புகளாய் நின்றார்கள். ரோம் நாட்டிடைச் சார்ந்த ஸூஹைப் (ரலி) அவர்கள், இந்த உறவின் உடன்பிறப்பு. பிலால்(ரலி)அவர்கள் எத்தியோப்பியாவைச் சார்ந்தவர்கள். இவர்கள் இந்த உலக சகோதரத்துவத்தில் இணைந்து, கேட்போரைப் பிணிக்கும் ஓர் உன்னத வரலாறாய் இஸ்லாமிய வரலாற்றில் உறைந்து அன்றைய முஸ்லிம்களுக்கும் இன்றைய முஸ்லிம்களுக்கும் உடன்பிறப்பாய் ஆனார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் பாரசீகத்தைச் சோந்தவர்கள். இவர்கள் இந்த உறவின் வழியில் தங்களை இணைத்துக் கொண்டு முஸ்லிம்களின் அன்பு மழையில் நனைந்தார்கள். குலத்தின் வழியில் பெருமை அதனால் பாரபட்சம் இனத்தின் மேல் ஓர் இனம்புரியாத வேட்கை இவையெல்லாம் மண் மூடிப்போயின. ஈமான் இறைநம்பிக்கை இதனால் இறவா உறவு என்பதே அங்கே முழுமையாக ஆட்சி செய்தது. தேசியம் தேசம் அதனால் நட்பு பகை என்பனவெல்லாம் அங்கே நிரந்தரமாக விடைபெற்றுச் செய்தன. இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் அந்த மக்களைப் பார்த்துச் சொன்னார்கள். தேசியம் தேசம் குலம் கோத்திரம் என்பனவற்றை எடுத்தெறியுங்கள். இவையெல்லாம் மௌட்டீகமானவை. இவையெல்லாம் மடிந்து மனித உறவுகளும் உணர்வுகளும் விரிந்து பரந்து வானவீதியிலும் உயர்ந்து நின்றன. முனித உறவுகளைக்கட்டிப் போட்டிருந்த அத்தனை குறகிய எண்ணங்களும் உடைத்தெறியப்பட்டன. அந்த நாள் முதல் முஸ்லிம்களின் நாடு என்பது பூமியின் ஒரு நிலப்பரப்பு என்றிருக்கவில்லை. மாறாக தாருல் இஸ்லாம் என்பதாக இருந்தது. அதாவது இறைநம்பிக்கை அல்லாஹ் ஒருவனே என்ற நம்பிக்கை. வாழும் பூமி அங்கே இறைவனின் சட்டங்கள் ஷரீஅத் முழுமையாகச் செயலிலிருக்கும். இந்த இஸ்லாத்தின் பூமியில் தான் தாருல் இஸ்லாத்தில் தான் முஸ்லிம்கள் அனைவரும் தஞ்சம் புகுகின்றார்கள். இந்த தாருல் இஸ்லாத்தைப் பாதுகாக்கவும் அதன் எல்லைகளை விரிவுபடுத்திடவுந்தான் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் தருகின்றார்கள்.

இறைவனின் சட்டங்களை ஏற்றுக் கொள்வோர் அனைவருக்கும் இந்த தாருல் இஸ்லாம் சொந்தபூமி. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோர் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்றக் குடிமக்கள் இந்த தாருல் இஸ்லாத்தில். இங்கே அரசின் அரசியல் நிர்ணயச் சட்டம் ஷரீஅத் சட்டங்கள்தாம். இங்கே அனைத்து விவகாரங்களும் அல்லாஹ்வுக்கும் அவனது அறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் கீழ்ப்படிந்தே நடக்கும். இறைவனின் இணையற்றச் சட்டங்களான ஷரீஅத் சட்டங்கள் செயலில் இல்லாத இடங்கள் அனைத்தும் பகைமையின் பூமியே. ஒரு முஸ்லிம் இந்தப் பகைமையின் பூமியோடு போராடிட எப்போதும் தயாராகவே இருப்பான். அது அவன் பிறந்த பூமியாகவும் இருக்கலாம் அல்லது அவனுடைய உறவினர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியாகவும் இருக்கலாம். அந்த இடத்தில் அவனுக்குச் சொத்துக்கள் இருக்கலாம் அல்லது சொத்துக்களைப் போன்ற இதர பரிவர்த்தனைகள் இருக்கலாம். இப்படித்தான் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாங்கள் பிற்நத இடமாம் மக்காவுக்கு எதிராகவே போராடினார்கள். அவர்கள் பிறந்து வளர்ந்த மாநகரந்தான் அது. அவர்களின் உறவினர்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவாக்ளுக்கு வீடும் அவர்களுடைய தோழர்களுக்கு அங்கே வீடும் சொத்துக்களும் இருந்தன. இந்த இறைநம்பிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக அவர்கள் இவற்றையெல்லாம் துறந்து மதீனாவுக்கு வரவேண்டியதாயிற்று. பெருமானார்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பிறந்து வளர்ந்த பூமியாக மக்கா இருந்தும், அவர்களுக்கு வீடுகளும் மனைகளும் சொத்துக்களும் இருந்த இடமாக மக்கா இருந்தும், அவர்களுடைய உறவினர்களெல்லாம் வாழும் இடம் மக்காவாக இருந்தும் மக்கா தாருல் இஸ்லாமாக ஆகிடவில்லை. மக்கத்து வெற்றி என்று வரலாற்றில் உயர்ந்து நிற்கும் வாகை வரலாற்றுக்குப் பின்னர்தான் சூழ்ந்துவந்த இஸ்லாமியப் படைகளுக்கு மக்கா சரணடைந்த பின்னர்தான் அது தாருல் இஸ்லாம் என்ற தனிப்பெரும் இடத்தைப் பெற்றது. அங்கே ஷரீஅத் சட்டங்கள் நாட்டு நடப்பாக ஆகின. இஸ்லாம் சொல்லும் உறவின் முறையின் தெளிவான அடிப்படை இதுதான். இது தான் இஸ்லாம் இது தான் தாருல் இஸ்லாம் இந்தச் சமுதாய அமைப்பில் அங்கம் வகிப்போர் பின்வருமாறு நடந்து கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாதவரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

அங்கே அனைத்து விவகாரங்களும் அல்லாஹ் அவனுடைய தூதர்(ஸல்) அவர்கள் ஆகியோரின் கட்டளைகள் வழிகாட்டுதல்கள் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நிருவகிக்கப்படும். இஸ்லாம் வழங்கியுள்ள அடிப்படைகளின் வழியில் ஒரு முஸ்லிம் தான் கொண்ட இறைநம்பிக்கையின் அடிப்படையிலேயே அறியப்படுகின்றான். அவன் சில அரசுகள் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையில் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் அவன் தன்னை பிணைத்துக் கொள்வதில்லை. உறவுகளை ஏற்றுக் கொள்வதில்லை. அவன் ஈமானைக் கொண்டே அறியப்படுகின்றான். அவன் ஓர் கொடியின் கீழ் போராடுகின்றான் என்றால் அந்தக் கொடியை அவன் தாயின் கொடி அல்லது தந்தையின் மணிக்கொடி என்றெல்லாம் பார்ப்பதில்லை. அந்தக் கொடி அவன் நாட்டின் கொடியுமல்ல. தனது பெருமையைப் புகழும் கொடியுமில்லை. இத்தகைய கொடிகளைப் பாதுகாக்க அவன் தன் உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதில்லை. அவன் தனது இறைநம்பிக்கiயைப் பாதுகாக்கவும் அந்த இறைவாக்கு மேலோங்கவும் அவன் போராடுகின்றான். தன் உயிரைத் தருகின்றான். இந்த இறை நம்பிக்கையைக் கொண்டவர்கள் இவர்கள் என்பதை உணர்த்தும் சமிக்ஞையாக அடையாளமாக வேண்டுமானால் அங்கே கொடிகள் பறக்கலாம். அவன் வெற்றி பெற்றான் என்றால் அந்த வெற்றி அவனது இனத்தின் வெற்றி என்றோ, அவனது நாடு என்ற நிலப்பரப்பின் வெற்றி என்றோ அவன் கொள்வதில்லை. அது அவன் விரும்பி ஏற்றுக்கொண்ட இறை நம்பிக்கையின் வெற்றி. அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிடும் போது (நபியே) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் திரள் திரளாக நுழைவதை நீர் காணும் போது நீர் உம் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதிப்பீராக. நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 110 : 1-3)

வெற்றி இறைநம்பிக்கை என்ற பதாகையின் கீழ் பெற்றதாகும். வேறு எந்தப் பெயரிலும் பெற்றதன்று. முயற்சி முழுக்க முழுழ்க அல்லாஹ்வுக்காகவே மேற்கொள்ளப்பட்டது. முயற்சி மேற்கொண்டதும் உயிரை விலையாகத் தந்து போர்க்களம் புகுந்ததும் அவனுடைய மார்க்கத்தை நிலைநாட்டவும் அவனை ஏற்றுக் கொண்டவர்களைப் பாதுகாக்கவும் அவனுடைய ஷரீஅத் இன் ஆட்சி நிலைபெற்றிருப்பதை தாருல் இஸ்லாத்தைப் பாதுகாக்கவுமே. போரில் கிடைக்கும் பொருள்களுக்காகவோ போரில் கலந்து கொண்டால் கீர்த்திப் பெறலாம் என்றோ நமது தேசத்திற்குக் கண்ணியமும் புகழும் கிடைக்கும் என்பதற்காகவோ அங்கே யாரும் போராட வரவில்லை. அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒரு முறை பெருமானார்(ஸல்)அவர்களிடம் இவ்வாறு கேட்கப்பட்டது. இறைவனின் தூதர்(ஸல்)அவர்களே ஒருவர் தன்னுடைய வீரத்தை வெளிக்காட்டப் போரில் கலந்து கொள்கின்றார். இன்னொருவர் கௌரவத்திற்காகப் போரில் கலந்து கொள்கின்றார். இன்னொருவர் புகழுக்காகப் போரில் பங்கெடுத்;துக்கொண்டு போர் புரிகின்றார். இவர்களில் யார் இறைவனின் பாதையில் போராடுகின்றார்? பெருமானார்(ஸல்)அவர்கள் இப்படிப் பதில் சொன்னார்கள்: அல்லாஹ்வின் சொல் மேலோங்க வேண்டும் (அல்லாஹ்வின் சட்டங்கள் ஏனைய சட்டங்களை வாகை கண்டு ஆட்சி செய்ய வேண்டும்) என்பதற்காகப் போராடுபவனே அல்லாஹ்வின் பாதையில் போராடுகின்றான். அல்லஹ்வின் அழகிய வழிகாட்டுதல்கள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக போராடும் பாதையில் ஒருவன் கொல்லப்பட்டாலோ அவனது தியாகம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதுவல்லாமல் வேறு காரணங்களுக்காக அவன் போராடினால் அவன் தன் உயிரையே தந்திருந்தாலும் அவனுடைய தியாகங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. இறைவன் ஒருவனே என்ற நம்பிக்கையில் நிலைத்து நிற்கின்றான். அல்லது நிற்கின்றார்கள் என்பதற்காக ஒரு முஸ்லிமோடு அல்லது முஸ்லிம்களோடு போர் புரியும் நாடு, முஸ்லிம்கள் தங்கள் இறைநம்பிக்கையின் வழி அமைத்த வாழ்க்கை நெறிகளை செயல்படுத்துவதைத் தடுக்கும் நாடு ஷரீஅத் சட்டங்களை செயல்பட விடாமல் தடுக்கும் நாடு இவையெல்லாம் தாருல் ஹர்ப் என்ற இஸ்லாத்தோடு பகைமை பாராட்டும் நாடுகளே. இந்த நாடுகளில் ஒரு முஸ்லிமின் உறவினர்கள் குடும்பத்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். இந்த நாட்டில் அவன் பெருமளவில் மூலதனங்களைக் கொட்டி தொழில்கள் செய்து கொண்டிருக்கலாம். எனினும் அந்த நாடு தாருல் ஹர்ப் என்ற பகைமையின் பூமியே. எந்த நாட்டில் ஷரீஅத் என்ற இறைவனின் சட்டங்கள் முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த நாடு தாருல் இஸ்லாம் இஸ்லாத்தின் பூமி. இந்த நாட்டில் முஸ்லிம்களின் உறவினர்கள் இல்லாமலிருக்கலாம். அவன் அங்கே வியாபாரமோ கொடுக்கல் வாங்கல்களோ கூட இல்லாமலிருக்கலாம்.

எனினும் ஷரீஅத் அங்கே முழு அளவில் செயல்படுவதால் அது தாருல் இஸ்லாம். குடும்பம் கோத்திரம் குலம் தேசியம் நிறம் நாடு என்ற அடிப்படைகளில் மனிதர்களைப் பிரிப்பதும் பிளந்து போடுவதும் முட்டாள்தனத்தின் முதிர்ச்சியையே காட்டுகின்றது. இந்த அடிப்படைகளில் மனிதன் தன்னைக் கூறுபோட்டுக் கொண்டது நாகரிகம் பண்பாடு என்பனவற்றில் அவன் தலையெடுக்காத நாள்களில் தான். இறைவனின் தூதர்(ஸல்)அவர்கள் இவற்றை இறந்து போனவை மனிதனின் ஆன்மாவுக்கு எதிரானவை எதிர்த்துப் போராடி எடுத்து எறியப்பட வேண்டியவை என அழைத்துள்ளார்கள். நம்மை பணித்துள்ளார்கள். இனத்தால் குலத்தால் தேசியம் என்ற பிறந்த நாட்டால் நாங்கள்தாம் இறைவனால் தோந்தெடுக்கப்பட்ட சிறப்பான மக்கள் எனக் கர்வங்கொண்டு கிடந்த போது இறைவன் அவர்களின் கோரிக்கையை மறுத்தான். இறைநம்பிக்கை ஒன்றே மனிதர்களைக் கண்ணியத்திற்குரியவர்களாக ஆக்கிடும் எனத் தெளிவுபடுத்தினான். இறைவன் தன் திருமறையில் இப்படித் தெளிவுபடுத்துகின்றான்: விசுவாசிகளை நோக்கி அவர்கள், நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள்.

நேரான வழியை அடைந்து விடுவீர்கள் எனக் கூறுகின்றார்கள். அதற்கு அவ்வாறன்று நேரான வழியைச் சார்ந்த இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைத்து வணங்கியவரல்ல என்று (கூறும்படி விசுவாசிகளுக்கு நபியே) நீர் கூறும். (விசுவாசிகளே) நீங்களும் கூறுங்கள். அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதத்தையும் இப்றாஹீம் இஸ்மாயீல் இஸ்ஹாக் யஃகூப் முதலியவர்களுக்கும் இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பெற்ற யாவற்றையும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும் மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல வென்று) நாம் பிரித்து விட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம். (விசுவாசிகளே) நீங்கள் எதன்மீது விசுவாசங் கொண்டீர்களோ அதேபோல் அவர்களும் விசுவாசங் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்துவிடுவார்கள். அவர்கள் புறக்கணித்து விடில் நிச்சயமாக (வீண்) பிடிவாதத்தில் தான் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும் அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனுமாக இருக்கின்றான் (அல்குர்ஆன் 2:135-137)

உண்மையில் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயந்தான். இந்தச் சமுதாயந்தான் இனம் நிறம் நிலம் மொழி தேசியம் என்பனவற்றின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பதுமில்லை. பாரபட்சமாக ஒருதலையாக நடந்து கொள்வதுமில்லை. இதற்கு அல்லாஹ் பின்வருமாறு நற்சான்றிதழை வழங்குகின்றான். (விசுவாசிகளே) நன்மையான காரியங்களை(ச் செய்யும் படி மனிதர்களை) ஏவி பாபமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாய்ஙகளிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள் (அல்குர்ஆன் 3:110)

இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட உன்னதமான சமுதாயத்தில்தான் அரேபியாவைச் சார்ந்த அபூபக்கர் (ரலி) அவர்களும் எத்தியோப்பாவைச் சார்ந்த பிலால்(ரலி)வர்களும் ரோமநாட்டைச் சார்ந்த ஸூஹைப்(ரலி)அவர்களும் பாரசீகத்தைச் சார்ந்த ஸல்மான் (ரலி)அவர்களும் ஈமான் எனற் இறைநம்பிக்கையின் அடிப்படையில் சகோதரர்களானார்கள். இவர்களைத் தொடர்ந்து வந்த தலைமுறையினரும் இப்படியே இருந்தனர். இவர்களின் தேசியம் இறைநம்பிக்கை இவர்களின் நாடு தாருல் இஸ்லாம் இங்கே ஆட்சிசெய்பவன் அல்லாஹ். ஆரசியல் நிர்ணயச் சட்டம் முதல் அனைத்துச் சட்டங்களும் அல்குர்ஆன். இந்தக் கொள்கைகளை இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டியாக வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்ட ஒவ்வொரு இலட்சியவாதியும் தன்னுடைய மனதில் மிகவும் ஆழமாகப்பதிய வைத்திடவேண்டும். அவர்கள் இநதக் கொள்கைகளிலிருந்து தங்களைத் திசை திருப்பும் அத்தனை முயற்சிகளிலிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு மாற்றமான மௌட்டீக கொள்கைகள் எங்கே இருந்து வந்தாலும் (பல நேரங்களில் இவை இன்றைய முஸ்லிம்களிடமிருந்தே வரலாம், வருகின்றன – மொழிபெயர்ப்பாளர்) அவற்றை வீழ்த்திட முஸ்லிம்கள் இந்த இலட்சியவாதிகள் விழிப்போடு இருந்திட வேண்டும். இணைவைப்பின் அதாவது நிராகரிப்பின் எல்லைகளைக்கூட எட்டிப்பார்த்திடக்கூடாது இந்த விவகாரங்களில் இஸ்லாத்தை இலட்சியாமாகக் கொண்ட என் உடன்பிறப்புகள். இங்கே இணைவைப்பது என்பது தாய்நாடு அதையே நீ ஆராதிக்க வேண்டும் எனவாய்ப் பேசப்படும் பேச்சுக்கள் முழக்கங்கள் உன்னுடைய வருவாயும் வாழ்வும் எந்த மண்ணிலிருந்து எந்த நிலப்பரப்பிலிருந்து வருகின்றதோ அதற்கே நீ விசுவாசமான இருந்திடவேண்டும் என்பனவாய் எடுத்து வைக்கப்படும் விவாதங்கள். எல்லா முஸ்லிம்களும் குறிப்பாக இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்ட இலட்சிய செம்மல்கள் அனைத்தையும் விட அல்லாஹ்வையும் அவனது இறுதித் தூதரையுமே அதிகமாக நேசிக்கவேண்டும். அவர்கள் தங்கள் இலட்சியத்தை அடையும் வரை அதாவது அல்லாஹ்வின் சொல்லை ஆட்சி செய்யும் சட்டங்களாக ஆக்கிடும் வரை அல்லது அந்த முயற்சியில் தங்களைத் தந்திடும்வரை எந்தத் தியாகத்தையும் செய்திடத் தயாராக இருந்திடவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே விசுவாசிகளை நோக்கி) நீர் கூறும் உங்களுடைய தந்தைகளும் உங்களுடைய மக்களும் உங்களுடைய துணைவர்களும் உங்களுடைய குடும்பத்தவர்களும் நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பொருள்களும் நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து செய்துவரும் வியாபாரமும் உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விடவும் அவனுடைய பாதையில் யுத்தம் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக்க விருப்பமானவைகளாயிருந்தால் (நீங்கள் உண்மை விசுவாசிகளல்ல. நீங்கள் அடையவேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும்வரையில் நீங்கள் எதிர்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 9:24) இந்த இறைமொழிகள் அனைத்து முஸ்லிம்களுக்கும் தான். ஏதோ இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. இன்னும் சொன்னால் இஸ்லாம்தான் அனைத்து முஸ்லிம்களின் இலட்சியமும். இந்த இலட்சியத்தில் அனைத்து முஸ்லிம்களும் எப்படி இருந்திட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே மேலே உள்ள இறைவசனம். இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் இஸ்லாத்தை நிலைநாட்டுவதை இஸ்லாமிய அரசை நிலைபெற்ச செய்வதை இலடசியமாகக் கொண்டவர்கள் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கின்ற இலடசியவீரர்கள் இவர்களைனவரும் ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானத்தின் இயல்புகளை நன்றாக அறிந்து இருக்கவேண்டும். அதே போல் அவர்கள் தாருல் இஸ்லாம் தாருல் ஹர்ப் ஆகியவற்றின் இயல்புகளையும் நன்றாக அறிந்து இருக்கவேண்டும். இல்லையேல் குழப்பமே மிஞ்சும் அதேபோல் அல்லாஹ்வின் ஷரீஅத் முழமையாகச் செயல்படாத நிலபரப்பையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் முழுமையாகப் பின்பற்றப்படாத எந்த நிலப்பரப்பையும் தாருல் இஸ்லாம் என ஏற்றுக் கொள்வதற்கில்லை. இதிலும் நாம் மிகவும் தெளிவாக இருந்திட வேண்டும். தாருல் இஸ்லாம் என்பதில் இஸ்லாம் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அப்படியே பின்பற்றப்படும் அங்கே நிராகரிப்பு இணைவைப்பு மௌட்டீகம் ஆகியவற்றிற்குக் கிஞ்சிற்றும் இடமில்லை. அங்கே உண்மையும் வாய்மையும் ஆட்சியிலும் மக்கள் வாழ்க்கையிலும் உறைந்திருப்பதால் பொய்யும் மௌட்டீகமும் எங்கேயும் தலைகாட்டமாட்டா!.

இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகள்

இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகள்


இந்தப் பூமிப் பந்தை விட்டே இஸ்லாத்தைத் துடைத்து எறிந்து விடலாம் என்பது இஸ்லாத்தின் எதிரிகளது கனவாக இருந்து வருகின்றது. ஆனால் இவர்களது இந்தக் கனவு நிறைவேறாத ஒன்று என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள். எனவே, அவர்கள் இஸ்லாத்துடன் இணைந்து வாழ்வது தங்களால் சாத்தியமற்றது என்று கருதிக் கொண்டவர்களாக, சில சடங்கு சம்பிரதாயங்களுடன் பவனி வரும் கிறிஸ்தவத்தினைப் போல இஸ்லாமியர்களும் வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இன்னும் இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாம் இன்னதென்று வரையறை செய்து தருவதை, அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றார்கள். இந்த வகையில் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கடுமையாக அவர்கள் உழைத்ததன் விளைவு, இதில் அவர்கள் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்கள். அந்த மூன்று நூற்றாண்டின் இடையறாத அவர்களின் உழைப்பின் காரணமாக போலியான இஸ்லாமிய அங்கத்தவர்களையும், புதிய பிரிவுகளையும், புதிய கொள்கைகள் மற்றும் இஸ்லாத்திற்குள்ளேயே கருத்துமுரண்பாடுள்ள அம்சங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றை உருவாக்கி விடுவதில் அவர்கள் வெற்றி பெற்றே இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.

உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறிகளாகக் கடைபிடிக்கும் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகள் ஆகியவற்றை விட்டும், முஸ்லிம்களை பாராமுகமாக்கி விட வேண்டும் என்று அவர்கள் ரகசியமான முறையில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் ரகசியமானதொன்றல்ல. கிறிஸ்தவத்தில் உள்ள மத வழிபாட்டு முறைகளைப் போன்று இஸ்லாத்திலும் இருக்குமென்று சொன்னால், அத்தகைய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்களே தவிர, உண்மையான இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.



இஸ்லாத்தின் எதிரிகளை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.

(1) மதச்சார்பற்ற அடிப்படைவாதிகள்,

(2) யூத மற்றும் இந்து மத அடிப்படைவாதிகள், மற்றும்

(3) கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்.

இந்த மூன்று அணியினரும் இணைந்தும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொண்டும், அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து அதற்கான பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டும் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தால் அமெரிக்க ஜனத்தொகையில் 4 சதவிகிதத்தினராகவும் அல்லது 10 மில்லியனுக்கும் குறைவான தொகையைக் கொண்டவர்களாகவுமே இருப்பார்கள். இருப்பினும், இந்த சிறு தொகையினரிடம் எல்லையில்லாத அதிகாரங்களும் மற்றும் மக்களை வசீகரிக்கும் தன்மையும் கூட உண்டு. இவர்களைத் தவிர்த்து ஏனைய 96 சதவீதத்தினர் கண்மூடிக் கொண்டு பின்பற்றும் அறியாமைச் சமூகமாகவும் இன்னும் இந்த இஸ்லாத்தின் எதிரிகள் சொல்வதை நம்பக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் மற்றும் அவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றிக் கொண்டிருக்கும் மக்களையும் எவ்வாறு பிரிக்க முடியுமென்று சொன்னால், இடையறாத அறிவூட்டும் நடவடிக்கையின் மூலமாக, பிரச்சாரப் பணிகளின் மூலமாக முஸ்லிம்களால் சாதிக்க முடியும்.

இஸ்லாத்தின் எதிரிகள் தங்களை உயர் தகுதிமிக்க அறிவாளிகளாக அதாவது, மருத்துவர், பேராசிரியர், ரெவரெண்ட், ஆய்வாளர் இன்னும் இது போன்ற பட்டங்களை முன்னிறுத்திக் கொண்டு தங்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூடியவராக இருக்கின்றார்கள். இன்னும் இவர்களது கருத்துக்களுக்கு இன்றைய ஊடகங்கள் அதிமுக்கியத்துவத்தையும் வழங்குவதோடு, இவர்களது கல்வித் தகுதி மற்றும் பின்னணி ஆகியவை அவர்கள் சொல்ல வருகின்ற கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பனவாகவும் உள்ளது. இதற்கு சில எடுத்துக்காட்டுக்களை நாம் இங்கு முன் வைக்கலாம், டாக்டர் ராபர்ட் மோரே, டாக்டர் அனிஸ் ஷார்ரோஷ், ரெவெரெண்ட் பாட் ராபர்ட்ஸன், ரெவரெண்ட் பில்லி கிரஹாம், பேராசிரியர் ஸாம் ஹண்டிங்டன், பேராசிரியர். டேனியல் பைப்ஸ் மற்றும் பலர்.

மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரை தங்களை சமூகத்தில் அறிவாளிகளாக இனங்காட்டிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் மதம் என்பது மக்களின் வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒன்று என்று கருதும் அதேவேளையில், மக்கள் தனிப்பட்ட முறையில் கடவுள் அல்லது பல கடவுகள்களின் மீது மத நம்பிக்கை கொள்வதனைச் சகித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் பலவீனமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக ஒரு கடவுளையோ அல்லது பல கடவுள்களையோ வணங்கக் கூடியவர்களாக இருக்கின்ற அதேவேளையில், தங்களது நம்பிக்கைக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசயில் வாழ்க்கைக்கும் தாங்கள் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கின்ற கடவுள் கொள்கைக்கும் ஏதேனும் தொடர்பிருக்கின்றதா என்பதைக் கவனிப்பதில்லை, இவர்களில் அந்த மதங்களின் குருமார்களாகத் திகழக் கூடியவர்களும் அடங்குகின்றார்கள். இத்தகையவர்கள் குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிரிடையாக இருக்கின்றார்கள், ஏனெனில், இஸ்லாம் என்பது ஒரு கொள்கையுடன் பிணைக்கப்பட்ட சமூகச் சூழலை உருவாக்க விளைவதோடு, இதன் காரணமாக மதச்சார்ப்பற்ற கொள்கையுடன் போட்டி போடக் கூடியதாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே, இந்த மதச்சார்பற்ற கொள்கையுடையவர்களின் நோக்கமே இஸ்லாத்தினை முற்றாக அழித்து விட வேண்டும் என்பதேயாகும், இதற்கான தெளிவாக திட்டமும் அவர்களிடம் உண்டு. மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள மூன்று வகையினரில் இந்த மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளே எண்ணிக்கையில் அதிகம் இருப்பதோடு, மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். ஏனெனில், இந்தக் குழுவினரில் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், வியாபாரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலைநாட்டுப் பொதுமக்களின் பெரும் பகுதியினர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தான் அரசாங்கச் சக்கரத்தை இயக்கக் கூடியவர்களாகவும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்களாகவம், வங்கிகள், சர்வதேச வணிகத் தளங்கள், அறிவாளிகளின் குழுமங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூட நிர்வாகங்கள், நிதிநிறுவன அமைப்புகள், நன்கொடை அமைப்புகள் என்று எங்கினும் அவர்கள் நிறைந்து காணப்படுகின்றார்கள். இவர்கள் தான் இஸ்லாத்தினை எதிர்க்கக் கூடிய இயக்கங்களை இயக்கக் கூடிய தலைமைகள் ஆவார்கள். இத்தகைய தீவிரவாதிகளையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் நாம் பேராசிரியர்களாகவும், துறைசார் நிபுணர்களாகவும், குருமார்களாகவும், கல்வியாளர்களாகவும் மற்றும் அறிவுசார்நிபுணர்களாகவும் இருக்கக் காணலாம்.

ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அனைத்து மதச்சார்ப்பற்ற அரசியல்வாதிகளும் இஸ்லாத்தின் எதிரிகளல்ல. மாறாக, அவர்களில் பெரும்பகுதியினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாத்தின் எதிரிகளாக இருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். இந்த எதிரிகள் ஆராய்ச்சிகளின் மூலமாகவும், கல்வித்துறை சார்ந்த வகையிலும், வெளியீடுகள் மூலமாகவும், புத்தகங்கள், பத்திரிக்கைகளில் பத்திரிக்கைத் துறைசார் நிபுணர்களைக் கொண்டும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறாக, அவர்கள் சமூகத்தில் வாழக் கூடிய மக்களின் மூளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

யூதர்களும், ஹிந்து அடிப்படைவாதிகளும் இஸ்லாத்தினை தங்களது சுய இருப்புக்கான ஆபத்தாகக் கருதுகின்றார்கள். இஸ்லாத்தின் பரவலானது அவர்களது கொள்கைகளையும், அதிகார ஆட்சி பீடங்களையும் அசைத்து விடும் என்று கருதுகின்றார்கள். இதன் காரணமாகவே அவர்கள் இஸ்லாத்தினை மூர்க்கத்தனமாக பலப் பிரயோகத்தோடு எதிர்க்கின்றார்கள். அவ்வாறு எதிர்க்கக் கூடிய அத்தகையவர்களின் செயல்முறைகள் குறித்து இங்கு சிறிது காண்போம் :

இஸ்லாத்தையும் அதனைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களையும் தீமைகளின் சின்னங்களாக உருவகப்படுத்திக் காண்பித்து, யூதம் மற்றும் இந்து மதம் தான் சிறந்தது என்று சரிகாண்பது. இதன் மூலம் முஸ்லிம்களை மனிதாபிமானமற்றவர்களாகவும், தீமைகளின் பிறப்பிடங்களாகவும் இருப்பதே அந்தக் கொள்கைக்குரியது என்று பிரச்சாரம் செய்வது. இதன் மூலம் இத்தகைய தீய சக்திகளை இந்தப் பூமியிலிருந்து களைவது அல்லது கொல்வது சரியானதொரு செயல்முறைதான் என்பதனையும், முஸ்லிம்களது சொத்துக்களைச் சூறையாடுவது, அவர்களை அடக்குமுறைக்குள்ளாக்குவது மற்றும் அவர்களைக் கைது செய்து சிறைக்கம்பிகளுக்கு நடுவே சித்தரவதைகளுக்கு உள்ளாக்குவது ஆகிய அனைத்தும் அவசியமானதொன்றே என்று தங்களது செயல்களுக்கு, இந்த இஸ்லாத்தின் எதிரிகள் நியாயங்களைக் கற்பித்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே ஒரு எலியை இந்த உலகத்தில் கொல்லப்படுவது பத்திரிக்கைச் செய்திகளிலும் தொலைக்காட்சிச் செய்திகளில் முன்னுரிமை கொடுத்து ஒளிபரப்பப்படுவதிலும் இந்த எதிரிகள் காட்டுகின்ற அக்கறை, ஒரு முஸ்லிம் செத்தால் அல்லது கொல்லப்பட்டால் தேவையற்ற செய்தி போல அவற்றை தலைப்புச் செய்திகளில் மட்டுமல்ல, பெட்டிச் செய்திகளில் போடுவதற்குக் கூட இடம் மறுக்கப்படுகின்ற அவல நிலையை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம். அதேவேளையில் ஒரு யூதனோ அல்லது இந்துவோ ஒரு முஸ்லிமினால் கொலை செய்யப்பட்டு விட்டால், அது அன்றைய தினப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டு, ஒளிபரப்பப்படுவதை நாம் காண முடியும். பாலஸ்தீனியர்கள் அவர்களது சொந்த நாட்டில் அடக்குமுறைக்கு உள்ளாக்குப்படுவதையும், காஷ்மீர்கள் மக்கள் படும் அவஸ்தைகள் மற்றும் காவல்நிலையப் படுகொலைகளையும், செசன்யாவில் ஒடுக்கப்படும் முஸ்லிம்களைப் பற்றியோ இந்த மேற்குலகு கண்டு கொள்ளாது, வாய் மூடி மௌனியாக இருக்கும், அவர்களது துன்பங்களைக் கண்டு இரக்கம் கூட காட்ட எத்தணிக்காது என்பது தான் சோகமானது. தங்களது சொந்த உரிமைகளுக்காகப் போராடக் கூடிய முஸ்லிம்களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ''தீவிரவாதிகள்'' என்ற அடைமொழிப் பெயர் கொண்டு அழைக்க மட்டும் இந்த மேற்குலகு தவறுவதில்லை. இஸ்லாத்திற்கு எதிராக இந்த மேற்குலகு கடைபிடிக்கக் கூடிய கொள்கைக்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தோனேஷியாவில் உள்ள கிழக்குத் தைமூர் பிரச்னையைச் சொல்லலாம். இந்தோனேஷியாவின் ஒரு பகுதியாகிய இந்த கிழக்குத் தைமூர் தீவில் வாழும் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து முஸ்லிம்களைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாது, அவர்களது வணக்கத்தளங்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், பயங்கர கொலை கார ஆயுதங்களைக் கொண்டு முஸ்லிம்களின் தெருக்களில் வலம் வந்ததையும் கூறலாம். இந்தப் பயங்கரவாத நடவடிக்கையைக் கண்டிப்பதற்குப் பதிலாக கிறிஸ்தவர்களின் பக்கம் சாய்ந்து கொண்டு, இந்தோனேஷியாவின் பிடியிலிருந்து கிழக்குத் தைமூரை விடுதலை செய்து கொடுத்து விட்டுத் தான் வேறு வேலை பார்த்தது. ஆனால் அதேவேளை, தங்களது அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனம், காஷ்மீர், மிந்தானாவோ முஸ்லிம்கள் ''தீவிரவாதிகளாக'' சித்தரிக்கப்பட்டு, அவர்களை இன்னும் ஒடுக்குவதற்கு சம்பந்தப்பட்ட அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு இந்த மேற்குலகு உதவிக் கொண்டிருக்கின்றது. இதனைத் தான் நாம் இரட்டை வேடம் என்கிறோம். ஏன் இந்த இரட்டை அளவுகோள்? அக்டோபர் 2000 ல் ஒரு நூறு அரபு இளைஞர்களை அமெரிக்க மக்களின் வரிகளினூடாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டு இஸ்ரேலிய அடக்குமுறை இராணுவத்தினர் கொலை செய்தார்கள். இதில் படுகொலை செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவார்கள் மற்றும் சிறு குழந்தைகளும் அதில் அடங்குவர். ஆனால் இந்த படுகொலைக்குக் காரணமான இஸ்ரேலை எந்த அதிபரும், எந்த அரசாங்கமும் கோபித்துக் கொள்ளவில்லை. கண்டனக் கணைகள் பறக்கவில்லை. ஆனால் அதேவேளை, இஸ்ரேலிய இராணுவத்தால் படுகொலைகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரைக் கையும் களவுமாகப் பிடித்து பாலஸ்தீனியர்கள் கொலை செய்ததை, உலக மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கச் செய்தியாக, தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. பயிற்றுவிக்கப்பட்ட கொலைகாரர்கள் சமாதானத் தூதுவர்களாகவும், 6-16 வயது மதிக்கத்தக்க இளைஞர்களும், சிறுவர்களும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். சிந்திக்கத் திராணியற்ற மக்கள் தான் இத்தகைய அவதூறுச் செய்திகளை நம்பிக் கொள்வார்கள். இன்றைய அமெரிக்காவிலும் ஏனைய மேற்குலகிலும் சோம்பேறித்தனமும், பய நோயும், முரண்பட்ட போக்கும், கவன ஈனமும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்களது பொடுபோக்குத் தனமும், குறிப்பாக மேற்குலகில் வாழக் கூடிய முஸ்லிம்களின் சுயநலப் போக்கும் தான் இத்தகைய செய்திகள் முக்கியத்துவம் பெறக் காரணமாக அமைந்து விடுகின்றன. மேற்குலகில் வாழக் கூடிய முஸ்லிம்கள் தங்களது வாய்ப்பு வளங்களை முறையாகப் பயன்படுத்தினால், இதனூடாக அதிகாரமும் கைவரப் பெற்றால் இன்றைக்கு இருக்கும் நிலையை முற்றிலுமாக மாற்றி, இஸ்லாமிய எதிர்ப்பு என்ற நிலையை மாற்றி, இஸ்லாமிய ஆதரவு என்ற நிலையைக் கொண்டு வந்து விடலாம்.



இஸ்ரேலிய மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதிகள் முஸ்லிம்களை மனிதாபிமானமற்றவர்களாகவும், கொடிய பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் அதேவேளையில், உண்மையிலேயே பயங்கரவாதிகளாகத் திகழக் கூடிய அமைப்புகளான சிஐஏ, இஸ்ரேல், மற்றும் இந்திய இந்துத்துவா போன்ற அமைப்புகளுக்கு அமெரிக்க அரசும், அமெரிக்க காங்கிரஸும் பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், மற்றும் நிதிஉதவிகள் மூலமாகவும் உதவி வருகின்றது. ஒரு அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 6 பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் உதவியாகப் பெற்றுக் கொள்கின்றது. அதாவது, அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து இஸ்ரேலிய யூதனின் தலை ஒன்றுக்கு 1500 டாலர் வீதம் வழங்கப்படுகின்றது. இந்த பரிசுப் பணம் மூலம் பாலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும், இன்னும் அவர்களை இடம் பெயர்ந்து செல்ல வைக்கவும் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவானது இஸ்ரேலுக்கு மானசீகமான முறையில் உதவுகின்றது. முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான நிதியின் மூலமாக துப்பாக்கிகளையும், டேங்குகளையும், ஹெலிகாப்டர்களையும், ஏவுகணைகளையும் கொள்முதல் செய்து கொள்வதோடு, சித்ரவதை முகாம்களை அமைத்தல், அதற்கான பயிற்சிகளை வழங்குவதல், உளவுத் துறை தகவல் பரிமாற்றம், இன்னும் நிதியுதவி ஆகியவற்றின் மூலமாகவும் அமெரிக்கா இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு உதவி வருகின்றது. அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் அமெரிக்க அரசியலில் கவனம் செலுத்துவதனூடாக இந்த நிலையை மாற்றியமைக்க முடியும். நிச்சயமாக, முஸ்லிம்கள் அரசியலுக்குள் அடி எடுத்து வைப்பதற்கு கடுமையாக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும், ஆனால் போராடி நுழைவதன் மூலமாக இஸ்லாமிய எதிரிகளின் எதிர்ப்புகளை முடமாக்குவதுடன் அமெரிக்க அரசில் முஸ்லிம்கள் தங்களது சுய ஆதிக்கத்தைச் செலுத்த முடியும். முஸ்லிம்கள் உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு பகுதிகளில் அவர்கள் எடுத்துக் கொண்ட நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்பதைப் பல்வேறு சம்பவங்களினூடாக நிரூபிக்க முடியும். சாந்தா கிளாரா, சிஏ, பிரிட்ஜ்வீவ், மார்ட்டன் குரோவ், புருக்ளின், நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி போன்ற இடங்களில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளனர். இந்தப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு எதிரான அலையை நடுநிலைக்கும் அல்லது இஸ்லாமிய சார்பு நிலையாகவும் மாற்றி அமைத்திருக்கின்றார்கள். இத்தகைய அரசியல் ஈடுபாட்டிலிருந்து விலகிக் கொள்வதானது மெல்ல மெல்ல தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானதாகும். அரசியலில் இருந்து முற்றிலும் விலகி இருந்ததன் காரணமாகவே ஸ்பெயின், போஸ்னியா, செசன்யா மற்றும் கொசோவோ மக்கள் மிகவும் எளிதான முறையில் படுகொலைகளுக்கும் உரிமைப்பறிப்புக்கும் ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்பு தான், குடியரசுக் கட்சியின் உறுப்பினரான டோம் கேம்பல் என்பவர் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, இஸ்ரேலுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று அதன் மூலம் கோரினார். இவரது தீர்மானத்திற்கு ஆதராவாக 12 ஓட்டுக்கள் விழுந்தன, அவர் தனது முயற்சியில் தோல்வி அடைந்திருந்தாலும், முஸ்லிம்களின் அரசியல் பிரவேசமானது இத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வர அவரைத் தூண்டியதே முஸ்லிம்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். இத்தகைய முயற்சிகள் தொடருமானால், இந்தத் தீர்மானம் வெற்றி பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.



அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே செல்வதானது, யூதர்களையும், இந்துத்துவா சிந்தனை கொண்ட மக்களையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்வதானது, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தங்களுக்கு மிகவும் நெருக்கடியை உண்டாக்கும் என்று அவர்கள் கருதத்தலைப்பட்டுள்ளார்கள். யூதர்களின் செல்வாக்கு என்பது பணத்தை விதைப்பதன் மூலமாகவும், அரசியல் தலையீடுகள், நேரங்களை இதற்காக செலவழித்தல் மற்றும் அரசியல்வாதிகளுக்கான திறமையானவர்களை இனங்காணுதல் ஆகியவற்றுடன் செயல்படுகின்றார்கள். அதாவது அமெரிக்க அரசியலில் அவர்கள் செலவிடும் ஒரு டாலரானது, அதன் மூலமாக இஸ்ரேலுக்கு ஓராயிரம் டாலர்களை வருமானமாகப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கின்றது. இத்தகைய வழிமுறைகள் மூலமாக பணத்தை மட்டுமல்ல, அரசியல்வாதியாகப் பரிணமிப்பதற்குண்டான வாய்ப்புக்களையும் கிடைக்கச் செய்கின்றது. இப்பொழுது, உள்ளூர் மற்றும் தேசிய மட்டத்தில் அமெரிக்க அரசிலும் இருந்து கொண்டு, மற்றும் அரசை இயக்கிக் கொண்டு, அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதனூடாக மிகச் சிறிய சிறுபான்மையினராக இருந்து கொண்டு, தங்களது சதவீதத்திற்கும் அதிகமாகவே அவர்கள் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்க ஜனத்தொகையோடு யூதர்களை ஒப்பிடும் பொழுது, யூதர்கள் வெறும் இரண்டு சதவீதத்தினரேயாகும். அரசியலில் அவர்கள் காட்டிய அக்கறையின் காரணமாக, 1900 ல் உலகில் வெறுக்கப்பட்ட சமூகமாக இருந்த அவர்கள், 2000 ம் ஆண்டில் உலகின் வலிமை மிக்க சக்தியாக மாறியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையாக, அவர்களது தங்களது திட்டத்தின் நோக்கத்தை 60 ஆண்டுகளுக்குள்ளாகவே அடைந்து கொண்டார்கள். முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதத்தை எவ்வாறு குறைப்பது என்பதற்குண்டான திட்டத்தை செயல்படுத்திடுவதற்காக அவர்களால் கடுமையாகப் போராட முடியும் என்று சொன்னால், முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்தை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்ற திட்டத்தையும் போட முடியும். முஸ்லிம்கள் அரசியலில் பிரவேசிப்பதும், அதில் அவர்களை ஊக்குவிப்பதும் ஆபத்தானது என்ற வதந்தியை அவர்கள் ஏற்கனவே கிளப்பி விட்டுள்ளார்கள். இந்தக் குழுவினர் தங்களுக்குச் சாதகமாக மீடியா உலகத்தையும், பொழுது போக்கு சாதனங்களையும் பயன்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகின்றார்கள். இன்னும் முஸ்லிம்களில் உள்ள சில அமைப்புகள் முஸ்லிம்கள் அரசியலில் பிரவேசிப்பதனை எதிர்ப்பதனூடாக, இவர்கள் இஸ்லாமிய சக்திகளுக்கு உதவி வருகின்றார்கள்.



கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் இஸ்லாத்தினை உலகத்தின் வலுமிக்க போட்டிச் சக்தியாகப் பார்ப்பதோடு, மற்ற மதங்களை விட அது மனிதர்களின் மனங்களையும் இதயங்களையும் கொள்ளை கொண்டு செல்லக் கூடியதாகவும் இருக்கின்றதே என்று அவர்கள் கருதுகின்றார்கள். இஸ்லாத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அவர்கள் மிரண்டு போகின்றார்கள். கிறிஸ்தவ அடிப்படைவாதிகளானவர்கள் அமெரிக்காவில் வாழக் கூடிய யூதர்களையும் விட அதிக வெறுப்புக்களை உமிழக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக அடிமட்ட வேலைகளையும், அதன் மீது பொய்களையும், களங்கத்தையும் சுமத்துவதன் மூலமாக இஸ்லாத்திற்கு எதிராக மக்களைத் திசை திருப்ப முனைப்போடு செயல்படுகின்றார்கள். மக்களின் மனங்களில் இஸ்லாத்திற்கு எதிரான துவேச விதைகளைப் பரப்புவதனூடாக, மக்களின் வெறுப்பை வளர்த்து அந்த வெறுப்பை அமெரிக்காவில் ஒரு போஸ்னியாவையும், ஜெர்மனியில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளைப் போன்றதொரு இனப் படுகொலையை நடத்தி விட வேண்டும் என்றே அவர்கள் திட்டமிட்டு செயலாற்றுகின்றார்கள். இந்தத்திட்டத்தினூடாக மேற்கிலும், ஐரோப்பாவிலும் இஸ்லாத்தினை அகற்றுவதோடு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய நாடுகள் மீதும் போர்தொடுக்கவும் அவர்கள் திட்டமிடுகின்றார்கள். இதுவே இஸ்லாத்திற்கு எதிராக கிளிர்ந்தெழுந்து நிற்கக் கூடிய ஒரு அடிப்படைவாதியின் செயல் திட்டமாகும். இவர்கள், அகீதா என்றழைக்கக் கூடிய இஸ்லாமிய கொள்கையின் மீதும், அதன் நடைமுறைகள் மீதும், வரலாறு மற்றும் கலாச்சாரங்களின் மீதும் தாக்குதல் தொடுக்கின்றார்கள். இவர்கள் இஸ்லாமிய கலாச்சாரங்களை மாற்றியமைப்பதோடு, அதற்கு நேர்முரணான பார்வையைத்தான் வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு வழங்குகின்றார்கள். இதன் மூலம் இஸ்லாத்தை அகோரமாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். இதற்காக இவர்கள் கிறிஸ்தவ பிரச்சார அமைப்புகளான தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு, புத்தகங்கள், கையேடுகள் மற்றும் துண்டுப் பிரச்சாரங்கள் வாயிலாகவும் பொதுமக்களிடம் இஸ்லாத்திற்கு எதிராhன கருத்துப் பரவலை ஏற்படுத்துகின்றார்கள். இன்னும் அதிகமாக, தங்களை பேரறிவாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தேவாலயங்களில் உரையாற்றக் கூடியவர் கூட, இஸ்லாத்திற்கு எதிரான கட்டுக் கதைகளையும், பொய்களையும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக் கூடியவராக இருக்கின்றார். இவ்வாறான இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரங்கள் செய்யப்படும் பொழுது, தன்னைச் சுற்றி நடப்பது என்னவென்றே அறியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள், தங்களைச் சுற்றிலும் பிண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் சதி வலைகள் கழுத்தை நெறிக்கும் சமயத்தில், விழித்தெழுவதனால் ஏதேனும் பயன் உண்டாகி விடுமா? காலம் கடந்த ஞானத்தால் ஆவதென்ன? அமெரிக்காவில் ஒரு போஸ்னியாவையும், இந்தியாவில் ஒரு போஸ்னியாவையும் தான் நாம் காண முடியும். இன்னும் இந்த இஸ்லாம் அல்லாத மக்களைச் சென்று சந்தித்து, இஸ்லாத்தினை எடுத்துச் சொல்வதற்கு தடை சொல்லும் அமைப்புகளும் நம்மிடையே உள்ளன. இவை, மேற்கண்ட இஸ்லாத்தின் எதிரிகளது நோக்கத்திற்குத் துணை போவது போல உள்ளது. இன்னும் முஸ்லிம்களுக்குள்ளேயும் இஸ்லாத்தைப் பற்றியதொரு அச்சம் நிலவுகின்றது. தாங்களது பிள்ளைகள் தொழச் செல்ல ஆரம்பித்து விட்டாலே அச்சத்தால் நடுங்கக் கூடிய பெற்றோர்களும் நம்மில் இருக்கின்றார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளின் பிரச்சாரத்தை முடமாக்கி, பொதுமக்கள் மத்தியில் இஸ்லாத்திற்கு எதிராகத் திணிக்கப்பட்டுள்ள தவறான கருத்துக்களை களைவதனூடாக இஸ்லாத்திற்கு எதிரான சதிகளை முனை மழுங்கச் செய்ய முடியும். அல்லது இல்லாமலாக்க முடியும். இன்னும் இஸ்லாமிய சார்பு அங்கத்தினர்களை சமூகத்தில் உருவாக்க முடியும். இன்னும் முஸ்லிம்களுக்குள் இஸ்லாமிய அடிப்படைகள் பற்றியும், இஸ்லாமிய சட்டங்கள் பற்றியும் எடுத்துரைப்பதன் ஊடாக, அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும் போக்கி, உண்மையான விசுவாசிகளாக அவர்களை உருவாக்க முடியும். இந்த இரண்டு பணிகளையும் ஒரு சேரக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு பணியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, இன்னொரு பணியை விட்டுவதானது, நம்முடைய செயல் வேகத்தை முடமாக்கும். இன்னும் நம்முடைய நோக்கத்தை அடைந்து கொள்ள அது நீண்ட கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளும். சிலவேளை, நமது நோக்கத்தை அடைந்து கொள்ள இயலாமலேயே செய்து விடும்.

எதிரிகளின் கனவுகள் : இஸ்லாத்தின் எதிரிகள் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்ட இஸ்லாமியத்தையே அவர்கள் காண விழைகின்றார்கள். அவையாவன :

இஸ்லாத்திலிருந்து ஜிஹாதை நீக்குவது

இஸ்லாத்தின் இன்னொரு அங்கமான அரசியலை அதிலிருந்து நீக்குவது

இஸ்லாமிய பொருளாதார அமைப்பை நீக்குவது

முஸ்லிம்களின் சமூக வாழ்வை மறுசீரமைப்பது

அழைப்புப் பணியை மாற்றுமதத்தவர்களுக்குக் கொண்டு செல்ல விடாமல் தடுப்பது

தீமைகளைத் தடுப்பதை தடை செய்வது

குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிமுறையின் கீழ் வாழ்வதைத் தடை செய்வது

கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முஸ்லிம்களை முடமாக்குவது

இராணுத் தொழில் நுட்ப உதவிகளை மறுப்பது

பூகோளமயமாக்கல்



இஸ்லாத்திலிருந்து ஜிஹாதை நீக்குவது

எதிரிகளை அதிகம் நடுநடுங்க வைக்கக் கூடிய பகுதி எதுவென்றால், ஒரு முஸ்லிமின் இறப்பிற்குப் பிறகு 'ஷஹீத் - உயிர்த்தியாகி' என்ற அந்தஸ்தை இறைவனிடத்தில் பெற்றுத் தரக் கூடிய 'ஜிஹாத்' என்ற பகுதி தான். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் எதனுடன் வேண்டுமானலும் அது சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருக்கின்ற வேளையில், இந்த ஜிஹாதுடன் சம்பந்தப்பட்ட 'கிதால்' என்ற பகுதியுடன் அது சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. இஸ்லாத்தை நிராகரிக்கக் கூடிய ஒருவனுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எதுவென்றால், 'பெண்ணும், பொருளும்' தான். ஆனால், 'முஜாஹித்' என்றழைக்கப்படக் கூடிய அல்லாஹ்வின் பாதையில் தன்னுடைய உயிரைத் தத்தம் செய்யத் தயாராக இருப்பவனுக்கு இந்த இரண்டும் அற்பங்களாகும். முஸ்லிம்களே..! ஒரு நபிமொழியில் 'வஹ்ன்' – 'இந்த உலகத்தின் மீதான ஆசை' பற்றி இந்த சமுதாயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள், இந்த 'வஹ்ன்' என்ற ஆசையுடன் இருப்பவர்கள் தான் இறைவனை நிராகரிக்கக் கூடிய மக்களாகவார்கள். மேலும், இந்த 'வஹ்ன்' என்ற உலக ஆசையுடன் ஒரு முஸ்லிம் பவனி வருவான் என்று சொன்னால், இஸ்லாத்தின் எதிரிக்கு அதனை விட இஸ்லாத்தை அழிப்பதற்குண்டான சாதகமான அம்சம் வேறு எதுவும் இருக்காது. 'ஜிஹாது' என்ற சொல்லைப் பயன்படுத்த முயலாத காதியாணிகள், தப்லீக் ஜமாஅத்தார்கள், சூபித்துவ வாதிகள் மற்றும் இவர்களைப் போன்றவர்களை இஸ்லாத்தின் எதிரிகள் வரவேற்கின்றார்கள். மேற்கண்ட அமைப்பினர் ஒன்று 'கிதால்' என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பொறுத்தவரை அதனை எதிர்ப்பது அல்லது அதனைப் பற்றிப் பேசாமல் அமைதியாக இருந்து விடுவது ஆகிய இரண்டு கொள்கைகளின் மூலம் எதிரிகளுடைய சதித் திட்டங்களுக்குத் துணை போகக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். 'கிதால்' என்பது இஸ்லாத்தின் ஒரு அம்சம், ஆனால் அதனைப் பயன்படுத்துவதற்கென்று இடம், பொருள், ஏவல், நேரம் ஆகிய அனைத்தையும் சரி கண்ட பின் தான் அதனை ஒரு முஸ்லிம் பயன்படுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. எல்லா நேரத்திலும் அல்லது எல்லா இடத்திலும் இஸ்லாத்தின் எதிரிகள் இருக்கின்றார்கள் என்றோ, நினைத்த மாத்திரத்திலெல்லாம் இதனைப் பயன்படுத்தி விட முடியும் என்றோ நினைக்கக் கூடாது. இதனைத் தவிர்ப்பதற்குண்டான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் அடைபட்டுப் போனதன் பின்னர், அதாவது சமாதானப் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போனதன் பின்னர், 'கிதால்' என்ற முடிவை மேற்கொள்வது தான் ஒரு முஸ்லிமிற்கு உகந்த செயலாகும். இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம்களுக்கு நேருகின்ற அனைத்துப் பிரச்னைகளுக்கு ஒருவன் இந்தக் 'கிதால்' என்ற பலப்பிரயோகத்தைப் பயன்படுத்துகின்றான் என்று சொன்னால், அவனும் எதிரிகளது கனவுகளை மெய்ப்பிக்கின்றான் அல்லது அவர்களது கனவுகள் நிறைவேற ஒத்துழைக்கின்றான் என்றே பொருளாகும். இதன் மூலம் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்ற சொல்லாட்சியான 'தீவிரவாதம்' என்ற பதத்திற்கு உதாரணத்தைத் தேடிக் கொடுத்தவன் போலாவான் என்பதையும் மனதிற் கொள்வது நல்லது.


இஸ்லாத்தின் இன்னொரு அங்கமான அரசியலை அதிலிருந்து நீக்குவது

இந்தத் தலைப்பைப் பொறுத்தவரை இதனை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். ஒன்று இஸ்லாத்திலிருந்து அரசியலைப் பிரிப்பது, இது தான் மதச்சார்பற்ற அரசியலின் அடிப்படைத் திட்டமாகும். இரண்டாவது, முஸ்லிம்கள் அரசியலில் பங்கெடுத்து விடாமல், அவர்களை ஆர்வமிழக்கச் செய்தல். இதன் மூலம் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்லது பெற்று விடாமல் செய்து விடுவதனூடாக, யூத மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் கரங்களில் இருந்து கொண்டிருக்கும் ஆட்சி, அதிகாரத்தை இழக்காதிருப்பது. ஆயிரம் ஆண்டுகளாக கத்தோலிக்க கிறிஸ்தவம் கொடுமையான ஆட்சிதனை ஐரோப்பாவில் நடத்திக் காட்டியதன் விளைவாக, கத்தோலிக்க திருச்சபையிலிருந்து அரசியலைப் பிரித்தெடுத்தார்கள். அத்தகைய கத்தோலிக்க திருச்சபையைப் போலத்தான், இந்த மதச்சார்பற்ற அடிப்படைவாதிகள் இஸ்லாத்தினையும் ஊணக் கண் கொண்டு பார்க்கின்றார்கள். அவர்களது இந்த அறியாமைக்கு, சில முஸ்லிம்களும் ஒத்துழைக்கின்றார்கள் என்பது தான் வேதனை தரும் செய்தி.

அமெரிக்காவைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் அரசியல் களத்தில் இறங்குவதை இஸ்லாத்தின் எதிரிகள் விரும்பவில்லை, அதாவது இது ஒரு கௌவரப் பிரச்னையாக அவர்களுக்கு இருக்கின்ற அதேவேளையில், முஸ்லிம்கள் தங்களது அதிகாரத்தில் பங்கு போட வந்து விடுவார்கள் என்றும் அவர்கள் அச்சம் கொள்கின்றார்கள். காதியாணிகள், தப்லீக் ஜமாஅத்கள், சூபித்துவ வாதிகள், ஹிஸ்புத் தஹ்ரீர், தன்ஸீம்-ஏ-இஸ்லாமி இன்னும் இதுபோன்ற அமைப்புகளை இந்த இஸ்லாத்தின் எதிரிகள் வரவேற்கின்றார்கள், காரணம் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளது கொள்கைக்கு இணங்கிப் போவது, முஸ்லிம்கள் அரசியலில் பிரவேசிப்பதை இந்தக் குழுவினர் எதிர்ப்பதுமே காரணமாகும். இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகளை நனவுகளாக்க ஒத்துழைக்கின்றார்கள். இன்றைய நிலையில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இணங்கிச் செயல்படுவார்கள் என்று சொன்னால், சிறுகச் சிறுக யூத மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் பிடியில் உள்ள அரசியல் ஆதிக்கத்தைத் தளர்வுறச் செய்து, முஸ்லிம்கள் அதிகாரமிக்கவர்களாக உள்நாட்டிலும் இன்னும் உலகளாவிய ரீதியிலும் திகழ முடியும். இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களுக்கு எதிராகத் திகழ்வது என்பது குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவின் ஒரு பகுதியாகத் தானே இருக்கின்றது என்று சொல்லாதீர்கள். முஸ்லிம்கள் அரசியலில் அங்கம் வகிக்காமல் தவிர்ந்து கொள்வது, எதிரிகளது களப்பணிகளுக்கான கதவுகளை அகலத் திறந்து வைத்து, எந்தவித எதிர்ப்புகளும் இல்லாமல் தங்களது சதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பளித்தது போலாகி விடும் என்பதே உண்மையாகும்.


இஸ்லாமிய பொருளாதார அமைப்பை நீக்குவது

இங்கேயும் இந்தத் தலைப்பை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். ஒன்று இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாட்டை நீக்குவது, இந்த வகையில் இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து இஸ்லாமிய வழிகாட்டுதல்களைப் புறக்கணிப்பது. இரண்டாவதாக, இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களைப் புறக்கணிப்பது.

இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையானது இந்த சதிகாரர்களை கலவரமடையச் செய்துள்ளது. ஏனெனில், இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையானது வெற்றிகரமானதொரு அமைப்பாக உருவெடுத்து விட்டால், அதுவே முதலாளித்துவத்தின் சடவாதக் கொள்கைக்கான சாவு மணியாக இருக்குமென்று அவர்கள் கருதுவதே காரணமாகும். முதலாளித்துவமானது பலவீனர்கள் மற்றும் அறியாமைக்கார மக்களைச் சுரண்டி வாழ்வதை ஊக்குவிப்பதே அதன் பெருமைமிகு கொள்கையாகும். இத்தகைய மனிதகுலத்திற்கு ஆபத்தான கொள்கையை மரணப்படுகுழிக்கு அனுப்பக் கூடிய செயல்திட்டம் இஸ்லாத்திடம் இருப்பதினால், இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையைக் கண்டு இந்த சதிகாரர்கள் அஞ்சுகின்றார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பான வட்டி என்பது முதலாளித்துவத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது. மக்களின் தேவையையும், அறியாமையையும் பயன்படுத்தி முதலாளித்துவம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனை இஸ்லாம் 'ஹராம்' அதாவது தடுக்கப்பட்டது என்கின்றது. மேலும், போதைப் பொருள்கள் விற்பனை, பன்றியுடன் சம்பந்தப்பட்ட பொருள்கள், சூதாட்டம் மற்றும் விபச்சாரம் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக – தடை செய்திருக்கின்றது. இஸ்லாமியப் பொருளாதாரமானது முதலாளித்துவம் என்னும் கோட்டை கட்டப்பட்டிருக்கும் அதன் அஸ்திவாரத்தையே தகர்த்து விடக் கூடியதாக இருக்கின்றது. இந்தக் கொள்கையைப் பற்றி மக்களுக்கு வழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதை விட்டு விட்டு, இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிவழியில் அமைந்ததல்ல என்று கூறி, தப்லீக் மற்றும் சூபித்துவ வாதிகள் அமைதி காப்பதன் மூலம், இஸ்லாத்தின் எதிரிகளின் கனவுகள் நனவாகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களைப் போன்று இஸ்லாமியப் பொருளாதாரம் என்ற பகுதியை மறந்தவர்களாக மற்ற முஸ்லிம்கள் வாழ வேண்டும் அல்லது இது குறித்து எதனையும் பேசாமல் அமைதி காக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றே இஸ்லாத்தின் எதிரிகள் விரும்புகின்றார்கள்.


முஸ்லிம்களின் சமூக வாழ்வை மறுசீரமைப்பது

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை நிறுத்திக் கொள்வது மற்றும் ஆண்களும் பெண்களும் கலந்து பழகும் முறையை ஊக்குவிப்பது, அதற்கான எதிர்ப்பைக் கைவிடுவது, இதனை முஸ்லிம்களிடமிருந்து இஸ்லாமிய எதிரிகள் எதிர்பார்க்கின்றார்கள். 'மேற்கத்திய கலாச்சார (குறிப்பாக லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்) அமைப்புக்களில் தங்களை அமிழ்த்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்களைப் போல, முஸ்லிம்கள் மேற்கத்தியர்களைப் போல ஆடல் பாடல் கேளிக்கைகளில் ஆணும் பெண்ணும் ஈடுபட்டு, 'மேற்கத்திய முஸ்லிம்' ஆக மாற வேண்டும் என்று விரும்புகின்றார்கள். கல்வி கற்ற படித்த பண்பாடான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருகின்ற நிலையை அவர்கள் வெறுக்கின்றார்கள், இன்னும் இத்தகையவர்கள் மேற்கத்திய கலாச்சாரப் பின்னணியுடன் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதனின்றும் ஒதுங்கி இருக்கும் பெண்களையும் அவர்கள் வெறுக்கின்றார்கள். தங்களது இல்லங்களுக்கு அருகில் உள்ள குடும்பத்துப் பெண்கள் வெளியில் செல்லும் பொழுது, ஹிஜாப், புர்கா போன்ற எதுவுமில்லாமல் மேற்கத்திய கலாச்சாரப் பாணியில் ஆடை அணிந்து செல்வோரைத் தான் அவர்கள் விரும்புகின்றார்கள். இன்னொரு புறம், பெண்கள் கற்பதை விட்டும் இன்னும் அவர்களது அறிவு வளர்ச்சிக்கும் தடை போடக் கூடிய இயக்கத்தவர்களும் நம்மில் இருக்கின்றார்கள். இன்னும் சில இயக்கத்தவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதையும், அங்கு தங்களது சொந்த இயக்கத்தவர்களால் நடத்தப்படும் உரைகளையும் கூட கேட்டுப் பயன் பெற அனுமதி மறுக்கக் கூடியவர்களும் நம்மில் இருக்கின்றார்கள். இத்தகையவர்களது மூளை வளர்ச்சியானது ஐந்து அல்லது ஆறு வயதுக் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் போன்று தான் இருக்கும், இத்தகைய மூளை வளர்ச்சி குன்றியவர்களாகத்தான் இன்றைய முஸ்லிம் தாய்மார்கள் இருக்கின்றார்கள். ஒரு தாய் தான் ஒரு குழந்தையின் முதல் வகுப்பாசிரியர், இவர் தான் தான் பெற்ற அந்தக் குழந்தையின் ஆளுமையை சீராக்கி வளர்க்கக் கூடியவராக இருக்கின்றார். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அறியாமையில் உழல்கின்ற, வெறுப்பையும், இன்னும் கோபத்தையும் தன்னில் அடக்கி வைத்திருக்கின்ற இந்தத்தாய் சுயநலமிக்கவர்களாகத் தான் திகழ்வார்கள், இன்னும் தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக தங்களது கடைசிக் காலம் வரை ஒருவரைச் சார்ந்தே அவர்கள் இருக்க வேண்டிய நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டு விடும் பொழுது, முழுக்க முழுக்க அவர்களது வாழ்க்கை தங்களது சுயநலன்களை அடைந்து கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடியவர்களாகவும், எந்தவிதக் குறிக்கோளும் அற்றவர்களாகவும், இன்னும் தன்னைப் பற்றியோ அல்லது தனது குடும்பத்தைப் பற்றியோ அல்லது தன்னுடன் வாழ்ந்து வரும் சக மனிதர்கள் பற்றியோ அவர்கள் அக்கறை கொள்ள இயலாதவர்களாகவே மாறி விடுகின்றார்கள். இதற்கு மாற்றாக, கல்வி கற்ற ஒரு பெண், அதுவும் இஸ்லாமிய ரீதியில் குர்ஆனையும், சுன்னாவையும் கற்றுத் தேறியிருக்கின்ற பெண்ணானவள் சந்தோஷமான வாழ்க்கையை நடத்தக் கற்றுக் கொள்வதுடன், அவளிடம் சிறந்த தலைமைத்துவத்திற்கான திறமைகள் மலிந்து கிடப்பதையும், இன்னும் தங்களது குழந்தைகளை கல்வியாளர்களாக உருவாக்க வேண்டும் என்ற அக்கறையும், சந்தோஷமான மற்றும் தூர நோக்குச் சிந்தனை கொண்டவர்களாக தங்களது பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையைச் சுமந்தவர்களாகவும் அவர்கள் இருப்பதைக் காண முடியும். ஆயிரம் ஆண்டுகளாக முஸ்லிம் தாய்மார்கள் கல்வி கற்க இயலாதவர்களாக, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டதன் காரணமாக இன்றைக்கு நாம் சுயநலமிக்க சமுதாய அங்கத்தினர்களையும், இஸ்லாம் என்றால் என்ன என்று அறியாத மக்களையும், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கக் கூடியவர்களையும், தூர நோக்கற்றவர்களையும், குறுகிய மனப்பான்மையுள்ளவர்களையும், கருத்துமுரண்பாடுகளுடன் காலந்தள்ளக் கூடியவர்களையும், உயர்பண்பு மற்றும் தலைமைத்துவத்திற்கான தகைமை அற்றவர்களையும் தான் இன்றைக்கு சமுதாயம் பெற்றிருக்கக் கூடிய சூழ்நிலையைப் பார்க்கின்றோம். அதன் பலனைத்தான் இன்றைய முஸ்லிம் உம்மத் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய உலகமெங்கும் இத்தகைய முறையில் தொலைநோக்கற்ற, அறிவற்ற, அறியாமையில் உழன்று கொண்டிருக்கின்ற தாய்மார்களால் பெற்றெடுக்கப்பட்ட, தலைமைத்துவத்திற்கு எந்தத் தகுதியுமற்ற சுயநல ஆட்சியாளர்கள் நிறைந்த நாடுகளாக இன்றைய முஸ்லிம் நாடுகள் மலிந்து கிடப்பதையும், மேற்கின் அடிவருடிகளாக அவர்கள் மாறி இருப்பதையும் நாம் கண்டு வருகின்றோம். இத்தகைய நிலை தொடர வேண்டும் என்பதே சில முஸ்லிம் இயக்கத்தவர்களின் ஆசையாகவும், இஸ்லாத்தின் எதிரிகளது கரங்களில் ஆட்சியும், அதிகாரம் தங்கியிருப்பதே தங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது போன்றும் அவர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளை அமைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கும் நிலையையும் நாம் காண்கின்றோம். இத்தகைய இஸ்லாமிய இயக்கத்தவர்கள் உலகின் எந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் இவர்களுக்கு உடனே விசா போன்ற அனுமதிகள் உடனடியாகக் கிடைத்து விடுகின்றன. அதேநேரத்தில் குர்ஆனையும், சுன்னாவையும் வலுவாது பின்பற்ற வேண்டும் என்று துடிக்கின்ற முஸ்லிம்கள் 'தீவிரவாதிகள்' பட்டியலில் சேர்க்கப்பட்டு பிற நாடுகளுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதுடன், அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு தீவிரவாதிகளாக சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதையும் காண்கின்றோம்.


அழைப்புப் பணியை மாற்றுமதத்தவர்களுக்குக் கொண்டு செல்ல விடாமல் தடுப்பது

அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் உள்ள கடமையாக இருக்கின்றது, இஸ்லாத்தின் பரவலுக்கு இது துணை செய்கின்றது. இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகளை வெறுக்கக் கூடியவர்களாக, இஸ்லாத்தின் பரவலானது தங்களது சமூகத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தி தங்களது நோக்கங்களையும், ஆசைகளையும் சிதறடித்து விடக் கூடியதாக அமைந்து விடும் என்று அவர்கள் கருதுகின்றார்கள். தப்லீக் மற்றும் சூபித்துவவாதிகள் மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தினை எடுத்துச் சொல்வதில் முனைப்புக் காட்டுவதில்லையாதலால், இஸ்லாத்தின் எதிரிகள் இத்தகையவர்களை விரும்புகின்றார்கள். அழைப்புப் பணியில் ஈடுபடாமல் இருப்பது அல்லது அவ்வாறு செயல்படுவதை எதிர்ப்பது இதனூடாக, இத்தகையவர்கள் எதிரிகளின் கனவுகளுக்கு வலுச் சேர்க்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற அமைப்புகள் இதில் மாறுபட்ட நோக்கத்துடன் 'கிலாபத் - இஸ்லாமிய ஆட்சியே தீர்வு' என்ற சுலோகத்தை முன் வைக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களிடம் இதற்கான சரியான திட்டமிடல்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, இன்னும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய நாடுகளில் இவர்களது திட்டங்கள் என்ன என்பதே தெரியவில்லை. முஸ்லிம்கள் மிகவும் சிறுபான்மையினராக வசிக்கக் கூடிய நாடுகளில் இவர்கள் இஸ்லாமிய கிலாபத்தை அமைக்கப் போகின்றோம் என்று அறைகூவல் விடுவதை நாம் காண முடிகின்றது. மக்களை கவர்ந்திழுக்கக் கூடிய உரைகளின் மூலம் மேற்கில் இஸ்லாமிய ஆட்சியை, அதாவது கிலாபத்தே தீர்வு என்ற கொள்கை முழக்கத்தை அவர்கள் உரத்துக் கூறுகின்றார்கள். இவர்களின் இந்தத் திட்டத்தை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய நாடுகளில் சென்று செயல்படுத்தி, அவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு நாட்டையாவது இஸ்லாமிய ஆட்சியின் பால் கொண்டு வருவதற்கு அவர்கள் முயற்சி செய்வது நல்லது. மேற்கில் இஸ்லாமிய மறுமலர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றவர்களின் திட்டத்தில் இத்தகையவர்கள் தங்களால் இயன்ற அளவு பிரச்னைகளையும், தடைகளையும் ஏற்படுத்தி விடுகின்றார்கள்.


தீமைகளைத் தடுப்பதை தடை செய்வது

இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமையும் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்குமாறு பணிக்கின்றது. தீமையைத் தடுப்பது என்றால், தீங்கு விழைவிக்கக் கூடிய அனைத்து வகையான செயல்களிலிருந்தும் மக்களை தவிர்ந்து வாழும்படிச் செய்தல் என்பதாகும். ஜனநாயகச் சட்டங்களின்படி, தீமைகள் என்பவை எவை எவை என்பதை அதன் சட்டங்கள் தான் வரையறுக்க வேண்டும். அதன்படி இறைச்சட்டங்கள் எதனையெல்லாம் தீமைகள் என்று அறிவுறுத்தியிருக்கின்றனவோ அவையெல்லாம் இந்தச் சட்டங்களின்படி தீமைகள் என்று கருத வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, மது அருந்துவது, சூதாடுவது, விபச்சாரம், ஓரினச் சேர்க்கை ஆகிய அனைத்தும் இந்த ஜனநாயகச் சட்டங்களின்படி வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டவைகளாகவும், தீமைகள் என்று இந்தச் சட்டங்களின்படி முத்திரை குத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில், இஸ்லாத்தில் ஊடுறுவியுள்ள சில அமைப்புகள், மேற்கத்தியர்களின் இந்த செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாக செயலாற்றி வருவதோடு, அதனைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாமல் அமைதியாகவே இருந்து விடுகின்றனர். இதன்மூலம் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகளை நனவுகளாக்குகின்றனர். ஜனநாயக் கலாச்சாரங்களின்படி, அதன் சட்டத்தால் தீமைகள் என்று வரையறுக்கப்படாத மேற்கண்ட தீமைகள் யாவும், நாகரீகமானவைகளாகவும், மனிதனை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கக் கூடிய உல்லாசத் தேவைகளாகவும் கருதப்படுகின்றன. ஆடையின்றி உலா வருவதும், அம்மணமாகத் தெரிவதும் நவீன கலாச்சாரத் தேவைகளாகவும், ஓரினச் சேர்க்கை மாற்று வழி வாழ்க்கை முறையாகவும், விபச்சாரம் என்பது ஆணின் உல்லாச வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாகவும், இன்னும் ஏராளமான தீமைகள் இன்று உல்லாச வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாக இந்த ஜனநாயக் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டு, அவை பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.

ஆனால் இஸ்லாம் தடை செய்திருக்கின்ற சமூகத் தீமைகளைப் பற்றி பிரச்சாரம் செய்யும் அமைப்புகள் சிலவே இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தில் உள்ளன. அவை கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் இயங்க வேண்டிய நிர்ப்பந்த நிலையிலும் உள்ளன. அதேவேளையில், இத்தகைய சமூகத் தீமைகளைக் கண்டு கொள்ளாத முஸ்லிம் அமைப்புகளும் நம்மில் உள்ளன. மனித இனத்தை அழிவுக்குள்ளாக்கும் சமூகத் தீமைகளைக் கண்டு கொள்ளாத அமைப்புகளைப் போலத் தான் ஏனைய இஸ்லாமிய அமைப்புகளும் இருக்க வேண்டும் என்று, டேனியல் பைப்ஸ் மற்றும் ஸாம் ஹண்டிங்டன் போன்ற மேலைத்தேய அறிஞர்கள் விரும்புகின்றார்கள்.


குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிமுறையின் கீழ் வாழ்வதைத் தடை செய்வது

குர்ஆன் மற்றும் சுன்னாவைக் கற்றறிந்து அதன்படி வாழ வேண்டும் என்று நினைக்கின்ற முஸ்லிம்கள் தான் ஆபத்தானவர்கள், இவர்கள் தான் முஸ்லிம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற இஸ்லாத்திற்கு முராணனவற்றை களைவதற்கான பணிகளைச் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள், என்றதொரு மனநிலை மேற்கத்தியவாதிகளிடம் காணப்படுகின்றது. குர்ஆன் மற்றும் சுன்னாவைப் பின்பற்றுகின்றவர்கள் தான் மேற்கின் சாபத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, இன்னும் 'வஹ்ஹாபிகள்' என்று நாமகரணம் சூட்டப்பட்டு அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுகின்றவர்களாக, இத்தகையவர்கள் தான் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மேற்கத்தியவாதிகளால் அடையாளமிடப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் இஸ்லாத்திற்குள்ளேயே பல பிரிவுகளாகச் செயல்படக் கூடியவர்களாலும், இவர்கள்.. அதாவது இந்த வஹ்ஹாபிகள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களே என்றும், அது தங்களது தலையாய பணி என்ற குறிக்கோளைக் கொண்டவர்களாக இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவே களமிறங்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதில் சூபித்துவக் கொள்கையைப் பின்பற்றக் கூடியவர்கள், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொள்வதை விட, 'வஹ்ஹாபிகளை' அழித்தொழிப்பதே தங்களது தலையாய பணியாகக் கொள்வதன் மூலம் இஸ்லாமிய எதிரிகளுக்குத் தான் இவர்கள் உதவிக் கொண்டிருக்கின்றார்கள். 'வஹ்ஹாபிஸம்' என்றதொரு நாமகரணத்தை முஸ்லிம்களுக்குச் சூட்டியவர்களே பிரிட்டிஷ்காரர்கள் தான். 1820 ல் இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிராகத் தோன்றிய 'ஷஹீத்'களின் இயக்கமொன்றுக்கு எதிராக பிரிட்டிஷார் முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் விதைத்து விட்ட வெறுப்பின் விதை தான் இந்த வஹ்ஹாபிகள் என்ற நாமகரணமாகும். இதன் மூலம் இந்த ஷஹீத் இயக்கத்தவர்களின் மூலமாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வை அவர்கள் மட்டுப்படுத்தியதோடு, தங்களது நோக்கத்தில் வெற்றியும் அடைந்து கொண்டார்கள் பிரிட்டிஷ்காரர்கள். மனித குலத்தை குர்ஆன் மற்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளின் அடிப்படையில் அழைக்கும் இந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, உலகமெங்கும் உள்ள இஸ்லாத்தின் எதிரிகள் கவலையடைந்துள்ளார்கள். உண்மையான இஸ்லாமிய மறுமலர்ச்சி என்பது குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே ஏற்பட முடியும். குர்ஆனை விளங்கி செயல்படாத வரைக்கும், வெறுமனே அதனது வார்த்தைகளை ஓதுவதானது, மனிதனை முடமானவனாகவே ஆக்கி வைக்கும். மேற்கு எதிர்பார்க்கும் முடமான சமூகத்தை, குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அருகில் கூட சென்று விடாததொரு கூட்டத்தை இஸ்லாத்திற்குள்ளேயே இருக்கக் கூடிய சில அமைப்புகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. முஸ்லிம்கள் கண்ணை மூடிக் கொண்டு ஏதாவதொரு தலைவரைப் பின்பற்றி வாழ வேண்டும், அத்தகைய தலைவர் மக்களை குர்ஆனின் பாலும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளின் பாலும் அழைக்காத, குருட்டத்தனமாக தன்னை மட்டுமே தனது சீடர்கள் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவராகவுமே இருக்க வேண்டும் என்றே மேற்கு விரும்புகின்றது. இந்த இயக்கத்தவர்களுக்கு குர்ஆனில் இருந்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து ஆதாரங்களைக் கேட்பது தடை செய்யப்பட்டதாகவே இருந்து வருகின்றது. குர்ஆன் மற்றும் சுன்னாவைக் கற்றுத் தேர்ந்தவர்களை விட, இவர்களைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக எளிதானது. ஆட்டு மந்தை போலத் தங்களது குருமார்களைப் பின்தொடரக் கூடியவர்களாக இருப்பவர்கள், தங்களது குருமார்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களே ஒழிய, குர்ஆன் என்ன சொல்கின்றது? இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் என்ன? என்று சரியானதையும், வழிகேடானதையும் பிரித்தறியத் தெரியாதவர்களாக அவர்கள் இருப்பதே இதன் முக்கியக் காரணமாகும்.

இவ்வாறு இஸ்லாமிய சமுதாயத்தை குருட்டு நம்பிக்கை கொண்ட சமுதாயமாக மாற்றி வைத்திருப்பதும் கூட ஒரு வழியில், இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளை நிறைவேற்றுவதற்குண்டான பணிகளை இலகுபடுத்தி விடுகின்றது எனலாம்.

முஸ்லிம் மிகுதியாக வாழக் கூடிய நாடுகளில், இத்தகைய வழிமுறைகளைப் பயன்படுத்தி முஸ்லிம்களைப் பல்வேறு பிரிவுகளுக்குள் அடக்கி, ஒவ்வொரு பிரிவாரும் தத்தமது தலைவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்ற அதேவேளையில், ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கு அந்தக் கருத்து உகந்ததாக இருக்குமா என்று சிந்திக்கத் திராணியற்ற சமுதாயத்தினராக முஸ்லிம் சமுதாயத்தினை மாற்றி அமைத்திருக்கின்ற சூழ்நிலைகளையும் நாம் பார்க்கின்றோம். இதுவும் ஒரு வகையில் இஸ்லாத்தின் எதிரிகளின் கனவுகளை சாத்தியமாக்கக் கூடியனவாக உள்ளன.

1970 ல் இஸ்ரேலிய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது அதன் மூலம், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அரபு நாட்டினை, தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ அவர்கள் இணைந்தாலும், இஸ்ரேலின் பலத்தை விடக் குறைந்த அல்லது பலவீனமான நாடாகவே அவர்களை வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கொள்கை முடிவை எடுத்தார்கள். இந்தக் கருத்தை அமெரிக்க அரசின் ஜனநாயகக் கட்சி ஏற்றுக் கொண்டதோடு, இதே சட்டத்தை சில மாற்று வார்த்தைகளின் மூலம் மாற்றியமைத்து குடியரசுக் கட்சியும் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் அமெரிக்க அரசியல் இஸ்லாமிய எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தங்களது கபட நாடகத்தை முஸ்லிம்கள் மீது திணித்து, முஸ்லிம்களை முடமாக்கப்பட்டவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்ற பொதுக் கொள்கையின்பால் ஒருமித்துச் செயல்படக் கூடியவர்களாக அவர்களது திட்டங்கள் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது.


கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முஸ்லிம்களை முடமாக்குவது

முஸ்லிம்கள் கல்வி கற்றவர்களாக அல்லது தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்தவர்களாக மாறி விடக் கூடாது என்பதிலும், இன்னும் இப்பொழுது உள்ள நிலையே நமக்குப் போதுமானது என்ற மனநிலை கொண்டவர்களாகவே அவர்கள் இருக்க வேண்டும் என்றே இஸ்லாமிய எதிரிகள் விரும்புகின்றார்கள். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் சிறப்புத் தகைமை ஆகிய அனைத்தும் இஸ்லாம் அல்லாதார்களிடம் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். மேற்கு அல்லது முஸ்லிம் அல்லாதார்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை உபயோகிக்கக் கூடிய நுகர்வோர்களாகவே முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள். முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் அமர்ந்து கொண்டு தங்களால் உற்பத்தி செய்த பொருட்களை அனுபவித்துக் கொண்டு, தங்களது பொருட்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்யக் கூடியவர்களாகவும் இன்னும் நுகர்பொருள் மோகத்தை மக்களிடையே பரப்பக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்றே மேற்கு விரும்புகின்றது. இத்தகையவர்களைத் தான் மேற்கும் விரும்புகின்றது.

இன்னும் தங்களால் விற்பனைக்குத் தயார் செய்யப்பட்ட பொருட்களை இறக்கிமதி செய்யக் கூடியவர்களாகவும், தங்கள் நாடுகளில் கிடைக்கக் கூடிய கச்சாப் பொருட்களை மேற்குக்கு ஏற்றுமதி செய்யக் கூடியவர்களாகவும் முஸ்லிம் நாடுகள் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். இதன் மூலம் எப்பொழுதுமே நவீன சாதனங்களுக்காக தங்களையே சார்ந்திருக்கக் கூடியவர்களாகவே இருக்க வேண்டுமே தவிர வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறி விடக் கூடாது என்றும் விரும்புகின்றார்கள். முஸ்லிம்கள் எப்பொழுதுமே கல்வி அறிவில், தொழில் துறைகளில், விஞ்ஞான வளர்ச்சியில் மற்றும் தொழிற் பொருட்களின் உற்பத்தியிலும் இன்னும் இவற்றில் கனரக சாதனங்களாக இருந்தாலும் சரி அல்லது நுகர்பொருட்களாக இருந்தாலும் சரி அனைத்திலும் முஸ்லிம்கள் பின்தங்கி இருக்க வேண்டும் என்றே மேற்கு விரும்புகின்றது. சற்று சில வருடங்களுக்கு முன்னாள், அதாவது 1973 ல் சௌதி அரேபியாவின் அன்றைய மன்னர் பைஸல் அவர்கள் அமெரிக்காவிற்கு பெட்ரோலை விற்க மறுத்ததை அடுத்து, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹென்றி கிஸ்ஸிங்கர் கூறிய வார்த்தைகள் கவனிக்கத்தக்கது. அவர் கூறினார் : ''நீங்கள் எங்களுக்கு பெட்ரோலை விற்கவில்லை என்று சொன்னால், நாங்கள் உங்களுக்கு கோதுமையை விற்க மாட்டோம், பசியெடுத்தால் பெட்ரோலைக் குடித்துக் கொள்ளுங்கள் என்றார்''. அமெரிக்க அரசானது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய நாடுகளை எப்பொழுதுமே ஒருவித அச்சத்தின் பிடியில் சூழ இருக்குமாறே பார்த்துக் கொள்கின்றது. அமெரிக்க அரசியலில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தாத வரைக்கும், அமெரிக்க அரசின் இத்தகைய செயல் திட்டங்களை மாற்றுவது என்பது இயலாத காரியமாகும். அமெரிக்க அரசியல் அதிகாரத்தில் கோலோச்சுவதன் மூலம் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள், மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. இதன் பின் முஸ்லிம்கள் தங்களது தேவைகளுக்காக பிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை, எப்பொழுது இஸ்லாத்தின் எதிரிகளை அதிகார ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுகின்றோமோ அப்பொழுதிலிருந்து கேட்டுப் பெறுவது என்ற நிலைமாறி, ஒரு உத்தரவின் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகும். இத்தகைய மாற்றத்தை முஸ்லிம்களால் கொண்டு வர முடியும், கொண்டு வர வேண்டியது அவசியமுமாகும். ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது என்பது மலர்ப் படுக்கையில் படுத்துக் கொண்டு நடத்தும் நாடகமுமல்ல, மலர்ப் படுக்கையில் சொகுசாகப் படுத்துக் கிடப்பதற்காக ஆற்றக் கூடிய பணியுமல்ல.


இராணுவத் தொழில் நுட்ப உதவிகளை மறுப்பது

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடுகளின் காவல்துறையினர் சில கைத்தடிகளையும், காலங்கடந்த சில துப்பாக்கிகளையும் வைத்துக் கொண்டு தங்களது சக குடிமக்களை ஆடுகளை மேய்ப்பது போல மேய்த்துக் கொண்டும், தங்களது சுயநலன்கள் பாதிக்கப்படும் பொழுது இந்த காவல் மற்றும் இராணுவத்துறையினர் இந்த மக்களை அடக்கி ஒடுக்கி அல்லது கொலை கூட செய்து தங்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்றே மேற்கு விரும்புகின்றது. சுருங்கச் சொன்னால், இந்த முஸ்லிம் நாடுகள் கைத்தடிகளை வைத்திருக்கின்றார்களா அல்லது துப்பாக்கிகளை வைத்திருக்கின்றார்களா என்பதல்ல பிரச்னை, தங்களது சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பொம்மைகளாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்களா என்பதே முக்கியம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் எந்தளவு உள்நோக்கத்துடன் செயல்படுகின்றார்கள் என்பதிலிருந்து விளங்கும். பாலஸ்தீன அதிகார சபைக்கு சில அதிகாரங்களையும் அத்துடன் சில துப்பாக்கிகளையும் கொடுத்து, பாலஸ்தீனர்களே தங்களது சொந்த மக்களின் இஸ்ரேலுக்கு எதிரான எழுச்சியை கட்டுப்படுத்தி வைத்திருக்கச் செய்யும் மேற்கின் தந்திரத்தைக் கூறலாம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய நாடுகள் தங்களது எதிரிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதை மேற்கு விரும்புவதில்லை. உதாரணமாக, ஈராக் தனது எதிரிக்கு எதிராக சிறந்த படை ஒன்றைத் தயார் செய்த பொழுது, அந்த ஈராக்கின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இன்றைக்கு அந்த நாட்டை கற்காலத்திற்கு நிகராக மேற்கு மாற்றி வைத்திருக்கின்றது. இதனைப் போலவே, பாகிஸ்தான் மீதும் ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்துவதற்கு மேற்குடன் இஸ்ரேலும் கூட்டிணைந்து கொண்டு, இந்தியாவை அதற்காக தயார் செய்து வருகின்றன. இந்தியாவும் இஸ்ரேலும் கூட்டிணைந்து கொண்டு அணுஆயுத தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்துக் கொள்ள முனையும் அதேநேரத்தில், இதே போன்றதொரு தொழில் நுட்பத்தைப் பெற்றுக் கொள்ள பாகிஸ்தனுக்கும், ஈரானுக்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. இந்தியா, இஸ்ரேல் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களது நாட்டில் ஏவுகணைகளையும், விமானங்களையும் தயாரிக்கும் பொழுது ஏற்படாத தடை, பாகிஸ்தானும், ஈரானும் தயாரிக்கும் பொழுது மட்டும் தடை பிறப்பிக்கப்படுகின்றது. அமெரிக்க அரசியலில் முஸ்லிம்கள் நுழைவதை எதிர்ப்பவர்கள் மேலும் மேலும் முஸ்லிம் நாடுகளை பலவீனமாக வைத்திருக்கவே அவர்களது விருப்பங்கள் உதவும், இன்னும் முஸ்லிம் நாடுகள் மீது மேற்கும், இஸ்ரேலும், ரஷ்யாவும், சீனாவும், இந்தியாவும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கவுமே உதவும். எனவே, அரசியலிலும் முஸ்லிம்கள் கவனம் செலுத்துவனூடகவே இந்த நிலையை மாற்றியமைக்க முடியும். இதற்கான தொலைநோக்குத் திட்டம் முஸ்லிம்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகும். அரசியலுடன், சரியான திட்டமிடுதலுடன் கூடிய இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகளும் இணைந்து செயல்படுமானால், அமெரிக்க அதிகாரத்தில் முஸ்லிம்கள் கோலோச்சக் கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை.


உலகமயமாக்கல்

இந்த பூகோளமயமாக்கலின் அடிப்படையே இஸ்லாமிய கலாச்சாரத்தினை நிர்மூலமாக்கி, அதற்குப் மாற்றாக மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் புகுத்துதல். இதன் மூலம் புகழேனியின் உச்சியில் இருந்து கொண்டு உலகத்தின் அதிகாரத்தைத் தங்களது கைகளில் வைத்திருந்த பொன்னான நாட்களை முஸ்லிம்கள் மீண்டும் அடைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். எனவே, உலகமயமாக்கலின் ஒருபகுதியாக மேற்கானது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றது, குறிப்பாக கலாச்சரத்தில் ஆதிக்கம் செலுத்த அது அதிக கவனம் செலுத்துகின்றது. சில இயக்கங்கள் மேற்கின் இந்தத் திட்டங்களை உணர்ந்து கொண்டு, ஐரோப்பிய ஆதிக்கத்தின் மூலமாக முஸ்லிம்களிடம் ஏற்பட்ட தவறான போக்குகளைக் களைவதற்கு முயற்சிகளை மேற்கொண்டன, ஆனால் மேற்கண்ட அரபுநாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனி தேசங்களாக மாற்றம் பெற்றதன் பின்பு, இத்தகைய இயக்க நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டன. முஸ்லிம்களிடம் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்துவற்கான ஆயுதமாக இந்த உலகமயமாக்கள் என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. முஸ்லிம்களிடம் இதனைத் தடுத்துக் கொள்வதற்கான சரியான செயல்திட்டம் ஒன்றை வரையறை செய்து கொள்ளாத வரைக்கும், மேற்கின் இத்தகைய தீய நோக்கங்களைத் தடுத்துக் கொள்ள முஸ்லிம்கள் சக்தி பெற மாட்டார்கள். அமெரிக்க அரசியலில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாத முஸ்லிம்கள், மேற்கின் இத்ததைகய தீய நோக்கங்களை எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதே நிதர்சனமாகும். தங்களது அறியாமையின் காரணமாக மறைமுகமாக மேற்கிற்கு இந்த முஸ்லிம்கள் உதவிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் உதவி முஸ்லிம்களுக்கா? அல்லது இஸ்லாமிய எதிரிகளுக்கா? தீர்மானித்துக் கொள்ளுவது உங்களது பொறுப்பு.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இரண்டு நபர்களால் உருவாக்கப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் திட்டங்கள் தான் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஐஸ்நோவர் காலத்தில், ஜான் ஃபோஸ்டர் டுல்லஸ் என்ற உள்துறைச் செயலாளர் வரைந்த அமெரிக்க அரசின் கொள்கைத் திட்டங்கள் முதலாளித்துவத்தை மையமாகக் கொண்டு வரையப்பட்டன. அது கம்யூனிஸம் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரானதாக அமைந்திருந்தது. அப்பொழுது கம்யூனிஸத்தை வீழ்த்துவதற்கு இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றலாமே என்று இவரிடம் ஆலோசனை கூறிய பொழுது, அந்த ஆலோசனையை ஏற்க மறுத்ததோடல்லாமல், 'கம்யூனிஸம் என்பது மேற்கின் உடன்பிறந்த சகோதரி, ஆனால் இஸ்லாமோ மேற்கின் நேரடி எதிரி' என்று கூறினார். நிக்ஸன் காலத்தில், ஹென்றி கிஸ்ஸிங்கர் என்ற ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய யூதரான இவர், உள்துறைச் செயலாளர் என்ற பதவியை அடைந்து கொண்டார். கிஸ்ஸிங்கருடைய கொள்கையானது ஸியோனிஸத்தையும் மற்றும் இஸ்ரேலையும் மையமாகக் கொண்டது. எனவே, இயற்கையாகவே இவரது கொள்கை இஸ்லாமிய எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் அரபு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகவும், இதன் காரணமாகவே அரபுக்களை எப்பொழுதுமே பலவீனமானவர்களாகவே வைத்திருக்கச் செய்வதற்கான சட்ட வரையறையை நிறைவேற்றக் காரணமாக அமைந்ததுடன், அமெரிக்க அரசியலிலும் இதே கருத்தை மையமாக அமைக்க முடிந்தது. உலக வரைபடத்தை பல்வேறு ஆதிக்கப் பகுதிகளாகப் பிரித்து, அவற்றினை ஆதிக்கம் செலுத்தும் அதிகார தலைமைப்பீடமாக அமெரிக்காவை அமைத்துக் கொள்வதே அவரது கொள்கையாக இருந்தது. அதன்படி மத்திய கிழக்கில் மொரோக்கோ முதல் ஈரான் வரையுள்ள ஆதிக்கப்பகுதிகளை கண்காணித்துக் கொள்ளும் பொறுப்பு இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளை கண்காணித்துக் கொள்ளும் பொறுப்பிற்கு இந்தியாவும், தூர கிழக்கினை கண்காணிக்கும் பொறுப்பிற்கு ஜப்பானும் தேர்வு செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்கா (முன்பு வெள்ளைஇனவேற்றுமை கொண்ட அரசாகவும், இஸ்ரேலின் கூட்டு நாடாகவும் திகழ்ந்தது) ஸஹாரா சார்புப் பகுதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பிற்கும் தேர்வு செய்யப்பட்டது. மேற்கண்ட கொள்கையை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் 2000 ம் ஆண்டில் முழுமையான பின்பற்றத் தொடங்கின. இதில் டுல்லஸ் என்ற திட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானை உடைத்து அதனை இரண்டு நாடுகளாக உருவாக்கவும் கிஸ்ஸிங்கர் திட்டமிட்டார். அவ்வாறு இரண்டாக உடைக்கப்பட்ட பாகிஸ்தானை மேலும் நான்காக உடைப்பதற்கான திட்டத்தையும் எதிர்வரக் கூடிய அமெரிக்க அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டியதற்கான திட்டத்தையும் கிஸ்ஸிங்கர் திட்டமிட்டிருந்தார். எனவே, முஸ்லிம்கள் அதிகாரப் புள்ளியை நோக்கி நகர்ந்து, இத்தகைய முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்றைய உலகமயமாக்கல் கொள்கையும் கூட கிஸ்ஸிங்கரின் திட்;டத்தின்படி அமைந்த, அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளாகும். எனவே, முஸ்லிம்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதனூடாக இத்தகைய கொடுமையான திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியும். அதனை மாற்றியமைக்கவும் முடியும். இன்ஷா அல்லாஹ்.

எனவே, என்னருமைச் சகோதரர்களே..! ஆன்மீகப் பகுதியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இன்றைய உலக நடைமுறைகளில் இருந்தும், இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்ற சதிவலைகளைப் பற்றிய ஞானமே இல்லாமல், அதனைப் பற்றிய எச்சரிக்கையே இல்லாமல் வாழ்வது, ஒருவகையில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளுக்கு உதவக் கூடியதாகவே அமையும். எனவே, இன்றைக்கு முஸ்லிம்களுக்கு இடையே பணியாற்றி வருகின்ற பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் கட்சிகள் தங்களது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேற்கின் சதிகளுக்கு எதிராக எவ்வாறு களமிறங்குவது என்றும், அவர்களின் சதிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் கலந்தாலோசனையில் ஈடுபட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இன்றைக்கு நம்மிடையே உள்ள பல இயக்கங்கள் மேற்கத்திய காலனித்துவ நாட்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்டவை. அந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் இன்றிருக்கும் பிரச்னைகளைப் போன்றதொரு பிரச்னைகளை எதிர்நோக்கவில்லை. ஷரீஅத் என்ற அடிப்படையில் இன்றிருக்கும் இந்தப் பிரச்னையை அணுகுவதைக் காட்டிலும், கருத்தொற்றுமையின் அடிப்படையில் (இஜ்மா) இந்தப் பிரச்னைக்கான தீர்வைக் காண வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தரப் பாடுபடுவோம். அந்த நீதியை குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டுதலின்படி அமைத்துக் கொள்வோம். மீண்டும் இந்த உலகத்தை இஸ்லாத்தின் வழிகாட்டலின்படி நடத்திச் செல்வோம்.

ஏனெனில், இஸ்லாமியச் சட்டங்களின் மூலம் மட்டுமே பாரபட்சமில்லாத, அடக்குமுறை, ஒடுக்குமுறை இல்லாத சுதந்திரமான ஆட்சியை வழங்க முடியும். அத்தகைய தகுதி, இஸ்லாத்திற்கு மட்டுமே உரித்தானது. அவ்வாறு வழிகாட்டியுமிருக்கின்றது. வரலாறு அதனைத் தன்னில் பதிவு செய்தும் வைத்திருக்கின்றது.

(குறிப்பு : உலகமயமாக்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள Dr. S.M.KURESHI அவர்கள் எழுதிய "WESTERN FUNDAMENTALISM IN ACTION" என்ற புத்தகத்தைப் பார்வையிடவும்).

இந்தக் கட்டுரை எம். அமீர் அலி அவர்கள் எழுதிய Dream of Anti-Islam Forces என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

www.tamilislam.com
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template